வணக்கம் உறவுகளே...
கெப்பர் - திமிர்
சேமம் எப்படி என இன்று கேட்கமாட்டேன் காரணம் தெரிந்திருக்கும் இந்த உலகத்திலுள்ள தமிழர் மன நிலையும் கடந்த ஓரிரு நாளில் கலங்கடிக்கப்பட்டு விட்டது. மனங்களில் புதைந்துள்ள வலிகளை எப்படிச் சொல்வது. என்னிடம் வார்த்தைகள் இல்லை. ரணங்களை விபரிக்க முடியாது அவை உணர்வுகள். மன்னியுங்கள் என்னால் எந்த இணையத்திலும் சரியாக இணைய முடியல. எங்கு பார்த்தாலும் அது தான் மறக்க நினைக்கும் அத்தனையும் மீள மீள உதைக்கிறது. தயவு செய்து மன்னியுங்கள்.
இது ஆரம்ப நாட்களில் நான் வடித்த கவிதை மீள் பதிவாக இட்டுச் செல்கிறேன்.
உன்னைத் தேடியே
என் விழிகள் தேயுதடி
வரும் பஸ்களை
எறும்பாய் மொய்ப்பதும்
வந்த அகதியிடம்
சொந்தம் தேடியலைவதுமாகிவிட்டது
அன்றொரு நாள்
உன் கொப்பர் கெப்பரில்
வரண் கேட்ட எனக்கு
முரண்பாடாய் திட்டினார்
இன்று
அவர் நாயே உன்னை
சுவர் மறைவில் புசித்து மகிழலாம்
எந்த குழியிலாவது
நொந்த உன் உடல்
பொலுத்தின் ஒன்றினுள்
உறங்கிக் கொண்டிருக்கலாம்.
உன்னுடன் என் இதயமும்
புழுக்களுக்கு இரையாகியிருக்கலாம்
உன் இதயம் இப்போதும்
என்னிடம்
பிரம்மாச்சார்யப் பூட்டிட்டு
பவுத்திரமாய் இருக்கிறது
இங்குள்ள முகாமில்
அங்குள்ள உனக்காய்
இடம் பிடித்து வைத்திருக்கிறேன்
தாடகை மகளே- நீ
தாரகை ஆகியிருந்தால்
உன் ஊரில் இடம் பார்த்து வை
சிலவேளை மீண்டு(ம்) – நான்
உனைத்தேடி வரலாம்
அங்கே ஓர் தவம் செய்வோம்
மறுபிறப்பிலாவது
தாய் தந்தையற்ற
அநாதைகளாய் பிறப்போம்
35 கருத்துகள்:
ம்ம் ......சாலப்பொருத்தம்!!
என்ன சொல்வதென்றே தெரியவில்லை ... இந்த கவிதை இன்னும் பல அங்குள்ள பலரின் உணர்வுகளை பிரதிபலிப்பதாக உள்ளது...
:'( இப்பிடி போடுறத தவிர என்னால் வேறென்றும் செய்ய முடியாது அண்ணா!!
Anna Venanda...
நாம் ஒன்றும் செய்யமுடியாதவர்கள் ஆகிவிட்டோம்...................
நமக்கும் ஒரு காலம் வரும் என்று கனவுடன் காத்திருக்க வைத்துவிட்டார்கள்...
நம்மால் முடியும் என்று நம்மாலே சொல்ல முடியவில்லை.....
நடந்தவற்றையெல்லாம் நினைக்க மனம் மறுக்கிறது நினத்தால் மனம் கோபத்தில் துடிக்கிறது.........
மீண்டும் கனவு காண்கிறேன்.......
வலிமிகு வரிகள் மனசை ஏதோ செய்கின்றது
இனி போர் வேண்டாம் என்று நாம் உரக்க கூறினாலும், நிரந்தர நீதி ஒன்றும் நமக்கு வேண்டும் அல்லவா ?
உள்ளம் துடிக்கிறது ....
நண்பா...
இழவு வீட்டில் ஆறுதல் சொல்லக்கூட தகுதியில்லாதவர்கள் நாங்கள்.கொலைகாரர்களோடு கூட்டணி போட்ட கயவர்கள் நாங்கள்.
உலகநாடுகளை உங்கள் வசமாக்க ஒரே ஒரு
உலக சினிமா எடுங்கள்.
ஆஸ்கார் அரங்கில் வெற்றி பெறச்செய்யுங்கள்.
காந்தி திரைப்படம்தான் உலகம் முழுக்க சத்தியாகிரகத்தின் வலிமையை உணரச்செய்தது.
என்கவுண்டரில் கொல்லப்பட்ட சேகுவேராவை இன்று உலகமே மாவீரன் எனக்கொண்டாடப்படுவதற்க்கு காரணம் அவரைப்பற்றி வந்த திரைப்படங்கள்.
