Featured Articles
All Stories
வரலாறு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வரலாறு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 15 ஜூன், 2011

அகவை ஒன்று கடக்கும் மதியோடை (நன்றி உறவுகளே)


வணக்கம் உறவுகளே...
                 இன்று ஒரு சந்தோசமான நாளில் தங்கள் திரைகளில் மதியோடை பாய்கிறது. பெரிதாக ஒன்றுமில்லைங்கோ. ம.தி.சுதா என்ற ஒரு முகவரி தொலைத்த மனிதனுக்கு பல உறவைத் தேடித்தந்த மதியோடை தளம் தனது ஒரு அகவையை நிறைவு செய்கிறது.
இன்று இரவு அனுமதி இலவசம் ஹ...ஹ.. ஹி.. ஹி.. வருக வருக
           

புதன், 1 ஜூன், 2011

எனது பார்வையில் இலங்கை பதிவுலகமும் VETTRI FM in அங்கீகாரமும்

வணக்கம் உறவுகளே..
சேமம் எப்படி ?
இன்று இரு விடயங்களுடன் சந்திக்கிறேன்.
இதற்கு துணை புரிந்த BLOGGER.COM ற்கு மிக்க மிக்க நன்றிகள். இங்கே என்னால் முடிந்ததை பட்டியல்ப்படுத்துகிறேன். இங்கே கூட தரவு வழுக்களுக்கு சந்தர்ப்பம் உண்டு காரணம் ஒரு பதிவர் தனது profile ல் தனது இடத்தை தமிழில் கொடுத்திருந்தால் புளொக்கர் தவறாகவே பட்டியல்ப்படுத்தும் நான் இங்கே எடுத்த எடுகொள் ஆங்கிலத்தில் கொடுத்திருப்பவர்களையே ஆகும். அதை விட முக்கியம் என்ன தெரியுமா ? இங்கே இருக்கும் அத்தனை மொழிகளுக்குமான பதிவுகளின் கூட்டுத் தொகையே இதுவாகும்.

சனி, 12 பிப்ரவரி, 2011

தாஜ்மகாலின் நாயகி மும்தாஜ் இல்லை திலோத்தமி தான்..


        காதல் என்பது மனிதனின் காலணி போல என நான் சொன்னால் யாரும் மறுக்கமாட்டீர்கள் எனத் தெரியும் காரணம் அது இல்லாமல் போனால் காட்டான் என்கிறார்கள் தலையில் வைத்தக் கொண்டு போனால் பைத்தியம் என்கிறார்கள்.
     காதல் என்ற கதையை எடுத்தாலே எல்லோருக்கும் காதல் சின்னமாய் நினைவில் வருவது தாஜ்மகால் தான் இதை ஷாஜகான் மும்தாஜ் ற்காக கட்டப்பட்டதாக எல்லோரும் சொன்னாலும் இதன் பின்னே உள்ள ஒரு காதல் கதை பற்றி இப்போதும் வட நாட்டில் வாய்மொழி மூலம் ஒரு கதை பரிமாறப்படுகிறது. இதை நான் சிறு வயதில் படித்தேன் அதனால் அந்த நாயகனின் பெயர் நினைவில் இல்லை ஆனால் நாயகியின் பெயர் அப்படியே நினைவில் இருக்கிறது திலோத்தமி தான் அவளது பெயர் சரி கதையை சுருக்கமாகப் பகிர்கிறேன்

வியாழன், 13 ஜனவரி, 2011

நான் ஏன் பதிவெழுத வந்தேன் (தொடர் பதிவு)

