Featured Articles
All Stories
விஞ்ஞான சிறுகதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விஞ்ஞான சிறுகதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 14 மார்ச், 2014

மலேசிய MH370 சொன்ன நிமிடக் கதை

முல்லைத்தீவின் கடற்கரையில் முதுகை மணலில் உலர்த்திக் கொண்டிருந்த சாந்தனுக்கு ஒரு வாரமாகியும், கடலில் தான் கண்ட வெளிச்ச வீழ்ச்சியை மறக்க முடியவில்லை . எல்லோரும் சொல்லிக் கொள்கிறார்கள். முல்லைத்தீவுக் கடலில் ஏதோ ஒன்று வெளிச்சத்தோடு வந்து விழுந்தது என்கிறார்கள். ஆனால் யாரும் நம்ப தயாரின்மையால் அலை போல கதையும் கரையோடு ஓய்ந்து போனது.
இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னர் தான் மலேசியாவின் MH370 காணாமல் போனது என செய்திகள் வேறு பரபரப்பாக போய்க் கொண்டிருக்கையில் இந்த கதை அமைதியாய் அமுங்கி போக ஆரம்பித்திருக்கிறது.
தலைமாட்டில் யாரோ நடக்கும் அசுமாத்தம் கேட்டதால் சற்று எம்பி பார்த்தவன் முகத்தில் சந்தேக ரேகைகள், ஆங்கிலப்படங்களில் பார்த்த பிச்சைக்காரர் போல அரை குறை தாடியுடன்  ஒரு வெள்ளையன் சோர்ந்து போய் அமர்கிறான்.
அவனுக்கு தெரிந்த ஆங்கிலத்தில் வினாவினால் அவன் சொன்ன பதில் “MH370“ ல் தவறியவனாம் ஒரு வாரமாக கடலில் கிடைத்த மரக்கட்டையை பிடித்து கரையேறியதாக” சொன்னான்.
அருகில் இருந்த வீட்டில் போய் அவனுக்கு தாகசாந்தி செய்து ஆசுவாசப்படுத்திய போது பேச ஆரம்பித்தான்.
“தான் ஒரு விஞ்ஞான பேராசிரியராம். தமது விமானம் கருந்துளைக்குள் தான் போனது ” என அரை குறை தொனியில் உளறிக் கொண்டிருந்தான்.
அதை விட குளம்பிப் போயிருந்த சாந்தன் இப்போது 119 ற்கு அழைப்பெடுத்து தானும் ஏதோ உளறிக் கொண்டிருக்கிறான்.
நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்

ம.தி.சுதா

குறிப்பு - time related theory தெரிந்தவர்கள் இதில் எத்தனை வகை உள்ளடக்கப்பட்டிருக்கிறது என சின்ன விளக்கம் தந்தால் நானும் ஒரு முடிவுக்கு வரலாம்.
11:43 PM - By ம.தி.சுதா 0

செவ்வாய், 27 செப்டம்பர், 2011

பில்கேட்சை ஏழையாக்கப் போகும் ஈழத்துப் புதல்வன்..!


உலகின் முதல் பணக்காரராக இருக்கும் பில்கேட்சை முந்துவது குப்புசாமிக்கு இயலாத காரியமாக இருந்தது. அவருக்கு சாவதற்குள் பில்கேட்சை முந்த வேண்டும் என்ற வெறி இருந்தது. இத்தனைக்கும் பில்கேட்சை விட இவருக்கு பல வயது அதிகம். இதை எண்ணியே வருத்தப்பட்டுக் கொண்டிருந்த குப்புசாமி ஒரு நல்ல விசயம் செய்தார். தன் மகனையும் தன்னைப்போல வியாபாரப் புலியாக மாற்றியிருந்தார். இவர் உலகின் இரண்டாம் தரப்பணக்காரராக இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம் ஆகும்.

வியாழன், 2 செப்டம்பர், 2010

செத்தும் கொடுத்த சீதாக்காதி கதையின் விஞ்ஞான விளக்கம்.

ஆரம்பத்திலேயே சொல்லிக் கொள்கிறேன். இது இலக்கியத்தை கொச்சைப்படுத்த எழுதப்படவில்லை. எல்லோரும் இலக்கிய கண்ணாடி போட்டுப் பார்த்த ஒரு விடயத்தை என் குருநாதர் சுஜாதா வழியில் நான் விஞ்ஞானக் கண்ணாடி போட்டுப் பார்த்திருக்கிறேன்.

                            அந்தப் புலவனால் இனியும் வறுமையை பொறுக்க முடியவில்லை. அவன் முடிவாக ஒரு தீர்மானத்திற்கு வந்து விட்டான். சீதாக்காதி மன்னனின் வள்ளல் குணம் பற்றி பிற்பகல் தான் யாரோ சொல்லக் கேட்டிருந்தான். தீர்க்கமான முடிவுக்கு வந்த புலவன் ஒரு அமைதியான இடம் நோக்கிச் சென்றான். அவருக்கு நல்ல ஒரு பாடல் பாட வேண்டும் அவர் மனம் மகிழ்ந்து பொன்னும் பொருளும் அள்ளி அள்ளித் தர வேண்டும். என மனதில் பெரிய மனக் கோட்டை காட்டிக் கொண்டு பாடல் புனைய ஆரம்பித்தான்.
நேரம் நடு நிசியை அண்மிக்கையில் தான் அவன் ஒரு அழகான பாடலுடன் மீண்டான். அதிகாலையே போக வேண்டியிருந்ததால் உடனேயே போய்ப் படுத்தான்.

மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்













back to top