Featured Articles
All Stories
கதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2016

அவளைப் பிரசவித்தேன் - என் பத்திரிகைக் குறுங்கதை

அவளைப் பிரசவித்தேன்
நன்றி - தினக்குரல்

அவளைப் பிரசவித்தேன்….


காரை நான் தான் ஓட்டிக் கொண்டிருந்தேன். நித்தியா வின் வலி வெளிப்பாடுகை சற்று அதிகமாகிக் கொண்டிருந்தது.
”தம்பி இன்னும் கொஞ்சம் வேகமா போறிங்களா” சொன்னது மாமி.
பின் இருக்கையில் பற்களை இறுக்கிக் கடித்தபடி மாமியின் கைகளை இறுகிப் பற்றிக் கொண்டு நித்தியா கத்திக் கொண்டிருந்தாள்.
“வருண் ப்ளீஸ் வேளைக்கு போடா”
வேகமாகவே போய்க் கொண்டிருந்தேன் என்று சொல்ல முடியாது தான் வழமையை விட சற்று வேகமாக ஓட்டிக் கொண்டிருந்தேன். நித்தியாவுக்கான படபடப்பு ஒரு பக்கம், பாதைக் கவனிப்பிலான படபடப்பு ஒரு பக்கம் என என் மூளை உச்ச வேலையில் இயங்கிக் கொண்டிருந்தது.
முதலாவது குத்து எழும்பும் போது தான் மாமி எனக்கு போன் பண்ணியிருந்தார். நித்தியாவின் பெரு மூச்சொன்று பின்னுக்கிருந்து கேட்டது. இரண்டாவது குத்தும் கடந்து விட்டாள் என்பதை ஊகித்துக் கொண்டேன்.
இருவரும் அவசரப்படுத்துகிறார்கள் என்பதற்காக என் நிதானத்தில் இருந்து நான் தவறத் தயாரில்லை.
வாசலுக்குள் காரை நுழைக்கிறேன் தள்ளு வண்டிலுடன் ஊழியர் தயாராகிக் கொள்கின்றான்.
“மாமி நீங்கள் சேர்ந்து போங்கோ நான் bag எடுத்திட்டு வாறன்”
அடுத்த குத்துக்கு முதல் போக வேண்டும் என்ற அறிவுறுத்தல் நித்யாவுக்கு தெரியும் ஆனால் நான் பையுடன் வர பிந்தி விடுமோ என்ற ஒரு ஏக்கப்பார்வை ஒன்றுடன் நகரும் கதிரையில் போய்க் கொண்டு இருந்தாள். மணிரத்தினம் படத்தில் ரயில்களுக்கூடாகக் கடக்கும் நகரும் கமரா போல அவள் பார்வை என்னையே சுற்றிக் கொண்டிருந்தது.
ஆசுவாசமாய் கண்களாலேயே நான் வருகிறேன் என சின்ன சைகை கொடுத்தேன். சின்னதாய் ஒரு புன்னகை அவள் உதடுகளில் வெளிப்பட்டது. அடிக்கடி பார்த்தலுத்தது தான் ஆனாலும் அந்த புன்னகையில் இருக்கும் காந்த ஈர்ப்பு ஒன்று இழுத்தே தீரும்.
நான் பையைக் கொடுத்து விட்டு அறையின் வாசலில் காத்து நிற்கிறேன். உள் பதிவு வேலைகள் முடித்துக் கொண்டு அதே கதிரையில் அவளை இருத்தி லேபர் அறைக்கு அழைத்து போக வெளியே வந்தார்கள். அருகே வந்து கதிரையை நிறுத்திய மருத்துவமாது file எடுக்க என நினைக்கிறேன் உள்ளே போனார்.
“வருண் பிரச்சனை ஒன்றும் வராது தானே”
”ச்சே என்ன பழக்கம் குழந்தை மாதிரி” நித்தியாவை தேற்ற நான் சொல்லிக் கொண்டாலும் அவளின் விடயத்தில் நான் தான் அதிகம் பயந்தவன்.
