Featured Articles
All Stories

திங்கள், 28 பிப்ரவரி, 2011

காணாமல் போன 2 பதிவர்கள், மறைமுக பணம் பறிக்கும் தொலைத் தொடர்பு சேவையும்.

வணக்கம் அன்புச் சகோதரங்களே சேமம் எப்படி ?
இன்று இரண்டு விடயப் பரப்பை உள்ளடக்கிச் சந்திக்கிறேன். சரி வாருங்கள் உள்ளே போவோம்.
     இலங்கையில் மிக விரைவாக பரவலடைந்து வரும் தொலைத் தொடர்பு வலையமைப்புக்கள் பல்வேறுபட்ட மாற்றங்களுடன் பலருக்கு அறிமுகமாகின்றது. நாங்கள் நேர்மையானவர்கள் அதிகமா வெட்டுறதில்லை என பீற்றிக் கொள்ளும் டயலக் வலையமைப்பு சம்பந்தமான விழிப்புணர்வு விடயத்துடன் சந்திக்கிறேன்.
     முதலாவது RINGING TONE சம்பந்தமான விடயம் ஒன்றைப் பார்ப்போம். இந்த வசதியானத முற்கொடுப்பனவு பிற்கொடுப்பனவு வாடிக்கையாளர் இருவருக்கும் வழங்கப்பட்டிருக்கிறது. அத்துடன் இவர்களது இணையத்தளம் போனால் விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது அதாவது செயற்படுத்தற்கட்டணம் 50 ரூபாவும் மாதாந்த வாடகை 30 ரூபாவும் தான். அதைத் தான் படம் காட்டுகின்றது. இந்த விதி முற்கொடுப்பனவு வாடிக்கையாளருக்கு மட்டும் தான் வழங்கப்பட்டிருக்கிறது. பிற்கொடுப்பனவு வாடிக்கையாளருக்கு சேவைக்கட்டணமாக 50 ரூபா அறவிடப்படுகிறது. நம்மவர் பில்லை ஒழுங்காகப் பார்ப்பதில்லை என்று அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. மொத்தமாகப் பார்த்தால் வரிகளும் உள்ளடங்கலாக முற்கொடுப்பனவு வாடிக்கையாளருக்கான கட்டணம் 39 ரூபா, பிற்கொடுப்பனவு வாடிக்கையாளருக்கான கட்டணம் 98 ரூபா இது பலருக்குத் தெரியாது.
    சரி அது அப்படியே இருக்கட்டும் நீங்கள் ஒரு பாட்டை மாற்றினால் ஆரம்பத்திலேயே அந்த மாதத்திற்கான கட்டணம் அறவிடப்படும். அனால் முதல் இருந்த பாடல் செயலிழக்கமாட்டாது அதற்கான கட்டணமும் மாதம் மாதம் அறவிடப்படும். இது பற்றி எங்குமே அறிவுறுத்தப்படவில்லை.

அடுத்தது இணைய இணைப்புத் தொடர்பானது
   BROAD BAND இணைய இணைப்பிற்கான கட்டணங்கள் குறைக்கப்பட்டிருக்கிறது இது வரவேற்கத்தக்கதே. நான் 2 ஜீபி தான் பாவிக்கிறேன். (என்னடா இவன் இந்தக் கொஞ்சமாய் வச்சிருக்கானே என்று நினைக்காதிங்க இவங்கட இணைப்பு வேகத்தில மாதம் முழுக்கப் பாவித்தாலும் இது முடியாது) இதற்கான கட்டணம் 690 ரூபாவாக இருந்தது ஆனால் இப்போது 490 ரூபாவாக மாற்றியுள்ளார்கள் சந்தோசமே அனால் எனது பில்லில் காசு குறையலா ஏன் எனக் கேட்டேன் அதற்கு தற்போது 3 ஜீபி 690 ஆகா மாற்றப்பட்டுள்ளதாம் அதனால் எனக்கு 3 ஜீபியாக மாற்றப்பட்டுள்ளதாம். அட நாதரிப் பய புள்ளைகளா நான் உங்களிட்டை 690 ற்கு இணைய இணைப்பு கொடு என்று சொன்னேனா ? அல்லது 2 ஜீபி கொடு என்று சொன்னேனா ?
   இந்த விறுத்தத்தில் அவர்களது இணைய வேகம் 7.2 mbps வரை போகுமாம். யாராவது கேட்டால் சிரிப்பாங்கள்.
   சகோதரங்களே அவதானமாக இருங்க இது எனக்கு ஏற்பட்ட அனுபவம் என்பதால் அறிய முடிந்தது உங்களுக்கும் இருக்கும் அதை மற்றவங்களுக்கும் பகிருங்க நாமும் நல்லாயிருக்கணும் எம்மைச் சுழ உள்ளவங்களும் நல்லாயிருக்கணும். நான் நல்லாயிருக்க வாக்கைப் போடுங்க மற்றவங்க நல்லாயிருக்க இதை எல்லோருக்கும் பகிருங்க..

