உயிர் தந்ததே போதுமம்மா
உனை உருக்கித் தானே
எனக்கு ஊன் கொடுத்தாய்
அன்புத்தாயே
வறுமை தான் நமக்கு
வாழ்வென்றானபோதும்
இருள் நீக்கவெனத்தானே
எனை ஈன்றெடுத்தாய்
கடவுள் என்று பேரிருந்தும்
தான் நினைப்பதை மட்டுமே
எமக்காய் செய்வான்
உன்னால் தான்
என் நெஞ்சிலொரு
துளை ஒன்று வந்ததாய்
உலகம் சொல்லுது
அன்புத்தாயே
என் இதயம் இப்போது
இதயமாய் இல்லை
குருதிப்பாய்ச்சலில்
உன் பெயர் ஒலிப்பதால்
அது ஒரு புல்லாங்குழலாய்
உன் பெயர் மட்டுமே
தருகிறது.
(சுடர்ஒளி 2008)
9 கருத்துகள்:
உனை உருக்கித் தானே
எனக்கு ஊன் கொடுத்தாய்
அன்புத்தாயே
தம்பி!
உலகிலை உள்ள உயிர்களின் ஆக்கத்திற்கும், காப்பகத்திற்கும் முக்கிய பங்கு வகிப்பவள் தாய், இதை எங்களில் பலர் நினைப்பதில்லை, உங்க கவிதையின் வரிகள் நெஞ்சை நெகிழ வைக்கின்றன..எனது தாய் இப்போது உயிரோடில்லை ஆனால் உங்களது இந்த வரிகள் அதாவது எனது அம்மா உயிரோடு இருந்தபோது சந்தோஷமாக வைச்சிருந்தேனா என்ற சந்தேகத்தை கொடுக்கின்றன.
பாராட்டுக்கள், தொடருங்கள் உங்கள் கலைப்பயணத்தை வெற்றியுடன்.
எனக்கு முதலாவது பாராட்டு தந்தவரே என் உளப்பூர்வ நன்றிகள்
"வறுமை தான் நமக்கு
வாழ்வென்றானபோதும்
இருள் நீக்கவெனத்தானே
எனை ஈன்றெடுத்தாய்..."
நன்றி டினு... நன்றி..
தாய்மைக்கு ஈடு இணை உலகில் இல்லை பாராட்டுக்கள்.உங்கள் கலைப்பயணத்தை,வெற்றியுடன்
தொடருங்கள்.
அம்மாவிற்கு இணை எதுவும் இல்லை.
குருதிப்பாய்ச்சலில்
உன் பெயர் ஒலிப்பதால்
அது ஒரு புல்லாங்குழலாய்
உன் பெயர் மட்டுமே
தருகிறது.
அருமையான வரிகள்
அம்மா.......!வேறென்ன வேண்டும்?
நமக்காக படும் கஷ்டங்களை கூட, நம்மிடமே மறைத்து விடும் தாயன்பு, உலகில் உள்ள உன்னதமான விஷயங்ளில் முதலானது...
கருத்துரையிடுக