Featured Articles
All Stories
கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 26 அக்டோபர், 2014

ரொம்பவே பாவம் அம்மா அடிக்கடி தன்னை மறந்து போகிறாா்

என்னோட அம்மா
ரொம்பவே பாவம்
அடிக்கடி தன்னை மறந்து போகிறாா்

தேயிலை போட்டதால் தான்
தேநீர் என உணர்ந்தும்
மனதால் மட்டும் சீனி போடுகிறார்

இரு முறை உப்பிட்ட குழம்பில்
கொஞ்சம் தந்து கேட்கிறார்
உப்பிட்டேனா என பார்த்து சொல் என்று

ரொம்பவே பாவம் அம்மா
அடிக்கடி தன்னை மறந்து போகிறாா்

ஆசையாய் வைத்த கறியில்
ஒரு கறியேனும் போட மறந்து போய்
இரண்டாம் தடவை உண்ணென
குழந்தையாய் கெஞ்சுகிறார்

மணிக்கூட்டு அலாரத்துக்கு கூட
மணிக்கொரு சாத்திரம் வைத்து
தன் மனசை தேற்றுகிறார்

ரொம்பவே பாவம் அம்மா
அடிக்கடி தன்னை மறந்து போகிறாா்

பெற்றெடுக்கா பிள்ளைகளான
பல்லிகளுக்கு உணவளிக்க
தனியாய் ஒரு மின்குமிழ்
ஒதுக்கி வைத்திருக்கிறார்

பல்லி மிச்சம் வைத்த
ஒற்றை பூச்சியேனும்
அடிக்கடி எட்டிப் பார்க்கும்
ஏதாவது ஒரு உணவுக்குள்

ரொம்பவே பாவம் அம்மா
அடிக்கடி தன்னை மறந்து போகிறாா்

இத்தனைக்குள்ளும்
அறுசுவை உணவே உண்கிறேன்
அத்தனை குறையையும்
தான் சந்தோசமாயிருப்பதாய்
நடித்து அளிக்கும்
பாசம் என்ற சுவையூட்டியால்
அறு சுவை உணவே உண்கிறேன்

ரொம்பவே பாவம் அம்மா
அடிக்கடி தன்னை மறந்து போகிறாா்

நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா
10:39 PM - By ம.தி.சுதா 5

வியாழன், 2 ஆகஸ்ட், 2012

சில்லறை வரிகள் பாகம் - 1


இந்த வாடிய மலரிலிருந்து
மொத்த இதழ்களும் விழுந்தாலும்
காம்பாய் நீயிருக்கும் வரை
இந்த விதை உதிராது#அக்கா


உன் முந்தானை நுனியில் கட்டி வைத்துக் கொள்
பறந்து போய்விடும்.
என் மனதல்ல உன் மானம்.


என்றோ ஒரு நாள்
குட்டி போடும் என
புத்தகத்துள்வைத்த மயிலிறகை
இவ்வளவு நாளும் தேடி அலைந்தேன்
நேற்றுக் காயப்பட்டே
அறிந்ததோ தெரியவில்லை
ஓடி வந்து மருந்திட்டுப் போகிறது


சிப்பிக்குள் இருந்து
முத்துக்கள் பிடுங்கப்படுகிறது
சிப்பியில் சிலை செய்த சிறுவனுக்கு
உலகச் சிறப்பு விருது
முத்தோ
பணக்காரன் பெட்டியில்முடங்கிக் கிடக்கிறது




வெற்றிலை சாத்திரி சொன்னான்
நீ உயிரோடிருக்கிறாயாம்
எங்கே என்றேன்தெரியலியாம்
உன் வெற்றிலையில்என் மனது தெரியாதா ?

வியாழன், 19 ஜூலை, 2012

அறிவூட்டும் கவிதைகள் – 1

காதல் வண்டு போன்றது
உலகில் அதிகமாய்
இருக்கிறது.

காதல் நாய் போன்றது
உலகில் எந்த தட்ப வெப்பத்திலும்
வாழ்ந்து பிழைக்கிறது.
12:15 AM - By ம.தி.சுதா 26

சனி, 17 டிசம்பர், 2011

உயிர் தந்தோருக்கு ஒரு வரியால் ஒரு குரல்

எம் மண் மாளுகையில்
உம் மண் போல் உயிர் நீத்திரே
உம்மை
கேட்க நாதியற்றவர் போல்
கேவி அழ வைத்து விட்டாரே
கேரளத்து மானுடர்கள்
11:15 PM - By ம.தி.சுதா 12

புதன், 14 டிசம்பர், 2011

ஊரைப் பிரிந்த புலம்பெயர் தமிழனின் ஏக்கம் என்ன?