தயவு செய்து இந்த பதிவர்களை பற்றி விபரம் தாருங்கள்.
மகாதேவன் V.K  – இவர் தகவல் துளிகள் என்னும் வலைத் தளத்தை கட்டார் எனும் இடத்தில் இருந்து எழுதி வந்தார் வாரத்துக்கு 5 மின்னஞ்சலாவது பாசமாய் போடுவார் திடீரென இவரது எந்த தொடர்பும் இல்லாமல் போய்விட்டது.

GSR - ஞானசேகரன் என்ற இவர் என்னில் மிகவும் பாசமுடைய ஒருவர் இந்த வருடம் பிறந்ததற்கு இன்னும் பதிவே போடல புரியாத கிறுக்கல்கள் என்ற வலைத்தளத்தில் அருமையான கணணித் தகவல்களைப் பகிர்ந்து வந்தார். இப்போ எந்தத் தொடர்புமே இல்லை

தயவு செய்து விபரம் தெரிந்தவர்கள் பகிருங்கள்.


குறிப்பு - உறவுகளே இன்று முதல் எனது தளத்தின் பெயர் நான் ஆரம்பத்தில் வைக்க நினைத்தது போல !♔ மதியோடை ♔!என்றே மாற்றப்படுகிறது...

61 கருத்துகள்:

வியாழன், 24 பிப்ரவரி, 2011

பாத்திரமின்றி, விறகின்றி சுடச்சுட தேநீர் தயாரிக்கலாம் (கண்டுபிடிப்பு)

 நீண்ட நாளுக்குப் பிறகு எனது வழமையான பாணிக்கு திரும்புகிறேன்
        மனித தேவைகள் தான் புதிய கண்டுபிடிப்புக்களை தோற்றுவித்தது என்பார்கள் அதே போல் எனக்கும் ஒரு பெரிய தேவை இருந்தது அதற்காக ஒரு நண்பன் ஆரம்பித்து தந்த இக் கண்டுபிடிப்பு எனக்கு பெரிதும் உதவியது.
         எல்லோரும் ஏதோ ஒரு போதை வஸ்துக்கு அடிமையாயிருப்பார்கள். நானும் ஒரு போதைவஸ்து அடிமையாளன் தான் தேநீர் கிடைத்தால் எனக்கு தேவருக்கு அமிர்தம் கிடைத்த சந்தோசம் ஆனால் கிடைக்காவிடிலும் இருப்பேன் கொஞ்சம் சொம்பேறியாயிருப்பேன்.
நான் தாங்க
               அண்மையில் கூட நம்ம ஆர்கே.சதீஸ்குமார் உயரப்பயணம் போனாராம் சொல்லாமல் போனபடியால் நல்லதொரு உற்சாக பானத்தை தவறவிட்டுவிட்டார். அதனால் தான் சீபி.செந்தில்குமார் மேலே போக முதலே நம்மளுக்கு சொல்லிட்டார். அவருக்கு நான் சொல்லியுள்ளேன் “காதற்ற ஊசியும் வராதுகாண் கடை வழிக்கே” யோவ் அப்படியிருக்கையில் இம்புட்டு பொருளும் கொண்டு போவிரா ? சீபிக்கு என்ன நடந்தாலும் அவரை பேட்டி எடுத்து மாட்டிவிட்ட தட்டைவடைக்கு ஓட்டை போட்டு சுடும் ரஜீவன் தான் பொறுப்பு...

சரி விசயத்திற்கள் போவோம்
பொலுத்தீன் பை
தேவையான பொருட்கள்
ஒரு பிளாஸ்டிக் போத்தல், ஒரு பொலுத்தீன் பை (இங்கு சொப்பிங் பாக் என்போம்), ஒரு தீப்பெட்டி, தேநீருக்குத் தேவையான தேயிலை, சீனி, ஒரு டம்ளர் நீர் (குவளை நீர்)

செய்முறை
>>>>>போத்தலினுள் ஒரு டம்ளர் நீரை விட்டு தேவையான அளவு தேயிலை , சீனி போன்றவற்றை இட்டு வாயை மூடியால் காற்று வெளியேறா வண்ணம் இறுக்கமாக மூடவும் பின்னர் வடிவாகக் குலுக்கவும்


>>>>>பொலுத்தின் பையை கீலம் கீலமாகக் கிழிக்கவும்


>>>>>அதன் ஒரு அந்தத்தில் நெருப்பை பற்ற வைத்து போத்தலின் அடியில் பிடித்துக் கொண்டு போத்தலை சுழற்றி வர வேண்டும் 5-10 நிமிடத்தில் சுடச் சுட அருமையான தேநீர் தயார்

         இது ஒரு சாதாரண விடயம் தான் அனால் பலருக்கு உதவியிருக்கிறது உடல் நலக்கேடு பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளக் தேவையில்லை காரணம் நான் இப்போதும் இரும்பு போலவே இருக்கிறேன் (ஹ.....ஹ....நிறமில்லிங்க உடலை சொல்றேன்) பயப்படாமல் செய்து பாருங்கள் எந்தவித மணமும் ஏற்படாது இக்கட்டான நேரத்தில் நிச்சயம் உதவும்.
            
அறிவியல் விளக்கப் பகுதி - இது எப்படி சாத்தியமாகும் என எண்ணத் தோன்றுகிறதா. வளியும் ஒரு வித வெப்பக்கடத்தல் ஊடகமாகும். உள்ளே உள்ள நீர் கொஞ்சம் சூடாகி நீராவி தோன்றினாலே போதும் அது உள்ளே உள்ள வளியை சூடாக்க ஆரம்பிக்கும். சாதாரணமாகவே நீராவி தான் உயர் வெப்பம் கூடியது உதாரணத்திற்காக பார்த்தால் ஒருவருக்கு சுடு நீர் பட்டு வரும் காய வேதனையை விட நீராவி பட்டால் வரும் தாக்கம் அதிகமாகும். சத்திரசிகிச்சை உபகரணங்களைக் கூட நீராவியால் (AUTO CLAVE) தான் சுத்திகரிப்பர்.


 இனி என்ன உங்க வேட்டை தான் குட்டுறதுண்ணா குட்டுங்க, திட்டறதுண்ணா திட்டுங்க ஆனால் வாக்கு மட்டும் போட்டிடுங்க எதற்கும் வாக்கை போட்டிட்டு தேநீரை குடியுங்க (ஹ..ஹ.... சும்மா வெருட்டினேன்)
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா


நேரம் கிடைத்தால் என்னோட பழைய கண்டுபிடிப்புகளின் தொடுப்பு கீழே இருக்கு பாருங்க...
காசால் போன் சார்ஜ் இடுவது எப்படி...
வாகனக் கண்ணாடியினுள் நீராவி படிவதை தடுக்கும் ஒரு வழி...கறிக்கு உப்புக் கூடினால் செலவற்ற உடனடித் தீர்வு..சாராயத்தை மிஞ்சும் சாராயம்- வன்னி மக்கள் கண்டுபிடிப்பு

சோற்றிலிருந்து மதுபானம் – வன்னி மக்களின் கண்டுபிடிப்பு

PM 12:22 - By ம.தி.சுதா 64

64 கருத்துகள்:

