Featured Articles
All Stories

சனி, 27 செப்டம்பர், 2014

ஈழத்தில் பணமிறைக்கும் தயாரிப்பாளர்களுக்கோர் மடல்

எம் ஈழத்து சினிமாக்கலையை வளர்க்க துடிக்கும் எம் புலம்பெயர் உறவுகளுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்...

தங்களின் அவாவின் வெளிப்பாடாக பெரும் பெரும் முதலிடுகளுடன் சின்ன சின்ன சின்ன குறும்படங்கள் இங்கு உருவாகியமை பலர் அறிந்ததே.
அதுவும் ஒரு பெரும் படத்துக்கான முதலீட்டில் உருவாக்கப்பட்ட சிறிய குறும்படங்களும் இருக்கின்றது. அது அவரவர் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்குட்பட்ட விடயம்.

ஆனால் வருத்தத்துக்குரிய விடயம் என்னவென்றால்
1. ஒரு படத்துக்கு இரவு பகலாக சிந்திக்கும் இயக்குனர் சல்லி காசு எடுப்பதில்லை (விதிவிலக்குகளை கண்டு கொள்ள வேண்டாம்)

2. பற்றை பருகு எல்லம் உருண்டு உருண்டு படம் பிடிப்பவன் கமரா தேய்மானத்துக்கு கூட காசு எடுப்பதில்லை,

3. அவ்வளவு வீடியோவையும் வெட்டிக் கொத்தி இயக்குனருடன் குத்து வெட்டுப்பட்டு இரண்டு மூன்று RAM துலைச்ச எடிட்டரும் அதில் தன் நேரச் செலவுக்கான காசும் எடுப்பதில்லை.

போலி குறும்படத்துக்காக யாழ் பஸ்நிலையத்தினுள் இயக்குனர் பிறேம் , ஒளிப்பதிவாளர் பாலமுரளி மற்றும் படத்தொகுப்பாளர் செந்தூரனுடன்

ஆனால் இந்த நடிப்பவருக்கான சம்பளம் என்ற ஒரு விடயத்தை கேட்டால் தான் தலை கிறுகிறுக்கும். உண்மையில் சாதிக்க வேண்டும் என்று நினைப்பவன் அர்ப்பணிப்போடு இருக்க. தம் சம்பளத் தொகை தான் தமது தகுதிக்கான அடையாளமாக கருதுகிறார்கள்.

குறும்படத்துக்கான தமிழ் நடிகைகளின் சம்பளத் தொகை ஆனாது அக்குறும்படத்துக்கான மொத்த செலவை விட அதிகமாகும். ஆனால் ஒரு உண்மையான உழைப்பாளி வாங்குவதில் தப்பில்லை அதற்காக அவர்கள் அந்தளவுக்கு உழைக்கிறார்களா என்றால் மருந்துக்கும் இல்லை.
இத்தனைக்கும் நல்ல கதையம்சம் இருந்தால் செலவு காசுடன் நடிப்பதற்கு சிங்கள நடிகைகள் தயாராக இருப்பது உண்மையான விடயமாகும்.

ஈழ கலையை வளர்க்க வெண்டும் என்ற உங்கள் அவாவை தப்பாக சொல்லவில்லை ஆனால் நல்ல படைப்புக்கும் நல்ல படைப்பாளிகளுக்கும் செலவழித்து கலையை வளருங்கள். ஒரு படத்துக்காக நீங்கள் அள்ளிக் கொட்டி கொடுத்து குழப்பும் தொகைகள் ஆனாது ஒட்டு மொத்த பாதையையும் சீர் குலைக்கிறது.

இன்னும் இங்கு யாரும் வணிகரீதியாக இத்தொழிலை செய்யவில்லை என்பதும் எல்லோரும் எமக்கான ஒரு அடையாளத்தை நோக்கி பயணிக்கிறோம் என்பதும் தான் தெளிவான உண்மையாகும்.
உண்மையான உழைப்பாளிகளை உயர்த்துங்கள். போடி போக்காக எம் தனித்துவத்தை சீர்குலைக்கும் விடயங்களுக்கு துணை போக வேண்டாம் என்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.

நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா
AM 11:27 - By ம.தி.சுதா 4

4 கருத்துகள்:

சனி, 20 செப்டம்பர், 2014

மனமிருந்தால் உதவுங்கள் இக் குழந்தைகளுக்கு (அரவணைப்போம்)

வணக்கம் உறவுகளே
சேமம் எப்படி?

இப்பகிர்வானது ஆர்டிசம் வகை நோயால் பாதிக்கப்பட்ட இரு சிறுவர்கள் தொடர்பானது. இக் குழந்தைகளின் சிகிச்சைக்காக இந்தியா சென்றுள்ளார்கள்.
உதவ மனமிருப்போர் நிச்சயம் தங்களால் முடிந்ததை உதவுங்கள்.

