Featured Articles
All Stories
aanmiham லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
aanmiham லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 11 ஜூலை, 2013

பகவான் ஸ்ரீ சத்யசாயிபாபாவின் ஆன்மீகம் கடந்த சமூக சாதனைகள்

 வணக்கம் உறவுகளே
சேமம் எப்படி?


உலக சுழற்சியில் ஒவ்வொரு நூற்றாண்டிலும் பல்வேறு நபர்கள் கடந்து போகிறார்கள். அவர்கள் மீது நாம் நோக்கும் பக்கமே அவர்கள் மீதான தோற்றப்பாட்டை எம் மீது உட்செலுத்துகிறது.
தகவல் தொடர்பாடல் வளர்ச்சியின் பின்னர் சாதகமான கருத்துக்கள் செய்திகளின் பரம்பல் வேகத்திற்கீடாக எதிர்மாறான பரப்புரைகளும் வாதந்திகளும் சம வேகத்தில்  பரவவிளைந்து கொண்டிருக்கும் இக்காலத்தில் சிலரது நல்ல பக்கங்களும் மெது மெதுவாக மழுங்கடிக்கப்பட்டுக் கொண்டு செல்கிறது.
இந்த நூற்றாண்டில் உலகை விட்டுப் பிரிந்தவர்களில் மிக முக்கியமான சரித்திர நாயகர்களில் பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவும் ஒருவராகத் திகழ்கின்றார். இவரை ஒரு ஆன்மீகவாதியாகவும், மத பரப்புரையாளராகவும், மதச் சிந்தனையாளருமாகவே பலர் நோக்குகையில் ஒரு பெரும் தேசத்தின் மூலையில் இருந்து கொண்டு ஒரு தனிமனிதன் இந்தளவு வளர்ச்சி கண்டு இவ்வளவு சாதித்திருப்பது என்பது வியக்க வேண்டிய விடயமொன்றாகும். பணம் எதுவும் செய்யும் என்ற ஒரு வாக்கியத்தால் மறுவாதங்களை பிரயோகித்தாலும் உலகில் எவருமே எட்ட முடியாத ஒரு எல்லையைத் தான் அவர் எட்டியிருக்கிறார்.
இவருக்கு உலகமெங்கிலும் 114 மையங்களில் 1200 சத்யசாய் அமைப்புக்கள் உள்ளன. அவரது பக்தர்கள் 100 கோடி பேர் இருக்கிறார்கள் என கணக்கெடுப்புக் கூறுகின்றது.
அவருடைய நிறுவனங்கள் உலகமெங்கிலும் 136 நாடுகளில் சமூகசேவையாற்றுகின்றது. அதன் ஒரு பகுதி அமைப்பான விழுமிய சமூக அமைப்பானது ஒரிசாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பலருக்கு வீடுகளை அமைத்துக் கொடுத்தது.
விழுமிய கல்வி அமைப்பானது பல மாணவருக்கு இலவசக் கல்வியை அளித்து வருகிறது. அதே போல விழுமிய மருத்துவ நிறுவனம் பல இலவச வைத்திய முகாம்களை அமைத்து உலகின் பல்வேறு இடங்களிலும் இலவச மருத்துவ உதவியை அளித்து வருகிறது. அத்துடன் புட்டர்பத்தியிலும் பெங்களுரிலும் மிகப் பெரும் மருத்துவமனை ஒன்று அமைக்கப்பட்டு மருத்துவ வசதியளிக்கப்படுகிறது.
இவரது மிகப் பெரும் சாதனையாகக் கருதப்படுபவற்றில் பிரதானமானது இந்தியாவில் இருந்த பிரிட்டிஷ்காரர் ஆட்சியிலிருந்தே ஆந்திராவில் ஆனந்பூர் மற்றும் கோதாவாரி மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு குடிநீர் வழங்க முடியாமல் வறட்சியில் காணப்பட்டது. இப்பிரச்சனை இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னரும் பல் ஆட்சியாளர்களால் தீர்க்க முடியாமல் இருந்த நிலையில் ஒரே வருடத்தில் அவ்வளவு இடத்திற்கும் குடிநீர் கிடைக்கச் செய்து வழி செய்தார்.
சென்னையில் இருந்த குடி நீர் பஞ்சத்தைத் தீர்க்க ஆந்திர அரசுடன் இணைந்து இரு அரசும் முயற்சித்த தெலுங்கு கங்கை நீர்த்திட்டத்தை சுமார் 200 கோடி செலவழித்து நடைமுறைப்படுத்திக் காட்டினார்.
இவை இப்படியிருக்கையில் பகுத்தறிவு பேசியும் ஆன்மீகவாதிகளை கீழ்த்தரப்படுத்தியும் அரசியல் நடத்தும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணை முதல்வராக இருந்த மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆட்சியில் இருந்த காலத்தில் கூவம் நதியை துப்பரவு செய்து தரும்படி பகவான் ஸ்ரீ சத்யசாயி பாபாவிடம் வேண்டு கோள் விடுத்திருந்தார்.
இவர் மரணம் அடைந்த பொழுது உலகமெங்கிலும் இருந்து 4 லட்சம் பக்தர்கள் அவரது இறுதி நிகழ்வில் கலந்து கொண்டார்கள். அவரது இறுதி நேரம் உறுதியாகிவிட்ட நிலையில் 6000 போலிஸ்காரர்கள் புட்டர்பத்தியில் குவிக்கப்பட்டிருந்தார்கள். ஆந்திரா அரசு 4 நாட்கள் துக்கதினமாக அறிவித்து அனுஸ்டித்து அவரை கௌரவித்தது.
எல்லாம் தெரிந்தவருக்கு தன்னைக் காப்பாற்றத் தெரியவில்லை என சில பகுத்தறிவு பேசும் அரைகுறை அறிவாளிகள் கூறிக் கொண்டாலும் சித்தர்களைத் தவிர சமூக மாயைக்குள் வாழ்ந்த எந்த மனிதனும் மரணச் சக்கரத்தைக் குழப்பி வாழவில்லை என்பது அறிவுறுத்தியும் எடுபடப் போவதில்லை.
இன்றைய காலகட்டத்தில் பகுத்தறிவுவாதிகள் என தம்மை அடையாளப்படுத்தி வாழ்பவர்கள் தம்மை ஒரு குழுவிற்குள் வேறுபடுத்திக்காட்டவும் தம் நிலைப்படுத்தலை உறுதிப்படுத்தவுமே பகுத்தறிவு பேசுகிறார்கள்.
ஒரு தனிமனிதனால் 100 கோடி பேர் நல்லவர்களாக வாழ்கிறார்கள் என்றால் அதைப் போல சாதனை இந்த பாதக உலகத்தில் வேறெதுவாக இருக்க முடியும். அப்படி நம்பி வாழ்பவரை கீழ்த்தரப்படுத்துவதால் பாவிகள் உலகத்தை சிருஸ்டிக்கும் நீங்களே பாவிகளாக மாறிக் கொள்கிறீர்கள்.

நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா

7:53 AM - By ம.தி.சுதா 6

வியாழன், 3 நவம்பர், 2011

செல்வச்சந்நிதி ஆலயத்தின் சூரன் போர் காணொளி (ஈழத்தை பிரிந்தவர்க்காக)

        ஈழவரலாற்றில் மிகவும் தொன்மைவாய்ந்ததும் புராணச் சிறப்பு மிக்கதுமான ஒரு முக்கிய ஆலயம் தான் தொண்டமானாறு செல்வச் சந்நிதியாலயமாகும்.
              ஈழப்போரின் வடுக்களை முழுமையாகத்தாங்கி ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆலயமாகவும் திகழ்கிறது.
இலங்கையின் தெற்கே இருக்கும் கதிர்காமக் கோயிலுடன் நெருங்கிய தொடர்பை பேணும் இவ்வாலயத்திலும் மந்திரங்கள் கொண்டு பூசை செய்யப்படுவதில்லை. இங்கேயும் பூசை செய்பவர்கள் வாய்கட்டியே பூசை செய்கிறார்கள்.
11:39 PM - By ம.தி.சுதா 28

செவ்வாய், 8 மார்ச், 2011

உலகப் புகழ் பெற்ற தமிழர் கோயிலும் அழிவடையும் தமிழர் சின்னமும்..

