Featured Articles
All Stories

சனி, 28 மே, 2011

பிளக்பெறி போனும் வில்லண்ட பிரச்சனைகளும் (blackberry phone problems)

வணக்கம் உறவுகளே இதுவும் ஒரு விழிப்புணர்வுப் பதிவு தான்....
          இது எந்த நிறுவனத்துக்கோ நபர்களுக்கோ எதிராக எழுதப்படும் பதிவல்ல நான் வாழும் இந்தச் சமூகத்திற்காக மட்டுமே எழுதும் பதிவு.
    இப்போது பலர் இதை நாட விரும்புகிறார்கள். ஆனால் அதனால் பல பிரச்சனைகள் இருக்கிறது.

42 கருத்துகள்:

புதன், 18 மே, 2011

உலகத் தமிழனுக்கு வன்னிமகனின் கெஞ்சல் மடல்..

என் அன்பு உறவுகளே சேமம் எப்படி ?

          இதைப் படிக்க தங்களுக்கு பொறுமை இருக்குமோ தெரியல இருந்தாலும் கெஞ்சிக் கேட்கிறேன் ஒரு 5 நிமிடம் இந்த ஈனத் தமிழனுக்காக செலவழியுங்களேன்.
         இந்த உலகத்தில் நாம் தனிமைப்படுத்தப்பட்டு பலரின் பகடைக்காய்கள் ஆகிவிட்டோம். ஒரு சில புலம் பெயர் தமிழரின் செயலால் எம்மிடம் இருக்கும் கொஞ்ச சுதந்திரமும் பறிக்கப்பட்டு விட்டது. அவர்களால் எம் மீது நிஜமான பாசம் கொண்ட பலரை கூட களங்கப்பட வைத்து விட்டார்கள்.. நான் நடந்ததை பற்றி அதிகம் கதைக்க விரும்பல நடக்கப் போறதைப்பற்றி கதைக்கவே விரும்புகிறேன். இங்கு நான் சொல்வது சிலருக்கு நியாயமாக படலாம் பலருக்கு கோபத்தை கிளறலாம். ஆனால் உங்கள் மனட்சாட்சியை தொட்டு சொல்லுங்கள் நான் சொல்வதில் ஏதாவது நியாயமின்மை இருக்கிறதா ?

56 கருத்துகள்:

திங்கள், 9 மே, 2011

என் மலர் விழியை கண்டிங்களா ?



தனிமை
இரவு
நிலவு
முதிரைமரம்
ஒரு ராணுவ வீரன்
நான்

அந்த இடம் மறக்க வில்லை
நினைவிலேயே நிரம்பியிருக்கிறது
அவளை கடைசியாக சந்தித்த இடமல்லவா
ஓடிப் போகிறேன்

46 கருத்துகள்:

திங்கள், 2 மே, 2011

கனடிய தேசத்தில் அல்லா செய்த கோரப் படுகொலைகள் (க்ரைம் கதை)

முற்குறிப்பு - கனடா தேசத்தில் June 30, 2009 ல் நடைபெற்ற உண்மைச் சம்பம் தான் இது. இதை ஒரு சிறிய கதையாகப் பகிர்கின்றேன்.

Tooba Mohammad Yahya, husband Mohammad Shafia and their son Hamed are escorted into the Frontenac County Court House in

 Kingston, Ont., on Oct. 20, 2011
“படார்”
காரின் இடப்பக்கப் பின் முலையில் ஒரு பாரிய இடிப்பு ஆனால் உள்ளே இருந்த அந்த மூன்று பெண்களுக்கும் சுதாரிப்பதற்கான கால அவகாசத்தை கார் கொடுக்கவில்லை.
ஒன்ராரியொவில் கப்பல்களை ஆற்றுக்குள் நுழைப்பதற்காக இருக்கும் ஆற்றுமுகத் தொடுப்பின் அணையில் நின்றிருந்த கார். தன் கட்டுப்பாட்டைத் தொலைத்து 40 மீற்றருக்கு மேல் ஆழமான ஆற்றுக்குள் பாய்கிறது.