இத் தகவல் ஆனது நாம் நீண்டகாலமாக நடாத்தி வரும் ”அரவணைப்போம்” செயற்திட்டத்திற்கு உதவி கோரப்பட்டது. அதை உறுதிப்படுத்தியே பகிர்கின்றேன்.

தொடர்புகள் படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.எமது தனிப்பட்ட செயற்பாட்டில் முன்னெடுத்து வரும் அரவணைப்போம் திட்டத்தின் செயற்பாடுகளை அறிய இங்கே செல்லவும்.

மொத்தச் செயற்பாடுகளையும் பார்வையிட இங்கே செல்லவும் 
PM 12:11 - By ம.தி.சுதா 0

0 கருத்துகள்:

திங்கள், 8 செப்டம்பர், 2014

சமூகத்துக்காக உருவாக்கப்பட்ட 3 குறும்படங்கள்

வணக்கம் உறவுகளே
சேமம் எப்படி?

முற்குறிப்பு - கடந்த மாதத்திற்குள் ஈழத்தவரால் வெளியிடப்பட்ட 3 சமூக விழிப்புணர்வுக் குறும்படங்களை பகிர்கின்றேன். இது என் விமர்சனப்பதிவல்ல என் ரசனைப் பதிவேயாகும். இம் மூன்று படைப்பிலும் சொல்லப்பட்ட கருத்துக்கள் சமூகத்துக்கு முக்கியமானவையாகும்.


1 . மாசிலான் குறும்படம்
குடும்பநலனை அக்கறையாகவும் அதற்குள் வதைபட்டுப் போகும் பிஞ்சுகளின் மனநிலையையும் அத்தனை பிச்சுப் பிடுங்கல் குடும்பகாரருக்கும் உறைக்க வைத்த குறும்படமாக ரப் பாடகரும் இயக்குனரும் நடிகருமான சுஜித்.ஜீ  அண்ணாவால் உருவாக்கப்பட்ட படைப்பாகும். மற்றவையும் சிறப்பாக அமைக்கப்பட்டிருந்தாலும் இக்குறுப்படத்தில் ஒவ்வொரு காட்சிக்குமான தொடர்ச்சி என்பது என்னை மிகவும் கவர்ந்தது.2. அஞ்சல குறும்படம்
இசையமைப்பாளர் தர்சனனின் இயக்கத்தில் வெளிவந்த இரண்டாவது குறும்படமான அஞ்சல முன்னையதை விட மிகுந்த நிகழ்கால சமூக அக்கறையுடன் பிரசவிக்கப்பட்டிருப்பதுடன் இன்யை இளைய தலைமுறைக்கு ஒரு வித அச்சத்தையும் கொடுத்திருந்தது.


3.  கடந்து போகும் குறும்படம்
ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர், இயக்குனருமான லோககாந்தனால் உருவாக்கப்பட்ட கடந்து பொகும் என்ற குறும்படம் கடந்த வாரம் வெளியாகியிருந்தது. நிகழ்காலத்தில் இடம்பெறும் தற்கொலைகளை மையப்படுத்தி தற்கொலைக்கு துணியும் ஒவ்வாரு மனிதனையும் ஒரு கணம் சிந்திக்க வைக்கிறது இக் குறும்படம்.

மேற் குறிப்பிட்ட குறும்படங்களை பார்வையிட்டு அவர்களுக்கான ஆக்க பூர்வமான கருத்துக்களை வழங்கவும்.

நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா
PM 12:27 - By ம.தி.சுதா 3

3 கருத்துகள்:

புதன், 3 செப்டம்பர், 2014

RJ balaji அப்பாவுக்கு பிறந்தாரா அல்லது குளோனிங்கில் பிறந்தாரா? சந்தேகக் கடிதம்

வணக்கம் உறவுகளே
சேமம் எப்படி?

முற்குறிப்பு - நானும் ஆர்ஜே பாலாஜியின் ரசிகன் தான் அதற்காக அவர்கள் சொல்லும் அனைத்தும் சி(ச)ரி என்று ஒத்திசைய வேண்டிய தேவை எனக்கில்லை.

என் ரசனைக்குரிய ஆர்ஜே பாலாதிக்கு வணக்கம்....

