வியாழன், 23 ஜூன், 2011

குழந்தைகளுக்கான நுண் அறிவு வளர்க்கும்(fine movement) இலகு கருவி (உள்ளுர் கண்டுபிடிப்பு)

வணக்கம் உறவுகளே சேமம் எப்படி ?
          ஒவ்வொரு மனிதனும் தனது பிள்ளைகளை நல்ல வழியில் வளர்த்தெடுக்கவே பெரும் ஆசை கொள்வான். அனால் இன்றைய நவீன காலத்தில் கல்வி பெரும் வியாபாரமாகி விட்ட நிலையில் ஒரு சாதாரண குடிமகனால் என்ன செய்ய முடியும்.
              அதற்கு ஒரு சிறிய தீர்வாகவும் இதனை எடுத்துக் கொள்ளலாம். பெரும் பொருட்செலவுகள் எற்படாது.
தேவையான பொருட்கள்-
1 பலகை துண்டு
1 மின்கலம் battery
1 மின் குமிழ் Bulb
கடத்தி (வயர்)
வளையக் கூடிய கம்பி
1 சட்டை ஊசி (pin)

செய்முறை
படத்தில் உள்ளது போல ஒழுங்கமைத்துக் கொள்ளுங்கள். சரியான முறையில் அனைத்தையும் பொருத்திக் கொள்ளுங்கள்

        இப்போது அந்த வளையத்தை உங்கள் வலது கையால் பிடித்து வளைக்கப்பட்டுள்ள கம்பியினுள் அடி வரை கொண்டு சென்று மீள திருப்பிக் கொண்டு வர வேண்டும். வளையம் கம்பியில் படுமாக இருந்தால் மின் சுற்று முழுமையடைவதால் மின் குமிழ் எரியும் ஆள் அவுட் எப்படி விளையாட்டு பிடிச்சிருக்கா ?
             அது மட்டுமல்ல இதை இரண்டு கைகளாலும் செய்ய வேண்டும். அது தான் மிக மிக முக்கியமாகும் காரணம் மூளையின் இரண்டு சோணையறையிலும் நுண் செயற்பாட்டுக்கான (fine movement) பகுதிகள் தனித் தனியாகவே பிரிக்கப்பட்டுள்ளது.
           இதன் மூலம் மிக நுண்ணிய வேலைகளையும் விரைவாகச் செய்ய முடியும் உதாரணத்துக்கு யானையை எடுங்கள். ஒரு ஊசியை கீழே போட்டு விட்டு யானையையும் எம்மையும் போட்டிக்கு விட்டால் யானை எமக்கு முதல் தனது துதிக்கையால் எடுத்து விடும். வயது போன காலத்தில் வரும் fine tremer (தளர்வு நடுக்கம்) போன்றவற்றையும் இதன் மூலம் தடுக்கலாம்.
               முயற்சித்துப் பாருங்கள் மகத்தான மகவை உருவாக்குங்கள்.
               பலருக்கு இச் செய்தியை பரவ செய்ய வேண்டுமென்றால் கீழே உள்ள மூஞ்சிப் புத்தக (face book) சொடுக்குங்கள்.

முன்னைய இடக்கு முடக்கு கண்டுபிடிப்புகள்.

About the Author

நான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director
View all posts by admin →

Share This Post

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

40 கருத்துகள்:

தனிமரம் சொன்னது…

PAL

தனிமரம் சொன்னது…

வணக்கம் மதி பால் கோப்பி சொல்லிவிட்டு வாசிக்கப் போனால் பாதி வார்த்தையை key bord கொலை செய்து விட்டது,

மேலும் உங்கள் கண்டு பிடிப்புக்கள் புதுமையானதாக இருக்கிறது.முன்னர் நாம் இரு பற்றியை வைத்துக் கொண்டு ஒருவயரில் /ஈயப் பேப்பரில்/ பல்ப் எரியச் செய்தது ஞாபகம் வருகிறது.பல்ப் சுட்டுவிட்டது என்று ஆட்டையைப் போட்டது பழையகதைகள்.

Admin சொன்னது…

பகிர்வுக்கு நன்றிகள் நண்பா

Mahan.Thamesh சொன்னது…

பகிர்வுக்கு நன்றி அண்ணே

ஆகுலன் சொன்னது…

நல்ல தகவல்.......
என்னன்டுதான் யோசிக்கிறீங்க...

Unknown சொன்னது…

என்ன கண்டுபிடிப்பு பாஸ் இது???கரெண்ட்டு பாயாது தானே??ஹிஹி பகிர்வுக்கு நன்றிகள் !!

செங்கோவி சொன்னது…

அருமையான பதிவு சுதா..ஒரு தந்தையாக கமெண்டுகிறேன்!

Mathuran சொன்னது…

எங்கள் இளம் விஞ்ஞானி.. இளைஞர் குல திலகம் அண்ணன் மதிசுதா வாழ்க

Mathuran சொன்னது…

பாஸ்.. நீங்க அமெரிக்காவில பிறந்திருக்க வேண்டிய ஆளு.. தவறுதலா இங்க பிறந்திட்டிங்க

Mathuran சொன்னது…

எப்பிடித்தான் யோசிக்கிறீங்களோ!
புதுசு புதுசா கண்டுபிடிக்கிறீங்க பாஸ்

Mohamed Faaique சொன்னது…

இப்படியெல்லாம் யோசிக்க எந்த ஹோட்டல்’ல ரூம் போட்ரீங்க நன்பா....

மலையாளி பற்றி அறிய இதையும் படிங்க
http://faaique.blogspot.com/2011/06/blog-post_19.html

நிரூபன் சொன்னது…

மாப்ளே, அருமையான கண்டு பிடிப்பு மாப்ஸ்...

