வணக்கம் உறவுகளே சேமம் எப்படி?
மழைகாலம் வந்தாலே அதனோடு சேர்ந்து இந்தச் சளித் தொல்லையும் வந்து விடுகிறது. மழையில் நனையாதே நனையாதே என்று எவ்வளவு தான் கத்தினாலும் அது மனதில் உறைப்பதில்லை.
உதாரணத்திற்கு என்னை எடுத்துக் கொள்கிறேன். உந்துருளியில் செல்லும் போது மழை வந்து விட்டால் ”அட சாதாரண தூறல் போலத் தானே இருக்கிறது கொஞ்த் தூரம் செல்லலாம்” என்று விட்டுச் செல்ல ஆரம்பித்தால் அது 5 நிமிடத்தில் நனைத்து விடும்.
அதன் பின் நனைந்தது நனைந்தது தானே அப்படியே போவோம் எனச் செல்ல வேண்டியது தான்.
ஆனால் இந்தச் சளித் தொல்லை வந்தால் அதன் பின்படும் பாடிருக்கே அது பெரும் பாடு. தலையெல்லாம் பாரமாக இருக்கும். மூச்சு எடுக்கவே இயலாது. போதாத குறைக்கு மூக்கால் சளி (mucus) வழிந்தோடும்.
வருங்கள் வைத்தியத்தைப் பார்ப்போம்.
முக்கிய குறிப்பு - இங்கு நான் தரும் தகவலானது என்னாலும் நண்பர்களாலும் பல தடவை பரீட்சிக்கப்பட்ட ஒரு விடயமாகும்.
முறை - 1
நன்மை - இதைச் செய்வதால் நிச்சயம் உடனேயே மூக்கடைப்பு எடுபட்டுவிடும். எந்தப் பக்க விளைவும் இருக்காது. (ஆனால் கண்ணை மூடிக் கொள்வது சிறந்தது)
ஒரு சிரட்டையில் நெருப்புத் தணலை எடுத்துக் கொள்ளுங்கள். அதை ஊதி சாம்பல் அற்ற நல்ல தணலாக்கிக் கொண்டு. 3 விரல்களாலும் கொஞ்சச் சீனியை (இந்தியாவில் சக்கரை என்பார்கள்) எடத்துக் கொள்ளுங்கள். அதை அப்படியே தணல் மேல் போட்டவுடன் ஒரு கருகிய புகை வரும். அதை அப்படியே மூக்கால் இழுத்து எடுங்கள். ஒன்றுமே நடக்காது மாற்றத்தை உடனேயே உணர்வீர்கள்.
முறை -2
நன்மை - எத்தனை மாத்திரை போட்டாலும் என்ன வைத்தியம் செய்தாலும் இந்தத் தலைப்பாரம் குறைவதில்லை அதை இந்த சின்ன வைத்தியம் தீர்த்து விடும்.
ஒரு சட்டை ஊசி (Pin) எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு மிளகை குற்றி விட்டு அதை எரியும் நெருப்பில் பிடியுங்கள். சிறிது நேரத்தில் அம் மிளகு எரிந்து ஒரு மணத்துடன் புகை வரும் அதை அப்படியே மூக்கால் இழுங்கள். சாதுவான எரிச்சல் இருக்கும் ஆனால் மண்டைப் பாரம் சிறிது நேரத்திலேயே குறைந்து விடும்.
குறிப்பு- எவ்வளவு தான் சொன்னாலும் எங்கள் இணையத் தள நண்பர்கள் செவி சாய்ப்பதாய் இல்லை. இந்த மாதப் பதிவு ஒன்றையும் ஒரு வானொலித் தளம் சார்ந்த தளமும். 2 குழுமத் தளமும் பிரசுரித்துள்ளது. ஒத்தி ஒட்டுதல் என்பது இலகு தான் ஆனால் அதன் மூலத்தை உருவாக்குவது எப்படி சிரமம் என்பது கொஞ்சம் நீங்களாக எழுதிப் பாருங்கள் தெரியும் நண்பர்களே.
