வணக்கம் உறவுகளே...
இன்று ஒரு சந்தோசமான நாளில் தங்கள் திரைகளில் மதியோடை பாய்கிறது. பெரிதாக ஒன்றுமில்லைங்கோ. ம.தி.சுதா என்ற ஒரு முகவரி தொலைத்த மனிதனுக்கு பல உறவைத் தேடித்தந்த மதியோடை தளம் தனது ஒரு அகவையை நிறைவு செய்கிறது.
இன்று இரவு அனுமதி இலவசம் ஹ...ஹ.. ஹி.. ஹி.. வருக வருக |
சென்ற வருடம் புளாக்கர் தொடங்கணும் என்ற வெறியில் முகாமிலிருந்து மீண்டாலும் தமிழ் தட்டச்சோ, யுனிகோட் என்றால் என்னவென்றோ தெரியாத நிலையில் வெற்றியின் விடியலில் இன்று உலக பதிவர் தினம் என லோசண்ணா சொன்னதைக் கேட்டு நடப்பது நடக்கட்டும் என திறந்தது தான் இந்த மதியோடை (அவர் 14 ம் திகதி தான் சொன்னார் அனால் ஆரமபத்தில் எனத தளம் அமெரிக்க நேரத்தை காட்டியதால் 15 என தரவேற்றம் நடந்து விட்டது) ஆரம்பத்தில் தலைப்பு இட வேண்டிய இடத்தில் உப தலைப்பை இட்டதால் நனைவோமா ? என தெரிந்தது.
நான் முன்னரும் குறிப்பிட்டேன் தமிழ் யுனிகோட் தட்டச்சு தெரியாததால் எனது முதல் பதிவை (என் முதல் பதிவு - அம்மா மகேஸ் தில்லையம்பலத்திற்கு....) குருஜீ தேடு போறியில் மவுஸ் கொண்டு சொடுக்கியே பெற்றேன். ஏண்டா உனக்கு உதவ யாரும் வரலியா என கேட்காதிங்கோ காரணம் பத்திரிகையில் எழுதும் ஒரு ஐரி பதிவரிடம் கேட்டேன் அவர் செருப்பால் அடித்தது மாதிரி செய்து விட்டார் அந்த ரோசம் தான் என்னை இந்தளவு உயர்த்தியதற்கும் ஒரு காரணம் (தனி பதிவில் அந்த சோகக் கதையை பகிருகிறேன்).
பதிவுகள் 109
கருத்துரைகள் (என்னுடையது தவிர்ந்த) 4217
பார்க்கப்பட்ட தடவை154,000 (சராசரி ஒரு இடுகைக்கு 1412.84 பார்வையாளர்)
பார்த்தவர் நாடுகள் எண்ணிக்கை 114
பின்தொடர்பவர் 341
எப்போதும் சொல்வதையே இப்போதும் சொல்கிறேன் நான் பொழுது போக்கிற்காக பதிவுலகம் வரவில்லை. பல பெரிய திட்டங்கள், ஆசைகளுடன் தான் நுழைந்தேன். என்னடா இப்படிச் சொல்லுறானே என நினைக்காதீர்கள் இந்த உலகத்தில் இருந்து போரையும் மற்றும் போதை பொருளையும் இல்லாதொழிக்கவே என் எழுத்துக்களை பிரசவிக்க நினைத்தேன். அதனால் பல எதிர்ப்புகள் தேசத் துரோகி என்று புலம் பெயர்ந்தவர் சிலர் கொடுத்த பட்டங்களும் கூட...... எனக்கு அது பொருட்டல்ல காரணம் என் பின்னே பல புலம் பெயர்ந்தவர் திரண்டிருக்கிறார்கள் அந்த ஒரு வெற்றி போதும் எனக்கு.