”சீசர் அப்படி எதுவும் செய்வாங்களா”
”இல்லடி உனக்கு குழந்தை சரியா தானே இருக்கு பயப்பிடாதை”
”இல்லை ஏதோ ஒரு பயம் இருக்கு, pray பண்ணுறியா ”
தலையசைத்துக் கொண்டேன். என்னிடம் அவள் ஒன்றை உரிமையுடன் கேட்கிறாள் என்றால் ஒன்றில் என் குழந்தையாகக் கேட்பாள் இல்லை கண்டிப்புடனான என் தாயாகக் கேட்பாள்.
அவள் கதிரையின் கை பிடியை விரல்களால் சுரண்டிக் கொண்டாள். அவளுக்கு என்னில் எவ்வளவு தான் உரிமை இருந்தாலும் என் அன்பையோ ஸ்பரிசத்தையோ கேட்டுப் பெற்றுக் கொண்டதில்லை. கதிரைப் பிடியுடன் அவள் கைகளை அழுத்திப் பிடித்துக் கொண்டேன்.
தலைமுடி இழுத்து ஒரு துணியால் கட்டப்பட்டிருந்தது. அவள் வழமைக்கு இது எடுப்பில்லைத் தான் ஆனாலும் அவளது அழகிய நெற்றி எல்லாக் குறையையும் ஈடு செய்திருந்தது.
மறு கையால் தலையை மெதுவாய் வருடி விட்டுக் கொண்டேன்.
என் கண்கள் எதை? எப்போது? எப்படி? பார்க்கிறது என்பது அவளுக்கு மட்டுமே தெரிந்த சூட்சும ரகசியமாகும். விளங்கிக் கொண்டவள் மீண்டும் ஒரு புன்னகை உதிர்த்தாள். அவளுக்கும் தெளிவாகவே தெரிந்தது தான் அவள் எப்போது எந் நிலையில் இருந்தாலும் அதில் ஒன்றையாவது அழகாய் நான் ரசிப்பேன்.
அறைக்குள் கதிரை செல்வதையே பார்த்துக் கொண்டு நின்றேன். மாமியும் பட படப்புடன் என்னுடனேயே நின்று கொண்டார்.
சில நிமிடங்கள் கடந்திருந்தது.
ஆழமாய் ஒரு வலிக்குரல் கேட்க ஆரம்பித்தது.
ம்ம்.. நித்யா தான். என்னால் கேட்க முடியவில்லை. மாமிக்கு அனுபம் என்பதால் கடவுளை வேண்டிக் கொண்டிருந்தார்.
எனக்கு இப்போது எந்தக் கடவுளை கேட்பது என்று தெரியவில்லை. கல்யாணத்துக்கு முதல் வரை தேவையானதை கடவுளிடமே கேட்டேன். நித்தியா வந்த பிறகு அவளிடம் மட்டும் தானே கேட்டுப் பெற்றுக் கொண்டேன். அவளுக்காக கேட்க சொன்ன போதும் அவள் தான் நினைவுக்குள் நின்றாள்.
கைகள் எல்லாம் பட படக்க ஆரம்பித்திருந்தது. காட்டிக் கொள்ளவும் முடியவில்லை. கல்யாணத்துக்கு பிறகு கூட நித்தியா என்னிடம் அழுதிருக்கிறாள் தான் ஆனால் இப்படி அழுவதை முதன் முதல் என்னால் கேட்க முடியவில்லை.
”தம்பி கொஞ்சத்துக்கு வெளிய போய் நிண்டுட்டு வாங்கோ”
மாமிக்கும் என்னைப் பற்றி வடிவாகத் தெரியும். உறவு முறையில் தான் மாமியாக இருந்தாலும் நித்தியாவுக்கு இருந்த அதே உறவு தான் என்னிலும் அவருக்கு இருந்தது.
