சனி, 12 பிப்ரவரி, 2011

தாஜ்மகாலின் நாயகி மும்தாஜ் இல்லை திலோத்தமி தான்..


        காதல் என்பது மனிதனின் காலணி போல என நான் சொன்னால் யாரும் மறுக்கமாட்டீர்கள் எனத் தெரியும் காரணம் அது இல்லாமல் போனால் காட்டான் என்கிறார்கள் தலையில் வைத்தக் கொண்டு போனால் பைத்தியம் என்கிறார்கள்.
     காதல் என்ற கதையை எடுத்தாலே எல்லோருக்கும் காதல் சின்னமாய் நினைவில் வருவது தாஜ்மகால் தான் இதை ஷாஜகான் மும்தாஜ் ற்காக கட்டப்பட்டதாக எல்லோரும் சொன்னாலும் இதன் பின்னே உள்ள ஒரு காதல் கதை பற்றி இப்போதும் வட நாட்டில் வாய்மொழி மூலம் ஒரு கதை பரிமாறப்படுகிறது. இதை நான் சிறு வயதில் படித்தேன் அதனால் அந்த நாயகனின் பெயர் நினைவில் இல்லை ஆனால் நாயகியின் பெயர் அப்படியே நினைவில் இருக்கிறது திலோத்தமி தான் அவளது பெயர் சரி கதையை சுருக்கமாகப் பகிர்கிறேன்
shajahaan
         மும்தாஜின் பிரிவை தாங்க முடியாத ஷாஜகான் அவள் நினைவாக ஒரு சின்னத்தை கட்ட நினைத்தான். அதற்காக தனது ஆஸ்தான கட்டட வடிவமைப்பாளனை அழைத்து அவனிடம் விருப்பத்தை கூறினான். ஆனால் தயவாக இல்லை மிகவும் கடுமையாக கூறினான். அதாவது உலகத்திலேயே இல்லாத அளவுக்கு அதிசயமாகவும் அழகாகவும் அமைய வேண்டும் இல்லாவிடில் உன்னை கொன்று விடுவேன் என்றானாம். அவனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை அதைப் பற்றியே சிந்தித்த படி அலைந்தான் சாப்பாடில்லை, தூக்கமில்லை பைத்தியம் போல் அலைந்தான்.
       இதை அவனது காதலியான திலோத்தமி கண்ணுற்றாள். தன் காதலன் ஒடிந்து போன காரணத்தை கேட்டாள் அவனும் விசயத்தை கூறினான். அதற்கவள் தானே உதவுவதாக கூறி அவனை ஒரு ஆற்றங்கரைக்கு அழைத்துச் சென்றாள். அவனை தான் செய்யப் போவதை அப்படியே பார்க்குமாறு கூறி விட்டு அருகே உள்ள மலைக் குன்றொன்றில் மீது ஏறினாள். தன் காதலனின் உயிர் மீது தீராத காதல் கொண்ட அவள் கூறினாள். “நீ நல்லாயிருக்கணும் அதற்காக ஒரு சிறந்த கட்டடத்தை வடிவமைக்கணும் அந்த வலியை உனக்காக நான் தருகிறேன்” எனக் கூறிக் கொண்டு மேலே இருந்து கிழே விழுந்தாள். ஷாஜகான் வேற்று ஊரில் இருக்கும் போது இறந்த மும்தாஜ்ஜின் மேல் இந்தளவு துக்கம் கொண்டிருந்தான் என்றால் தன் கண் முன்னே காதலியை இழந்தவனுக்கு எப்படி இருந்திருக்கும்.
அவனது அந்த வலியின் சின்னம் தான் இந்த தாஜ்மகால்..
   வரலாற்று ஆய்வாளர்களே இதன் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்துங்கள்... இது எனக்கு சிறுவயதிலேயே தாக்கத்தை எற்படுத்திய கதை ஆனால் இன்னும் இதை என்னால் உறுதிப்படுத்த முடியவில்லை

About the Author

நான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director
View all posts by admin →

Share This Post

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

79 கருத்துகள்:

இண்டைக்கு எனக்குத் தான் சுடுசோறு

ரஹீம் கஸ்ஸாலி சொன்னது…

ஆஹா...புதிய தகவலாக இருக்கிறதே இது.