போரை ஆதரிப்போரை என்றும் எதிர்க்க தயங்கமாட்டேன். இந்த ஒரு வருடத்தில் எனக்கு கிடைத்த ஆதரவு அதிசயிக்க வைத்தது. ஜனா அண்ணா தனது பதிவொன்றில் குறிப்பிட்டது போல பதிவுலக விண்ணாணங்கள் , வீண் குரோதங்கள் எதிலும் சாராத ஒரு மனிதன் என குறிப்பிட்டிருந்தார். உண்மைதான் நான் நண்பர்களையே விரும்புகிறேன். காரணம் இந்த பதிவுலகில் எனது நோக்கம் பேர், புகழ், சுய கௌரவம், ரோசம் எல்லாவற்றையும் கடந்து வாழ நினைக்கிறேன் மொத்தத்தில் எனது நோக்கமெல்லாம் சமூக சேவை மட்டுமே என்னை போல என் அடுத்த சந்ததி நடு விதியில் நிற்கக் கூடாது நானோ அல்லது எனது குடும்பமோ அறிந்தோ அறியமலோ இந்த சமூகத்திற்கு ஏதாவது பாவம் இழைத்திருந்தால் என் வாழ்க்கைக் காலத்திற்குள்ளாகவே கழுவி விட்டுப் போக நினைக்கிறேன்.
மாகாதேவன் அண்ணா பகிர்ந்த தேரேசா கதையொன்று...
அன்னை தெரசா ஒருமுறை ஏழை எளியவர்களுக்காக நிதி வசூல் செய்ய ஒரு செல்வந்தரிடம் சென்றிருந்தார். அங்கே சென்று அவரை வணங்கி தாம் வந்திருப்பதன் நோக்கம் சொல்லி வலது கையை காட்டி ஏதேனும் தாருங்கள் என்றார். அவருக்கு தகுந்த மரியாதை கொடுக்காமல் கடுஞ்சொல் பேசிய அந்த செல்வந்தன் காறி எச்சிலை துப்பினான் அவரின் வலக்கை மீது.
உடனே கொஞ்சமும் சினம் கொள்ளாமல் சிரித்துக் கொண்டே சொன்னார் அன்னை, "செல்வந்தரே, சற்றுமுன் தாங்கள் என் வலக்கையில் கொடுத்ததை நான் எனக்காக வைத்துக் கொண்டேன். அந்த ஏழைகளுக்காக என் இடக்கையிலும் ஏதேனும் தாருங்கள்" என்றார் பொறுமையாக.
உடனே மனம் திருந்திய செல்வந்தன் பிறகு பணம் கொடுத்து அனுப்பினான்.
உடனே கொஞ்சமும் சினம் கொள்ளாமல் சிரித்துக் கொண்டே சொன்னார் அன்னை, "செல்வந்தரே, சற்றுமுன் தாங்கள் என் வலக்கையில் கொடுத்ததை நான் எனக்காக வைத்துக் கொண்டேன். அந்த ஏழைகளுக்காக என் இடக்கையிலும் ஏதேனும் தாருங்கள்" என்றார் பொறுமையாக.
உடனே மனம் திருந்திய செல்வந்தன் பிறகு பணம் கொடுத்து அனுப்பினான்.
இந்த சந்தோசமான நாளில் ஒரு அறிவிப்பையும் விடுக்கிறேன் இனி வரும் காலத்தில் எனது வழமையான பாணியிலமைந்த பதிவுகள் வருமாக இருந்தாலும் இன்னுமொரு சமூக சேவைக்கான புதிய அத்தியாயத்தை ஆரம்பிக்கிறேன் இதில் எள்ளவும் அரசியலோ பணமோ சாராத ஒரு சேவை. இதில் இணையும் படி யாரையும் நான் வற்புறுத்தப் போவதில்லை ஆனால் அதை படிக்கும் நீங்கள் மனித நேயம் கொண்டவராக இருந்தால் இத்திட்டத்திற்கு கை கோர்ப்பிர்கள் என்பது தெரியும்.
