வியாழன், 3 நவம்பர், 2011

செல்வச்சந்நிதி ஆலயத்தின் சூரன் போர் காணொளி (ஈழத்தை பிரிந்தவர்க்காக)

11:39 PM - By ம.தி.சுதா 28

        ஈழவரலாற்றில் மிகவும் தொன்மைவாய்ந்ததும் புராணச் சிறப்பு மிக்கதுமான ஒரு முக்கிய ஆலயம் தான் தொண்டமானாறு செல்வச் சந்நிதியாலயமாகும்.
              ஈழப்போரின் வடுக்களை முழுமையாகத்தாங்கி ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆலயமாகவும் திகழ்கிறது.
இலங்கையின் தெற்கே இருக்கும் கதிர்காமக் கோயிலுடன் நெருங்கிய தொடர்பை பேணும் இவ்வாலயத்திலும் மந்திரங்கள் கொண்டு பூசை செய்யப்படுவதில்லை. இங்கேயும் பூசை செய்பவர்கள் வாய்கட்டியே பூசை செய்கிறார்கள்.
    வீரபாகுதேவர் சூரபத்மனிடம் தூது சென்ற போது தனது காலடியைக் கல்லோடை என்ற இடத்தில் பதித்துச் சென்றதாகவும் பின்பு திரும்பும் வேளை சந்திக்கால பூஜை செய்யவேண்டியிருந்ததால் வல்லி ஆற்றங்கரையில் பூவரச மரநிழலில் வேல்ஒன்றை வைத்து சந்திக்கால பூஜை செய்து வழிபட்டதாகக் கூறப்படுகிறது. அந்த பூவரசு இப்போதும் அங்கே இருக்கிறது.
இதன் போர்க்கால வடுக்களை நோக்குகையில் இலங்கையின் மிகப்பெரும் தேரைக் கொண்டிருந்த இந்த ஆலயத்தின் தேரை இலங்கை ராணுவத்தினர் 1986 ல் எரித்துத் தீக்கிரையாக்கியிருந்தார்கள். அந்த தேருக்கான வடம் (தேர் இழுக்கும் கயிறு) வந்த கதையே மிகவும் வியப்பானது.
வெளிநாட்டில் கப்பல் ஒன்றில் வேலை செய்த நபர் ஒருவர் இந்த தேருக்கான வடம் செய்து அனுப்ப விரும்பினார். ஆனால் அவரால் அதை அந்தளவு தூர தேசத்தில் இருந்து அனுப்ப முடியவில்ல. அதனால் வடத்தை திரித்து அதை சுருட்டிக் கடலில் போட்டாராம். அது தொண்டமான் ஆற்றங்கரைக்கு வந்த வேளை அதைக்கண்ட ஒரு மீனவன் அதை அபகரித்துச் சென்று வீட்டில் வைத்து விட்டான்.
இரவு பூசகரின் கனவில் முருகன் தோன்றி ஆளை அடையாளம் காட்டியதையடுத்து பூசகர் பரிவாரங்களுடன் சென்ற போது அவன் வீட்டில் வடம் இருந்திருக்கிறது.
      இப்படி பல புதுமைகளைக் கொண்ட அந்த ஆலயத்தின் ஆதாரங்களை படங்களுடன் பிறிதொரு பதிவில் பகிர்கின்றேன்.

குறிப்பு - இக்காணொளியை படம் பிடித்து உதவிய கோகுலனுக்கு நன்றி தெரிவிப்பதுடன் இதை யார் வேண்டுமானாலும் பயன்படுத்த அனுமதியளிக்கிறேன். (அப்புறம் ஏண்டா வோட்டர் மார்க் அடிச்சிருக்கே என்று கேட்கிறிங்களா.  அது யாருக்குமே இடைஞ்சல் இல்லாத இடத்தில் தான் இடப்பட்டிருக்கிறது. யாரும் நோகமல் நுங்கு குடிக்கக் கூடாதல்லவா)

அன்பு உறவுகளே கடந்த சில நாட்களாக பதிவிட்டாலும் நேரமின்மையாலும் கிடைக்கும் நேரத்தை யாழ் குடாநாட்டின் மின்சாரத் தடை வாடைக்கெடுப்பதாலும் எவருடைய தளத்திற்கும் வர முடியவில்லை. நாளை முயற்சிக்கிறேன் உறவுகளே..

About the Author

நான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director
View all posts by admin →

Share This Post

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

28 கருத்துகள்:

அருமையான பகிர்வு .மிக்க நன்றி சகோ பகிர்வுக்கு ..........

தனிமரம் சொன்னது…

நன்றி அரிய காட்சியை உங்கள் தளம் மூலம் கண்டு கொண்டேன் கந்தனின் இன்னொரு பெருமை இந்த சூரன் போர் நிகழ்வு!

சுதா SJ சொன்னது…

அண்ணா உதை பாக்கும் போது ரெம்ப பீல் ஆகிறது :(
சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊரை போல வருமா????? :(

சுதா SJ சொன்னது…

திருவிழா பார்க்க போற ஆக்கள விட
அங்கே பொட்டையள் பார்க்க போற ஆக்கள்தானே
அதிகம்.... ஆமா நீங்க அங்க எதுக்கு போனீங்க?? ஹீ ஹீ..