Yaathoramani.blogspot.com சொன்னது…

எந்த வரலாற்று ஆய்வாளரும்
உறுதி செய்ய வேண்டியதில்லை.
படைக்கச் சொன்னவனைவிட
படைப்பவனுக்கு ஒரு வெறி
இருக்கவேண்டும்.இல்லையேல்
இப்படி ஒரு உருவாக்கம் சாத்தியமேயில்லை
அது உயிர் ஆசையைவிட
காதலியின் இழப்பாய் இருக்கத்தான் சாத்தியம்
காதலர் தினத்திற்கான உங்கள் பதிவு அருமை
வாழ்த்துக்கள்

சுதா புதிய தகவலாக உள்ளதே...

shanmugavel சொன்னது…

நான் கேள்விப்படாத ஒன்று,சுவையான தகவல்.நன்று.

பெயரில்லா சொன்னது…

இந்த மாதிரியான புதுமையான தகவல் சொல்லும் போது மறக்காமல் தாங்கள் குறிப்பெடுத்த மூலத்தை குறிப்பிட்டால் இன்னும் மெருகு தருவதாக அமையும்.அருமையான ஆக்கம்.

Unknown சொன்னது…

அப்போ உய்ரோட இருக்குற காதலிங்க தொல்ல அதிகம்னு சொல்றீங்களோ ஹி ஹி!!

Unknown சொன்னது…

பதிவின் ஆரம்ப வரிகள் நல்லாயிருக்கு.
இந்த கதையை எங்க படிச்சீங்க.ரொம்ப புதுசா இருக்கு. மும்தாஜ் ஆதரவாளர்கள் கோவிச்சுக்க போறாங்க..

Admin சொன்னது…

எனக்கும் புதிய தகவல்தான் பகிர்வுக்கு நன்றிகள்.

நிலாமதி சொன்னது…

காதலர் காதலர் தினத்துக்கான பதிவு அருமை அந்த கட்டிடத்தை செதுக்க் உளி மட்டும் போதாது
உத்வேகம் தேவை உங்கள் கதையில் உண்மை இருக்கும் என் நம்புகிறேன்.பகிர்வுக்கு நன்றி

நிரூபன் சொன்னது…

அது இல்லாமல் போனால் காட்டான் என்கிறார்கள் தலையில் வைத்தக் கொண்டு போனால் பைத்தியம் என்கிறார்கள்.//
என்ன அனுபவமோ? எல்லாம் ஜனா அண்ணாவைக் கேட்டால் தான் தெரியும்-:)
அருமை.. அருமை. காதலர் தினத்திற்கேற்ற பதிவு.
நனைவோமா நாற்று மேடைப் பக்கம் வந்து எங்களையும் நனைக்காதோ?

நிரூபன் சொன்னது…

நண்பா, டெம்பிளேட் சீர் செய்து விட்டேன். இப்போது சரியா எனப் பார்த்துக் சொல்ல முடியுமா.

நிரூபன் சொன்னது…

தாஜ்மஹாலின் பின்னால் மறைந்துள்ள கதை பற்றி இணையத்தில் தேடியதில் வெவ்வேறு விதமான சம்பவங்களை உள்ளடக்கிய கதைகள் கிடைத்தன. அவற்றில் முதலாவது. ஒரு எழுத்தாளர் தாஜ்மஹால் சிவனுக்காக, இந்து மதத்தின் சின்னமாக கட்டப்பட்டது என்று சொல்லுகிறார். தன் கருத்தை நிரூபிக்க புகைப்படங்களையும் இணைத்துள்ளார். இந்த இணைப்பில் இதனைப் பார்வையிடலாம்.
http://missionisi.wordpress.com/2007/11/24/taj-mahal-or-tejo-mahalaya-2/