*     *      *

அன்றைய ஞாயிற்றுக் கிழமையை கழிப்பதற்காக தனது 2 புதல்விகளையும் அழைத்துச் செல்ல வேண்டும் என்பது அந்தத் தாயின் முன்னைய திட்டமாக இருந்தாலும். பிள்ளைகள் சம்மதிக்குமா என்பது அவளுக்கு சந்தேகமாகவே இருந்தது.
ஷியா முஸ்லிம் இனத்தைச் செர்ந்தவளான அவளுக்கு ஏற்கனவே நடந்த நிக்காவின் பலனாக அந்த இரண்டு புதல்விகளும் கிடைத்திருந்தார்கள். அவள் கணவனோ இரண்டாம் மணம் புரிந்து கொண்டாலும் ஒண்டாரியோவிலேயே வசித்து வந்தான். அவ்வளவாக இவர்களுடன் விடுமுறைகளைக் கழிக்க செல்வதில்லையானாலும் இவர்களுக்கான சகல உதவிகளையும் அவன் வழங்கிக் கொள்வான்.

*      *        *

அமிழ்ந்த காரின் குழிழ்கள் நீர்ப்பரப்பை அடையும் முன்னரே சமிஞ்ஞை ஒலிகளுடன் பொலிஸ்கார்கள் அந்த வீதியையே ஆக்கிரமித்துக் கொண்டன. உடனடியாகவே பாரம் தூக்கிகள் அழைக்கப்பட்டு மீட்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட போதும் அவர்களது சடலங்களை மட்டுமே மீட்க முடிந்தது. மூன்று பெண்களும் Suffocation ஆல் உயிர் துறந்திருந்தார்கள்.

விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டன. அனால் எந்தப்பலனும் கிடைக்காத நிலையில் பொலிசுக்கு ஒரு சிறிய துப்புக் கிடைத்தது. அவளது புதல்விகளில் ஒருத்தி சன்னி இன முஸ்லீமை காதலித்ததாக பொலிசுக்குத் தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் அவளது தந்தையின் மேல் பொலிசின் சந்தேகக் கண்கள் திரும்பியது.

அவன் மீது பல விசாரணைகளை மேற்கொண்டிருந்த போதும் கனடியச் சட்டமானது அவனுக்கிருக்கும் ஆதாரத்தை காணாது என்றே சொல்லியது. இருந்தாலும் அவன் மீதான விசாரணையைத் தொடர்ந்த போதும் எதுவும் முடியாது என்ற நிலையில் அவன் வழக்கிலிருந்து விலக்கப்படுவதாக முடிவெடுக்க வேண்டியதாகிவிட்டது.

*     *      *

விசாரணை அறையில் வைத்து அவனுக்கான விளக்கம் அளிக்கப்படுகிறது. இத்தனை நாளும் அவனை சிரமப்படுத்தியதற்காக அதிகாரிகள் அவனுக்கான தமது மனவருத்த்ததைத் தெரிவித்துக் கொள்கிறார்கள். அவன் விடுவிக்கப்படுகிறான்.
வெளியே அவனை அழைத்துச் செல்ல 2 வது மனைவியும் அவள் புதல்வர்களும் வந்து நிற்கிறார்கள்.
அவர்களது கார் அவனைச் சுமந்து கொண்டு பறக்க ஆரம்பிக்கிறது. காரினுள்ளே சின்ன விருந்தே நடத்தி முடிப்பதற்கு 2 ம் மனைவியும் புதல்வர்களும் திட்டமிட்டிருந்தது அவனுக்கு இப்போது தான் தெரிந்தது. உள்ளே குடியும் கூத்துமென ஒரு ரணகளமே நடாத்தி விட்டார்கள்.
கார் அவர்களது பங்களாவை அண்மிக்கிறது. அப்போது தான் பார்த்தால் பங்களா வாசலில் ஏராளமான பொலிஸ் கார்கள் நிற்கிறது. அவன் உத்தியோக பூர்வமாகக் கைது செய்யப்படுகிறான். கைதுக்கான காரணம் தெரியாமல் அவன் விழிக்கிறான். ஆனால் இம்முறை அனைவரும் கைதாக வேண்டிய சூழ்நிலைக்’குத் தள்ளப்பட்டதை தான் அவனை இன்னும் வியப்போடு திகைக்க வைத்தது.
*     *    *
நீதி மன்றத்தில் அனைவரும் நிறுத்தப்படுகிறார்கள். அப்போது விசாரணைக்கு வந்த வழக்கில் சில ஒலி, ஒளி ஆதாரப் பேழைகள் சமர்ப்பிக்கப்படுகிறது. அதில் இவர்கள் காருங்குள் தமது வெற்றியைக் கொண்டாடுகையில் அவன் கொலைக்கான திட்டமிடலை விபரிப்பது பதிவாகியிருந்தது.
விசாரணையில்.....
“இக்கொலையை நீர் தான் செய்தீரா”
“ஆம்”
”காரணம்”
“என் மகள் வேற்று இனமான சன்னி முஸ்லீம் இன பையனை காதலித்தாள்”
”அப்படியானால் இக் குற்றத்தை நீர் ஏற்றுக் கொள்கிறீரா”
“ஆம்”
“இக்கொலைக்கான மனநிலையை உமக்குத் தோற்றுவித்தது யார்”
“அல்லா தான் சொன்னார், அல்லாவுக்காகவே இதைச் செய்தேன்”