எல்லா உணர்வுகளும் எல்லா மனிதராலும் உணரப்படுவதில்லை உணரவும் முடிவதில்லை. ஆனால் ஒரு மனிதன் என்பவன் உணர்வுகள் வசப்பட்டவன் தனக்கு அந்த உணர்வில்லையானாலும் மற்றவன் உணர்வை மதிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

அண்மையில் ZEE tamil தொலைக்காட்சியில் ஒரு கலாய்த்தல் விருது விழாவை நடத்தியிருந்தமை பலருக்கு தெரிந்திருக்கும். அந் நிகழ்ச்சி விஜய் ரீவியின் விருது விழாவை கலாய்ப்பதாக அமைந்திருந்தமை வேறு விடயம். ஆனால் அங்கோ மிக முக்கியமாக கலாய்க்கப்பட்டவர் நடிகர் சிவகார்த்திகேயனாவார். (அதற்கு பயன்படுத்திய பாடல் கூட அவருக்கு பயன்படுத்தப்பட்ட அதே பாடல்)

 ZEE tamil தொலைக்காட்சி மற்றவர்களின் அந்தரங்கத்தையும் உணர்வையும் விற்று பிழைப்பு நடத்துவது போல விஜய் ரீவிக்கு ஒரு குணமிருக்கிறது மற்றவர் உணர்வை விற்பது. எப்படித் தான் சுமூகமாக போகும் நிகழ்ச்சி என்றாலும் அடி மனதை வேண்டும் என்று தொட வைத்து அதை வைத்து நல்ல ரெயிலர் ஒன்று தயாரித்து ஓட்டுவார்கள்.

இது பற்றி சிவகார்த்திகேயன் மேடை ஏறியவுடனேயே கூறுவார். ”உன்னை அழ வச்சு ஒரு வாரத்துக்கு ஓட்டுவாங்கடா அழுதிடாதை என்று வீட்டில சொல்லி விட்டாங்க” என்பார். அப்படி இருந்தும் எல்லாம் முடியும் தருவாயில் அந்த கோட்டு போட்ட தம்பி அந்த வில்லண்ட கேள்வியை கேட்பார் ”நீங்கள் இன்னைக்கு யாரை மிஸ் பண்ணுறன் என்று நினைக்கிறிங்க” அப்புறம் சிவகார்த்திகேயனை சொல்ல வேண்டுமா?

சிவகார்த்திகேயனை பார்க்கும் அல்லது விஜய் ரிவியை பார்க்க்கும் எல்லாருக்கும் அவர் இக்கேள்விக்கு என்ன சொல்வார் என்று தெரியும். சரி அது ஒரு பக்கம் இருக்கட்டும்.

ஒவ்வொரு ஆணுக்கும் முதல் நாயகன் அவன் தந்தை தான் அதை ஒற்றியே அவன் பாணிகள் எண்ணங்கள் நகரும். தான் சாதித்த பின்னர் ஏங்கும் ஒவ்வொரு அணுக்கும் சிவகார்த்திகேயன் ஒரு உதாரணம். அதை கொச்சையாக்கும் ஒவ்வொருவரும் உணர்வற்ற ஜடங்களாகவே பார்க்கப்பட வேண்டியவர்கள்.
அந்த உணர்வலைக்கு மிகப் பெரிய உதாரணம் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான். மேடையில் சிவகார்த்திகேயன் நிற்கும் போது இவர் கீழே அழுததை எல்லோரும் கவனித்திருப்பீர்கள். ஏனென்றால் அவருக்கும் அந்த ஏக்கம் தெரியும்.
ஆர்ஜே பாலாஜின் தந்தை பற்றி உண்மையில் எனக்கெதுவும் தெரியாது. சிலவேளை அவர் தான் தந்தை இருக்கும் போது சாதித்து விட்டேன் என்ற இறுமாப்பில் நடக்கிறாரா தெரியவில்லை ஆனால் சிவ கார்த்திகேயன் என்பவர் ஒரு கேலிப் பொருளல்ல. போராடிச் சாதித்து அதற்கு காரணமானவரை தெலைத்து விட்டு பகிர முடியாமல் தவிக்கும் பல மனிதர்களின் ஒற்றை பிரதிபலிப்பு வடிவம்.
இனியாவது இப்படியான உணர்வுகளோடு விளையாடமாட்டீர்கள் என்று நினைக்கிறேன்.

என்றும் உங்கள் ரசிகனாக
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா

முக்கிய குறிப்பு - இப்பதிவை நானும் உணர்வோடு பகிர காரணம் இதே உணர்வால் நானும் பாதிக்கப்பட்டவன் என்பதாலேயே. கௌரவமான நிரந்தர வேலை பெற்று முதல் மாத சம்பளத்தில் செய்தது அப்பாவின் மரணச் சடங்கு தான். அம்மாவுக்கு ஆசையாக வாங்கிய பட்டு சேலை இப்பவும் அப்படியே இருக்கிறது.
அவருக்காக வாங்கிய சாரங்களும்
அம்மாவுக்காக வாங்கிய சேலையும்
தொடுப்பு -  வலி தந்த அப்பாவுக்காக சில வரிகள்

PM 1:04 - By ம.தி.சுதா 1

1 கருத்துகள்:

மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்

back to top