நிரூபன் சொன்னது…

The story of the Taj Mahal that most of us have known about may not be the real truth. Herein Mr. P. N. Oak presents an interesting set of proofs that show a completely different story. Contrary to what visitors are made to believe the Tajmahal is not a Islamic mausoleum but an ancient Shiva Temple known as Tejo Mahalaya which the 5th generation Moghul emperor Shahjahan commandeered from the then Maharaja of Jaipur. The Taj Mahal, should therefore, be viewed as a temple palace and not as a tomb. That makes a vast difference. You miss the details of its size, grandeur, majesty and beauty when you take it to be a mere tomb. When told that you are visiting a temple palace you wont fail to notice its annexes, ruined defensive walls, hillocks, moats, cascades, fountains, majestic garden, hundreds of rooms archaded verendahs, terraces, multi stored towers, secret sealed chambers, guest rooms, stables, the trident (Trishul) pinnacle on the dome and the sacred, esoteric Hindu letter "OM" carved on the exterior of the wall of the sanctum sanctorum now occupied by the cenotaphs. For detailed proof of this breath taking discovery, you may read the well known historian Shri. P. N. Oak's celebrated book titled " Tajmahal : The True Story". But let us place before you, for the time being an exhaustive summary of the massive evidence ranging over hundred points:


http://www.stephen-knapp.com/true_story_of_the_taj_mahal.htm

நிரூபன் சொன்னது…

தொந்தரவு கொடுப்பதற்கு sorry, அகலத்தை குறைத்து விட்டேன். இன்னும் குறைக்க வேண்டும் என்றால் சொல்லுங்கள்.

நிரூபன் சொன்னது…

http://www.youtube.com/watch?v=u5Y7zFiI6z4//

இங்கேயும் வேறோர் கதை சொல்கிறார்கள்.

நிரூபன் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
Riyas சொன்னது…

நானும் இந்தக்கதையை கேள்விப்பட்டிருக்கிறேன் ஆனால் உண்மையா என்பது தெரியாது.. நல்ல பதிவு

அன்புடன் நான் சொன்னது…

இதுவும் நம்பும் படியாகத்தான் இருக்கு சுதா.

அன்புடன் நான் சொன்னது…

உங்க பகிர்வுக்கு என் நன்றி.

எஸ்.கே சொன்னது…

எனக்கு இது புதிய தகவல்தான். வ்ரலாற்றின் பக்கங்களில் மறைந்திருக்கும் விசயங்கள் இன்னும் எத்தனையோ!

கவி அழகன் சொன்னது…

புதுசு கண்ணா புதுசு
தேடலின் விளைவு புதிய கருத்து
வாழ்த்துக்கள் தம்பி

ஆகுலன் சொன்னது…

தகவலுக்கு நன்றி...........

காதலர் தின வாழ்த்துக்கள்

vinu சொன்னது…

ithu "bakyaa" vaara ithalil veliyaan kavithai nadaiyilaana oru kaathal kathaiyin saaram; thiru.pa.vijay avargalin uruvaakam endru ninaivu......

ithan nambagaththanmai kuriththu kealvi.....

avarum anth thodargalil moolamm ethu endru kurippidavillai.sumaar 10 aandugalukku thodaraaga vanththu "baakya" vaara ithalil.

vinu சொன்னது…

sumaar 10 aandugalukku thodaraaga vanththu "baakya" vaara ithalil.

mannikanum athu 10 aandugalukku munbu endru kuripittirukka vendum;

Unknown சொன்னது…

//காதல் என்பது மனிதனின் காலணி போல என நான் சொன்னால் யாரும் மறுக்கமாட்டீர்கள்//

அதான் நிறைய பேர் கலட்டி விட்டுடுறாங்களோ ....