நான் விடை பெறும் முன் இந்த பதிவுலகத்தில் இத்தனைக்கும் ஆரம்பத்தில் இருந்து எனக்கு உறுதுணையாக நின்றவர்களில் எனக்கு பல அறிவுரைகள் தந்த ஜனா அண்ணா, எப்பூடி ஜீவதர்சன் மற்றும் சுபாங்கன், இந்த பதிவுலகில் ஒரு ஜனரஞ்சக சமூக பதிவாளனாக என்னை அறிமுகம் செய்த சீபி செந்தில் குமார், நான் மனவேதனையாக இருந்த காலங்களிலும் எனக்கு அடிக்கடி ஆறுதல் சொன்ன சித்திராக்கா, என் வளர்ச்சிக்கு உறுதுணையாக நின்ற யாதவண்ணா, மாகாதேவன் அண்ணா , ஓட்டை வடை ரஜீவன்
இந்த மதியோடையின் உயிரோட்டத்திற்கு காரணமான நிருபன்... அத்துடன் என்னோடு உழைக்கும் என் ஆருயிர் உறவுகள்.
எல்லோரையும் விட மிக முக்கியமாக எனது இந்தளவு வளர்ச்சிக்கும் (பதிவுலகம் தவிர்ந்ததும் சேர்த்து) காரணமாக என் ஆருயிர் நண்பன் ஜீவன் இம்மானுவேலுக்கும் என்றும் நான் நன்றி சொல்லக் கடமைப்பட்டவனாகிறேன்.
மீண்டும் 18 ம் திகதி என் புதிய அத்தியாயத்துடன் சந்திக்கிறேன் உறவுகளே..
71 கருத்துகள்:
வாழ்த்துக்கள் மதிசுதா......! தொடர்ந்து பயணப்படுங்கள்.
அடடே.. மதி எனக்கு ஒரு மாசம் சீனியரா? எனக்கு ஜூலை 17 2வது வருஷம் ஸ்டார்ட்.. ம் ம் வாழ்த்துக்கள் அண்னே ஹி ஹி
மாப்ளே, வாழ்த்துக்கள் மாப்ளே, மிகுதிப் பின்னூட்டங்களோடு பின்னர் வருகிறேன்.
வாழ்த்துக்கள் அண்ணா! உங்களை விட நான் 5 நாட்கள் இளையவன்.வரும் 20 ஆம் திகதி எனது வலைப்பூவிற்கும் ஒரு வருட பூர்த்தி. நீங்கள் பரந்து விரிந்த பரப்பை உள்ளடக்கி எழுதி அதிக வாசகர்களை தேடிக்கொண்டுவிட்டீர்கள். நான் என் கல்வித்துறையோடு அதாவது கணினியோடு நிறுத்தி விட்டேன்.
வாழ்த்துகள்
மேலும் தொடர்ந்து இன்னும் பல சாதனைகள் படைத்திட மனதாற பாராட்டுகிறேன்
நன்றி
வாழ்த்துக்கள் நண்பரே!
Mathijodaikku en vazhthukkal.
From-Siththara Mahesh
முதலாம் அகவைக்கு வாழ்த்துக்கள் .
வாழ்த்துக்கள் நண்பா
Best Wishes! :-)
வாழ்த்துக்கள் மதிசுதா..
அன்பு தம்பி மதி வணக்கம் ஒரு வருட முடிவுக்கும் முன்னேற்றத்துக்கும் வாழ்த்துக்கள். யதார்த்த கருத்துகளை தனகத்தே தாங்கி வரும் படைப்புகள் என்றும் சோடை போனதில்லை நீ சேகரித்த வலைத்தள நட்பு முத்துக்கள் எப்பொழுதும் உனக்கு கை கொடுக்கும் .
காய்க்கிற மரத்துக்கு தானே கல் எறி விழும் அத நினச்சு ஜோசிக்ககுட. எத்தன தடையை தாண்டி வந்தாச்சு இது என்ன பெரிய தடை
எண்ட பெயரையும் பதிவில போட்டதுக்கு நன்றிகள் தம்பியா
கலக்குது கலக்குது செம வளர்ச்சி
வாழ்த்துக்கள் மதிசுதா. பதிவுலகத்தில் மேலும் சாதிக்க என் வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் தொடர்ந்து கலக்குங்கள்!
