முல்லைத்தீவின் கடற்கரையில் முதுகை மணலில் உலர்த்திக் கொண்டிருந்த சாந்தனுக்கு ஒரு வாரமாகியும், கடலில் தான் கண்ட வெளிச்ச வீழ்ச்சியை மறக்க முடியவில்லை . எல்லோரும் சொல்லிக் கொள்கிறார்கள். முல்லைத்தீவுக் கடலில் ஏதோ ஒன்று வெளிச்சத்தோடு வந்து விழுந்தது என்கிறார்கள். ஆனால் யாரும் நம்ப தயாரின்மையால் அலை போல கதையும் கரையோடு ஓய்ந்து போனது.
இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னர் தான் மலேசியாவின் MH370 காணாமல் போனது என செய்திகள் வேறு பரபரப்பாக போய்க் கொண்டிருக்கையில் இந்த கதை அமைதியாய் அமுங்கி போக ஆரம்பித்திருக்கிறது.
தலைமாட்டில் யாரோ நடக்கும் அசுமாத்தம் கேட்டதால் சற்று எம்பி பார்த்தவன் முகத்தில் சந்தேக ரேகைகள், ஆங்கிலப்படங்களில் பார்த்த பிச்சைக்காரர் போல அரை குறை தாடியுடன் ஒரு வெள்ளையன் சோர்ந்து போய் அமர்கிறான்.
அவனுக்கு தெரிந்த ஆங்கிலத்தில் வினாவினால் அவன் சொன்ன பதில் “MH370“ ல் தவறியவனாம் ஒரு வாரமாக கடலில் கிடைத்த மரக்கட்டையை பிடித்து கரையேறியதாக” சொன்னான்.
அருகில் இருந்த வீட்டில் போய் அவனுக்கு தாகசாந்தி செய்து ஆசுவாசப்படுத்திய போது பேச ஆரம்பித்தான்.
“தான் ஒரு விஞ்ஞான பேராசிரியராம். தமது விமானம் கருந்துளைக்குள் தான் போனது ” என அரை குறை தொனியில் உளறிக் கொண்டிருந்தான்.
அதை விட குளம்பிப் போயிருந்த சாந்தன் இப்போது 119 ற்கு அழைப்பெடுத்து தானும் ஏதோ உளறிக் கொண்டிருக்கிறான்.
நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா
குறிப்பு - time related theory தெரிந்தவர்கள் இதில் எத்தனை வகை உள்ளடக்கப்பட்டிருக்கிறது என சின்ன விளக்கம் தந்தால் நானும் ஒரு முடிவுக்கு வரலாம்.
நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா
குறிப்பு - time related theory தெரிந்தவர்கள் இதில் எத்தனை வகை உள்ளடக்கப்பட்டிருக்கிறது என சின்ன விளக்கம் தந்தால் நானும் ஒரு முடிவுக்கு வரலாம்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக