சனி, 28 செப்டம்பர், 2013

கவிஞர் அஸ்மினிடம் சில சந்தேகங்கள்,,,, நீங்கள் நிறை குடமா? குறை குடமா?

10:29 PM - By ம.தி.சுதா 5

எந்த ஒரு துறையை எடுத்துக் கொண்டாலும் அத்துறையில் மேலே வருவதற்கு பெரும் போட்டிகளைச் சந்திக்க வேண்டிவரும். அதிலும் எதிர் போட்டியாளனை போட்டியாளனாக மட்டும் பார்த்து போட்டியிடுபவனது வெற்றி மட்டுமே வெற்றியாகக் கருதப்படும். மற்றவைக்கெல்லாம் வேறு பெயர் கொண்டே அழைக்கப்படும்.
நான் இணையவெளிக்குள் நுழைவதற்கு முன்னமே ரசித்துப் படிக்கும் கவிஞர்களில் ஒருவராக இருப்பவர் அஸ்மினாவார். ஆனால் அண்மையில் நடந்ந்து முடிந்த அரச இசை விருது வழங்கள் விழாவின் பின்னர் அவரது பேஸ்புக்கை பார்ப்பவருக்கு பல கேள்விகள் எழலாம். எழாமலும் விடலாம் ஆனால் எனக்கெழுந்ததையே இங்கே முன்வைக்கிறேன்.
இலங்கையில் நடைபெறும் விருது வழங்கல்கள் யாவும் தகுதியானவர்களால் தான் இடம்பெறுகிறது என்ற வாதத்தை நான் இங்கு முன் வைக்க முனையவில்லை.
ஆனால் “பாம்புகள் குளிக்கும் நதி“ எனும் கவிதைத் தொகுப்பில் ஒரு விருது விழாவுக்க வந்த அனைவரையும் (நடுவர், பேச்சாளர் உட்பட) அனைவரையும் மிருகங்களோடு ஒப்பிட்டு கவி புனைந்திருந்தீர்கள் நினைவிருக்கிறதா? அதை ஓரளவு ஏற்றுக் கொண்டேன் காரணம் உங்கள் உழைப்பிற்கு சரியான ஊதியம் கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்தில் நீங்கள் எழுதியிருக்கலாம்.

ஆனால் அதன் பின்னர் இந்த வருடம் நடந்த அரச இசை விருது வழங்கல் விழா பற்றிக் குறிப்பிடும் போதும் அதே தோரணையில் குறிப்பிட்டுள்ளீர்கள். என்னிடம் இருக்கும் கேள்வி என்னவென்றால் இந்தளவு காட்டமாக இருந்து இத்தனை ஆக்கங்களில் இந்தளவு ஆதங்கத்தை வெளியிட்ட நீங்கள் ஏன் அந்தப் போட்டிக்கு பங்கு பற்றினீர்கள் என்பதே?
அப்போட்டியில் விருது பெற்றவர்கள் பற்றிக் குறிப்பிடுகையில் தகுதியற்றவர்களுடன் போட்டியிட்டதாகவும் ஒரு இடத்தில் குறிப்பிட்டுள்ளீர்கள். இப்படி சக போட்டியாளனை அவமதிக்கும் நீங்கள் எதைத் தகுதி எனக் கருதுகிறீர்கள். அந்தத் தகுதி எங்கிருந்து எப்படி வருகிறது என அறியலாமா?