யாழ்ப்பாணம் படப்பிடிப்பின் முடிவுக்கட்டத்தில் இருக்கிறோம். அதன் சந்தைப்படுத்தலுக்காக வெளியிடப்பட்டுள்ள ஒரு கணாணொளி இதோ. மேலதிக தகவலுக்கு இங்கே செல்லவும்.
39 கருத்துகள்:
நல்ல மருத்துவ குறிப்பு
பயனுள்ள வைத்தியக் குறிப்புக்கள்
மழையில் நனைந்தால், உடன் ஒரு குளியல் போடுங்கள்;
(ஜல)தோஷம் பிடிக்காது...
Yavum Unmathanee.. Try panni pakalam la..
பயனுள்ள மருத்துவக் குறிப்புகள்..
பகிர்வுக்கு நன்றி சகோ..
அண்ணா குறிப்புகள் அருமை...
என்ன இங்க நெருப்பு தணல்தான் எடுக்க முடியாது....
சளி பிடிச்சா நீங்க சொன்னதுல ரெண்டாவது முறைய பயன்படுத்தி குணப்படுத்திக்குறோம். பலரும் பயன் பெற இத பகிர்ந்ததுக்கு நன்றி.. நன்றி..
தேவையான மருத்துவக்குறிப்பு உடன் பதிவுக்கு நன்றி சகோ..
இன்று என் வலையில் :
facebook வீடியோவினை வலைப்பதிவில் பகிர்ந்து கொள்வது எப்படி?
வணக்கம் தம்பி!
என்னது நாட்டு வைத்தியத்துக்கு மாறீட்டிங்களா..? உண்மையில் நாட்டு வைத்தியம் பக்க விளைவு இல்லாதது..!!
ஆனா நீங்க சொல்லுறீங்கன்னு தணல மூட்டினா இஞ்ச யாராவது தீ அனைப்பு நிலையத்தை அழைத்து விடுவார்கள்..!-:)
பகிர்வுக்கு நன்றி அண்ணா.முயற்சி செய்து பார்க்கிறேன்.
என்றும் அன்புத் தங்கச்சி.
சித்தாரா மகேஷ்.
சிம்பிளான அருமையான மருத்துவ குறிப்புகள் அருமை அருமை நன்றி நன்றி....!!!!
காலத்துக்கேற்ற தகவல்,பகிர்வுக்கு நன்றி
ஒத்தி ஒட்டுதல் ,சந்தைப்படுத்தல் ...ம்ம்ம் அழகான வார்த்தைகள் .
இங்கே முதல் வைத்தியம் செய்ய கடினம் தீ சங்கு ஒலிக்க ஆரம்பிக்கும் .
(fire alarm)
நல்ல மருத்துவக்குறிப்பு சுதா ஆனாலும் இங்கு சிரட்டையில் தணல் எடுப்பது சட்டப்பிரகாரம் தண்டனை வரை கொண்டு போய்விடும்!
பாட்டி வைத்தியம் நன்றாக இருக்கு மதிசுதா... இங்கும் இப்போ எல்லோரும் ஆச்சூம் தான்:)).
வீடியோ நன்றாக இருக்கு, ஆனா எது மதிசுதா என அடையாளம் காணமுடியவில்லை என்னால்:(.
வணக்கம் பாஸ்
அருமையான விடயங்களை பகிர்ந்துள்ளீர்கள் சீனி மேட்டர் ஏற்கனவே தெரிந்ததுதான் ஆனால் மிளக்கு புதுஷா இருக்கு நன்றி பாஸ்
உங்கள் குறும்படம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்
வணக்கம் பாஸ்
அருமையான விடயங்களை பகிர்ந்துள்ளீர்கள் சீனி மேட்டர் ஏற்கனவே தெரிந்ததுதான் ஆனால் மிளக்கு புதுஷா இருக்கு நன்றி பாஸ்
உங்கள் குறும்படம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்
Sali muku adaipu enda manchal kaddaya nerupila podu hi manakirathum undu
:)
சாம்பலை மூக்கின் மீது தடவி கொண்டாலும் பலன் தரும்...