            நம்மவர் எந்த இடம் போனாலும் தம் பெயரை ஏதோ ஒரு வகையில் பொறித்திருப்போம் அதில் ஒன்று தான் நாம் பார்க்கப் போகும் இக் கோயிலாகும் இதன் பெயர் அங்கோர்வாட் (Angkor Wat ) என்பதாகும்.
                இது கம்போடியாவில் அமைந்துள்ளது. அங்கோர் என்பது தலை நகரம் அல்லது புனித நகரம் என பொருள்படும். கி.பி 12 ம் நூற்றாண்டில் 2 ம் சூரியவர்மனால் கட்டப்பட்டது. இந்த ஆலயத்தின் கோபுரங்கள் நிலத்திலிருந்து ஏறத்தாள 64 மீட்டர் உயரமானவை.  2 ம் சூரியவர்மன் இந்து அரசானாக இருந்தவன் இருந்தாலும் இந்த விஷ்ணு ஆலயம் அவனாலேயே அமைக்கப்பட்டது. அங்கே பல சிவன் ஆலயங்களும் சேர்த்தே அமைக்கப்பட்டிருக்கிறது.
            இந்திய, ரோமானியா, கிரேக்க, எகிப்திய, மாய நாட்டுக் கட்டடக்கலையை ஒன்று சேர்த்து சலவைக் கல்லால் இது கட்டப்பட்டிருக்கிறது. இது 10 சதுர மைல் அளவிற்கு பெரியது. கைவிடப்பட்டிருந்த நிலையில் இருந்த இதை யுனெஸ்கோ பொறுப்பெடுத்து ஒரு பகுதியை மட்டும் சுற்றலாத்தளமாக மாற்றி பார்வைக்கு வைத்துள்ளது. இந்த ஆலயங்களைக் காண அன்றாடம் ஐயாயிரத்துக்கு மேற்பட்ட சுற்றுலாப்பயணிகள் வருகின்றனர். நாள் ஒன்றுக்கு 20 யு.எஸ். டாலர் கட்டணமும் கார் வாடகை, வழிகாட்டிக்கான செலவு ஆகியவையும் சுற்றுப்பயணி வழங்குகிறார்.
     கி.பி. 17 ஆம் நூற்றாண்டு வரை ஆளுமையில் இருந்த பாரம்பரிய மன்னர்களின் வாரிசுகளின் விபரங்கள் அனைத்தும் ஆண்டு வாரியாக குறிப்பிட்டு சியாம் ரீப் அரும் பொருளகத்தில் வைத்திருக்கிறார்கள். அங்கே இதன் தகவல்களை இன்னும் பெற்றுக் கொள்ளலாம். இது விஸ்ணு ஆலயம் என பலராலும் போற்றிப் பகழப்பட்டாலும் உள்ளே சிவனக்கும் பல ஆலயங்கள் இருக்கிறது என்பதை மறக்கக் கூடாது அது மட்டுமல்ல வாசுகி பாம்பால் அமுத எடுப்பதிலிருந்த மகாபாரத முக்கிய காட்சிகள் வரை அனைத்தும் சிற்பங்களாக வடிக்கப்பட்டிருக்கிறது.
       இதன் அழிவு எப்படி ஆரம்பமானது என நோக்கினால் இவர்களது நீர் வடிகால் அமைப்பில் விடப்பட்ட வழுக்கள் தான் காரணமாகும் ஆலயங்களில் செலுத்திய கவனத்தை எதிர்கால நோக்கில் செலுத்தவில்லை அதன் விளைவு தான் இதன் அழிவு என கூறப்படுகிறது. ஆற்றை மறித்து நீர்த்தேக்கமாக்கி விவசாயத்தை மேற்கொண்ட இவர்களால் அதன் அணையை கவனத்திலெடுக்கத் தவறி விட்டார்கள்.