திருப்பி எதுவும் பேசவில்லை விறு விறேன்று படிகளில் இறங்கி நடக்க ஆரம்பித்தேன். கண்களில் முட்டிப் போய் இருந்த கண்ணீரைத் துடைத்து விட்டு திரும்பிப் பார்த்தேன் அவரது பார்வை மட்டத்துக்கு கீழ் இறங்கியிருந்தேன்.
இருக்க மனமில்லை ஒரு வட்டமடித்துக் கொண்டிருக்கையில் பல நிமிடங்கள் கடந்திருந்தது. நெஞ்சின் பட படப்பு குறையவே இல்லை.
பொக்கெட்டில் இருந்த போன் சிணுங்க ஆரம்பிக்கவே கையில் எடுத்தால் மறுமுனையில் மாமி…
”வாங்கோ தம்பி அறைக்கு கொண்டு வந்திட்டினம்”
”நித்தியா…… ”
அவர் சின்ன நக்கல் சிரிப்புடன்.
”அப்பாவானவர் பிள்ளை என்ணெ்டு கேப்பமெண்டில்லை சரி வாங்கோ வாங்கோ உங்களைத் தான் தேடுறாள்”
அவர் இதைச் சொல்லி போன் நிறுத்தும் போதே நான் வாசலுக்குள் நுழைந்திருந்தேன்.
நித்தியா களைத்து முகம் எல்லாம் வாடிப் போய் படுத்திருந்தாள். தூரத்தில் பார்க்கும் போதே போகும் போது தலைக்கு கட்டப்பட்டிருந்த துணி இல்லை என்பதைக் கண்டு கொண்டேன். குடும்பி முடியப்பட்டிருந்தது. அதே அவள் பட்ட வேதனைக்கு எனக்கு சாட்சியமாக்க போதுமானதாக இருந்தது.
ஓடிப் போய் அவள் கன்னங்களில் தான் கையை வைத்துக் கொண்டேன். தன் கையால் கன்னத்தோடு சேர்த்து அழுத்தி அணைத்துக் கொண்டு மறு கையால் என் கலங்கியிருந்த கண்களை துடைத்துக் கொண்டு முகத்தை குழந்தை பக்கம் திருப்பினாள்.
அப்போது தான் நான் அப்பாவாகியிருக்கிறேன் என்ற நினைவே எனக்கு வந்தது. அந்த பிஞ்சு விரல்களுக்கு அருகே என் விரல்களைக் கொண்டு போனேன். இறுக்கிப் பிடித்துக் கொண்டு வாயை சுளித்துக் கொண்டிருந்தது அந்த அழகுப் பதுமை.
”பார் அவளை இந்தப் பாடு படுத்திப் போட்டு அப்பரைக் கண்டதும் அவற்ற கையை பிடிச்சிட்டான்”
அட எனக்கு பொடியன் பிறந்திருக்கிறானா? என் படப்படப்பில் இதெல்லாம் சிந்திக்க நித்தியா விடவில்லையே… சொன்ன மாமியை நிமிர்ந்து பார்த்தேன் அவரது கண்ணும் கலங்கியிருந்தது. என்னிடம் மகளைக் கொடுக்க தயங்கியதை நினைத்தாரோ தெரியவில்லை.
அறையை விட்டு மெதுவாக வெளியேறிக் கொண்டார். எம் சுதந்திரத்தைக் கெடுக்க கூடாது என்று தான் போகிறரோ அல்லது வெளியே போய்த் தான் அழப் போகிறாரோ எனத் தெரியாது ஆனால் போனார்…
”டேய் உன்னை ஏமாத்திட்டனா?”
”இல்லை”
”ஏன் உனக்கு பொம்பிளைப்பிள்ளை தானே வேணும் என்று என்னோட சண்டை பிடிப்பாய்”
”எனக்கு இரண்டாவது பிள்ளை பொடியன் தான் வேணும் என்றும் சொல்லுறனான் மறந்திட்டியா”
அவள் கேள்விக்கு முரண் பதிலால் ஒரு பார்வை பார்த்தாள். குனிந்து அவள் அழகிய நெற்றியில் முத்தமிட்டுக் கொண்டேன்.

