Featured Articles
All Stories
என் ஆய்வுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
என் ஆய்வுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 10 ஜூலை, 2012

தென்னிந்தியக் கலைஞர்களின் ஈழவருகையின் சாதகமும் பாதகமும்

முற்குறிப்பு - இப்பதிவானது எவருடைய உணர்வையோ நாட்டுப்பற்றையோ சீண்டும் விதமாக அமைக்கப்படவில்லை. தமிழன் பல தடவை சிந்திக்கமலும் தன்னிச்சையாகவும் நடந்ததன் விளைவுகளைத் தான் இன்று எம் இனம் அனுபவிக்கிறது. இப்பதிவானது ஒரு கருத்து அறிதலுக்காகவே இடப்படுகிறது. 

புதன், 6 ஏப்ரல், 2011

ஆணுறை பாவிப்போரே பெரும் ஆபத்து காத்திருக்கிறது (18+) condom


     இந்த உலகமானது மனிதனின் கண்டு பிடிப்புக்களால் எந்தளவு எழுச்சியடைகிறதோ அந்தளவு வீழ்ச்சியும் அடைகிறது. அதில் எமக்கு அதிசயமாக பல விடயம் இருக்கிறது.
        இவன் என்னடா அடிக்கடி கதிர் வீச்சைப் பற்றியே கதைக்கிறானே என குழம்பாதீர்கள் காரணமிருக்கிறது நான் ஒரு நாயாக பிறக்க வேண்டியவன் மனிதனாக இருக்கிறேன்... (யாரப்பு சொன்னது இப்பவும் அது தானே) சின்னக் கதிர் வீச்சுக் கூட எனக்கு ஆகாது கைப்பேசி கூட பரம எதிரி.. முக்கியமான ஓரிருவருடன் தான் அதிகமாய் கதைப்பேன்.. அதற்கு மேல் மண்டை பிளக்கும்...

சனி, 12 பிப்ரவரி, 2011

தாஜ்மகாலின் நாயகி மும்தாஜ் இல்லை திலோத்தமி தான்..


        காதல் என்பது மனிதனின் காலணி போல என நான் சொன்னால் யாரும் மறுக்கமாட்டீர்கள் எனத் தெரியும் காரணம் அது இல்லாமல் போனால் காட்டான் என்கிறார்கள் தலையில் வைத்தக் கொண்டு போனால் பைத்தியம் என்கிறார்கள்.
     காதல் என்ற கதையை எடுத்தாலே எல்லோருக்கும் காதல் சின்னமாய் நினைவில் வருவது தாஜ்மகால் தான் இதை ஷாஜகான் மும்தாஜ் ற்காக கட்டப்பட்டதாக எல்லோரும் சொன்னாலும் இதன் பின்னே உள்ள ஒரு காதல் கதை பற்றி இப்போதும் வட நாட்டில் வாய்மொழி மூலம் ஒரு கதை பரிமாறப்படுகிறது. இதை நான் சிறு வயதில் படித்தேன் அதனால் அந்த நாயகனின் பெயர் நினைவில் இல்லை ஆனால் நாயகியின் பெயர் அப்படியே நினைவில் இருக்கிறது திலோத்தமி தான் அவளது பெயர் சரி கதையை சுருக்கமாகப் பகிர்கிறேன்

ஞாயிறு, 16 ஜனவரி, 2011

தமிழின் “ழ” வும் உச்சரிப்பு உபத்திரமும்.

                   தமிழின் தனிச் சிறப்பிற்கு முக்கிய காரணமாக இருப்பது இந்த ழகரம் தான் என்பது எல்லோருக்குமே தெரியும் இது பற்றி எனது தமிழ் பற்றி ஒரு ஆய்வு பாகம் -1 என்ற பதிவில் முன்னர் எழுதியிருந்தேன்.
                   இதைப் பற்றி விவாதிப்பதற்கோ வாதிடுவதற்கோ நான் ஒரு பண்டிதனில்லை ஆனால் தமிழ் மீது பற்றுக் கொண்ட ஒரு சாதாரண வாசகன் என்ற முறையில் கூற விளைகிறேன்.
                   எம்மில் பலர் பலதை செய்கிறோம் அனால் ஏன் எனக் கோட்டால் யாரோ சொன்னார்கள் நாமும் செய்கிறோம் என்று தான் பதில் வரும் நானும் நண்பரும் பலரிடம் கேட்டு பல மாதிரியும் அடிபட்டும் பார்த்தோம் யாருடைய மூளைக்கும் எட்டவே இல்லை அதனால் தான் தங்களைக் கேட்கிறேன் எமது ழகரம் ஆனாது வேற்று மொழிக்காரருக்கு ஒரு பிரச்சனையான உச்சரிப்பிற்குரிய எழுத்துத் தான் அதையே நாம ஆங்கில உச்சரிப்புக்காக மாற்றி எழுதுகையில் தான் சிக்கலே வருகிறது.

வெள்ளி, 17 செப்டம்பர், 2010

போட்டிப் போக்கு மாற்றி அணியும் கண்டு கொள்ள ஐசிசி யும்....!!!!


