வியாழன், 27 மார்ச், 2014

இணைய வாக்கெடுப்புகளில் கள்ள வாக்கிடுவது எப்படி?

12:29 AM - By ம.தி.சுதா 4

வணக்கம் உறவுகளே
சேமம் எப்படி?
அண்மைய ஒரு சில நாட்களாக கிடைத்த நேரப் பொழுதை வாசிப்பிற்கும் எழத்துக்கும் செலவழித்ததால் என் வலைப்பக்கத்தை தூசு தட்டியிருக்கிறேன்.
 
வலையுலகின் ஆரம்ப காலங்களில் பதிவர்கள் பிரபலமாக்க வாக்கிடல் முறையை திரட்டிகள் அறிமுகமாக்கியிருந்தது. அக்காலத்தில் நடந்த குளறுபடிகளால் உசாரான திரட்டிகள் நுட்பமான முறையை அறிமுகப்படுத்தியது. அக்காலத்தில் தான் எமது வலையுலக அறிமுகம் ஆரம்பமானது.
ஆரம்ப காலத்தில் இதற்கான தேடலிலேயே களைத்து விழுந்து ஏமாந்திருக்கிறோம். அப்போது கண்டறிந்த விடயங்களில் ஒன்று தான் இந்த கள்ள விளையாட்டுமொன்றாகும்.
இணையத்தில் pollsnack போன்ற தளங்கள் இப்படியான வாக்கெடுப்புக்கான நிரலிகளை வைத்திருக்கின்றன. அதில் குறிப்பிட்ட சில வேட்பாள மகுடங்கள் இடப்படும். அதற்கு வாக்கிட்ட பின்னர் நீங்கள் எத்தனை தடவை அந்த தொடுப்பிற்கு சென்றாலும் வாக்கு விபரங்கள் காட்டுமே தவிர உங்களுக்கு வாக்கிட அனுமதியில்லை.
அப்படியானால் எப்படி திருட்டு வாக்கிடுவது?
வாருங்கள் சொல்கிறேன். உதாரணத்திற்கு google chrome இணைய உலாவியை எடுத்து விளக்குகிறேன்.
வாக்கிட்ட பின்னர் அதன் setting பகுதிக்கு செல்லுங்கள்.

அங்கே advance setting என்பதை சொடுக்கினால் இப்படி வரும்
அதன் பின்னர் clear browsing data என்பதை சொடுக்கினால் இப்படி வந்திருக்கும்
அதில் the past hours என்பதை சொடுக்கி வைத்திருந்தால் எமது பழைய வரலாறுகள் கடவுச் சொற்கள் அழிக்கப்படாமல் இருக்க கடந்த மணித்தியாலத்துக்குள் நாம் அடித்த கூத்துக்கள் மட்டும் அழிக்கப்படும்.

அதன் பின்னர் மற்றைய tab ல் இருக்கும் poll (voting button) ஐ reload செய்யுங்கள் அல்லது ctrl+r கொடுங்கள் மீண்டும் வாக்களிக்கலாம்.
இதை படிக்கும் போது பெரிய விசயமாக இருக்கும். அனால் செய்ய வெளிக்கிட்டால் நிமிடத்துக்கு 10 வாக்கிற்கு குறையாமல் இடலாம்.

முக்கிய குறிப்பு - தன்னிச்சையாகவே திருட்டு வாக்கிடச் செய்யக் கூடிய தானியங்கி நிரலிகளும் இருக்கிறது.

நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா

About the Author

நான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director
View all posts by admin →

Share This Post

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

4 கருத்துகள்:

Unknown சொன்னது…

யோவ்!இந்த எலெக்க்ஷன் ல கள்ள வாக்கு/ஓட்டு போடுவது எப்புடி ன்னு சொல்லுய்யா!

தனிமரம் சொன்னது…

தேர்தலில் கள்ள ஓட்டுப்போட வழியுண்டா சகோ!ஹீ நல்லா ஆய்வுதான்!

Unknown சொன்னது…

இன்றைய வீரகேசரி(இணையப் பத்திரிக்கை)யில் உங்கள் "மிச்சக் காசு" விமர்சனமும்,குறும்படமும் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.வாழ்த்துக்கள் ம.தி.சுதா!!!

Puvipavan சொன்னது…

Cookies Mattum Delete panninaa kaanum

மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்













back to top