இப்போது விளங்கியிருக்க வேண்டும் என் பிடரி முடியைக் கோதி தன் நெற்றியால் ஒரு தடவை முட்டி விட்டுக் கொண்டாள்.

12:19 PM - By ம.தி.சுதா 5

புதன், 11 மே, 2016

மன மறைவில் ..... - குறுங்கதை

”சேரா காலமை புலிகளின் குரல் கேட்டனியே”
கேசவன் சற்று இழுத்தபடியே சொன்னான்.
”இல்ல OPD க்கு வந்திட்டன் இழுக்காமல் சொல்லு”
சற்றே தயங்கியவனாக..
”திருமகள் வீரச்சாவாமடா”

அரைவாசியை விழுங்கிக் கொண்டே சொன்னான். நான் அழுவேன் ஆர்ப்பாட்டம் செய்வேன் என்று அவன் நினைத்திருக்கக் கூடும். நானும் எதிர் பார்க்கவில்லை. ஆனால் கத்தி அழ வேண்டும் போல் இருந்தாலும் கண்களின் ஓரம் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டு கொஞ்ச எச்சிலையும் விழுங்கிக் கொண்டேன்.
மனதுக்குள் திருப்ப திருப்ப சொல்லிக் கொண்டேன்

”காட்டிக் கொள்ளாதே நீ ஒரு வைத்தியர் உன்னை நம்பி பல காயக்காரர்கள் வரிசையில் இருக்கிறார்கள்”
கேசவன் என்னை முழுதாகப் புரிந்தவன். அருகே வந்து கைகளைப் பற்றிக் கொண்டு

”உன்ர வோட் ஐ நானே பார்க்கிறன் போயிட்டு வா பின்னேரம் தான் விதைக்க போகினமாம்”
”எங்க நடந்தது”
”கல்லாறு”

ஒரு தடவை வியந்து போய் திருப்பியும் கேட்டான். ஏனென்றால் 2 நாட்களுக்கு முன்னர் தான் அங்கு முன்னரங்குக்கு ஒரு மருத்துவ முகாமிற்குச் சென்றிருந்தான். அங்கு ஏதோ தாக்குதல் ஆரம்பிக்கப் போகிறது என்பதை முதலே ஊகித்திருந்தான் ஏனென்றால் நான்கைந்து சினேப்பர் பிள்ளையள் முகம் முழுக்க கரிபூசி உருமறைப்புடன் நிற்க அவர்கள் செக்சன் லீடர் ஏதோ அறிவுறுத்திக் கொண்டு நிண்டார். வந்த களைக்கு தண்ணீர் கிடைக்கவில்லை அவரது போத்தலை வாங்கித் தான் குடித்தேன்.
”என்னத்தில காயம்”
”வயித்து காயம் சினேப் பண்ணியிருக்கிறாங்கள்”

ஏதோ அவளைப் பார்த்தே ஆக வேண்டும் என்ற எண்ணம் இழுத்தது ஏனென்டால் அவள் முகத்தைக் கண்டு 2 வருடம் இருக்கும். படிக்கிற காலத்திலேயே முளை விட்ட காதல் அது. இருவருக்கும் மனசுக்குள் சின்ன பயம் இருந்தாலும் எப்படியோ வீட்டுக்கு கதை போய் விட்டது. ஆனால் நாம் பயந்தளவுக்கு இருக்கவில்லை
”படிச்சு முடியட்டும் செய்து வைக்கிறம் ஆனால் அதுவரைக்கும் எங்கட பேர் கெடக் கூடாது” அழுத்தமான நிபந்தனையால் காணும் போது சிரிப்பது மட்டுமே எம் உச்ச பட்ச காதல் தொடர்பாகிப் போனது. அப்பப்போ கடிதங்கள் மட்டும் புத்தகங்களால் காவப்படுவதுடன் சரி. அதன் பின்னர் வீட்டுக்கொருவர் போராட போக வேண்டும் என்றதன் பிறகு இருவர் வீட்டிலும் நாமே முன் வந்து போய்க் கொண்டோம்.

”பெட்டி சீல் பண்ணியிருக்கா”
வெளிவராத குரலை இழுத்து குரல் நாணில் பூட்டிக் கேட்டேன்.

”இல்ல துணைக்கு ஆரையும் கூட்டிக் கொண்டு போ”
கூறிக் கொண்டே என் வோட்டை பொறுப்பெடுப்பதற்கான ஆயத்தமாக ரிக்கேட்டுக்களை எடுத்து அடுத்த ஊசி போட வேண்டியவருக்குரிய ஒழுங்கில் அடுக்க ஆரம்பித்தான்.