மன்றமே நிசப்தமானது 25 வருட பிணையற்ற சிறைத்தண்டனையை பெற்றுக் கொண்டவன் புன்னகையுடன் செல்கிறான்.

---------------------------------------------------------------------------------

இங்கே என்னை உறுத்திய இடம்....
“ஒருவர் செய்த தப்புக்காக மற்ற 2 பெண்களையும் கொல்ல வேண்டிய அவசியம் என்ன?”
“அல்லா சொன்னதற்காக கொலை செய்த ஒருவன் ஏன் தப்பி வாழ நினைக்கிறான்”
“காதல் செய்வது தப்பு என குர் ஆன் எங்காவது சொல்கிறதா”

தயவு செய்து இதற்கும் கூகுலை கேளுங்கள் என்று சொல்ல வேண்டாம்.
(அமெரிக்கா காரனை கண்டாலே குண்டு வைக்கத் துடிக்கிற கூட்டம். அவர்கள் மதம் பற்றிக் கேட்டால் போய் அமெரிக்கனைக் கேட்கட்டாமாம்)


நேற்றைய பதிவு - பதிவர்களின் இஸ்லாமிய வெறுப்புக்கு காரணம் என்ன?-ஒரு சமகால அலசல்

அடுத்த பதிவு - பெண்ணடிமையின் உச்சமாக இஸ்லாத்தில் ஒரு சட்டம் இருக்கிறது (குறிப்பிட்ட நாடொன்றில்) இங்கே வயதுக்கு வந்த மறுநாளே பெண்ணின் உறுப்பை மூடித் தைப்பார்கள். பின் மண நாளின் முன்னர் அவிட்டு விடுவார்கள். “வயது வந்த பெண்களின் பெண்ணுறுப்பைத் தைத்து வைத்திருக்கும் இஸ்லாமியச் சட்டங்கள்”


இன்னும் தொடரும்..

20 கருத்துகள்:

ஞாயிறு, 1 மே, 2011

அளவுக்கதிகமான பரசிட்டமோல் என்ன செய்யும்.. (Paracetamol Poisoning)

                 சில விடயங்கள் அறியப்படாததன் விளைவுகள் பாரிய விளைவுகளை ஏற்படுத்தும். அதனடிப்படையில் தான் இந்த Paracetamol Poisoning ம் உள்ளடங்குகிறது. சிலர் தற்கொலை முயற்சிக்காக இதை நாடினாலும் அதனால் வரும் வேதனையே அவர்களை மரணத்தின் வாயிலில் ரணப்படுத்திக் கொல்லும்.
PM 11:33 - By ம.தி.சுதா 44

44 கருத்துகள்:

மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்













back to top