இரண்டாம் சூரியவர்மன்(Surya varman II )

ஆட்சிக்காலம்: கி.பி 1113 - 1150

இந்த மன்னன் ஆட்சியில் தலைநகராக அமைந்த இடம்:

யசோதபுர (Yashodapura)

ஆலயங்களின் அமைப்பு முறை (Style):

ANGKOR WAT

இவன் ஆட்சியில் அமைத்த ஆலயங்கள்:

Angkor Wat, Thom Manon

கைமர் பேரரசில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பேரரசர்களில் ஒருவனாகக் கொள்ளப்படுகின்றான். மிக நீண்ட, பரந்த நிலப்பிரதேசம் இவன் ஆளுகையில் இருந்தது. வடக்கே சம்பா (Champa), கிழக்குக் கடற்பிரதேசம் மேற்கு பகோன் (Pagon)/பர்மா (Burma) தெற்கு மலாய் தீபகற்பம் ஆகியவற்றைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்திருக்கின்றான். இறந்த பின் பரமவிஷ்ணுலோக (Paramavishnuloka) என்று பெயர் சூட்டப்பட்டுச் சிறப்பிக்கப்பட்டிருக்கின்றான். சூரிய வர்மனின் வம்சம் பற்றி மேலும் அறிய இங்கே செல்லுங்கள்.

இது சம்பந்தமாக மேலும் தெரிந்தவர்கள் பகிருங்கள்.. என்ன சுதா சுருக்கமாக சொல்லி விட்டு ஓடுறானே என தப்புக் கணக்கு போட்டால் நான் பொறுப்பில்லை. காரணம் இதெல்லாம் எம் சாதனையில்லை பொறுப்பற்ற மூடத்தனமான செயற்பாட்டுக்கு உதாரணங்கள். யாரோ ஒரு வெளி நாட்டுக்காரன் காதலியொட கூத்தடிக்க கட்டி விட்டுட்டு நாங்கள் இங்க சிறு நீர் கழிக்கக் கூட சொந்த இடமில்லாமல் முக்கி முனகுகிறோம்... மன்னியுங்க நல்ல நாள் அதுவுமா சூடாகக் கூடாது. பிறிதொரு பதிவில் இதை தொடுகிறேன். அப்படியே படத்துக்கு கிழே வாங்க..

நான் அவரை திட்டிக் கொள்ளும் பயிற்சி நாட்களில் எடுத்த படம்.
         இன்று உலகத்திலேயே நான் அதிகம் மதிப்பும், பாசமும், நம்பிக்கையும் கொண்டுள்ள என் உறவினரல்லாத (அப்படிச் சொல்வது தப்புத் தான் அனால் அந்த ஒரு வட்டத்திற்குள் அவரை உள்ளடக்க விரும்பல) ஒருவரின் பிறந்த தினமாகும். இந்த பதிவுலகத்தில் மட்டுமல்ல என் கல்வி, விளையாட்டு, பழக்கவழக்கம் என பலதை மாற்றித் தந்தவர் அவர். அவருடைய ஆரம்ப எடு கோள்களுடன் ஆரம்பிக்கப்பட்ட பல பதிவுகள் இருக்கிறது. வழமையாக நான் ஒரு தனிப் போக்குடையவன் யாரென்ன சொன்னாலும் நான் தான் முடிவெடுப்பேன் அனால் இவரும், அக்காவும் சொன்னால் மீள் பரிசோதனை என்ற கருத்துக்கே இடமிருக்காது.
      அவரை பற்றி அதிகம் சொல்லாம் ஆனால் உங்களுக்கு வாசிக்க பொறுமையிருக்காது.எங்கள் நட்பு எப்போதும் அப்பழுக்கற்றது. எதிர் பார்ப்பற்றது 2000 ம் ஆண்டு முதல் முதல் சந்தித்தோம். இப்போதும் என்ன பேசினோம் என என்னால் சொல்ல முடியும் அவராலும் முடியும். இத்தனைக்கும் நான் சொல்லாமல் விட்டுச் செல்லும் அவருக்கும் எனக்குமுள்ள பெரிய ஒற்றுமை தான் காரணமாக இருக்கலாமோ தெரியல...