மிகவும் நல்ல வேலை! முருகனை நேரில் தரிசித்த பாக்கியம் பெற்றேன்! நன்றி!

பெயரில்லா சொன்னது…
Unknown சொன்னது…

கந்தசஷ்டிக்கு வந்தும் சூரன் போருக்கு நிட்க முடியவில்லை இவ்முறைதான் சூரன் ஆட்டவில்லை கோவிலில்.:-( ஆனாலும் கெந்திரதேவர் ஓடுவதட்க்கு மட்டும் உதவி செய்துவிட்டு வந்தேன்.சக்கரவான பட்சி ஓடவில்லை.உங்ககளின் பதிவு எமது கோவிலில் நடைபெறும் சூரன்போரை பற்றி எழுத தூண்டியுள்ளது.

கூடல் பாலா சொன்னது…

விறுவிறுப்பான தகவல் ...

நிரூபன் சொன்னது…

இனிய காலை வணக்கம் மச்சி,

அருமையான பதிவு,
சந்நிதி ஆலய வரலாற்றுடன் சேர்த்து வீடியோவையும் தந்திருக்கிறாய்.

மிக்க நன்றி!

நிரூபன் சொன்னது…

கூகிள்சிறி said...
19840715-0001 பசுமையான காமெடி சீன்கள்//

என்ன தலைவரே...
செல்வச்சந்நிதி தேர் உங்களுக்கு பசுமையான காமெடி சீன் போல இருக்கா!

முருகா நீ தான் என்னைக் காப்பாற்றனும்.

கோகுல் சொன்னது…

சூரவதம்!

கவி அழகன் சொன்னது…

சந்நிதி முருகனுக்கு அரோகரா

புதிய தகவல் மிக்க நன்றி...!!!

test சொன்னது…

நன்றிங்கோ!
அப்புறம் சூரனைப் போட்டுட்டாங்களா?

இந்த முறையும் முருகனுக்கா வெற்றி?
போங்க பாஸ் எப்பப் பாத்தாலும் இவிய்ங்க இப்பிடித்தான் பண்றாங்க! :-)

காட்டான் சொன்னது…

வணக்கம் தம்பி
என்னையும் சூரன்போரில் கொண்டுபோய் விட்டதற்கு நன்றி

சிறுவயதில் ஆச்சியின் முந்தானையை பிடித்துக்கொண்டு இந்த பிரகாரத்தை சுற்றிவந்தது இன்னும் என் நினைவில்..

arasan சொன்னது…

நன்றிங்க சகோ ..

பெயரில்லா சொன்னது…

தகவல்க + காணொளி அருமை ...மிக்க நன்றி பகிர்வுக்கு...

அருமையான பகிர்வு .மிக்க நன்றி சகோ பகிர்வுக்கு

பகிர்வுக்கு நன்றி சகோ....


நம்ம தளத்தில்:

இந்த அதிசியத்தை நம்ப முடியுதா? படங்கள் பார்க்க...

விச்சு சொன்னது…

காணொளி அருமை. இது முதல் வருகை.இனி தொடர்கிறேன்.த.ம 13.

பெயரில்லா சொன்னது…

எங்கள் குலதெய்வம் முருகனின் காணொளியை பகிர்ந்தமைக்கு நன்றி மதி. மிச்சம் இருக்கும் ஒரு சில சூரர்களின் வதம் எப்போது நடக்குமோ..?

Gobinath சொன்னது…

அருமையான பகிர்வு பாஸ். அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறேன்.

vetha (kovaikkavi) சொன்னது…

முருகனுக்கு அரோகரா
பகிர்விற்கு நன்றி..mathi sutha.
vaalthukal.
Vetha. Elangathilakam.
http://www.kovaikkavi.wordpress.com

ஆஆஆஆஆஆ... செல்வச் சந்நிதி படம் பார்த்ததும் நெஞ்சுக்குள் என்னவோ செய்யுது.

சுத்திச் சுத்திக் கும்பிட்டதும், வெள்ளை மணலில் இருந்ததும்.... மனக் கண்ணில வருதே.... இதிலிருந்து கொஞ்சத்தூரம்தானே தாளையடி beach?.


மிக அருமையான பகிர்வு மதிசுதா.

பெயரில்லா சொன்னது…

11.11.11 நூறுவருடத்திற்கு ஒருமுறை வரும் இந்த அபூர்வ நாளில்... தங்களுக்கும், தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. வசந்தங்கள் வீசட்டும்... வாழ்வு செழிக்கட்டும்... மகிழ்ச்சி என்றும் பொங்கட்டும்... வெற்றிகள் குவியட்டும்... மனம் கனிந்த வாழ்த்துக்கள்...

எஸ் சக்திவேல் சொன்னது…

நன்றிகள் மதி. கீழே எனது பதிவு, செல்வச் சந்நிதி கோவில்பற்றி


http://www.ssakthivel.com/2011/08/blog-post_29.html

இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
வித்தியா சொன்னது…

மிகவும் சிறப்பான பதிவுகள் அண்ணா...
இந்த பதிவுகளிற்கு நான் புதிது
கீழே எனது முகவரி
உங்கள் கருத்துக்களிற்காக

http://katpanaithulikal.blogspot.com/

மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்













back to top