Unknown சொன்னது…

இப்படியுமொரு சரித்திரம் இருக்கா.. பகிர்ந்தமைக்கு நன்றி

அஞ்சா சிங்கம் சொன்னது…

இது உண்மை கதையாக இருக்க வாய்ப்பில்லை .

முதலாவது தாஜ்மஹாலுக்கு ஷாஜஹான் தான் வடிவமைப்பாளர் . தன் கைப்பட தாஜ்மஹால் வரைந்து இது போல் வரவேண்டும் என்று ஆலோசனை கூறினான் .அதன் ஒவ்வொரு கட்ட வளர்ச்சியில் ஷாஜஹானின் பங்களிப்பு நேரடியாக இருந்தது .

ரெண்டாவது மும்தாஜ் பிரசவிக்கும் பொது இறந்தால். அப்போது ஷாஜஹான் அவள் அருகில் இருந்தான் அவள் இறக்கும் போது அவளுக்கு 38 வயது.

நானும் இதை முன்னாடி கேள்விப்பட்ட ஞாபகம் இருக்கு, கரக்ட் டைமிங்கா போட்டுட்டீங்க......!

காதலர் தினத்திற்கான உங்கள் பதிவு அருமை
வாழ்த்துக்கள்

http://rkguru.blogspot.com/ சொன்னது…

புதிய தகவலாக உள்ளதே...

FARHAN சொன்னது…

நீங்க சொல்றத வைத்து பார்க்கும் பொது உயிரோடுள்ள காதலுக்கு மதிப்பே இல்ல போலும்

இதை நானும் கேட்டும் படித்தும் இருக்கிறேன். அந்த காதலன் பெயரும் படித்திருக்கிறேன் ஆனால் மறந்து விட்டேன்...

காதலுக்கும் காலனிக்கும் உள்ள தொடர்பு அருமை!



அப்புறம் சுதா, இந்தக் கதை நான் கேள்விப்பட்டிருக்கிறேன்! பாடலாசிரியர் பா.விஜய் எழுதிய " உடைந்த நிலாக்கள் " என்கிற அருமையான கவிதைத் தொகுப்பில், இந்தக் கதையை, கவிதையாக வடித்துள்ளார்! படிக்கப் படிக்க உருகும்! அந்த ஓவியனின் பெயர் ஹரீம் என்று நினைக்கிறேன்! மிகவும் அழகான ஒரு காதல் கதையை பொருத்தமான நேரத்தில் போட்டுள்ளீர்கள்! வாழ்த்துக்கள்!!

சுதா உங்க ப்ளாக் நேரம் செட் பண்ண வில்லையா? இலங்கை நேரம் இல்லையே? இது கனடா, அமெரிக்கா நேரம் நேரம் என்று நினைக்கிறேன்!!

Unknown சொன்னது…

யாதவனின் மின்னஞ்சல் முகவரி கிடைக்குமா?
அவரது வலைப்பூ, சுயவிபரம் எதுமே கிடைப்பதில்லையே?

Muruganandan M.K. சொன்னது…

காதலின் வலியை மிக அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.
அது உண்மையா
வாழ்மொழிக் கதையா
எதுவானாலும் வலி வலிதான்.

சுதர்ஷன் சொன்னது…

சகோதரா மன்னிக்கணும் பதிவுப்பக்கம் வந்து ரொம்ப நாளாச்சு.இப்போ ரொம்ப கலக்குறீங்க :))) இது ரொம்ப செண்டிமெண்ட் கதையா இருக்கே ..மும்தாஜ் கதைய விட இது ரொம்ப பாதிக்குது சகோதரா :((.

Jana சொன்னது…

//தன் கண் முன்னே காதலியை இழந்தவனுக்கு எப்படி இருந்திருக்கும்????//

ம்ம்ம்ம்...வர்ணிக்கமுடியாத ஒன்றுதான். அது

இப்படியொரு கதையா?
புதுசா இருக்கே!உண்மையான்னு
தெரியாது; அதனால் வாக்கிட்டு
விடைபெறுகிறேன்.