       என்னை எப்படி வழி நடத்தினார் என்பதற்கு சின்ன உதாரணம் ஒரு முறை கிரிக்கேட் விளையாடுகையில் (இவர் தான் எனது பயிற்சியாளரும் கூட) எனது காலில் angle joint ல் உடைவு ஏற்பட்டு விட்டது. இதே ஒரு சர்வதேச வீரருக்கு எற்பட்டிருந்தால் குறைந்தது 3 மாத ஓய்வு ஆனால் 3 வாரத்தில் ஒரு இறுதிப் போட்டிக்கு என்னை தயார்ப்படுத்தி அந்த இறுதிப் போட்டியில் அசைக்க முடியாத சாதனைக்கு சொந்தக்காரர் ஆக்கியவர். இறுதி துடுப்பாட்ட வீரரை வைத்து இறுதி பந்துப்பரிமாற்றம் வரை சென்று போட்டியில் இறுதியில் 6 ஓட்டம் பெற்று (SIXER) வெற்றி அதுமட்டுமல்ல 2 கடினப் பிடிகள் உட்பட 4 பிடிகள் இப்போதும் முகபுத்தக (FACE BOOK) நண்பர்கள் அடிக்கடி நினைவுபடுத்துவார்கள். அவர் இன்னும் சிறப்புற வாழ எனதும் என் குடும்பத்தாரதும் வாழ்த்துக்கள்...

குறிப்பு - அவர் பெயர் ஜீவன் இம்மானுவேல் (மதாத்தால் கூட இருவரும் வேறுபட்டவர்கள்) வயது பெரிதாய் இல்லிங்க 39 தான் அவர் வயது. எனக்கு அடிக்கடி மைதானத்தில் சொல்லும் அறிவுரை “சுதா உமக்கு முடிவெடுக்க முடியாத சூழ் நிலைகளில் குழம்பக் கூடாது உமது மனதுக்கு முதல் எது படுகிறதோ அது சரியாகவே இருக்கும் ஏனேன்றால் நீர் தலைமைத்துவத்தில் ஒரு திறமையானவன் இரண்டாம தடவை சிந்தித்தால் தவறான முடிவு தான் வரும்” நான் பல தடவை பல்வேறு இக்கட்டான சூழ்நிலைகளில் பரிசோதித்திருக்கிறேன் அவர் சொல்வது உண்மை தான்..
12:17 AM - By ம.தி.சுதா 47

வெள்ளி, 18 பிப்ரவரி, 2011

கோயில்கள் ஏன் கட்டப்பட்டன


சகோதரர்களே எப்படி இருக்கிறீர்கள்.