திங்கள், 21 பிப்ரவரி, 2011

தமிழுக்காக ஒரு தமிழனால் முடிந்த உதவி (இலகு தட்டச்சு உதவி)

அன்புச் சகோதரங்களே சேமம் எப்படி ?
      இன்று தாய்மொழி தினமாக கொண்டாடுகிறார்கள் இந்த இனிய நன்நாளிலே என்னால் முடிந்த ஒரு சிறு முயற்சியை செய்கிறேன் பலர் என்னுடன் அரட்டையில் வரும் போது அடிக்கடி கேட்கும் ஒரு உதவி எப்படி தமிழ் அடிக்கிறீர்கள் என்று நானும் ஆரம்பத்தில் தங்களைப் போல் தான் தமிழுக்காய் அலைந்த்துண்டு அனால் இப்போது என் எச் எம் ரைட்டர் பாவிப்பதால் எந்த வித சிக்கலுமில்லாமல் விரல் நுனியில் தட்டச்சிடுகிறேன்.
     அதை நிறுவுவதெப்படி என பார்ப்பதற்கு முன்னர் அதன் உருவாக்கத்தை அறிய வேண்டுமல்லவா ?

என் எச் எம் ரைட்டர் (NHM writter) 
    சென்னையில் உள்ள நியூ ஹொரைசேன் மீடியா நிறுவனத்தினால் கே.எஸ்.நாகராஜனை பிரதான நிரலாக்கராகக் கொண்டு உருவாக்கப்பட்ட தமிழ் உட்பட அசாமிய_மொழி, வங்காளம், குஜராத்தி, இந்தி, கன்னடம்மலையாளம், மராத்தி, பஞ்சாபி, தெலுங்கு ஆகிய இந்திய மொழிகளை உள்ளீடு செய்ய உருவாக்கப்பட்ட மென்பொருள் ஆகும். இது 2009-2010 ற்கான தமிழ் நாட்டின் கணியன் பூங்குன்றனார்  விருதை பெற்றது இதன் சிறப்பம்சமாகும். இவற்றுக் கெல்லாம் காரணம் இதன் இலகு தன்மை தான் இந்த மென் பொருள் மிக மிகச் சிறியது. அத்துடன் வின்டோஸ் 7 ல் கூட இலகுவாக நிறுவமுடியும். அத்துடன் இது பெரும்பாலான இணைய உலாவிகளுக்கும் பயன்படுத்தக் கூடியதாக இருக்கிறது. அதுமட்டுமல்ல கணணியில் கூட எல்லா வடிவக் கோப்புகளிலும் தட்டச்சிடலாம்.
      
       சில வேளைகளில் தங்களுக்கு இதை நிறுவுவதில் ஏதாவது சிக்கல்கள் வந்தால் (மென் பொருளால் அல்ல தங்களின் கணணி பிரச்சனையால்) கவலையை விடுங்க ஒரு வேர்ட் பாட் (word pad) ஐ திறந்து சாதாரண பாமினி எழுத்தில் தட்டச்சிட்டு விட்டு அதை அப்படியே copy பண்ணி விட்டு online conveter என்பதன் மேல் சொடுக்கி போனால் அங்கே என் எச் எம் ரைட்டர் online coveter இருக்கிறது அதில் paste பண்ணிவிட்டு மறுபக்கப் பெட்டியில் இருக்கும் யுனிகோட் என்பதை தெரிந்தெடுத்து விட்டு convert என்பதை சொடுக்கினால் சரி தங்களது யுனிகோட் எழுத்துரு வந்துவிடும். இது யாருக்கு உதவுமென்றால் வழமையாக திரையை பார்க்காமல் என் எச் எம் ரைட்டரில் தட்டச்சிடுவோர் தவறுதலாக ஆங்கிலத்தில் தட்டச்சிட்டு விடுவோம் எவ்வளவு கடுப்பாயிருக்கும் அப்போ இந்த வழி கட்டாயம் உதவும்.
பாமினி தட்டச்சுப் பலகை
alt+2 கொடுத்து பெறும் உச்சரிப்பு தட்டச்சுப் பலகை
தமிழ் 99 தட்டச்சுப் பலகை
     அத்துடன் பலருக்கு பாமினி எழுத்துருவில் தட்டச்சிடுவது பலருக்கு பழக்கமிருக்காது என்பதால் google translater பாவிப்பீர்கள் அதற்கும் இங்கே தீர்வு இருக்கிறது alt+2 க் கொடுத்தால் phoneti code வரும் இதில் வைத்து ammaa என அடித்தால் அம்மா என தோன்றும் இது உச்சரிப்பியல் சார்ந்த்தால் நீங்கள் sms அடிப்பது போல அடித்தாலே தமிழ் கண் முன் தோன்றும் (இது தமிழுக்கு உகந்ததல்ல என யாரும் திட்ட வேண்டாம் எனக்கு ஆங்கிலத்தில் தட்டச்சிடும் ஒருவரை தமிழுக்கு மாற்றுவதே எண்ணமாகும்)