Unknown சொன்னது…

புதிய தகவல்..வாழ்த்துக்கள் நண்பா..

Lingeswaran சொன்னது…

நானும் சிறுவயதில் இதே கதையை கேட்ட ஞாபகம்....உண்மையா கற்பனையா தெரியவில்லை....ஆனாலும் நெஞ்சைத் தொடுகிறது..

Lingeswaran சொன்னது…

ஆரம்ப வரிகள் அருமையான Typical சுதா டச்...!

அன்பு நண்பன் சொன்னது…

நன்றி bro...

ஜெய்லானி சொன்னது…

ங்கொக்காமக்கா இதென்ன புது தலைவலி....!! :-)))

GD சொன்னது…

பா.விஜய் அவ‌ர்களின் உடைந்த‌ நிலாக்க‌ள் புத்த‌க‌த்தில் இந்த‌ க‌தையை கவிதை வ‌டிவில் நான் ப‌டித்து இருக்கின்றேன்

கார்த்தி சொன்னது…

இது தொடர்பாக பல குழப்பங்கள் இருப்பதாக நான் அறிந்திருக்கிறேன் ஆனால் உண்மைதன்மையை அறிய முடியல

Arun Ambie சொன்னது…

திலோத்தமியா??? புதுசாவுல்ல இருக்கு கத!!!

உண்மை தான் நண்பா ! எழுத சொன்னவனை விட அனுபவித்து எழுதியவனுக்கு , உணர்ந்தவனுக்கு தான் தெரியும் காதலும் , கவிதையும் , நானும் கேள்வி பட்டிருக்கின்றேன் பரவலாக உள்ள கருத்து இதுவே ! ஆனால் உருவாக காரணமானவள் ஷாஜகான் காதலி மும்தாஜ் தான் . வடிவம் உருவாக காரணமானவள் சிறப்பின் காதலி திலோதமி ............. நண்பனின் காதல் வலியை எழுதுவதை விட தான் காதலின் வலியை எழுதும் கவிதையை போன்றது நண்பா !.......

வைகை சொன்னது…

எனக்கு இது காதலின் சின்னம் என்பதில் உடன்பாடு இருந்ததில்லை....ஆனால் இது புதிய தகவல்...நன்றி

டக்கால்டி சொன்னது…

எனக்கு ஒரே குழப்பமா இருக்கு?

தாஜ்மஹால் கட்டிய ஷாஜஹானின் மனைவி மார்களைப் பற்றி சில நாட்களுக்கு முன் ஒரு மின்னஞ்சல் வந்தது. அப்போது தான் தாஜ்மஹாலின் இன்னொரு பரிமாணம் தெரிந்தது...இப்போ ஒருமுறை நெஞ்சில் காதலி வைத்து கேளடியோ...திலோத்தமி என்கிறீர்கள்...

டக்கால்டி சொன்னது…

தாஜ்மஹால் கட்டிய ஷாஜஹானின் மனைவி மார்களைப் //

மனைவிமார்கள் என்று போட்டிருக்க வேண்டும்...தமிழும் தமிழனும் பிரிஞ்சாலே குழப்பமாயிடுதுங்க...

Jiyath சொன்னது…

அண்ணா! புதிதான ஒரு விடயம்! அருமையாக
உள்ளது.
http://jiyathahamed.blogspot.com/2011/02/dropbox.html

இருக்கலாம்

பெயரில்லா சொன்னது…

நானும் இந்தக் கதையைக் கேள்விப் பட்டிருக்கிறேன். ஆனாலும், பெரியதாக எடுத்துக்கொண்டதில்லை. தாஜ்மஹால் ஒரு அவமானத்தின் சின்னம். அதற்குப் போட்ட உழைப்பு, வளம் எல்லாத்தையும் நாட்டை முன்னேற்றப் போட்டிருக்கலாம். பாரதத்தின் (அந்தக்கால பாரதத்தின்) ஒரே கரும்புள்ளி தாஜ்மஹாலே.