வாழ்த்துக்கள் நண்பரே தொடரட்டும் தங்களின் எழுத்து சேவை
வாழ்த்துக்கள் நண்பரே..
வாழ்த்துக்கள் சுதா அண்ணா
மென்மேலும் தங்கள் பணி நூறு ஆண்டுகள், ஆயிரம் ஆண்டுகள் சிறப்புடன் தொடர இந்த அன்புத்தம்பியின் வாழ்த்தும் பிரார்த்தனையும் என்றும் கூட இருக்கும்
//அதனால் பல எதிர்ப்புகள் தேசத் துரோகி என்று புலம் பெயர்ந்தவர் சிலர் கொடுத்த பட்டங்களும் கூட//
விடுங்க சுதா அண்ணா.. கருத்தை கருத்தால் வெல்லமுடியாத முட்டாள்கள்.. எம் எழுத்துக்கு கட்டுப்போடுவதாக நினைத்து இவர்கள் பிரயோகிக்கும் சொல் தேசத்துரோகி..அது அவர்களுக்கே சொந்தமாகட்டும்
ஹிஹி வாழ்த்துக்கள் பாஸ்..ஒன்னு தெரியுமா??நாளை என்னோட முதலாம் ஆண்டு நிறைவு !!
வாழ்த்துக்கள் நண்பரே.
வாழ்த்துக்கள் சுதா!!!
வாழ்த்துக்கள் என்ற மதுவுக்குள் மயங்கிடாதே சகோதரா, எதையும் ஆரம்பமாகவே நினைத்திடு அதுதான் வெற்றிக்கு வழி வகுக்கும், இன்னம் நிறையவே சாதிக்கனும்.
தொடர்ந்தும் கலக்குங்கள் மதி சுதா. வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் மதிசுதா அண்ணே!!!! தொடர்ந்தும் உங்கள் புதிய அத்தியாயத்திலும் நாங்கள் கைகோர்ப்போம்!!!
வாழ்த்துக்கள் நண்பரே!
நிறைய சாதிக்கனும்
வாழ்த்துக்கள் நண்பரே!
நிறைய சாதிக்கனும்
வாழ்த்துக்கள் தோழரே ட்ரீட் எங்க????
All the best . . . Keep going . .
வாழ்த்துக்கள் சகோ... இன்னும் தொடர வாழ்த்துக்கள்
வாழத்துக்கள்... உங்கள் பதிவுகள் அனைத்தையும் நான் படித்திராவிட்டாலும் படித்தவை யாவும் சந்தோஷத்தை தந்தன. தொடரந்து எழுதுங்கள் உடன் நீங்கள் என்னியிருக்கும் பணி வெற்றிகரமாக தொடர வாழ்த்துக்கள்..
வாழ்த்துக்கள் அண்ணா..
1வருடமும் 1நாளும் கடந்துள்ள உங்கள் பதிவுலக வாழ்க்கை மேலும் சிறக்க இறைவனை வேண்டுகின்றேன்..
புதிய அத்தியாயத்தை எதிர்பார்த்துள்ளேன்..
ஒரு வுருட காலத்தில் சிறப்பாக பலரும் விரும்பும் வண்ணம் இயங்கியத்திற்கு வாழ்த்துகிறேன்.
தொடர்ந்து 'சமூக சேவைக்கான புதிய அத்தியாயத்தை' ஆரம்பிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.
எல்லாவற்றிலும் சிறப்புப் பெற வாழ்த்துகிறேன்.
தங்கள் தளம் மேலும் வளர்ச்சியடைய வாழ்த்துக்கள்.
ஒரு வருடத்தில் உங்கள் நீங்கள் அடைந்த வளர்ச்சி அத்தனையும் உங்களது திறமையும் உழைப்பும் முயர்ச்சியும் மட்டும்தான், தொடர்ந்து கலக்குங்கள். நீங்கள் நினைவு கூறுமளவிற்கு நான் ஏதும் அறிவுரைகள் சொன்னதாக எனக்கு ஞாபகமும் இல்லை, அந்தளவிற்கு அறிவும் இல்லை என்பதால் என்னை நினைவு கூர்ந்ததற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
அடுத்தடுத்த ஆண்டுகளில் இன்னும் இன்னும் சாதித்து மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
சிகரம் தொட வாழ்த்துக்கள்.