       உறவுகளே வருத்தத்திற்குரிய செய்தி ஒன்று ஒரு இரவு முழுதும் இருந்து இன்றைய நாளுக்காய் ஒரு பதிவை எழுதி விட்டு படங்களுக்காய் மீள என் எச் எம் ரைட்டரை தரவிறக்கி நிறுவி நிறுவலை படமாக்கி விட்டு பார்தால் (2008 ல்) ஏற்கனவே ஒருவர் இதைப்பற்றி எழுதியிருக்கிறார்  (நன்றி FIZAL) என் சொந்த முயற்சியில் எழுதினாலும் நான் திருடனாக பட்டம் பெற விரும்பல அதனால் அந்த தொடுப்பையே அடியில் தருகிறேன். ஆனால் 
மேலே பதியப்பட்டுள்ள தகவலுக்கு நான் தான் உரிமையாளி என்பதை மார் தட்டிச் சொல்லிக் கொள்கிறேன். இதற்கு முன்னர் எழுதிய fizal இப்போ எழுதுவது இல்லை போல தெரிகிறது அதனால் சந்தேகங்கள் இருப்பின் கேளுங்கள் தெரிந்ததை சொல்கிறேன்.

அன்புச் சகோதரன்
ம.தி.சுதா

என் எச் எம் ரைட்டரை தரவிறக்க இந்தப் பெயரை சொடுக்கங்கள் Click here to download NHM Writer அதன் பின் இறக்கிய கோப்பை திறவுங்கள் படத்தில் உள்ளது போல வரும்.


இதில் I accept the agreement என்று தேர்வு செய்து பின்னர் Next என்ற பட்டனை கிளிக் செய்யவும்


next ஐ கொடுத்தால் இது போல படம் வரும்


அடுத்து மொழியை தெரிவு செய்யுங்கள்.


next ஐ கொடுத்தால் இது போல படம் வரும்.


next ஐ கொடுத்தால் மென் பொருள் நிறுவப்படும்


அதன் பின் task bar ல் மணி போன்ற உருவம் வரும் அதைச் சொடுக்கி உங்களுக்குத் தேவையான எழுத்துருவை பெறலாம். இவ்வளவும் தான் விடயம்


பொறுங்க பொறுங்க தொடுப்பை சொடுக்க முதல் வாக்கையும் கருத்தையும் சொல்லிட்டு சொடுக்குங்க..
(இந்த தெளிவான படங்களை தந்ததவிய fizal ற்கு நன்றி)

70 கருத்துகள்:

வெள்ளி, 18 பிப்ரவரி, 2011

கோயில்கள் ஏன் கட்டப்பட்டன


சகோதரர்களே எப்படி இருக்கிறீர்கள்.