adsorbent technique
மழையில் நனைவதால் சளி வராது என்று இங்கு சொல்கிரார்கள். அது கிருமியினால்தான் வருகிறதாம் :-)
நல்ல மருத்துவ குறிப்பு
நல்லதொரு குறிப்பு சகோதரா,
பொதுவாக எனக்கு ஆங்கில மருத்துவம் பிடிக்காது, அதனாலயே தானாக குணமாகும் வரை சிரமப்படுவேன், இனிமேல் அதற்க்கு அவசியம் இல்லை...
மதி...காலத்துக்கேற்ற குறிப்புத்தான்.ஆனால் கஸ்டம் இங்கு.மிளகு மருந்து செய்து பார்க்கலாம்.அடிக்கடி எனக்கு தலைப்பாரம் இருக்கிறது !
மருத்துவ குறிப்பு மிக பிரமாதம் மதிசுதா..
இப்போதைக்கு தேவையான மிக பொருத்தமான மருத்துவக் குறிப்பு.. வாழ்த்துகள்.
அருமை நண்பரே
என்றும் அன்புடன் ,
கோவை சக்தி
மேலிருக்கிறவர்கள் மட்டும்தான் சொல்ல வேண்டுமா? நானும் சொல்கிறேன்.. பதிவு அருமை..!! பயன்படக்கூடிய ஒன்று..!!
இனி மதிஓடையில் நனைந்தாலும், சளி பிடிச்சாலும் தொல்லை இல்லை.. கைவசம் வைத்தியம் இருக்கே..!!!
வணக்கம் நண்பரே! அருமையான பதிவு! தங்களின் பல சேவைகளுக்கு எனது நல்வாழ்த்துக்கள். நன்றி
எனது வலையில் இன்று
டுவிட்டர் (Twitter) உருவான கதை..!!!
மேலும் பல பயனுள்ள தகவல்கள்.. !!!
நேரமிருக்கும்போது தயங்காமல் வந்து உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் அளிக்க அழைக்கிறேன். நன்றி..!
அருமையான மருத்துவ குறிப்புகள், இரண்டாவது கேள்வி பட்டுள்ளேன் ஏலவே இனி செய்து பாக்கிறேன்.
ஏற்கனவே அனுபவிச்ச குறிப்புத்தான் இருந்தாலும் யாம்பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் முழுதும் எண்டானாம்.அருமையான பகிர்வு .(சகோ உண்மையச் சொல்லுங்க இந்த
வைத்தியத்தை சந்தோசமாய் செய்வீர்களா?....அப்படி என்றால்
நிட்சயம் உங்களைப் பாராட்டுகின்றேன் என்ன விடுங்க சாமி நான் ஓடீற்றன்..........ஹா ..ஹா ..ஹா ..)மிக்க நன்றி சகோ எங்க
நாட்டு வைத்தியத்தைப் பகிர்ந்துகொண்டமைக்கு .
பயனுள்ள மருத்துவ குறிப்பு
நன்றி சகோ!
புலவர் சா இராமாநுசம்
த ம ஓ 15
அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமான நல்ல பதிவு. நல்வாழ்த்துக்கள். நன்றி.
எளிமையான அருமையான குறிப்பு!
atchaya
http://atchaya-krishnalaya.blogspot.com
Ubayogamulla maruthuva kurippu. Nanri!
உங்களது தளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் மருத்துவ குறிப்புகள் அனைத்து மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நான் சமீபத்தில் http://www.valaitamil.com/medicine என்ற இணையதளத்தை பார்த்தேன். அதிலும் உடல் நலக்குறிப்புகள் அழகாக தொகுக்கப்பட்டிருக்கிறது. நேரம் இருந்தால் நீங்களும் சென்று பாருங்களேன்.
கருத்துரையிடுக