திங்கள், 20 டிசம்பர், 2010

எனைக் கவர்ந்த கமல் படம் 10

AM 12:15 - By ம.தி.சுதா 31

                 அந்த சொல் கேட்டாலே ஏதோ ஒரு புதுமை அதன் பின்னே மறைந்துள்ளது தெரியும். நடிப்பு என்ற ஒரு வரைவிலக்கணத்தை எதிலும் அணிந்து செல்பவர் அவர். அவருடைய பத்து படங்களை வரிசைப் படுத்துவது என்பது என்னால் முடியாத காரியம் அதே போல் பத்து படம் தேர்ந்தெடுப்பது என்பதும் முடியாத ஒன்று அதனால் தான் எனக்கு சட்டென்று மனதில் அழுத்தியிருந்த படங்களை பரிந்துரைக்கிறேன்.
மூன்றாம் பிறை
                  சிறிதேவியுடன் கமல் இணைந்த படங்களில் ஒன்று (எங்கே இணைந்தார் பிரிச்சில்லா விட்டுட்டாங்கள்) 1983 ல் பாலுமாகேந்திரா வடித்த ஒரு நெருடல் காவியமாக எப்பொதும் விளங்குகிறது. 1984 ல் தேசிய விருதைப் பெற்ற இப்படத்திற்கு இசைஞானி இசையமைத்திருந்தார். இப்படத்தில் சிறந்த நடிகராக கமலஹாசனுக்கும்இ சிறந்த ஒளிப்பதிவாளரக்காக பாலுமகேந்திராவுக்கும் சில்வர் லெட்டஸ் விருது கிடைத்தது

“மூன்றாம் பிறை என்மனதில் தேயாத வளர் பிறை”

உன்னை போல் ஒருவன்
                                        சக்ரி டோலடி இயக்கத்திலும் ஸ்ருதிகாசனின் இசையிலும் உருவான ஒரு வித்தியாசமான கதையம்சம் கொண்ட திரைப்படம். ஹிந்தியில் வெளியான A wednesday என்ற திரைப்படம் சென்னையின் சூழலுக்கேற்றாற் போல் மாற்றப்பட்டது. ஒரு சில மணித்தியால கதைஇ ஒரே உடை என ஒரு மாறுபட்ட கதை அமைப்பை கொண்டிருந்தது. யார் யார் அதில் நடித்தாரென்று தெரியாவிட்டாலும் கணேஸ் வெங்கட்டால் விசாரிக்கப்படும் போதையாளன் மட்டும் சிறப்பாய் நடித்திருந்தான்.
          அதிலும் சி.எம்.மிடம் பேச வேண்டும் என்று கமல் கேட்க "அவர் உங்ககிட்ட பேசுற அளவுக்கென்ன வேலைவெட்டி இல்லாதவரா?" என்று மோகன்லால் கேட்க.. "ஓட்டுக் கேட்க என்கிட்ட வந்தாரே.” என்று கமல் கூறும் இடம் கதை வசனத்திற்கு ஒரு நல்ல எடுத்தக்காட்டாகும்.
           அத்துடன் போர் கருவிகள் பாவிக்கும் படங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த எமது முகாமில் எதேட்சையாக போடப்பட்டிருந்த இப்படத்தை தற்செயலாக பார்த்த இராணுவ அதிகாரி குறுவட்டை வாங்கிச் சென்று தனது அறையில் பார்த்தது அதிசயமாகவே இருந்தது.

“உன்னைப் போல் ஒருவனை நான் வர்ணிக்க முடியாத சிறுவன்”

குணா
           1992 ல் கமல் தனது நாயகியை கடத்தியிருந்தார். என்று எம் மனதை படத்துடன் ஒன்றிப் போக வைத்த கதையோட்டம் அதன் பின் வந்த பிரியமுடன், காதல் கொண்டேன், சின்னா, செல்லமே போன்ற படங்களைப் பார்க்கும் போது இதன் தாக்கம் தான் மனதில் இருந்து கொண்டே இருந்தது அதன் பின் காதலில் விழுந்தேன் படம் அந்த இடத்தில் பாதியை பிடித்துக் கொண்டது. இந்தப் படத்தை கமலின் நெருங்கிய நண்பரில் ஒருவரான சந்தானபாரதி இயக்கியிருந்தார். அதில் ஒரே சொட்டில் எடுக்கப்பட்ட அந்த சுற்றும் காட்சியும், அபிராமியே தாலட்டும் சாமியே பாடலும் காலத்தால் அழியாதது.

“குணா பலர் மனதில் அழியாத வினா..?”

