Featured Articles
All Stories
உடல் நலம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உடல் நலம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 12 பிப்ரவரி, 2012

எனக்கே ஆப்பு வைத்துள்ள இலங்கை அரசின் புதிய சட்டம்

வணக்கம் உறவுகளே
சேமம் எப்படி..
நல்ல இடைவேளை ஒன்றின் பின் இவ் வலைப்பின்னல் ஊடே சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.


இலங்கை அரசானது தனது ஆட்சி முறமையில் பல புதிய சட்டங்களை இயற்றி வருகிறது. கடந்த சில காலத்திற்கு முன்னர் குடிகாரர்களுக்கு எதிராக ஒரு சட்டம் கொண்டுவத்திருந்தாலும் அது நடைமுறைச் சிக்கல் காரணமாக மதில் மேல் பூனை போலவே இருக்கின்றது.

சனி, 7 ஜனவரி, 2012

பாழ்பட்டுப் போகும் யாழ் மருத்துவம் (சில நெருடும் உண்மைகள்)



         இந்த உலகத்தில் எந்த மனிதனும் கடவுளை நேரே கண்டதற்கான ஆதாரங்கள் சரிவர சமர்ப்பிக்கப்பட்டதில்லை. இருந்தாலும் அதிகளவானோர் தமக்கு உயிர் கொடுக்கும் கண்கண்ட தெய்வங்களாக வைத்தியர்களையே மதிக்கிறார்கள். ஆனால் தற்காலத்தில் வைத்தியர்களோ மக்களை தம் பணம் கொழிக்கும் மரங்களாகவே நினைக்கிறார்கள்.
            அவர்களது தொழில் பக்தி தொலைக்கப்பட்டதாகவே என்னால் உணர முடிகிறது. கடந்த வருடம் மருத்துவமாதான தர்சிகாவின் கொலை வழக்கு அனைவரும் அறிந்திருப்பீர்கள். அந்த நீதி எங்கே ஒழித்தோடிவிட்டது என எவராலும் இனி தேடமுடியாது. அந்த குற்றவாளியான வைத்தியருக்கு பிணை எடுத்துக் கொடுத்ததே ஒரு தமிழ் வழக்கறிஞர் தான் என்பதை பலர் அறிவீர்களோ தெரியாது.
          அதன் பின் சிறிது காலத்தின் பின் ஒரு பத்திரிகையில் செய்தி ஒன்று பிரசுரமானது “அருந்ததியுடன் இருந்த வைத்தியர்கள்” என்ற தலைப்பில் அச்செய்தி வெளியாகியிருந்தது. அதன் உள் அர்த்தம் கடமை நேரத்தில் சில வைத்தியர்கள் மக்கள் காணக்கூடிய அறையில் இருந்து அருந்ததி திரைப்படம் பார்த்துக் கொண்டிருந்தார்களாம். உண்மையில் அங்கிருந்தவருக்கு கடமை நேரமா? ஓய்வு நேரமா? என உறுதிப்படுத்த முடியாவிட்டாலும் அதற்கு அடுத்ததாக அவர்கள் செய்த வேலை தான் மிகவும் நகைப்பிற்குரியதாகும். அதாவது அதற்கு விளக்கம் கொடுத்து துண்டுப்பிரசுரம் ஒன்றை அச்சடித்து அனைவருக்கும் வைத்தியர்கள் தங்கள் கையாலேயே விநியோகித்தார்கள்.
          கடந்த சில நாட்களுக்கு முன்னர் 3 வைத்தியர்கள் கடமைக்கு கையொப்பம் இட்டுவிட்டு தமது தனியார் வைத்திய நிறுவனத்துக்குச் சென்று கையும் களவுமாகப் பிடிபட்டதை பலர் அறிந்திருப்பீர்கள். அது மட்டுமல்ல யாழ்ப்பாணத்தின் பெயரை மையப்படுத்தி இயங்கும் இணையத்தளம் ஒன்று யாழ் வைத்தியசாலை சம்பந்தமான செய்திகளை அடிக்கடி வெளியிடுவது பலரும் அறிந்திருப்பீர்கள். இவையனைத்தும் அங்குள்ள ஒரு வைத்தியர் மூலம் தான் செல்கிறது என்பது பலரது சந்தேகமாகும். காரணம் அத்தகவல்களின் உறுதிப்பாடும் தரவுகளுமாகும்.
              உங்கள் சத்தியப்பிரமாணங்கள் எங்கே போய்விட்டது. ஏன் இந்த பிழைப்பு பிழைக்க வேண்டிய தேவை தங்களுக்கு ஏற்பட்டுள்ளது என தெரியவில்லை.
                 எனது தந்தையார் ஒரு உயர் குருதியமுக்க நோயாளியாவார். இவரது மாதாந்த மருத்துவ அமர்வுகளை மந்திகை (பருத்தித்துறை) வைத்தியசாலையில் தான் மேற்கொள்வார். கடைசியாக அவர் சென்ற நான்கு தடவைகளும் அவருக்கு குருதி அமுக்கம் சோதிக்கப்படவில்லை. ஒரு உயர்குருதி அமுக்க நோயாளியின் அமுக்கம் கட்டுப்படுத்தப்படாவிடில் மூளையில் உள்ள சிறிய குழாய்கள் வெடிப்பதன் மூலம் பாரிசவாதம் ஏற்படும் என்பது ஒரு பாரதூரமான விளைவாகும்.அந்த வைத்தியர் அதே மாத்திரைகளை மீளக் கொடுத்துள்ளார். அவரது கையொப்பத்துடன் (repeat all drug) என்பதைத் தான் எழுதியுள்ளார். ஆனால் நான் வீட்டில் வந்ததும் சோதித்தால் 160/110 என்ற முறையில் தான் பாதரச அளவு காட்டுகிறது. அந்தளவு தொழிலில் பற்று இல்லாமல் அலுப்புத் தட்டினால் ஓய்வு பெற்று வீட்டில் போய் இருக்கலாமே.
               அதை விட முக்கியம் இனிமேல் குறிப்பிடப் போவது தான். இது தான் நான் இப்பதிவை எழுதுவதற்கு முக்கிய காரணமாகும். கடந்த (03.01.2012) அன்று எனது மைத்துனி ஒருவர் யாழ் வைத்தியசாலையில் மரணமாகியிருந்தார். 51 வயதை உடைய இவர் நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டிருந்தாதுடன், சலரோகத்தாலும் பாதிக்கபட்டிருந்தார். அதன் பிற்பாடு அவரது காலில் ஒரு மாறாத காயம் ஏற்பட்டிருந்ததால் மந்திகை வைத்தியசாலையில் அவருக்கு கால் கழட்ட முடிவெடுக்கப்பட்டது (amputation) இருந்தாலும் வைத்தியர்களின் 40 நாட்களின் மிகப் பெரும் போராட்டத்தால் கால் காயம் ஓரளவு குணமாக்கப்பட்டு அதற்கு தோல் பிரதியிடலும் (skin graft) ம் செய்யப்பட்டு வீட்டுக்கு அனுப்பப்பட்டு 5 நாளின் பின் வலிப்பு ஏற்பட்டு (fits) மீண்டும் வைத்தியசாலைக்குக் கொண்டு சென்று மறுநாள் மீண்டும் வலிப்பு ஏற்பட்டு மரணமானார்.
       வைத்தியர்களின் பதில் என்ன வென்றால் அவரது இதயத்தில் துவாரம் இருந்ததால் தான் மரணமானாராம். அதற்கு அவர்களிடம் அவருக்கு அப்படி எதுவும் இருக்கவில்லையே எனக் கேட்ட போது அது பிறப்பிலேயே இருந்திருக்கலாம் ஆனால் கவனிக்கப்படத் தவற விடப்பட்டிருக்கலாம் என கூறினார்கள். அத்துடன் அவரது கை நடுக்கத்தால் மின் வரையியில் (ecg) ல் தெரியாமல் விட்டிருக்கலாமாம். இது எந்தளவுக்கு சாத்தியம் மின் வரையி என்பது அவர் தன் கையால் வரைவதில்லையே 15 வருடத்திற்கு மேலாக தீவிர மருத்துவ சிகிச்சைக்கு உட்பட்டிருந்ததுடன் கடைசிக்காலத்தில் icu வில் இருந்தார். அது மட்டுமல்ல இதுவரை ஒரு நாள் கூட அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதில்லை என்பதை அறிவிர்களா?