அன்புடன் சுதாவுக்கு உங்கள் பதிவுலக நுழைவில் முதலாவது அகவைக்கு வாழ்த்துவதுடன் ,அடுத்தடுத்த ஆண்டுகளில் இன்னும் இன்னும் சாதித்து மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் தொடர்க மேலும் வளர்க ...
வாழ்த்துக்கள் சகோதரரே இன்றுபோல்
என்றும் வாழ்க வளர்க!.......
வணக்கம் சுதா!
அதற்குள் ஒராண்டாகிவிட்டதா? வாழ்த்துக்கள் , வாழ்த்துக்கள்!!!
அது சரி உங்கள் வளர்ச்சியின் நான் என்ன பங்கு செய்தேன்? நீங்கள்தான் எனக்கு பல வழிகளிலும் உதவி செய்துள்ளீர்கள்!
மீண்டும் வாழ்த்துக்கள்!!!
ஆரம்பத்திலிருந்து தங்களை உன்னிப்பாக கவனித்து வரும் உறவுகளில் நானும் ஒருத்தன் தங்களின் நோக்கம்/லட்ச்சியம் எல்லாம் ஏற்க்கனவே வெற்றியோடுதான் செல்கிறது அதில் நிட்ச்சியம் முழுமையான வெற்றி பெறுவீர்கள். அப்போது நீங்கள் சாதித்ததிட்க்கான தடயங்கள் உலகமெங்கும் பரவிக்கிடக்கும்.
வாழ்த்துக்கள் தம்பி.
happy 1st birthday. வாழ்த்துக்கள். வளர்க மேன்மேலும்
வாழ்த்துக்கள் நண்பரே சுதா !
உங்களுடன் ஆலோசனைகளையும் பெற்றுத் தான் இந்த தனிமரமும் பல தடைகளை தாண்டுகிறது. பல பதிவுகளை தாருங்கள் நல்ல வாசகனாக தொடர்கின்ரேன் உங்களை!
மீண்டும் வாழ்த்துக்கள்!
வாழ்த்த வயதில்லை
இருந்தாலும் வணங்கி மகிழ்ச்சி அடைகிறோம்
இப்படிக்கு
வருத்தபடாத சங்கம்
கிளை எண்
மூணாவது குறுக்கு சந்து.
வாழ்த்துக்கள் மதி சுதா . ..உங்களுடனான எனது பயணம் தொடங்கியது உங்களின் கால பயணம் பற்றிய விளக்கத்துடன் தான் .. நல்ல வளர்ச்சி ..வாழ்த்துக்கள் ..தோழா :)
வாழ்த்துக்கள் மதிசுதா. :-)
மகிழ்ச்சி சுதா..தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துகள்.
வாழ்த்துக்கள் மதிசுதா தூற்றல்களை பற்றி கவலை படாமால் உங்கள் பணியை செய்தால் சாதிக்க முடியாதது எதுவும் இல்லை நண்பா. உங்கள் இலட்சியத்தை தொடருங்கள்.
முகாமிலிருந்து மீண்டாலும் தமிழ் தட்டச்சோ, யுனிகோட் என்றால் என்னவென்றோ தெரியாத நிலையில்//
மாப்ளே, நீயாச்சும் பரவாயில்லை. ப்ளாக் பற்றி ஓரளவு தெரிஞ்சு தொடங்கினாய்.
நான் ப்ளாக் தொடங்க காசு கட்டனும் என்ற நினைப்பு காரணமாகவே முகாமிலை இருந்து வெளியேறிய காலத்தில் ப்ளாக் படிப்பதோடு மட்டும் நிறுத்தியிருக்கிறேன்.
வாழ்த்துகள் நண்பா
பதிவுலகில் பல விழிப்புணர்வுப் பதிவுகளோடும், சமூகம் சார்ந்த பதிவுகளோடும் நடை போடும் உங்களின் பணி என்றென்றும் தொடர வேண்டும் சகோ.