சிவப்பு ரோஜாக்கள்
                              1978 ல் பாரதிராஜா அவர்களால் சிறீதேவியை கமலுடன் சேர்த்து வைத்து எடுக்கப்பட்ட படமாகும் இளமையிலேயே பெண்களால் பாதிக்கப்பட்ட ஒருவன் எப்படி மாறினான் என்பது தான் கதை. அவரின் முகபாவம் மிகவும் ரசிக்க வைக்கும் அதாவது தனியே அவர் கரம், செஸ் விளையாடும் தருணங்களும் படம் முடியும் தருணத்தில் நாயகிக்காக சிறையில் எங்கும் தருணமும் ரசிக்கவைக்கிறது.

“சிவப்பு ரோஜா என் மனதை கற்பழித்த ராஜா”

புன்னகை மன்னன்
                       1986 ல் பாலச்சந்தர் அவர்களால் இயக்கப்பட்ட இத்திரைப்படம் இரண்டு சொகமாக காதலை தந்தாலும் அதே சொகத்தை குள்ளக் கமலின் நகைச்சுவை சாப்பிட்டிருக்கும். ரேகாவிற்கு முத்தம் இடும் காட்சி பலரால் விமர்சிக்கப்பட்டாலும் அந்த இடத்தில் இருவரின் நடிப்பும் பலரால் கவனிக்கப்பட்ட ஒன்றாகும். ராஜம் பாலச்சந்தரும், புஸ்பா கந்தசாமியும் தயாரித்த இப்படத்தில் இளையராஜா இசையமைத்திருந்தார். ஒரு முறை இசைப்புயல் தனது பேட்டி ஒன்றில் இதில் வரும் “காலகாலமாக வாழும் காதலுக்கு நாங்கள் அர்ப்பணம்” பாடலில் என் கைவண்ணமும் இருக்கிறது என்ற போது உண்மையில் எனக்கு இன்னும் பிரமிப்பாக இருந்தது.

“இவன் புன்னகைக்கே மன்னன்”

தேவர்மகன்
            1992 பரதன் இயக்கத்தில் உருவான படமாகும். நடிப்புக்கென்றே உறுதியாக வரைந்துரைக்கப்படும் இரு உயிர்கள் தோன்றிய படமாகும். இந்தியில் விரசாத் என இப்படம் தயரிக்கப்பட்டது. அத்துடன் ஒஸ்காருக்காக பரிந்துரைக்கப்பட்ட இப்படத்தில் கௌதமி, ரேவதி ஆகியோர் நடிகைகளாக நடித்திருந்தார்கள். அதிலே தந்தை மகனுக்கான உரையாடல் மிகவும் ரசிக்க வைக்கும் முகத்துககு நேரே விவாத மனமும் மறுபுறத்தில் தேவருக்கான மரியாதையும் பிரதிபலிக்கப்பட்டுக் கொண்டிருக்கும். 

“தேவர்மகன் ஒரு அப்பழுக்கில்லாத குடி மகன்”

மகாநதி
        1993 ல் உருவான இப்படத்தை சந்தானபாரதி இயக்கியிருந்தார் கமல் சுகன்யா நடித்த இப்படம் ஒரு தந்தை மகளுக்கிடையேயான ஒரு பாசத் தேடலை விளம்பரமின்றி விபரமாகக் காட்டியது. அதில் ஒரு நாய் முக்கிய நடிகனாகியிருப்பதும் அதே தாக்கம் அன்பே சிவத்தில் இருப்பதும் தர்க்கிக்கப்பட வேண்டிய விசயம் தான். கமல் மட்டுமல்ல அவர் கதைகளும் ஒரு தூர நோக்காகவே இருக்கும் காரணம் இதே மோசடிப் பிரச்சனை 1994-1996 காலப்பகுதியில் இந்தியாவில் விஸ்வரூபமெடுத்திருந்தது.

“மகாநதி தமிழ் சினிமாவில் ஒரு வற்றாத நதி”

அவ்வை சண்முகி
                        1996 ல் கே எஸ் ரவிக்குமாரால் இயக்கப்பட்ட இப்படம் ஒரு புதிய கனவுக்கன்னியை திரையலகிற்கு தந்திருந்தது. (என்ன ஒன்று என்றால் முதல் படத்திலேயெ ஜெமினிக்கு ஜோடியாகிவிட்டார்) மினா, ஹீரா என இரண்டு பேர் நடித்திருந்தாலும் அதற்கு முழுபலத்தையும் கொடுத்தருந்தது கிரேசி மோகனின் கதையாகும். தேவா இசை வழங்க ஆர்.கே.ஹரி தயாரித்திருந்தார்.