        நீண்ட நாட்களுக்கு பின் ஆன்மிகப் பக்கத்தை அறிவியலுடன் தொட்டுப் பார்க்கலாம் என ஒரு சின்ன முயற்சி இதில் சில பழமைவாதிகளுக்கு உடன்பாடில்லாமல் இருக்கலாம்.
      ஏன் என்று கேட்பதால் தான் இதுவரை எம்மை மனிதரென்று அழைக்கிறார்கள் இப்போ நான் கேட்கிறேன். தவறிருந்தால் சுட்டிக் காட்டுங்கள்.
          கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பதற்கு சரியான காரணம் இருக்கத் தான் செய்கிறது. மனிதனின் முக்கிய வியாபார ஸ்தாபனமாக கோயில்களும் கடவுள்களும் மாற்றப்பட்டு விட்டாலும் அதன் புனிதம் யாரோ ஒருவரால் காக்கப்பட்டுக் கொண்டு தான் இருக்கிறது.
           பழைய காலங்களில் இப்படி அடிக்கொரு கோயில் வைக்கவில்லை அப்படி வைப்பதற்கு எல்லோருடமும் வசிதியிருக்கவில்லை. வெள்ளப் பெருக்கு ,மழை போன்ற காலங்களில் குடி மக்கள் பெரிதும் துன்பப் பட்டார்கள் அவர்கள் ஒதுங்கவதற்கு ஒரு பொதுவான இடமாக இந்த இடம் அமைக்கப் பெற்றிருந்தது. இங்கு சாதிகளை சம்பந்தப்படுத்த வேண்டாம் கோயில்களும் கடவுள்களும் எல்லோர்க்கும் பொதுவானதே
    ஒரு பெரியவர் சொன்னார் கொடித்தம்பம் வைக்கப்பட்டதன் காரணம் மின்னல் தாக்கத்திலிருந்து காப்பதற்குத் தானாம். நானும் சிந்தித்துப் பார்த்தென் அது வைக்கப்பட்டுள்ள மண்டபத்திற்குள் யாரும் தேவையற்று நுழைவதில்லை அத்துடன் அதன் நுனி பகுதி OHM'S LAW விற்கு அமைவாக கூராகவே அமைக்கப்பட்டள்ளது. (R=Pl/a) அத்துடன் ஊரிலேயே உயரமான கட்டிடம் ஆலயமாகத் தான் இருக்கும்.
     ஆலயங்களில் பாதணிகள் உபயோகிக்க அனுமதிக்கப்படுவதில்லை காரணம் அதன் கீழ்த்தளம் பெரும்பாலும் பொழியப்பட்ட கருங்கற்களாலேயே அமைக்கப்படும். அவை நடக்கும் போது பாதத்திலுள்ள நரம்பு முளைகளை அருட்டுவதால் நல்லதொரு சிகிச்சையாக அது அமைகிறது இது பற்றி அக்குபங்சர் சிகிச்சையில் விளக்கமளிக்கப்படடள்ளது.
           அத்துடன் ஆலய நடைமுறைகளும் விஞ்ஞான காரணங்களை சார்ந்தே இருக்கிறது அதில் முக்கியமாக சந்தணம், குங்குமம் வழங்குதல் பற்றி பாருங்கள் இதைப் பற்றி நான் முன்னர் எழுதிய பதிவு ஒன்று பொட்டு வைக்கச் சொல்வதன் விஞ்ஞான காரணம் என்பதை பாருங்கள்

              உளவியல் ரீதியாகவும் மக்களிடை நல்ல மன நிலையையும் தோற்ற விக்கிறது. முன்னைய காலத்தில் ஆலயத்திருவிழாவில் வைத்துத் தான் திருமணங்களைப் பேசிமுடிப்பார்கள். ஆலயங்களில் ஆண்களை மேலாடை இன்றி அழைப்பதற்கும் காரணம் இருக்கிறது வெட்கத்திலாவது அவர்களின் கட்டுடலில் கவனம் செலுத்தவார்களே என்று தான்
நம்ம ஊர் கோயிலுக்கு போக இங்கே சொடுக்குங்கள்
        நாம் அறிவியல் வளர்ச்சியை சரியாகப் பயன்படுத்தவில்லை இப்போதும் ஆலயங்களில் காது கிழிய பாடல்கள் போடுவதும் புனிதமான மந்திரம் என ஐயர் படிப்பதை சாக்கடை சந்து பொந்தெல்லாம் கேட்கும் வரை ஒலிக்கவிடுவதுமென நாமே எம்மை தரம் குறைத்துக் கொள்கிறோம். இவை பற்றி பலர் பலதை அறிந்திருப்பிர்கள் பகிருங்கள். இந்தப் பதிவை நான் இன்னும் முடிக்கவில்லை இது ஒரு பெரும் புயலுக்கு முந்திய தென்றல் தான்...


குறிப்பு - எனது கடைசிப் பதிவைப் பார்த்து நானே அதிசயித்துவிட்டேன் இவ்வளவு கருத்தரையாளர்களா நன்றி உறவுகளே.. மீண்டும் சொல்லிக் கொள்கிறேன் சிறிது காலத்திற்கு என்னால் வாரம் ஒரு பதிவு மட்டுமே இடமுடியும அத்துடன் வாரம் இரு தடவை தன் தங்கள் தளவருகையும் முடியும் என்பதை மனவருத்தத்துடன் அறியத்தருகிறேன்.