புதிய அத்தியாயத்தில் புதிய வடிவில் உங்கள் பதிவுகள் இருக்கும் என நினைக்கிறேன்.
வாழ்த்துக்கள் சுதா.
நாம் கடந்து வந்த முட்களும், கற்களும் நிறைந்த பாதையினூடான பல சாதனை விடயங்களை உங்கள் ப்ளாக் உலகறியச் செய்திருக்கிறது.
தொடர்ந்தும் உங்களின் காத்திரமான படைப்புகளால் எமையெல்லாம் கட்டிப் போடுங்கள் சகோதரம்!
இந்த நாற்றையும் உங்களில் ஒருவனாக நினைவு கூர்ந்தமைக்கு
நான் பெரிதும் கடமைப்பட்டிருக்கிறேன்.
நன்றி பாஸ்.
Vazhthukal...
வாழ்த்துக்கள் சகோதரா ...
பிந்தி வந்தாலும் மனம் நிறைந்த வாழ்த்துகள் சுதா.விகாரமில்லாத நிறைவான பதிவுகள் தருபவர் நீங்கள்.விரும்பிப் படிப்பேன்.ஊரின் இந்த நிலையிலும் வெளியில் சொல்லமுடியாத மனவெக்கையோடு மென்றுவிழுங்கி வாழ்ந்தபடி எழுதும் உங்களைப் பாராட்ட வார்த்தைகள் தேவை.இன்னும் எழுதுங்கள் சுதா !
உங்கள் எழுத்துப்பயணத்தின் முதல் படிதான் ஏறி இருக்கிறீர்கள். இன்னும் நிறைய சாதிக்க வாழ்த்துக்கள் நண்பா...
வாழ்த்துக்கள் சகோதரம் ..
அண்ணா உங்களது பதிவுகள் தொடர வாழ்த்துக்கள்.........
வாழ்த்துக்கள்... தொடருங்கள்..
வாழ்த்துக்கள் சகோதரம்
வாழ்த்துக்கள்
இதையும் பார்த்து விடுங்கள்.. 21ம் நூற்றாண்டின் முதல் தடவையாக பார்க்க கிடைக்கும் நிகழ்வு இது..
http://faaique.blogspot.com/2011/06/normal-0-false-false-false-en-us-x-none.html
இந்த வருடத்தின் முதல் சந்திர கிரகண போட்டோக்கள் 15-06-2011
வாழ்த்துக்கள்!!!
வெற்றிவாகை சூடிக்கொண்ட உங்களுக்கு இன்று எனது வலைத்தளத்தில் விருந்து
காத்திருக்கின்றது சகோ சென்று அனுபவியுங்கள்.
வாழ்த்துக்கள்!........
வாழ்த்துக்கள் அண்ணே .
தொடரட்டும் உங்கள் வெற்றிப்பயணம்
vaalththukkal unkal payaanam thodara..
innum innum chirappaay valara vaalththukkal....
namma pakkamum kaaththirukku unkalukkaaka!!!!!!!!!!!!
வாழ்த்துக்கள்...நண்பரே.
தொடர்ந்து போருக்கு எதிரான உங்கள் அறப்போராட்டத்தை தொடருங்கள்.
போருக்கு எதிரான உலகசினிமாக்களையும் அறிமுகப்படுத்துங்கள்.
எனக்கு தெரிந்த உலகசினிமாக்களை உங்களுக்கு மின்னஞ்சலில் அனுப்புகிறேன்.
வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்கள் Sudha :)
congrats bro :)
ஒரு வருட முடிவுக்கும் முன்னேற்றத்துக்கும் வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் bro...
வாழ்த்துக்கள் அண்ணா
வாழ்த்துக்கள் சகோதரா...!
வாழ்த்துக்கள் சகோதரா..
ஒரு வருடத்துக்குள் எத்தனை சாதனைகள்.. :)
தொடர்ந்து வெற்றி நடை போடுங்கள்..
கருத்துரையிடுக