Unknown சொன்னது…

நானும் கேள்விப் பட்டிருந்தேன் இப்படியொரு கதையை! ஆரம்ப வரிகள் அசத்தல்! :-)

//அனாமிகா துவாரகன்: தாஜ்மஹால் ஒரு அவமானத்தின் சின்னம். அதற்குப் போட்ட உழைப்பு, வளம் எல்லாத்தையும் நாட்டை முன்னேற்றப் போட்டிருக்கலாம். பாரதத்தின் (அந்தக்கால பாரதத்தின்) ஒரே கரும்புள்ளி தாஜ்மஹாலே.//


அனாமிகா: உங்கள் கருத்து மிகவும் மாறுபட்டதாக இருக்கிறதே! கலாசாரம், சின்னங்கள், காலம் கடந்து நிற்கும் அடையாளங்கள் எல்லாமே நாட்டின் முன்னேற்றத்துக்கு எதிரானவை / தடைக்கல் போன்றவை என்று கொண்டால், சுவடுகளே இல்லாமல் அனைவரும் செத்து மடிய வேண்டி வருமே! அதுவா உங்கள் விருப்பம்! மூன்று பேர் கொண்ட தன் குடும்பப் பயன்பாட்டுக்காக பத்துக் கார்கள் வைத்திருக்கும் இன்றைய பணக்காரரை விடவும், தாஜ் மகாலுக்குச் செலவு செய்த ஷாஜஹான் சற்றும் தாழ்ந்தவன் இல்லை என்றே நினைக்கத் தோன்றுகிறது!

S.T.Seelan (S.Thanigaseelan) சொன்னது…

இப்படி ஒரு காதலை இப்போது காணமுடியலயே.... அருமை..

அன்பின் சீலன்
vellisaram.blogspot.com

ஆதவா சொன்னது…

கட்டுக்கதையா இருக்கலாம். (உண்மையா கூட) பகிர்வுக்கு நன்றிங்க.

ஆதவா சொன்னது…

கட்டுக்கதையா இருக்கலாம். (உண்மையா கூட) பகிர்வுக்கு நன்றிங்க.

ரஹீம் கஸ்ஸாலி சொன்னது…

இந்த வாரம் முழுவதும் வலைச்சரத்தில் டேரா போட்டிருக்கேன். வந்து எட்டி பார்த்துட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்க பாஸ்
ஹையா....நானும் வலைச்சரத்தில் வந்துட்டேன்ல......

கலக்கல் தல....நம்ம கவிதையையும் கொஞ்சம் எட்டுப்பார்த்துட்டு கருத்த சொல்லுங்க....உங்களுக்காக வெயிட்டிங்....

செல்வா சொன்னது…

உண்மைலேயே எனக்கு இது புது தகவல்ங்க ..
ஆனா அந்த காதலரோட வலி ரொம்ப கொடுமையானதுதான் ..
அதே மாதிரி அந்த காதிலயும் கண்டிப்பா பாரட்டபடவேண்டியவங்க ..

செல்வா சொன்னது…

காதலர் தினத்துக்கு ரொம்ப அருமையான பதிவுங்க ..
அது உண்மையில் காதலின் சின்னம்தான் .. ஏன் சொன்னேன் அப்படின்னா இதுவரைக்கும் எனக்கு அது காதலின் சின்னமா பிடிக்கல .. ஏன்ன அந்த கட்டிடம் கட்டின உடனே அத கட்டினவர் கைய வெட்டினதா படிச்சிருக்கேன் .. ஆனா இந்த கதைய படிச்சதுக்கு அப்புறம் ரொம்ப பிடிச்சிருக்கு .