                நான் அடிக்கடி சொல்லும் வசனம் இது தான் முந்த நாள் பெய்த மழையில் நேற்று முளைத்த காளான் நான் பதிவுலகில் இது வரை எதையுமே நான் சாதிக்கவில்லை ஆனால் இத்தனை உறவுகள் எப்படிக் கிடைத்தன என்பது எனக்கே அதிசயமான விடயமாகும். என்னை இத் தொடர் பதிவுக்கு நல்ல நேரம் சதீஸ் அண்ணா அழைத்திருக்கிறார் அவரது வேண்டுகோளை ஏற்றுத் தொடர்கிறேன்.
            நான் பதிவுலகிற்கு வந்து இன்றுடன் 212 நாள் ஆகிறது நான் இங்கு எப்படி வந்தன் என்று சொல்வதே நல்லது என நினைக்கிறேன் தடுப்பு முகாமில் இருந்த காலத்தில் குறிப்பிட்ட ஒரு பத்திரிகைக்கே அனுமதி இருந்த நேரம் நல்ல மனம் கொண்ட எமது ராணுவ அதிகாரியால் (கருணாநாயக்க) தினக்குரல் பத்திரிகை கிடைக்கும் அதில் உள்ள யாழ்தேவி இணையத்தால் இணைய அறிமுகப்பகுதிதான் அப்பப்போ பத்திரிகைக்கு கிறுக்கிக் கொண்டிருந்த என்னை இப்படியான ஒரு ஆர்வத்தை இட்டுத் தந்தது.

வியாழன், 2 டிசம்பர், 2010

வன்னிப்போர்க் களத்தில் பொருட்களின் விலைப்பட்டியல்

          இந்த ஆக்கத்தை முன் அனுமதியின்றிப் பயன்படுத்துவோர் திருடர்களாகவே கருதப்படுவர்.
           இவை ஒரு அதிசயமான விடயமாகும். அதனால் நீங்கள் நம்ப மாட்டீர்கள் எனத் தெரியும் அதற்கு நான் என்ன செய்யலாம். உண்மைகள் என்பது மூடி மறைக்கப்பட்டாலும் ஒரு நாள் வெளிவருவது தானே.
இங்கு நான் குறிப்பிடுவது வன்னியின் போர் உச்சக்கட்டத்தில் இருந்த நேரம் பொருட்கள் இருந்தாலும் வாங்கவோ விற்கவோ முடியாத நிலையில் இருந்த சராசரி விலைப் பட்டியலாகும். இந்த அட்டவணையில் தற்போதுள்ள விலையையும் அங்கே இருந்த விலையும் போடப்பட்டுள்ளது.
12:09 PM - By ம.தி.சுதா 93

புதன், 10 நவம்பர், 2010

குதிரைச் சிலைகளின் உருவ அமைப்பும் அதன் அர்த்தமும்...iii

          மனித பரிமாணத்திலிருந்து அவனின் ஒவ்வொரு கலாச்சார மாற்றத்திலும் இந்தக் குதிரை பங்கெடுத்துக் கொண்டு தான் இருக்கிறது.
குதிரைக்கு இந்தளவு மவுசு வந்ததற்கு பல காரணங்கள் இருக்கலாம். பல பழமொழிகளில் இதன் பெயர் இடம்பெற்றிருப்பத்தான் இதன் இன்னுமொரு தனிச் சிறப்பு.
                 நடிகர் பிரபு கூட இடைப்பட்ட ஒரு காலப்பகுதியில் கட்டாயம் ஒரு பாடலாவது குதிரையில் வரும்படி வைத்திருப்பார். அரங்கேற்ற வேளை திரைப்படத்தில் அவர் வரும் காட்சி மிகவும் கம்பீரமாக இருக்கும். கம்பீரத்திற்காகத் தான் அதை விரும்பினார்களோ தெரியல.

சனி, 23 அக்டோபர், 2010

நான் அறிந்த நடிகர் விக்ரம்...