வழமையாக அடம்பிடிக்கும் மோட்டார் சைக்கிள் இன்றைக்கு என் நிலமை புரிந்தோ தெரியவில்லை ஒரே தடவையில் பற்றிக் கொண்டது. இன்னொரு மனித வலுவை வீணாக்க விரும்பாமையால் தனியாகவே புறப்பட ஆயத்தமானேன்.
ஆனால் மனதுக்குள் ஏதோ உறுத்தியது. உயிரோடில்லாத அந்த முகத்தை நான் பார்க்கத் தான் வேண்டுமா?
அவளில் அடிக்கடி நான் ரசித்து இன்று வரை என் நினைவில் எஞ்சி நிற்பது அந்த குழி விழுந்த கன்னமும் பல் தெரியாத சிரிப்பும் தான் ஏன் அந்த முக விம்பத்தை நானே அழிப்பான்.
மோட்டார் சைக்கிளை நிறுத்திக் கொண்டேன்.
வோட்டுக்குள் நுழைந்தேன் கேசா ஊசி போட வேண்டியவருக்கு போட்டு முடித்திருந்தான். இன்று தியெட்டரில் எனக்கு 8 கேஸ் சேர்ஜரி செய்ய வேண்டியிருந்தது. புதிதாக வருவதைத் தவிர்த்து.

”நீ போ நான் தியெட்டருக்கு போறன்” என்றான் கேசா,
”வேண்டாம் நான் போகேல்லை நீ போய் படு இரவு மாற ஆள் வேணும்”
அவன் பதில் எதுவும் பேசவில்லை என் முடிவுகள் எப்போதும் மாற்றத்திற்குரியவையல்ல என்பது அவனுக்கு தெரியும்.
”சேரா….. திருமகளின்ர செக்சன் லீடர் காலமை காயப்பட்டு இப்ப தான் வந்திருக்கிறா”
”கதைச்சியா”
”இல்ல மயக்கம் தெளியேல்லை”

காதல் முடிந்து விட்டது கடமையாவது ஒழுங்காகச் செய்வோம் என்று மனது தானாகவே சொல்லிக் கொண்டிருந்தது.

”ம்.... நான் தியெட்டர் போறன் நீ ஓய்வெடுத்திட்டு வா”
கூறிக் கொண்டே ஸ்டெத்தை எடுத்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தேன்.

கையை ஸ்க்ரப் பண்ணி விட்டு வரவும், அல்லி அக்கா மயக்க மருந்து கொடுத்து ஆயத்தமாக வைத்திருந்தார். கையுறையை அணிந்து கொண்டு வரவும் உதவியாளர்கள் அனைத்தும் ஆயத்தமாக வைத்திருந்தார்கள். Wound toilet செய்ய வேண்டிய காயம். இது தான் கடைசியாக செய்ய வேண்டிய wound toilet என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டேன் காயத்தை சரியாக பராமரித்தால் அடுத்த வாரம் தையல் போடலாம்.
ஏனோ தெரியவில்லை கத்தியை கையில் எடுத்ததும் என்னைச் சுழ இருப்பதே எனக்கு மறந்து விடும் அதற்குள் திருமகளும் இன்று மாட்டுப்பட்டு விட்டாள். வேகமாகவே செய்து முடித்தேன். இரண்டாம் தரம் ketamine கொடுக்க வேண்டிய தேவை அல்லி அக்காவுக்கு ஏற்படவில்லை.
சாதுவாக தலையிடிப்பது போல இருந்தது.

”அக்கா அடுத்தாளை ஏற்றுங்கோ ரீ ஏதாவது குடிச்சிட்டு வாறன்”
அவர் தலையசைத்ததைக் கூடப் பார்க்காமல் கவுணைக் கழட்டிக் கொழுவி விட்டு வெளியே வந்தேன் மேசையில் சுடுதண்ணீர்ப் போத்தலில் தேநீர் ஆயத்தமாகவே இருந்தது.

ஒரு தடவை தான் வாயில் வைத்திருப்பேன் கேசவன் வேகமாக கதவைத் திறந்து கொண்டு வந்து ஜீன்ஸ் பொக்கட்டில் கையை விட்டபடி…
”சேரா… அவா எழும்பீட்டா திருமகள் உனக்கனுப்பச் சொல்லி குடுத்ததா ஒரு கடிதம் தந்தவா”
அவன் நீட்ட முதலே இழுத்துப் பறித்துக் கொண்டேன்.