வாழ்த்துக்கள் ..

கோலா பூரி. சொன்னது…

இதுவரை கேளிவிபடாத கதையா இருக்கு. பகிர்ந்தமைக்கு நன்றி

vanathy சொன்னது…

nalla pathivu.

ரொம்ப முன்னே நான் கூட படிச்சிருக்கேன். நல்ல பதிவு.

aranthairaja சொன்னது…

ஒரு பத்து ஆண்டுகளுக்கு முன்பு நானும் இதை படித்த ஞாபகம் இருக்கிறது. நல்ல பதிவு நண்பரே...வாழ்த்துக்கள்.

ஷஹன்ஷா சொன்னது…

அட புதிய தகவல்.......நன்றி அண்ணா..உறுதிப்படுத்த முயற்சி செய்கின்றேன்..

சாமக்கோடங்கி சொன்னது…

உண்மையா இருக்க வாய்ப்புகள் குறைவு.. நடக்கும் கதையை அப்படியே நேரில் பார்த்தது போல் எழுதுவது கற்பனைக் கதைகளில் தான் நடக்கும்.. நிஜத்தில் நடந்த கதைகளில் காட்சி அமைப்புகள் இது போன்று இருக்காது என்பது என்னுடைய கருத்து.. ஆனால் இந்தக் கதையும் நன்றாகத் தான் உள்ளது..

இப்போ என்னுடைய பார்வை..

தன்னுடைய காதலியை நினைத்து உருகியவன், உண்மையான காதலனாக இருந்தால், தன்னுடைய சொந்தச் செலவில் சிறு கல்லை நட்ட வைத்திருந்தால் இறந்தவள் சந்தோஷப் பட்டு இருப்பாள்..
அவன் காசு கொடுத்ததோ அவனுடைய காதலிக்காக.. இவன் கட்டியதோ தன்னுடைய காதலியை நினைத்து.. பணம் கொடுப்பவன் தானே படைப்புக்கு உரிமையாளன்..? தன்னுடைய காதலியை நினைத்து அடுத்தவனுக்கு ஒரு மாளிகையைக் கட்டிக் கொடுப்பது மிகவும் நெருடலான விஷயம்..

உங்கள் காதலிக்காக ஏதேனும் செய்ய நினைத்தால் சொந்தச் செலவில் செய்யுங்கள்..

அய்யயோ.. காதலர் தின வாழ்த்துக்கள் சொல்ல வந்தவன கோத்து விட்டு வேடிக்க பாக்குரான்களே..

ரஹீம் கஸ்ஸாலி சொன்னது…

நண்பரே....உங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன். நேரம் கிடைக்கும்போது பார்த்துவிட்டு தமிழ்மணத்தில் வாக்கிட்டு, கருத்துக்களை சொல்லவும்
http://blogintamil.blogspot.com/2011/02/4-friday-in-valaichcharam-rahim-gazali.html

raji சொன்னது…

புதிதாக ஒரு விஷயம்.மேலும் இது பற்றி அறிய
ஆவல் எழுந்து விட்டது

பகிர்வுக்கு நன்றி

Sivatharisan சொன்னது…

அருமையான புதிய தகவலா இருக்கே

Pharma virus சொன்னது…

idhu paa. vijayin udaindha nliakkal puthagathil irundhu suttadhu. mams naan oru puthaga puzhu.


By. surya.com

அம்பலத்தார் சொன்னது…

இதுவரை அறிந்திராத புதிய தகவலாக இருக்கிறது மதி

Unknown சொன்னது…

Andha kadha nayagan peyar ARIN naanum eappodho kealvipattadhu

Aruntha சொன்னது…

ya pa.vijay da Udaintha nilakal kavithai book la intha kathai iruku kavithai vadivaka.Oviyar name harin aval peyar thilothi. ithu pathiya melum pathivu, nam ariyatha veru sila vidayangal udaintha nila book la iruku parunga

மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்













back to top