                    இலங்கை அணியின் இந்தச் சம்பவம் பலர் அறிந்திருந்தாலும் சிலருக்கே இதன் காரணம் தெரிந்திருக்கிறது.. அது தாங்க கடந்த வருடம் நொந்து நூலாகிய நிலையில் இலங்கை வந்த கிரிக்கேட்டிற்கே கிடைத்த சாபமாகக் கருதப்படும் பாகிஸ்தான் அணி பற்றிய விடயம் பற்றித்தான் கூறுகிறேன்.


                   இலங்கை வந்த பாகிஸ்தானுக்கு ஆரம்பம் முதலே பலத்த அடி டெஸ்ட் போட்டியில் 2-0 தோல்வி. ஒரு நாள் போட்டியில் முதல் மூன்று போட்டியும் அடி என சோர்ந்து போனது. அப்போது தான் அந்தச் சம்பவம் நடந்தது. அதாவது ஜனாதிபதியின் பாகிஸ்தான் விஜயம். இரண்டுக்குமே சம்பந்தம் இல்லைப் போல் தான் இருந்தது. ஆனால் அடுத்த போட்டிகள் தலைகீழாக மாறியது. அடுத்து வந்த இரண்டு ஒரு நாள் போட்டியிலும் பாகிஸ்தான் தான் வெற்றி. இலங்கை படு தோல்வியடைங்த்து. சரி போனால் போகட்டும் என்று பார்த்தால் 20-20 அதே பாட்டு தான் அப்படியானால் என்ன நடந்திருக்கும். ஐசிசி ற்கும் தெரியும், எனக்கும் தெரியும், இப்ப உங்களுக்கும் தெரியும்.
11:42 PM - By ம.தி.சுதா 17

ஞாயிறு, 12 செப்டம்பர், 2010

யாழ்தேவி இணையமும் நாசமாய்ப்போகும் மாணவர்களும்...

             வாருங்கள் வாசகப் பெருமக்களே தலைப்பைப் பார்த்தவுடன் தலை சுற்றுகிறதா..? என்ன செய்வது எனது கட்டுரையின் கனத்தை குறைக்க கூடாது என்பதற்காகவே இருவிசயத்தையும் தொடர்புபடுத்தி எழுதுகிறேன்.. உள்ளே இருப்பது முக்கியமான சமூகப்பிரச்சனையாகும்.

                          முதலில் என்னை நட்சத்திரப் பதிவராக்கிய யாழ்தேவிக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன் (தலைப்பை தப்பாகப் புரிந்தால் நான் பொறுப்பில்லை). 
              

வெள்ளி, 27 ஆகஸ்ட், 2010

ஒக்டோபஸ் சாத்திரம் உண்மைதானா? ஆய்வாளர் பார்வையில்...

                                 இது மழை விட்டும் ஓயாத தூறல் பற்றிய கதையாகும். என்ன பலர் பார்த்திருப்பீங்க, கேட்டிருப்பீங்க கேளாதவர்கள் கீழே போங்க...
                               இந்த சாத்திரம் பற்றி பலர் பல கருத்தை தெரிவித்தாலும் இந்தக் கருத்து கொஞ்சம் நம்பக் கூடியதாகத்தான் இருக்கிறது. ஏனென்றால் இங்குள்ள படங்களைப்பார்த்தால் தெரியும். இவர்கள் ஒரு பெட்டியில் போட்டி நடைபெறப்போகும் இரு நாட்டினுடைய கொடிகளை வைத்து இதன் தொட்டியில் வைப்பார்கள். ஒக்டோபஸ் எந்த பெட்டியை தொடுகிறதோ அந்த அணி வெல்லும் என்பது நம்பிக்கை. இது பல தடவை சரியாக வந்ததால் அதன் மவுசு கூடிவிட்டது.
                       

புதன், 25 ஆகஸ்ட், 2010

இலங்கையில் குறைந்த செலவில் PHONE கதைக்க ஒரு வழி..!!!


இது பலர் அறிந்து சிலர் அறியாத விடயம் பற்றிய ஒரு சிறிய கட்டுரையாகும்.




            இலங்கையில் 5 ற்கு மேற்பட்ட கைப்பெசி வலையமைப்புக்கள் இருந்தாலும் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு லாபகரமான விடயம் இருக்கிறது. ஒரு சில வலையமைப்பாளர்கள் மற்றவர்களின் வருகையால் வயித்தெரிச்சலை வெளியே காட்டிக் கொள்ளாமல் தமது கட்டணங்களையும் சடுதியாகக் குறைத்துள்ளார்கள்.




             
6:31 PM - By ம.தி.சுதா 5

சனி, 31 ஜூலை, 2010

சண் ரிவி பார்ப்பதை இழக்கப்போகும் இலங்கையர்கள்.

                   இது இதுவரை வெளிவராத மறைமுகத் தகவல் ஒன்று இதை முதல் முதல் வெளிக்கொணர்வதையிட்டு பெருமையடைகிறேன். இதில் முதல் பாதிக்கப்படப்போவது இலங்கையின் முதல் தர நகரமாக மாறிவரும் யாழ்ப்பாணமாகும்.
இலங்கைக்கான சண் ரிவி ஒளிவரப்பு உரிமத்தை LBN ( lanka broad band netmork) நிறுவனம் பெற்றுள்ளது. இவர்கள் கொழும்பில் ஒரு பிரபல கேபிள் ரிவி ஒளிபரப்பாளர்கள் ஆகும்.

மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்













back to top