        நீண்ட நாட்களுக்கு பின் ஆன்மிகப் பக்கத்தை அறிவியலுடன் தொட்டுப் பார்க்கலாம் என ஒரு சின்ன முயற்சி இதில் சில பழமைவாதிகளுக்கு உடன்பாடில்லாமல் இருக்கலாம்.
      ஏன் என்று கேட்பதால் தான் இதுவரை எம்மை மனிதரென்று அழைக்கிறார்கள் இப்போ நான் கேட்கிறேன். தவறிருந்தால் சுட்டிக் காட்டுங்கள்.
          கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பதற்கு சரியான காரணம் இருக்கத் தான் செய்கிறது. மனிதனின் முக்கிய வியாபார ஸ்தாபனமாக கோயில்களும் கடவுள்களும் மாற்றப்பட்டு விட்டாலும் அதன் புனிதம் யாரோ ஒருவரால் காக்கப்பட்டுக் கொண்டு தான் இருக்கிறது.
           பழைய காலங்களில் இப்படி அடிக்கொரு கோயில் வைக்கவில்லை அப்படி வைப்பதற்கு எல்லோருடமும் வசிதியிருக்கவில்லை. வெள்ளப் பெருக்கு ,மழை போன்ற காலங்களில் குடி மக்கள் பெரிதும் துன்பப் பட்டார்கள் அவர்கள் ஒதுங்கவதற்கு ஒரு பொதுவான இடமாக இந்த இடம் அமைக்கப் பெற்றிருந்தது. இங்கு சாதிகளை சம்பந்தப்படுத்த வேண்டாம் கோயில்களும் கடவுள்களும் எல்லோர்க்கும் பொதுவானதே
    ஒரு பெரியவர் சொன்னார் கொடித்தம்பம் வைக்கப்பட்டதன் காரணம் மின்னல் தாக்கத்திலிருந்து காப்பதற்குத் தானாம். நானும் சிந்தித்துப் பார்த்தென் அது வைக்கப்பட்டுள்ள மண்டபத்திற்குள் யாரும் தேவையற்று நுழைவதில்லை அத்துடன் அதன் நுனி பகுதி OHM'S LAW விற்கு அமைவாக கூராகவே அமைக்கப்பட்டள்ளது. (R=Pl/a) அத்துடன் ஊரிலேயே உயரமான கட்டிடம் ஆலயமாகத் தான் இருக்கும்.
     ஆலயங்களில் பாதணிகள் உபயோகிக்க அனுமதிக்கப்படுவதில்லை காரணம் அதன் கீழ்த்தளம் பெரும்பாலும் பொழியப்பட்ட கருங்கற்களாலேயே அமைக்கப்படும். அவை நடக்கும் போது பாதத்திலுள்ள நரம்பு முளைகளை அருட்டுவதால் நல்லதொரு சிகிச்சையாக அது அமைகிறது இது பற்றி அக்குபங்சர் சிகிச்சையில் விளக்கமளிக்கப்படடள்ளது.
           அத்துடன் ஆலய நடைமுறைகளும் விஞ்ஞான காரணங்களை சார்ந்தே இருக்கிறது அதில் முக்கியமாக சந்தணம், குங்குமம் வழங்குதல் பற்றி பாருங்கள் இதைப் பற்றி நான் முன்னர் எழுதிய பதிவு ஒன்று பொட்டு வைக்கச் சொல்வதன் விஞ்ஞான காரணம் என்பதை பாருங்கள்

              உளவியல் ரீதியாகவும் மக்களிடை நல்ல மன நிலையையும் தோற்ற விக்கிறது. முன்னைய காலத்தில் ஆலயத்திருவிழாவில் வைத்துத் தான் திருமணங்களைப் பேசிமுடிப்பார்கள். ஆலயங்களில் ஆண்களை மேலாடை இன்றி அழைப்பதற்கும் காரணம் இருக்கிறது வெட்கத்திலாவது அவர்களின் கட்டுடலில் கவனம் செலுத்தவார்களே என்று தான்
நம்ம ஊர் கோயிலுக்கு போக இங்கே சொடுக்குங்கள்
        நாம் அறிவியல் வளர்ச்சியை சரியாகப் பயன்படுத்தவில்லை இப்போதும் ஆலயங்களில் காது கிழிய பாடல்கள் போடுவதும் புனிதமான மந்திரம் என ஐயர் படிப்பதை சாக்கடை சந்து பொந்தெல்லாம் கேட்கும் வரை ஒலிக்கவிடுவதுமென நாமே எம்மை தரம் குறைத்துக் கொள்கிறோம். இவை பற்றி பலர் பலதை அறிந்திருப்பிர்கள் பகிருங்கள். இந்தப் பதிவை நான் இன்னும் முடிக்கவில்லை இது ஒரு பெரும் புயலுக்கு முந்திய தென்றல் தான்...