புலம்பெயர் தேசத்தில் வாழும் என் உறவினர் ஒருவரின் மேடை நிகழ்ச்சி ஒன்றுக்காக என்னால் புனையப்பட்ட வரிகளுக்கு அவரே குரல் வடிவம் கொடுத்துள்ளார். அதன் வடிவம் கீழே இணைக்கப்பட்டுள்ளது. அக்காணொளியில் அவர் பிறந்த மண்ணே பின்னணியாக்கப்பட்டுள்ளது. ஆனால் அதில் காட்டப்பட்டுள்ள அரசமரம் இன்று எம்மோடு இல்லை.


ஒரு முறை
என் மண் போக வேண்டும்
விடுமுறை
தான் ஒன்று தாறீரோ


நான் தின்று வழ்ந்த மண்ணது
எனைத் தின்னும்
பாக்கியம் இழந்திடுமோ
எட்ட நின்று ஊர் பார்த்தால்
பச்சை கொடியசைக்கும் ஆலமரம்
காலாற ஒரு கல்
கவ்வுகின்ற தென்றல்
முப்பொழுது போனாலும்
முகம் சுழிக்கா திண்ணை அது


ஒரு முறை
என் மண் போக வேண்டும்
விடுமுறை
தான் ஒன்று தாறீரோ
திட்டம் போட்டு அறுந்த விழுதால்
பிட்டம் தெறித்து விட
சொட்ட சொட்ட அழுதது
மறக்கவில்லை


அங்கே
அற்ப காலம் தங்கினாலும்
என்னை
சிற்பம் போல் செதுக்கிய
கற்பகத் தான் காலடி தான் என் சொர்க்கம்
ஒரு முறை
என் மண் போக வேண்டும்
விடுமுறை
தான் ஒன்று தாறீரோ


நடு வளையில் ஏணை கட்டி
என்னை
சீரங்கம் சீராட்டிய மாளிகை
ஊரில் ஓரம் போய் இருப்பதாய் அறிந்தேன்
நெஞ்சு பதறுதம்மா
பிஞ்சுத் தோடம்பழத்தை
அஞ்சாமல் பிடுங்கியதும்
புழு தின்ற இலந்தையை கூட
புழுகி புழுகி சுவைத்ததும்
இதே கைகள் தானே


அந்த மண்ணில்
ஒரு பிடி அள்ளத் தவறின்
அறுத்தெறிவேன் என் கரங்களை
ஆண்டவனே
ஒற்றை வரம் தாரும்
ஒரு முறை என் மண் அள்ள
மறுப்பின்றி அனுமதி தாரும்
உன் கால் தொழுது
காலனிடம் கொடுத்திடுவேன்
என்னுயிரை


ஒரு முறை
என் மண் போக வேண்டும்
விடுமுறை
தான் ஒன்று தாறீரோ

குறிப்பு - நண்பர்கள் யாராவது இப்பதிவை திரட்டியில் இணைத்து விடுங்கள்.



ஈழத்து மொழி, கலை, கலாச்சாரம், பண்பாட்டு விழுமியங்களின் இன்றைய நிலையினைக் கருத்திற் கொண்டு; எம் அடுத்த சந்ததியிடமும், உலகெங்கும் பரந்து வாழும் எம் தமிழ் உறவுகளிடமும் இவ் விடயங்களை அழிவுறாது கொண்டு செல்லும் நோக்கிலும் ஆவணப்படுத்தும் நோக்கிலும் ஈழ வயல் எனும் வலைப் பதிவினைப் பதிவர்கள் இணைந்து உருவாக்கியிருக்கிறார்கள்.ஈழவயலில் வெளியாகும் பதிவுகளை நூலுருப்படுத்தும் முயற்சியிலும் பதிவர்கள் ஈடுபடுகின்றார்கள். இந்த ஈழ வயல் வலைப் பதிவினை நீங்களும் தரிசித்து உங்கள் ஆதரவினையும் இவ் வலைப் பதிவிற்கு வழங்கலாம் அல்லவா?
10:57 AM - By ம.தி.சுதா 25

திங்கள், 29 ஆகஸ்ட், 2011

தாய்க்குலமே இம் முடிவு வேண்டாமம்மா


உன் காலடி தொழுகிறேன் தாயே
கொலைக்கு
 கொலை
தீர்வில்லை
 என்றவளே
உன்னை
 ஏன் கொலை செய்தாய்