“அவ்வை சண்முகி நான்கு திசையும் கவர்ந்த நான்முகி”

அன்பேசிவம்
                 கமல் படத்தை வரிசைப்படுத்திவிட்டு இந்தப்படம் பற்றி சொல்லாமல் போனால்; நான் ஒரு ரசனையற்றவன் என்பது வெளிப்படையான ஒரு உண்மையாகும். இது வரை நான் பார்த்த தமிழ் சினிமாவில் சமூகத்திற்கு ஒரு சிறந்த கருத்தைச் சொன்னபடமாக இதை; தான் சுட்டிக்காட்டுவேன். சுந்தர்.சி இயக்கிய இப்படத்திற்கான திரைக்கதையை கமல் உருவாக்க வசனத்தை மதன் எழுதியிருந்தார் அதற்கான இசையை வித்தியாசாகர் சேர்த்திருந்தார்.

“மன்னிப்பு கேட்கத் தெரிந்தவன் மனிதன் மன்னிக்கத் தெரிந்தவன் கடவுள்”
இந்த வசனத்தை பல இடத்தில் நான் பாவித்திருக்கிறேன் அத்துடன் கடைப்பிடிக்கிறேன்.

ஆளவந்தான்
           கமலும் ராவினாரண்டன் மற்றும் மனிஷா கொய்லாரா நடித்த இப்படத்தில் அதிகமாக ஆதிக்கம் செலுத்திய கணணித் தொழில் நுட்பம் பலரை ஈர்க்காது போனாலும் நந்துவின் இடங்கள் கவனிக்கப்பட வேண்டியவையே. ஒரு தாய் பாசத்தை வித்தியசமான முறையில் காட்டியிருந்தார் சுரேஸ்கிருஸ்ணா இயக்கிய இப்படத்திற்கு சங்கர் மகாதேவன் இசையமைத்தது இன்னும் சிறப்பாக இருந்தது. இறுதிக் காட்சியில் தன் தாயுடன் சேர துடிக்கும் ஒரு மனநோயாளியின் மனதும் அந்த மேற்கத்தைய நடனக்காரியிடம் நாணயம் சுண்டம் தருணம் எம் மனதை சுண்டுகிறது.

           என்ன என் பார்வை எப்படியிருக்கிறது இது எனது மனதில் சட்டெனப் பட்ட படங்கள் என்பதை மறக்க வேண்டாம்.

இந்த பொன்னான வாய்ப்பிற்காக இருவர் வெவ்வேறு இடத்திலிருந்து சமகாலப்பகுதியில் அழைத்தது தான் அதிசயம். அவர்கள் யாரா...??? என் அன்பிற்குரிய யோ வொய்ஸ் மற்றும் குண்டு ராஜகோபால் இருவருமே அவர்களாவர்.

நான் கோர்த்து விடுபவர்கள்
ஜனா – கமலின் திவிர ரசிகனிடமிருந்து தீவிரமான ஒரு படைப்பு கிடைக்குமல்லவா..??
ஜனகன் - இவர் தனது தளபதி படத்திற்கு எதிர் பார்த்தருந்தாலும் அவர் ஒரு வித்தியாச தேடல் உள்ளவர் என்பதால் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

About the Author

நான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director
View all posts by admin →

Share This Post

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

31 கருத்துகள்:

Chitra சொன்னது…

Absent, Sir!

ராஜகோபால் சொன்னது…

//“மூன்றாம் பிறை என்மனதில் தேயாத வளர் பிறை”
“உன்னைப் போல் ஒருவனை நான் வர்ணிக்க முடியாத சிறுவன்”
“குணா பலர் மனதில் அழியாத வினா..?”
“சிவப்பு ரோஜா என் மனதை கற்பழித்த ராஜா”
“இவன் புன்னகைக்கே மன்னன்”
“தேவர்மகன் ஒரு அப்பழுக்கில்லாத குடி மகன்”
“மகாநதி தமிழ் சினிமாவில் ஒரு வற்றாத நதி”
“அவ்வை சண்முகி நான்கு திசையும் கவர்ந்த நான்முகி”
//

அருமை...

Philosophy Prabhakaran சொன்னது…

என்னைப் போலவே உங்களுக்கும் ஆளவந்தான் படம் பிடித்திருப்பது ஆச்சர்யம் அளிக்கிறது...

அன்பரசன் சொன்னது…

நல்ல தெரிவுகள்..

நல்ல தேர்வு .

kalakkal sudhaa பின்னீட்டீங்க

மாணவன் சொன்னது…

அனைத்துப் படங்களுமே
சிறப்பான தேர்வு...

பகிர்வுக்கு நன்றி நண்பரே

நல்ல தேர்வு .