என்றும் என் அன்பிற்குரியவனுக்கு…
நலம் சுகம் எல்லாம் விசாரித்தெழுதி உன் கடமை நேரத்தையும் என் கடமை நேரத்தையும் வீணாக்க முடியாது. அதோட எனக்கடுத்ததா கடிதம் எழுத இன்னும் 3 பேர் பேனைக்கு காவல் நிக்கினம்..

நாம் ஒன்றாய் வாழும் காலம் மிகவிரைவில் கை கூடும்
முக்கியமா ஒண்டு சொல்லோணுமடா, இப்ப நீ அக்காவிட்டை தண்ணி வாங்கிக் குடிக்கும் போது உருமறைப்போட வரிசையில் நிண்டது நான் தான். ஓடி வந்து கையை பிடித்து பேசோணும் போல இருந்தது. 2 வருசத்துக்கு பிறகு பார்க்கிறன் உன்ர அழகும் மிடுக்கும் கண்டு மிரண்டு போனன். எல்லாரும் டொக்ரர் டொக்ரர் எண்டும் போது பெருமையா இருந்தது. நான் காயப்பட்டு வந்தால் நோகாமல் மருந்து கட்டுவியா.
கூப்பிடவில்லை எண்டு கோபிக்காதை அணியில் நிற்கும் போது பேசவே கூடாது என்பது நான் சொல்லித் தான் உனக்கு தெரியோணும் எண்டில்லை.

காகிதத்தின் அரைவாசி கண்ணீரால் நிரம்பியிருந்தது. கேசவன் எதுவுமே பேச முடியாமல் என் முகத்தையே பார்த்துக் கொண்டு நின்றான்.
”நீ போ போய் படு நீ வந்தால் தான் நான் போய் படுக்கலாம்”
தன்னை விரட்டுகிறான் எனப் புரிந்திருக்க வேண்டும் திரும்பித் திரும்பிப் பார்த்தபடியே சென்றான்.

அல்லி அக்கா அடுத்த காயத்தை ஆயத்தப்படுத்தியிருப்பார். கடிதத்தை மடித்து ஜீன்ஸ் பையில் வைத்துக் கொண்டேன்.

கட்டிலில் கிடந்தவனின் காய வேதனைக் கதறல் சற்று அதிகமாகவே இருந்தது. மயக்க மருந்து வேலை செய்ய ஆரம்பிக்க ஆரம்பிக்க அவன் கத்தல் முனகலாக மாறிக் கொண்டிருந்தது. திருமகளின் வலியை மற்றைய ஜீன்ஸ் பையில் மடித்து வைத்துவிட்டு கையுறையை போட்டு கத்தியை கையில் எடுத்துக் கொண்டேன்.
6:32 PM - By ம.தி.சுதா 3

செவ்வாய், 27 செப்டம்பர், 2011

பில்கேட்சை ஏழையாக்கப் போகும் ஈழத்துப் புதல்வன்..!


உலகின் முதல் பணக்காரராக இருக்கும் பில்கேட்சை முந்துவது குப்புசாமிக்கு இயலாத காரியமாக இருந்தது. அவருக்கு சாவதற்குள் பில்கேட்சை முந்த வேண்டும் என்ற வெறி இருந்தது. இத்தனைக்கும் பில்கேட்சை விட இவருக்கு பல வயது அதிகம். இதை எண்ணியே வருத்தப்பட்டுக் கொண்டிருந்த குப்புசாமி ஒரு நல்ல விசயம் செய்தார். தன் மகனையும் தன்னைப்போல வியாபாரப் புலியாக மாற்றியிருந்தார். இவர் உலகின் இரண்டாம் தரப்பணக்காரராக இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம் ஆகும்.