இதை நான் உற்று நோக்கியமைக்கான காரணம் அவ் விருது விழாவில் முதல் விருது பெற்றது ஒரு யாழ்ப்பாணத்து மாணவன் (மதீசன் தனபாலசிங்கம்) என்பதனாலாகும். அவனுக்கு ஒரு சொல்லாவது வாழ்த்து சொல்லியிருப்பீர்களா? அல்லது ஒரு சக கவிஞருக்கு எங்காவது ஒரு இடத்தில் வாழ்த்துரைத்திருக்கிறீர்களா? இவையனைத்தையும் கடந்து எப்படி ஒருவருக்கு தகுதி கிடைக்கும்.
சரி நண்பர்கள் வட்டாரத்தில் பேசிக் கொண்ட ஒரு விடயத்தை பகிர்கிறேன் கேளுங்கள் காரணம் தாங்கள் இது பற்றி அறிந்தீர்களோ தெரியாது. இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் பாடலுக்கு தாங்கள் வரிகள் எழுதியது பற்றியதாகும்.
விஜய் ஆண்டனி அவர்கள் சிங்களப்பாடல் ஒன்றுக்கு இசையமைத்ததற்காக தமிழ் நாட்டில் பல சல சலப்பு இடம்பெற்றுக் கொண்டிருந்தது அறிந்ததே. விஜய் ஆண்டனிக்கு தன் இடத்தை தக்க வைக்க ஈழத்தோடு சேர்ந்து ஒரு பாடல் செய்ய வேண்டிய தேவையேற்பட்டது. அப்போது ஈழ அடையாளத்தைக் கொண்டு தங்களை தாங்களே அடையாளப்படுத்திக் கொண்டதாகவே பொது முகநூலில் கூட பேசிக் கொண்டார்கள்.
இப்படியான தங்களது நடத்தை கலைஞர்களுக்குள் ஆரோக்கியமானதல்ல. ஏனென்றால் இப்போது தொடர்பாடல் என்பது நொடிக்குள் நடந்தேறி முடிந்து விடுகிறது. இச் செயற்பாடுகளால் நீங்கள் என்போன்ற நல்ல ரசிகர்களை இழப்பதோடில்லாமல் பலரால் புறம்தள்ளப்படுவீர்கள்.
இனியாவது புரிந்து நடந்து கொண்டு ஆரோக்கியமான கலைஞர் உலகத்தை உருவாக்க தாங்கள் ஒரு சீனியராக பாதைகாட்டுவீர்கள் என நம்புகிறேன்.
(உங்கள் பேஸ்புக்கில் குறிப்பிட்டிருப்பேன் முன்னொரு காலத்தில் நட்பு வட்டத்தில் லைத்திருந்த நீங்கள் ஒரு உயரத்தை அடையும் போது என்னையும் வட்டத்திலிருந்து நீக்கிவிட்டீர்கள். அதன் பின்னர் தங்களுடன் நான் இணையவில்லை)


About the Author

நான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director
View all posts by admin →

Share This Post

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

5 கருத்துகள்:

Unknown சொன்னது…

இவர் கவிஞரா?அடுக்குதல் எல்லாம் நன்றாகவே இருக்கிறது.ஆனாலும்............!?

KANA VARO சொன்னது…

//சக போட்டியாளனை அவமதிக்கும் நீங்கள் எதைத் தகுதி எனக் கருதுகிறீர்கள். அந்தத் தகுதி எங்கிருந்து எப்படி வருகிறது என அறியலாமா?//

Same question?

வர்மா சொன்னது…

மிகத்துணிச்சலான பதிவு.

நெடுவாழி சொன்னது…

முதலில் இவரை நாங்கள் ஈழத் தமிழன் என்று ஏற்றுக்கொள்வதே தவறு, எத்தனையோ ஈழத்தமிழர்கள் அனுமையான கவிஞர்களாக இருக்கிறார்கள். அவர்களை முன் கொண்டுவருவோம். அருமையான பதிவு என் மனதில் இருந்ததை இந்த பதிவு வெளிக்கொண்டு வந்துள்ளது. இதனை இப்படியே விடாமல் பெரிய அளவில் கொண்டு சென்று செல்லாக்காசாக மாற்ற வேண்டும்

வேடம் போடும்
நரிகள் போல
நெறிகள் இன்றி
இருக்கும் பன்றி மேல்

துணிச்சலாய் ஒரு பகிர்வு.
வாழ்த்துக்கள்...

மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்













back to top