       hole in the heart என்பது தொற்று நோயல்லவே மரணத்தின் சில மணி முன்னர் வருவதற்கு.
    என்ன இருந்தாலும் நான் சட்ட நடவடிக்கைக்கு முன் நிற்கவில்லை காரணம் அவ் வைத்தியர்களும் உண்மையில் போராடினார்கள்.
  என் கணிப்பின் படி அவருக்கு கிருமித் தொற்றால் செப்டிக் (septic) வந்திருக்கலாம் என நினைக்கிறேன்.
   எது எப்படி இருப்பினும் கடவுள்கள் கூட தப்புச் செய்வதுண்டு. இம்முறை பக்தர்கள் நாங்கள் மன்னிக்கிறோம் என்றும் கடவுளாக இருக்க முயற்சியுங்கள்.
       இங்கு குறிப்பிட்டுள்ள தவறுகள் கடமை நேரம் பாராது இப்பணியை சிரமேற்கொண்டு இரவு பகலாக உழைக்கும் அழப்பரிய அர்ப்பணிப்புவாதிகள் மனதை பாதித்தால் என்னை மன்னிக்கவும்.


நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா
11:35 PM - By ம.தி.சுதா 28

வியாழன், 17 நவம்பர், 2011

மழை காலச் சளித் தொல்லைக்கு வீட்டில் ஒரு சிக்கன மந்திரம் Nuisance cold solution

வணக்கம் உறவுகளே சேமம் எப்படி?