வெள்ளி, 17 டிசம்பர், 2010

இலங்கைப் பதிவர்களின் கிரிக்கேட் போட்டி ஒரு பார்வை

                  இங்கே முழுப் போட்டியையும் விபரிப்பது சிரமம் என்பதால் அதன் ம(மு)க்கிய தருணங்களை விபரித்துப் போகிறேன். யாரும் சிரியசான பதிவு என நினைத்து வாசிக்க வேண்டாம் பதிவுலகத்தில் எனது முதலாவது நகைச்சுவை பதிவு என நினைக்கிறேன் (ஆனால் வாசிப்பவங்க அழுவீங்கண்ணு தெரியும்.)
             இதமான அந்த மாலைப் பொழுதில் மழை வருமா வராதா என்ற ஒரு நிலைப்பாட்டில் போட்டி நிகழ்வுகள் ஆரம்பமாகியது. சாதாரண போட்டி என யாரும் நினைக்கமுடியாத அளவிற்கு மூக்கின் மேல் விரல் வைக்கும் அளவிற்கு போட்டி ஆயத்தம் நடந்தது குறிப்பாக UDRS முறை கூட இருந்தது ஆனால் என்னவென்றால் அனைத்து பதிவரும் தமது கமரா போனை இழக்க வேண்டியிருந்தது. அதற்கான பொறுப்பை ஏற்ற வரோ சிறப்பாக செய்து கொண்டிருந்தார்.

புதன், 8 டிசம்பர், 2010

கருத்தடை முறை உருவான கதை - contraception

              இது சரியானது என்றும் இல்லை பிழையானது என்றும் ஒருவாதம் இருந்து கொண்டே இருக்கிறது கால ஓட்டத்தில் இது தப்பில்லை என்னும் அளவிற்கு மாறியிருக்கிறது.
             பெண்கருத்தடை முறையில் சில சட்டரீதியாகவும் பல சட்டரீதியற்றதாகவும் இருக்கும் நிலையில் இன்று நான் எடுத்து விளக்கப்போவது சட்டரீதியான முறை ஒன்றைப் பறியதாகும்.
              கதை கீழே உள்ளது அதற்கு முன் விடயத்தை சொல்லிப் போகிறேன். இதற்கு T வடிவ லூப் பயன்படத்தப்படுகிறது இது intrauterine devices எனப்படும். இது T வடிவம் எனப் பொதுவாகச் சொன்னாலும் இதிலும் சில வடிவமாற்றங்கள் இருக்கிறது. இதன் செயற்பாடு என்னவென்றால் கருப்பையின் உட்சுவர்களில் தொடுகையை எற்படுத்துவதன் மூலம் அங்கே கருத் தங்கலை தடுக்கிறது. விந்தும் சூலும் சேர்ந்து கருக்கட்டப்பட்டபின் அக்கருவானது கருப்பையின் உட் சுவரான endometrium ல் பதிக்கப்படும். அனால் உட்சுவரில் ஏதாவது வேற்றுப் பொருட்கள் (foreign body) இருக்குமானால் கருப்பை அங்கே கருவளர அனுமதிக்காது.

ஞாயிறு, 21 நவம்பர், 2010

குடும்ப நடிகையின் ஆபாசப் புகைப்படங்கள் (நிமிடக் கதை 18+)


இந்தப் படத்திற்கும் பதிவிற்கும் சம்பந்தமே இல்லை.... என்ன சுதா 18+ ற்கு இறங்கிட்டானே என்று பயப்படாதியுங்கோ..
இது ஒரு தீர்க்கதரிசனக் கதையாகும்.
          அன்றைய செய்திகளனைத்தும் அவள் பெயரைத் தாங்கியே வந்திருந்தது. அவள் பிரபலத்தில் கண் வைத்த சிலர் செய்த சதி தான் இது என பலர் பேசினார்கள்.அது சரி இது எப்படி மதியோடை தளத்திற்குக் கிடைத்தது என்றும் பலர் பேசிக் கொண்டார்கள். அந்தப் படம் செயற்கையானது என ஒரு தொகை பேரும். இல்லை தத்தரூபமாக எடுக்கப்பட்டது என ஒரு குழுவும் வாதிட்டுக் கொண்டது.
10:25 AM - By ம.தி.சுதா 38

புதன், 27 அக்டோபர், 2010

விபசாரம் தோன்றிய கதை...!!!

          உலகில் உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் விடயங்களில் இதுவுமொன்றாகும். காரணம் அணுகுண்டளவிற்கு ஒரு பயங்கர ஆயுதங்களில் இதுவுமொன்றாக இருக்கிறது.

