செவ்வாய், 25 மார்ச், 2014

Missed Call போடும் நண்பனை பழி வாங்குவது எப்படி?

9:30 PM - By ம.தி.சுதா 5

வணக்கம் உறவுகளே
சேமம் எப்படி?
இந்த பதிவானது 2011 ம் ஆண்டு நடந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து எழுதப்படுகிறது.

அக்காலம் வன்னிப்பிடியின் மீட்சிக்கு பின்னர் வெளியே தலைகாட்ட ஆரம்பித்த நேரம். அந்நேரம் wall painter ஆகாவும் வலைத்தள எழுத்தாளராகவும் காலத்தை ஓட்டிய நேரகாலமாகும்.
சில உறவுக்கார பையன்களுடன் தான் வேலைக்கு போவேன். பின்னர் இரவு வந்து இணையப்பயணம் அதன் பிறகு தூக்கம். அதுவும் oil paint (enamal) அடித்தால் மறு நாள் கண் ரெண்டும் வெளியே வந்து நிற்கும்.
(இதெல்லாம் சுய புராணம் போல இருக்கும் ஆனால் இதை சொல்வதற்கான காரணம் அந் நண்பனுக்கு இப்படி ஒரு துரோகம் செய்ததற்கு காரணம் பயில வேண்டும் அல்லவா)
அப்படி படுக்கும் நேரம், சாமம் கடந்த பின்னர் ஒரு தொலைபேசி அழைப்பு வரும் எழும்பி பார்தால் அழைப்பு துண்டிக்கப்பட்டு விடும். அதையும் விட கேவலமாக நித்திரை வெறியில் கைப்பேசியை எடுத்து காதில் வைத்தால் இலங்கை தனியார் வானொலி பாணியில் அன்றைய செய்திகள் அனைத்தையும் சொல்லி முடிப்பான்.
எத்தனையோ நாள் சொல்லி, திட்டி, அடித்து எது செய்தும் வேலைக்கு ஆகவில்லை. ஒரு நாள் நானும், கஜனும், சிந்துவும், சீலனும் என்ன செய்தோம் என்றால் ஒரு விடயமாக யாழ்ப்பாணம் போய்விட்டு மோட்டர் சைக்கிளில் வந்து கொண்டிருந்தோம் அப்போது தான் அந்த ஐடியா உதித்தது.
படத்தை பாருங்கள் தெரியும்.
வல்லை சந்தியில் இருக்கும் பேருந்து தரிப்பு நிலையத்தில் இப்படி எழுதித் தொலைத்தோம். மாஞ்சான் என்றால் உள் ஊர் பாசையில் விபச்சாரி என அர்த்தம். அதன் பிறகு தானாகவே வந்து சொல்வான் “கண்டபடி போன் வருகுதடா ஆரோ ஒரு பெட்டையின் பேரை சொல்லி தப்பாக கேட்கிறாங்கள்” 4 பேரும் மனதுக்குள் சிரித்துக் கொள்வோம். அதன் பிறகு சொல்லவா வேண்டும் கொஞ்ச நாள் தொலைபேசியை அணைத்து வைத்துக் கொண்டான்.


சரி இப்போது எங்கள் விடுப்புக்காரர் மனதுகளில் அந்த விடுகாலி யார் என்ற கேள்வி வருமே. என் திரைக்குழுவில் இருக்கும் ஒரு அர்ப்பணிப்புள்ள நடிகன் ஒருவன் தான் அது. கரன் என்பது அவன் பெயர். எனக்கு பிரான்சில் விருது பெற்றுக் கொடுத்த “சுவர் தேடும் சித்திரம்“ பாடலிலும், படத்தொகுப்பில் இருக்கும் “தாத்தா“ குறும்படத்திலும் முக்கிய பாத்திரமாக நடித்திருக்கிறான்.



நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா

About the Author

நான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director
View all posts by admin →

Share This Post

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

5 கருத்துகள்:

ஆத்மா சொன்னது…

எங்களுக்கெல்லாம் missed call கொடுக்கவே மாட்டாங்க...
ஏன்னா எல்லோருக்கும் நாங்கதான் missed call கொடுத்துக்கொண்டே இருப்போம்...

மாஞ்சன்... அதுசரி...

Unknown சொன்னது…

வணக்கம்,சார்!நல்லா இருக்கீங்களா,சார்?நான் நல்லா இருக்கேன்,சார்!(நல்ல வேள,'பிரான்ஸ்' ல இருக்கிறன்,ஹ!ஹ!!ஹா!!!)

தனிமரம் சொன்னது…

சில உறவுக்கார பையன்களுடன் தான் வேலைக்கு போவேன். பின்னர் இரவு வந்து இணையப்பயணம் அதன் பிறகு தூக்கம். அதுவும் oil paint (enamal) அடித்தால் மறு நாள் கண் ரெண்டும் வெளியே வந்து நிற்கும்./அந்த வலி இன்னும் பலர் அறியாத உள்குத்து சகோ!ஹீ அனுபவம் அப்படி என்க்கு!ப்திவு போல் மிஸ்கோல் எல்லாத்துக்கும் நான் தான் காசு கொடுக்க வேண்டும்!தொழில் அதிகாரி ஆச்சே!ம்ம்

இப்படி ஒரு வழி இருக்கா...? ஹா... ஹா...

மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்













back to top