        மழைகாலம் வந்தாலே அதனோடு சேர்ந்து இந்தச் சளித் தொல்லையும் வந்து விடுகிறது. மழையில் நனையாதே நனையாதே என்று எவ்வளவு தான் கத்தினாலும் அது மனதில் உறைப்பதில்லை.

ஞாயிறு, 1 மே, 2011

அளவுக்கதிகமான பரசிட்டமோல் என்ன செய்யும்.. (Paracetamol Poisoning)

                 சில விடயங்கள் அறியப்படாததன் விளைவுகள் பாரிய விளைவுகளை ஏற்படுத்தும். அதனடிப்படையில் தான் இந்த Paracetamol Poisoning ம் உள்ளடங்குகிறது. சிலர் தற்கொலை முயற்சிக்காக இதை நாடினாலும் அதனால் வரும் வேதனையே அவர்களை மரணத்தின் வாயிலில் ரணப்படுத்திக் கொல்லும்.
11:33 PM - By ம.தி.சுதா 42

புதன், 8 டிசம்பர், 2010

கருத்தடை முறை உருவான கதை - contraception

              இது சரியானது என்றும் இல்லை பிழையானது என்றும் ஒருவாதம் இருந்து கொண்டே இருக்கிறது கால ஓட்டத்தில் இது தப்பில்லை என்னும் அளவிற்கு மாறியிருக்கிறது.
             பெண்கருத்தடை முறையில் சில சட்டரீதியாகவும் பல சட்டரீதியற்றதாகவும் இருக்கும் நிலையில் இன்று நான் எடுத்து விளக்கப்போவது சட்டரீதியான முறை ஒன்றைப் பறியதாகும்.
              கதை கீழே உள்ளது அதற்கு முன் விடயத்தை சொல்லிப் போகிறேன். இதற்கு T வடிவ லூப் பயன்படத்தப்படுகிறது இது intrauterine devices எனப்படும். இது T வடிவம் எனப் பொதுவாகச் சொன்னாலும் இதிலும் சில வடிவமாற்றங்கள் இருக்கிறது. இதன் செயற்பாடு என்னவென்றால் கருப்பையின் உட்சுவர்களில் தொடுகையை எற்படுத்துவதன் மூலம் அங்கே கருத் தங்கலை தடுக்கிறது. விந்தும் சூலும் சேர்ந்து கருக்கட்டப்பட்டபின் அக்கருவானது கருப்பையின் உட் சுவரான endometrium ல் பதிக்கப்படும். அனால் உட்சுவரில் ஏதாவது வேற்றுப் பொருட்கள் (foreign body) இருக்குமானால் கருப்பை அங்கே கருவளர அனுமதிக்காது.

வெள்ளி, 13 ஆகஸ்ட், 2010

ஆணுறை உருவான கதை (condom)

                                     இது A தரச்சான்றுக்குரிய கதையில்லை

அக்பர் காலத்திற்கு அண்மிய காலத்தில் ஒரு மன்னர் இருந்தார் அவருக்கு மற்ற விசயம் என்றால் போதும் ஏகப்பட்ட பிள்ளைகள் (குபேரன் படத்து மணிவண்ணன் போல) மந்திரியும் சொல்லியே சொல்லிப் பார்த்தார் அரசனால் தவிர்க்க மடியவில்லை. ஆனால் அரசனுக்கும் குழந்தைகள் அதிகமாகப் பிறப்பதில் உடன்பாடில்லை என்பதை உணர்ந்த மந்திரி யோசனை செய்தார். அதன் முடிவில் தான் அவருக்கு இந்த யோசனை கிடைத்தது . மன்னனின் இந்திரியம் போவது தான் சிக்கல் அதைத் தடுத்தால் சரி. ஆனால் அடுத்த பிரச்சனை வந்த அது அரசனுக்கு சுகத்தை கொடுக்க வேண்டும். அத்துடன் அரசிக்கு சௌகரியமானதாகவும் இருக்க வெண்டும். அதன் முடிவாகக் கிடைத்தது தான் ஆணுறையாகும்.

புதன், 4 ஆகஸ்ட், 2010

காயத்ரி மந்திரம் மருத்துவரீதில் சிறந்தது தான்


                  விஞ்ஞான ரீதியில் பார்த்தாலும் இது மிகப் பெரும் உடற்பயிற்சி தான்.
விளக்கம் அடியில் இருக்கிறது.

ஓம் பூர் புவ: ஸுவ:
தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோன: ப்ரசோதயாத்


என்று ஆரம்பிக்கும் இம் மந்திரத்தில் ஏதோ சக்தி இருக்கிறது என்பதை கட்டாயம் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும். இதை முறையாக ஒரு முறை செய்து பார்த்தால் வாழ்வில் வரும் மாற்றங்களை வைத்து நீங்கள் உணரலாம்.

மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்













back to top