          இங்கு விபச்சாரத்தில் பெண்களை மட்டும் நான் குறிப்பிடுவதாக நினைக்க வேண்டாம். அண்மையில் என் தளத்திற்கு 4 எரிதல் ஊட்டம் வந்தது அது சீனா மொழியில் இருந்தது. அதை வதனப்புத்தகத்தில் போட்டேன் ஒரு அமெரிக்கா நண்பர் (ஐங்கரன்) தன் சீனா நண்பரின் உதவியுடன் அதனை மொழிபெயர்த்து அனுப்பியிருந்தார். அது ஒரு விபச்சாரம் சம்பந்தப்பட்ட ஒரு விளம்பரமாகும். அங்கே பார்த்தால் இருபாலாரும் இருந்தார்கள் (யாருக்காவது தொடுப்பு வேணுமா..???)

வெள்ளி, 10 செப்டம்பர், 2010

அன்புள்ள சந்தியா அங்கம் - 2

                                       கதைக்குள் நுழைவதற்கு முன் ஒரு அறிவுறுத்தல் இது மென்மையான காதல் கதை விரும்பிகளுக்கப் பொருத்தமற்ற கதையாகும். அத்துடன் காதாபாத்திரங்களின் பெயரையும் அப்படியே தொடர்கிறேன்....
                                  நான் எப்போதோ எழுதிய கதை சுபாங்கனால் ஆரம்பிக்கப்பட்ட மென்மையான கதைக்களத்துக்குள் இதை நான் அப்போது புகுத்த விரும்பவில்லை அதனால் தான் வெளியே வந்து இரண்டாம் அங்கமாக ஒரு சமூக பிரச்சனையை புகுத்தி வெளியிடுகிறேன்.
                       இக்கதை ஜனா அண்ணாவிடம் இருந்து தொடர்கிறது. இதன் அங்கம் ஒன்றில் அருமையான மென்மை காதல் ஒன்றை பதிவுலகுக்கு தந்தவர்கள் சுபாங்கன் >>லோசன் >>ஜனா >>பவன் >>அனுதினன் (இவர்களின் பெயர்களைச் சொடுக்கி அவர்களின் கதையை படிக்கவும்)

முன் கதைச்சுருக்கம்
சுபாங்கன்
பேருந்தில் பயணித்த சுதா அருகில் காரில் வந்த சந்தியாவை காண்கிறான். மண்சரிவால் அவள் பயணம் தடைப்பட தன் வீட்டுக்க அழைத்துப்போய் அறிமுகப்படுத்தி தொலைபேசி இலக்க பரிமாறலுடன் பிரிந்த கொள்கிறார்கள்.
லோசன்
சந்தியாவிடம் இருந்த வரும் அழைப்பொன்றில் திருமண அழைப்பு மடல் அனுப்ப அவன் முகவரி கேட்கிறாள் அவன் உடைந்த போகிறான்.
ஜனா
தனக்கு வந்த உறையை பார்த்தவன் திகைத்தப் போனான் அதில் இவன் சகோதரி பிரியாவிற்கும் சந்தியாவின் அண்ணனுக்கும் திருமணம் என்றிருந்தது. அதைப்பார்த்தவன் மயங்கி விழுகிறான்...
இனி அடியேன்

வெள்ளி, 13 ஆகஸ்ட், 2010

ஆணுறை உருவான கதை (condom)

                                     இது A தரச்சான்றுக்குரிய கதையில்லை

அக்பர் காலத்திற்கு அண்மிய காலத்தில் ஒரு மன்னர் இருந்தார் அவருக்கு மற்ற விசயம் என்றால் போதும் ஏகப்பட்ட பிள்ளைகள் (குபேரன் படத்து மணிவண்ணன் போல) மந்திரியும் சொல்லியே சொல்லிப் பார்த்தார் அரசனால் தவிர்க்க மடியவில்லை. ஆனால் அரசனுக்கும் குழந்தைகள் அதிகமாகப் பிறப்பதில் உடன்பாடில்லை என்பதை உணர்ந்த மந்திரி யோசனை செய்தார். அதன் முடிவில் தான் அவருக்கு இந்த யோசனை கிடைத்தது . மன்னனின் இந்திரியம் போவது தான் சிக்கல் அதைத் தடுத்தால் சரி. ஆனால் அடுத்த பிரச்சனை வந்த அது அரசனுக்கு சுகத்தை கொடுக்க வேண்டும். அத்துடன் அரசிக்கு சௌகரியமானதாகவும் இருக்க வெண்டும். அதன் முடிவாகக் கிடைத்தது தான் ஆணுறையாகும்.

மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்













back to top