இதே மாதிரி, நாங்கள் சின்ன வயசிலை கண்காட்சிக்கு, இரு நிரல்களாக ஒரு பெட்டியினைப் பிரித்து, கேள்வி பதில் எழுதி,
ஒவ்வோர் கேள்விக்குமுரிய சரியான விடைக்கு ஒவோர் கலரில் பல்ப் எரிய வைச்சனாங்கள் மச்சி...

உனது பயனுள்ள இம் முயற்சிப் பகிர்விற்கு
வாழ்த்துக்களும் நன்றிகளும்.

இளம் விஞ்ஞானி மதிசுதா இந்தியாவுக்கு வாருங்களேன்.... எங்களுக்கும் நிறைய சொல்லி தருவீர்களே...

கூடல் பாலா சொன்னது…

வித்தியாசமான முயற்சி .....

vidivelli சொன்னது…

நல்ல பதிவு நண்பா
வாழ்த்துக்கள்.......


!!நண்பா எனது பக்கம் லெப்.கேணல் புரட்சிநிலாவின் தொடர் 3 ஓடிக்கொண்டிருக்கிறது
ஓடிவாங்கோ..........!!

test சொன்னது…

அருமை சுதா!:-)

ARV Loshan சொன்னது…

பகிர்வுக்கு நன்றி
useful info

சசிகுமார் சொன்னது…

சார் உங்களின் கண்டுபிடிப்புகள் வித்தியாசமாக உள்ளது. அதே சமயம் சுலபமாகவும் பயனுள்ளதாகவும் உள்ளது மிக்க நன்றி....

நன்றி நண்பரே..

கவி அழகன் சொன்னது…

சட்டப்படி மிக பியோசனமான கண்டுபிடிப்பு படைப்பு
இளம் சமுகத்தின் முன்னேற்றத்துக்காக சிந்திக்கும் சிறந்த சிந்தனை எழுத்தாளன் மதி சுதா வாழ்க

கவி அழகன் சொன்னது…

மெய் சிலிர்க்குது

பெயரில்லா சொன்னது…

பாஸ் சூப்பர் அறிமுகம்....தொடருங்கள் ...

பெயரில்லா சொன்னது…

இது ஒரு சூப்பர் ஹிட் பதிவு.இன்னும் கொஞ்சம் விளக்கமாக எழுதுங்கள்

Unknown சொன்னது…

இதை வளர்ந்த நாட்டில் பிறந்த ஒருத்தன் கண்டுபிடித்திருந்தால் அவனுக்குப் பெயர் விஞ்ஞானி மற்றும் பருசு, பாராட்டு என ஏராளம்.

என்ன செய்வோம் நாம்
வாழும்வரை வாழுவோம் எம்தேசத்தில்...

புதுசு, புதுசா நிறையா சொல்ரீங்க நண்பா. பலருக்கும் பயனுள்ளதகவல்களுக்கு நன்றி

பெயரில்லா சொன்னது…

நல்ல தகவல்.......
என்னன்டுதான் யோசிக்கிறீங்க...

vaalthukal...

நல்ல தகவல். பயனுள்ள பகிர்வு. நன்றி.

Muruganandan M.K. சொன்னது…

புதுசாகவும் சுலபமாகத் தயாரிக்கக் கூடியதாகவும் சொல்லியிருக்கிறீர்கள். நல்லது.

போட்டுத்தாக்குய்யா

பயனுள்ள பதிவு.
பகிர்விற்கு நன்றி.

அடி தூள் மக்கா அசத்து அசத்து....!!!

Unknown சொன்னது…

பயனுள்ள பகிர்வு நன்றி!

சுதா SJ சொன்னது…

நல்ல பயன் உள்ள அசத்தல் பதிவு பாஸ்
வாழ்த்துக்கள்

சிவகுமாரன் சொன்னது…

நன்றி. என் மகனிடம் இதை படித்து செய்து பார்க்க சொல்ல வேண்டும்

வழக்கம்போல் பயனுள்ள பதிவு.நன்றி அண்ணா.
அதுசரி எங்கே உங்கள் நகைச்சுவை பதிவு......?

பயனுள்ள பகிர்வுக்கு நன்றிகள் நண்பா


ஜனநாயகம்
http://kaviyaaran.blogspot.com/2011/07/blog-post.html

பயனுள்ள பகிர்வுக்கு நன்றிகள் நண்பா


ஜனநாயகம்
http://kaviyaaran.blogspot.com/2011/07/blog-post.html

மிகசிறந்த பதிவுகளை தாங்களின் வலைப்பூவில் கண்டேன். மிக்க மகிழ்ச்சி.... தொடரட்டும் தங்களின் பணி...... தங்களின் பதிவுகளை எமது தளத்தில் வெளியிடலாமா? என்பதனை தாங்கள் தெரிவித்தால் நலம்.

kowsy சொன்னது…

எதிர்காலம் சிறப்புற இவ்வரிகள் பயன்படும். இதுவும் ஒரு சமூகசேவையே வாழ்த்துகள்.

பார்த்தேன் இரசித்தேன் நல்ல படைப்பு.
பகிர்வுக்கு மிக்க நன்றி...
எனது முதற்ப்பாடல் என் வலைத்தளத்தில்
அறிமுகம் செய்துள்ளேன்.உங்கள் பொன்னான கருத்துகளையும் வாழ்த்துக்களையும் மிகவும்
பணிவன்போடு எதிர்பார்க்கின்றேன்.வாருங்கள்
உங்கள் வரவுக்காக காத்திருக்கின்றேன் என்றும் அன்புடன் உங்களுள் ஒருத்தியாக இந்த அம்பாளடியாள்.

மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்













back to top