சனி, 18 ஜூன், 2011

தொலைக்கப்பட்ட உயிர்களும் பிழைத்து நிற்கும் பிணங்களும்

வணக்கம் உறவுகளே...
சேமம் எப்படி என இன்று கேட்கமாட்டேன் காரணம் தெரிந்திருக்கும் இந்த உலகத்திலுள்ள தமிழர் மன நிலையும் கடந்த ஓரிரு நாளில் கலங்கடிக்கப்பட்டு விட்டது. மனங்களில் புதைந்துள்ள வலிகளை எப்படிச் சொல்வது. என்னிடம் வார்த்தைகள் இல்லை. ரணங்களை விபரிக்க முடியாது அவை உணர்வுகள். மன்னியுங்கள் என்னால் எந்த இணையத்திலும் சரியாக இணைய முடியல. எங்கு பார்த்தாலும் அது தான் மறக்க நினைக்கும் அத்தனையும் மீள மீள உதைக்கிறது. தயவு செய்து மன்னியுங்கள்.
11:23 PM - By ம.தி.சுதா 35

திங்கள், 9 மே, 2011

என் மலர் விழியை கண்டிங்களா ?



தனிமை
இரவு
நிலவு
முதிரைமரம்
ஒரு ராணுவ வீரன்
நான்

அந்த இடம் மறக்க வில்லை
நினைவிலேயே நிரம்பியிருக்கிறது
அவளை கடைசியாக சந்தித்த இடமல்லவா
ஓடிப் போகிறேன்

சனி, 16 ஏப்ரல், 2011

என் நூறாவது பதிவை திருடிய சுயநலக்காரி..




இந்தப் பதிவை தட்டச்சிட உதவிய அருமை அக்காவிற்கு முதலில் நன்றி சொல்லி தொடர்கிறேன்.

இந்த வரிகளை
உனக்காய் பிரசவிப்பதில்
பெருமை கொள்கிறது
என் பேனா
என்னை பிரசவித்தவள் தான்
நீயெனும் போது
வார்த்தைகளை மறைக்கிறது
பொறாமையாய் இருக்கலாம்.

வெள்ளி, 21 ஜனவரி, 2011

காதல் கற்பித்த தமிழ் பாடம்


உன்னை எனக்கு பிடிக்கவில்லை
என்று நீ பறைந்திருந்தால்
என் காதலுக்கது
முற்றுப் புள்ளியாகியிருக்கும்.......


என் காதலை சொன்ன கணம்
நீ எதிர் பார்க்கா கேள்வியை
நான் கேட்பதாய் சொன்னாயே
என் காதலுக்கது ஆச்சர்யக்குறி !!!!!!!!!!

வியாழன், 30 டிசம்பர், 2010

அழியா வடுக்கள்

இந்த வருடத்தின் இறுதிப் பதிவுடன் விடை பெறுகிறேன். என் உறவுகள் எல்லோருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்

உறவுக்குள் கரை நீ
என்னிலாடும்
உணர்வுக்குள் துளி நீ
என்னுள் வாழும் காரிகை நீ
மனக் கண்ணில் வரைந்த தூரிகை நீ
11:23 PM - By ம.தி.சுதா 47

புதன், 15 டிசம்பர், 2010

பொது அறிவுக் கவிதைகள் - 4

காதல் கவிதை இப்படியும் புனையலாமா ?


சுவிஸ் ஜனாதிபதி போல்
உனக்கும் வருடத்திற்கு ஒரு காதலன்
அதனால் நெதர்லாந்து போல்
என் காதல் வருடாவருடம் புதைந்து போகிறது
என்னை
காகம் என்று எக்காளித்தாயே
நான் நியுசிலாந்தில்
பிறந்திருந்தல் அதன் மதிப்பறிவாயா
விவாகத்தை ரத்தாக்கும்
விபரம் கேட்டவளே

ஞாயிறு, 5 டிசம்பர், 2010

பொது அறிவுக் கவிதைகள் – 3

மனிதன் வாழச்
சரியான இடம் நோர்வேயாம்
நான் வாழ
சரியான இடம் உன் மனதல்வா
அது மாலை தீவு போல்
சமாதானமாகவே இருக்கிறதே.

சனி, 27 நவம்பர், 2010

கடவுள்களை தொலைத்து விட்டோம்.