என்ன சொல்வதென்று தெரியவில்லை.. வார்த்தையின் வலிகளை உணரமுடிகிறது..
சகோதரா, காலங்கள் நம் கோலங்களையே மற்றத்தான் செய்கின்றது, எதிர்பார்ப்புகள் சில வேளைகளில் ஏமாற்றத்தைதான் தருகிறது.....
அன்புள்ள அண்ணா உங்கள் வருத்தமும் வலியும் எனக்கும் உண்டு இதுதான் வாழ்கை போராட்டம் நமக்கு சொல்வதற்காவது உரிமை இருக்கிறது
மற்ற ஜீவராசிகளுக்கு அதுவும் இல்லை
"(survival) உயிர்பிழைப்பத்ற்காக "
அவை படும் பாடு அதையும் காணுங்கள்
உண்மையில் நம்மை விட அவை பாவம் இதை தவிர எனக்கு எப்படி ஆறுதல் சொல்வது என்றே தெரியல அண்ணா
>>அங்கே ஓர் தவம் செய்வோம்
மறுபிறப்பிலாவது
தாய் தந்தையற்ற
அநாதைகளாய் பிறப்போம்
வலி நிறைந்த வரிகள்
வலி சுமந்த வாழ்கையில்
விழி சுமந்த கண்ணீரில்
குருதி ஓடிய தேகங்கள்
உயிருக்காய் ஏங்கிய உறவுகள்
எங்கள் உங்கள் உணர்வுகளை காடுகிறது இந்த கவிதை!!! :(
இரு வலிகளை சுமந்திருக்கும் இக்கவிதைக்கு கருத்திட என்னிடம் வார்த்தைகளும் இல்லை..வழி வகையும் இல்லை...
அங்கே ஓர் தவம் செய்வோம்
மறுபிறப்பிலாவது
தாய் தந்தையற்ற
அநாதைகளாய் பிறப்போம்//
கனக்கும் கண்ணீருடனான வரிகள்.
எல்லாமே நேற்று நடந்தாய் இருக்குறது....
எல்லாமே எங்கள் விதியாகிப் போய்விட்டது..
வலி நிறந்த வரிகள்...
அருமை...
வலியின் வேதனையைப் பகிர்ந்து கொள்கிறேன் நண்பா.
:-(
Very very painful kavithai
////:'( இப்பிடி போடுறத தவிர என்னால் வேறென்றும் செய்ய முடியாது அண்ணா!!////
அதே......!
மனங்களில் புதைந்துள்ள வலிகளை எப்படிச் சொல்வது?
//எந்த குழியிலாவது
நொந்த உன் உடல்
பொலுத்தின் ஒன்றினுள்
உறங்கிக் கொண்டிருக்கலாம்.
உன்னுடன் என் இதயமும்
புழுக்களுக்கு இரையாகியிருக்கலாம்
:(
எங்கள் இதயத்தையும் புழுக்கள் தின்றது போன்றதொரு வலி, கவிதை வாசித்து முடிக்கும் போது
சொல்ல வார்த்தைகள் வரவில்லை.
ஆளுக்காள் மாறி ஆறுதல் சொல்லும் நிலையில நாம் இல்லையே..::(((((((((((((
நண்பா! அருமை!
எங்கள் உணர்வுகளை காட்டுகிறது இந்த கவிதை
வலியின் வேதனை உங்கள்
வரிகளில் தெரித்து விழுகிரது.
மனசும் கனக்கிரது.
முடியவில்லை தாங்குவதற்கு, எத்தனை துயரங்கள் !அனாதையாக பிறப்பதில் உள்ளதுயரம் வேண்டாம் நண்பா!
மச்சி, இப்போ உன் பதிவு என் டாஷ் போர்ட்டில் தெரிகிறது மச்சி.
இங்குள்ள முகாமில்
அங்குள்ள உனக்காய்
இடம் பிடித்து வைத்திருக்கிறேன்//
எங்களின் கடந்த காலங்களை அப்படியே கண் முன்னே கொண்டு வந்து நிற்கிறது உன் கவிதை. எழுதப்படாத விதியின் ஏமாற்றங்கள் நிறைந்த பயணத்தின் எச்சங்களுக்குச் சாட்சியாக இக் கவிதையும் அமைகிறது சகோ.
:(
வலிமிகு வரிகள்
:(
வலிமிகு வரிகள்
அழுகிறது என் இதயம்... அன்று உன்னாலேயே விரட்டியடிக்கப்பட்ட என் இனத்துக்காக நீ அழுதிருப்பாய் என்ற நம்பிக்கையில்
கவிதை = வலி
கவிதையில் உங்கள் மக்களின் வலி தெரிகிறது.
கருத்துரையிடுக