குறிப்பு - எனது கடைசிப் பதிவைப் பார்த்து நானே அதிசயித்துவிட்டேன் இவ்வளவு கருத்தரையாளர்களா நன்றி உறவுகளே.. மீண்டும் சொல்லிக் கொள்கிறேன் சிறிது காலத்திற்கு என்னால் வாரம் ஒரு பதிவு மட்டுமே இடமுடியும அத்துடன் வாரம் இரு தடவை தன் தங்கள் தளவருகையும் முடியும் என்பதை மனவருத்தத்துடன் அறியத்தருகிறேன்.

கருத்திட்டும் வாக்கிட்டும் சோர்ந்து போன என் விரல்களை புதுப்பிக்கும் என் உறவுகளுக்கு பல கோடி நன்றிகள்

அன்புச்சகோதரன்
ம.தி.சுதா

55 கருத்துகள்:

சனி, 12 பிப்ரவரி, 2011

தாஜ்மகாலின் நாயகி மும்தாஜ் இல்லை திலோத்தமி தான்..


        காதல் என்பது மனிதனின் காலணி போல என நான் சொன்னால் யாரும் மறுக்கமாட்டீர்கள் எனத் தெரியும் காரணம் அது இல்லாமல் போனால் காட்டான் என்கிறார்கள் தலையில் வைத்தக் கொண்டு போனால் பைத்தியம் என்கிறார்கள்.
     காதல் என்ற கதையை எடுத்தாலே எல்லோருக்கும் காதல் சின்னமாய் நினைவில் வருவது தாஜ்மகால் தான் இதை ஷாஜகான் மும்தாஜ் ற்காக கட்டப்பட்டதாக எல்லோரும் சொன்னாலும் இதன் பின்னே உள்ள ஒரு காதல் கதை பற்றி இப்போதும் வட நாட்டில் வாய்மொழி மூலம் ஒரு கதை பரிமாறப்படுகிறது. இதை நான் சிறு வயதில் படித்தேன் அதனால் அந்த நாயகனின் பெயர் நினைவில் இல்லை ஆனால் நாயகியின் பெயர் அப்படியே நினைவில் இருக்கிறது திலோத்தமி தான் அவளது பெயர் சரி கதையை சுருக்கமாகப் பகிர்கிறேன்

79 கருத்துகள்:

செவ்வாய், 8 பிப்ரவரி, 2011

என் சிங்கக்குட்டி சீறி வந்த நாளும் என் மீள் வருகையும்.


                  என் விரல்கள் மூன்று வாரகால இடைவெளியின் பின் பதிவொன்றுக்காய் நீள்கிறது அதற்கு காரணமானவன் எனது மருமகன் சிவசங்கர் தான் காரணம் நேற்று (07.02.2011)அவனுடைய பிறந்தநாளாகும். இது வரை நான் இப்படி ஒரு வாழ்த்துப் பதிவு போட்டதே இல்லை இருந்தாலும் அக்காவுக்காக போட்டே ஆகணும் காரணம் நான் கல்வியிலோ அல்லது சமூகத்திலோ இவ்வளவு வளர்ந்ததற்கு பெரும்பான்மையான காரணம் அவர் தான் ஆனால் அவர் பிள்ளைக்கு என்னால் அந்தளவு செய்ய முடியவில்லை இருந்தாலும் அவனுள் இருக்கும் அந்த ஓர்மத்தை எப்போதும் குறைய விடாமல் பார்ப்பதற்கு இந்தப் பதிவு ஒரு பத்து ஆண்டுகள் கழித்து அவனுக்கு உதவலாம் அது நான் எனது அக்காவிற்கு கொடுக்கும் குரு தட்சனையாகவும் இருக்குமல்லவா ?
AM 10:04 - By ம.தி.சுதா 53

53 கருத்துகள்:

மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்

back to top