எப்பூடி.. சொன்னது…

நன்றாக எழுதியுள்ளீர்கள், இவற்றில் அவ்வை சண்முகி, தேவர் மகன் இரண்டும் எனக்கும் பிடிக்கும்

Jana சொன்னது…

அருமையான படத்தேர்வுகள் மதி.சுதா. கரும்பு தின்ன கைக்கூலி வேண்டுமா என்ன? கண்டிப்பாக எழுதுகின்றேன். அழைப்புக்கு நன்றி.

karthikkumar சொன்னது…

நல்ல தொகுப்பு நண்பா

Sivatharisan சொன்னது…

நல்ல தெரிவுகள் நண்பா நாயகன்,16 வயதினிலே விட்டுட்டங்களே

Ramesh சொன்னது…

நல்ல தொகுப்பு நண்பரே

பெயரில்லா சொன்னது…

2புன்னகை மன்னன் மறக்க முடியாத காதல் காவியம் இளையராஜாவின் தேன் மதுர இசை

Admin சொன்னது…

நல்ல தெரிவுகள்.. எனக்கும் பிடித்த படங்கள்..

roshaniee சொன்னது…

அருமை

ரஹீம் கஸ்ஸாலி சொன்னது…

நல்ல தேர்வு நண்பரே...

கார்த்தி சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
கார்த்தி சொன்னது…

ஐயோ அபத்தம் அபத்தம்!! எங்க நாயகனை காணோம்?????

அழைப்பை தொடர்ந்ததற்கு நன்றிகள், நல்ல தெரிவுகள் நண்பா

arasan சொன்னது…

படங்களின் தெரிவு அருமை.

Kiruthigan சொன்னது…

அட்டகாசமான தெரிவுகள் பார்த்தே தீர வேண்டிய படங்கள்...

Muruganandan M.K. சொன்னது…

கவர்ந்த படங்கள் என 10 தந்தீர்கள்.
கவராதவை என 5 தாவது தர முடியுமா?

ஷஹன்ஷா சொன்னது…

அருமையான பதிவு...-ரசனை....

“மூன்றாம் பிறை என்மனதில் தேயாத வளர் பிறை”ஃஃ
உண்மை

ஃஃஃ“சிவப்பு ரோஜா என் மனதை கற்பழித்த ராஜா”ஃஃஃஃ
ha ha தங்களுக்கு மட்டுமா...?



இவர் தனது தளபதி படத்திற்கு எதிர் பார்த்தருந்தாலும் அவர் ஒரு வித்தியாச தேடல் உள்ளவர் என்பதால் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

கண்டிப்பாக தொடர்வுடன் வருகிறேன்......

vanathy சொன்னது…

அருமை!!

என்னண்ணா?.............
இவ்வளவு போட்டிங்க உலக நாயகனோட.............
நாயகனை விட்டுவிட்டீர்களே...........

அனைத்தும் அருமையான தேர்வுகள்.




என்னடா ரஜினி படம் போட்டு கமலை புகழுறானேன்னு யோசிக்காதிங்க நான் சூப்பர் ஸ்டார் ரசிகன் தான் ஆனால் உலக படங்களை கூட விரும்பி பார்ப்பேன்

Murali சொன்னது…

How you eleminate these films from ur list

Nayagan
Indian
Virumandi
Dhasavatharam

Meena சொன்னது…

சரியான படங்களை தேர்வு செய்து இருக்கின்றீர்கள். இவற்றுள் என்னை மிகவும் கவர்ந்த படங்கள் மூன்றாம் பிறை, புன்னகை மன்னன், அவ்வை சண்முகி

இதழ் சுந்தர் சொன்னது…

பிடித்த படங்கள் என்பதை விட சட்டென தோன்றிய படங்கள் என்று ஒரு மறு மொழி வைத்து நூலிழையில் கலக்கியிருக்கிரீர் சுதா அவர்களே
கமல ஹாசனின் பல படங்கள் வித்தியாசம் மற்றும் கடின உழைப்புக்கு உதாரணம் என்பதில் சந்தேகமே இல்லை .....
அவர் ரசிகன் என்ற முறையில் எனக்கு பிடித்தது பேசாமல்..... பேசிய அவரது பேசும் படம் .
(அது என்ன ம.தி .சுதா ? )

sarav சொன்னது…

I just went through this post now only ...
there are lot of movies since you have said that these are your wish list ... there are other movies like salangai oli, pesumpadam , nayagan ,16 vayathinilae,aboorva sagodarargal, sathya ........

Unknown சொன்னது…

ராஜபார்வை...

மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்













back to top