கருத்திட்டும் வாக்கிட்டும் சோர்ந்து போன என் விரல்களை புதுப்பிக்கும் என் உறவுகளுக்கு பல கோடி நன்றிகள்

அன்புச்சகோதரன்
ம.தி.சுதா

வியாழன், 23 டிசம்பர், 2010

மறக்கப்பட்ட பிரபல பாடகர்கள் Boney M (கிறிஸ்மஸ் சிறப்பு பதிவு)

                   உலகில் வாழும் எந்த ஒரு கிறிஸ்தவனும் இவர்கள் பாடலை அறியாமல் இருக்கவேமாட்டான் அந்தளவுக்கு அருமையாகவும் ஈர்க்கும்
விதத்திலும் படிப்பதில் வல்லவர்கள் யாரா அவர்கள் தான் ஒரு குழுவாக ஐரோப்பியாவையே கலக்கிய Boney M. 1975 ஆண்டில் தான் இவர்கள் முதல் முதல் தொலைக்காட்சி முன்னால் தோன்றினார்கள்.
              மேற்கு ஜெர்மனில் தோற்றம் பெற்ற இந்தக் குழுவானது அவுஸ்திரேலியா, நெதர்லாந்து, பெல்ஜியம் என ஒரு சுற்றச் சுற்றி கலக்கி வந்தது. இக்குழுவின் ஸ்தாபகராக இருந்தவர்Frank Farian ஆவார் அத்துடன் அக்குழுவில்Bobby Farrell, Liz Mitchell, Marcia Barrett, Maizie Williams  ஆகியோர் பங்கு கொண்டிருந்தார்கள்.

திங்கள், 13 செப்டம்பர், 2010

தமிழ் நாடு ஈழத்திற்கு இதையாவது தருமா..?

                       ஈழத்தமிழர் மீண்டும் ஒரு முறை தமிழக அரசிடம் வேண்டி நிற்க வேண்டிய தருணம் வந்திருக்கிறது. இதையாவது முதல்வர் கண்டு கொள்வாரா.. அல்லது பசப்பு வார்த்தை பேசி நழுவிக் கொள்வாரா தெரியவில்லை.
                         சம்பவம் இது தான் 2008 ம் ஆண்டளவில் நாமக்கல் மாவட்டத்தில் பொலிஸாரால் ஒரு சிலை கைப்பற்றப்பட்டது. இது முருகக் கடவுளின் பஞ்சலோகச் சிலையாகும்.
11:55 PM - By ம.தி.சுதா 16

ஞாயிறு, 5 செப்டம்பர், 2010

கிருஷ்ணரும் கிறிஷ்துவும் ஒன்று தானே (ஒரு ஒப்பீடு)...

                                     சில காலம் ஒய்ந்திருந்த மதப்போர் மீண்டும் இணைய வழியில் புது உருப்பெற்று தலை எடுக்க அரம்பித்துள்ளது. ஆனால் ஒன்று மட்டும் உண்மை தானே
"ஒன்றே குலம் ஒருவனே தேவன்"

                                     இவை எப்போதோ நான் கேட்ட ஒரு சில தகவல்களை வைத்து மிகுதியை தொடர்ந்திருக்கிறேன். இன்றைய ஞாயிற்றுக் கிழமை நாளில் இதை வெளியிடுவது சிறப்பாக இருக்குமென்பதால் எனது இவ்வார ஆன்மீகப் பதிவாக இடுகிறேன்.
10:38 AM - By ம.தி.சுதா 29

புதன், 4 ஆகஸ்ட், 2010

காயத்ரி மந்திரம் மருத்துவரீதில் சிறந்தது தான்


                  விஞ்ஞான ரீதியில் பார்த்தாலும் இது மிகப் பெரும் உடற்பயிற்சி தான்.
விளக்கம் அடியில் இருக்கிறது.

ஓம் பூர் புவ: ஸுவ:
தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோன: ப்ரசோதயாத்


என்று ஆரம்பிக்கும் இம் மந்திரத்தில் ஏதோ சக்தி இருக்கிறது என்பதை கட்டாயம் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும். இதை முறையாக ஒரு முறை செய்து பார்த்தால் வாழ்வில் வரும் மாற்றங்களை வைத்து நீங்கள் உணரலாம்.

மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்













back to top