நீ இல்லை என்று தான்
எனக்கு சொல்லிக் கொள் (ல்) கிறார்கள்


நானும் இல்லை என்றே சொன்னேன்
உன்னையல்ல
அவர்கள் சொன்ன சொல்லை


இன்று ஏனோ என் மனம் தவிக்கிறது
இத்தனை நாளாய் தேடியும்...????
உள்மனம் சமூகச் சொல்லை ஏற்க விளைகிறது.


இந்த மண் - உன்னை
விழுங்கிய நாளை மறந்திருக்கும்
ஏனென்றால்
அது உன்னை மட்டும் விழுங்கலையே.

வெள்ளி, 15 அக்டோபர், 2010

பொது அறிவுக் கவிதைகள் (2)

ஆண்டுகளும் விழாக்களும்....

கவிதை பாகம் ஒன்றுக்கு இங்கே சொடுக்கவும்

ஒரு ஆண்டாய் கடிதம் தந்தே
என் காதல் உன்னிடம்
காகித விழாக் கொண்டாடியது.

இரண்டு ஆண்டாகியும் – நீ
பஞ்சு விழா எடுக்கிறாய்
இந்த நெருப்பு அருகிருப்பது தெரியாமல்

சனி, 25 செப்டம்பர், 2010

என் வன்னி முகாம்....!!!

காலை மணியோசை
தூபமிடும் வானம்
டம்ளர் நீருடன்
காலைச் சிற்றுண்டியாய்
இரவின் உண்ணாவிரதம்
கலைக்கப்படும்

சப்பாணி கட்டி உண்போரின்
உணவுண்ணல் சிரமத்துக்காய்
நாள்தோறும் விசேட உணவு
வாய் என்ற குறிகாட்டிக்கு
எட்ட வைத்தே
இலக்கு வைத்தடிக்க
கடலை என்ற பெயரில்
விடலைகளை மந்த மாக்கும்
காலையுணவு
10:00 PM - By ம.தி.சுதா 22

வெள்ளி, 3 செப்டம்பர், 2010

மனிதன் உயிரோடிருக்கிறானா..?


இது போர் வேண்டுமென்று யாருடமோ பணம் வாங்கி அறிக்கை விட்டிருக்கும் தமிழகத்தின் பிரபல கவிஞருக்கும், இம்புட்டு நாள் போர் நடக்கையில் கம்மண்ணு இருந்திட்டு இப்ப மட்டும் வீர வசனம் பேசும் அமெரிக்க குடியுரிமையாளிக்கும், தன் அகதிக் குடியுரிமை பறி போய்விடும் என்று அந்நிய நாட்டில் இருந்து சொந்த நாட்டு உறவுகளுக்கு குழிபறிக்கும் கோடாரிக்காம்புகளுக்கும் சமர்ப்பணம்...

ஞாயிறு, 15 ஆகஸ்ட், 2010

வன்னி மகளின் புலம்பலை கேட்பாரில்லையோ ......!!!!

அபலை

அம்மா நீ பெற்ற பிள்ளை
இன்று உனைச் சுமக்க
கருப்பையின்றி நிற்கிறது

நீ ஒலிவோயில் பூசிய
கால்களை தடவிப் பார்க்கிறேன்
இன்று எந்த நாய் தின்று
எஞ்சிய என்பாக
கிடக்கிறதோ தெரியாது.


10:40 AM - By ம.தி.சுதா 11

செவ்வாய், 15 ஜூன், 2010

என் முதல் பதிவு - அம்மா மகேஸ் தில்லையம்பலத்திற்கு....




உயிர் தந்ததே போதுமம்மா

உனை உருக்கித் தானே
எனக்கு ஊன் கொடுத்தாய்
அன்புத்தாயே
வறுமை தான் நமக்கு
வாழ்வென்றானபோதும்
இருள் நீக்கவெனத்தானே
எனை ஈன்றெடுத்தாய்
கடவுள் என்று பேரிருந்தும்
தான் நினைப்பதை மட்டுமே
எமக்காய் செய்வான்
உன்னால் தான்
என் நெஞ்சிலொரு
துளை ஒன்று வந்ததாய்
உலகம் சொல்லுது
அன்புத்தாயே
என் இதயம் இப்போது
இதயமாய் இல்லை
குருதிப்பாய்ச்சலில்
உன் பெயர் ஒலிப்பதால்
அது ஒரு புல்லாங்குழலாய்
உன் பெயர் மட்டுமே
தருகிறது.
(சுடர்ஒளி 2008)

5:46 PM - By ம.தி.சுதா 9

மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்













back to top