தமிழ் சினிமா நடிகர் பலர் நாம் போரடித்தான் முன்னுக்கு வந்தோம் என்றாலும் உண்மையாக போரடியவர்கள் ஒரு சிலர் தான் அதில் ஒருவர்தான் நடிகர் விக்ரம். எனது அபிமான நட்சத்திரம்.
பரமக்குடியில் 1966 சித்திரை மாதம் 17 ம் திகதி பிறந்தவர் தான் ஜோன் கெனடி வினோத்ராஜ் என்ற நடிகர் விக்ரம். அமெரிக்க ஜனாதிபதியான ஜோன் கெனடி என்பவரதும் நடிகரான வினோத் ராஜ் என்பவரதும் நினைவாக அவரது இயற் பெயர் இப்படி இடப்பட்டது பின்னர் அவரை சியான் என்றும் அவரது ரசிகர்கள் செல்லமாக அழைத்தனர்.

புதன், 6 அக்டோபர், 2010

நான் அறிந்த பாரதிராஜா....!!!!


                தனிச்சிறப்புகள் கொண்ட ஒருவன் தான் வாழ்க்கையில் வெல்ல முடியும் அதிலும் ஒரு துறையில் பல போட்டியாளர் மத்தியில் தமக்கென ஒரு தனியிடம் பெறுவது என்பது வித்தியாசம் தான்... முகப்பூச்சு, ஒப்பனை, கொட்டகை என்று பணத்தை அள்ளிவீசி படம் எடுத்துக் கொண்டிருந்தவருக்கு ஒரு புது உலகைக் காட்டியவர் தான் இந்த பாரதிராஜா. 
                1941 ம் ஆண்டு ஆடி மாதம் 17 ம் திகதி தமிழ் நாட்டின் அல்லி நகரம் எனும் இடத்தில் பெரியமாய தேவர் மற்றும் மீனாட்சியம்மா தம்பதிக்கு ஐந்தில் ஒன்றாகப் பிறந்தவர் தான் தமிழ் சினிமாவில் புது மாற்றம் காட்டிய இந்த பாரதிராஜா. இவர் மனைவி பெயர் சந்திர லீலாவதி ஆகும் இவருக்கு மனோஜ் என்றொரு மகனும் ஜனனி என்றொரு மகளும் உள்ளார்கள். வயல் வேலைகளே பிழைப்பென்றிருந்த இவருக்கு 1963 ல் 75 இந்திய ரூபாய் சம்பளத்துடன் அன்ரி மலேரியல் ஊழியராக வேலை கிடைத்தது. இவர் எழுதி நடித்த முதல் நாடகம் “ஊரு சிரிக்கிறது என்தாகும்.

ஞாயிறு, 12 செப்டம்பர், 2010

சுவர்ணலதாவின் வாரலாற்றுத் தடம்....

                               ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட ஒரு பாடகிக்காக எழுதப்படும் ஒரு வரலாற்றுத் தொகுப்பு இதுவாகும்.
                               1973 ம் வருடம் இந்தியாவின் கேரளாவில் உள்ள பாலக்காடு எனும் இடத்தில் இவர் செருக்குட்டி மற்றும் கல்யாணி அகியோருக்கு மகளாகப் பிறந்தார். இவரது தந்தையார் ஒரு சிறந்த ஆர்மோனிய வாசிப்பாளர் ஆவார். 1987 காலப்பகுதியில் சென்னைக்க குடிபெயர்ந்த இவர் எம்எஸ் விஸ்வநாதனால் அடையாளம் காணப்பட்டு இளையராஜாவிற்கு அறிமுகப்படுத்தப்பட்டார். இவர் பாடிய முதல் தமிழ் பாடல் 1987 ம் ஆண்டு நீதிக்குத் தண்டனை என்ற படத்தில் பாடிய பாரதியார் பாடலாகும் (சின்னம் சிறு கிளியே). ஆனால் சிலர் இது 1982 ல் வந்ததாகச் சொல்லிக் கொள்கிறார்கள்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் பல்லாயிரகண்கணக்கான திரைப்படப் பாடல்களை பாடி புகழ் பெற்றவர். பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளிவந்த கருத்தம்மா படத்தில் இவர் பாடிய பாடலுக்காக (போறாளே பொன்னுத்தாயி) சிறந்த பின்னணி பாடகி என்ற தேசிய விருது வழங்கப்பட்டது.

மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்













back to top