வணக்கம் உறவுகளே
சேமம் எப்படி?
நீண்ட நாட்களின் பின்னர் வலையமைப்புக்கள் பற்றி எழுதுகின்றேன். இதற்கு முன்னர் நான் எழுதிய ஆக்கங்களின் தொடுப்பை அடியில் இடுகிறேன்.
சரி விடயப்பரப்புக்குள் நுழைவோம் வாருங்கள்.
கடந்த சில நாட்களாக யாழ் நகரம் எங்கும் வீதியால் போகையில் யாராவது ஒரு பெண் பிள்ளை குறுக்கே திடீரென முளைத்து மோட்டார் சைக்கிளை மறிக்கிறது. (பொலிஸ் கூட அப்படி மறிப்பதில்லை)
என்னடா என்று பார்த்தால் புதிய வகை பிற்கொடுப்பனவு இணைப்புக்கான கட்டாயப்படுத்திய விளம்பரத் திட்டமே அதுவாகும்.
அதில் வருபவர்களுக்கு நாம் விளக்கம் கொடுக்க வேண்டியிருக்கிறது. “தங்கச்சி என்னிடம் இருப்பது blaster அதில் 1000 நிமிசம் மிச்சம் மிச்சமாக இருக்கிறது“ என்றால் உங்கள் வீட்டுக்காரருக்கு இதை வாங்கிக் கொடுங்கள் என்று கடுப்பேத்துகிறார்கள்.
பிற்கொடுப்பனவு இணைப்புக்கு பிற்பாடான சிக்கல்களை அறியாமல் மக்கள் அள்ளிக்கட்டி வாங்குகிறார்கள்.
வாங்குவது தப்பென்றோ அல்லது அவர்கள் திட்டம் தவறானதென்றோ நான் சொல்ல வரவில்லை ஆனால் பிற்கொடுப்பனவுக்கு அடிமையாதலில் உள்ள சிக்கலை சொல்ல வரும்புகிறேன்.
அத்திட்டத்தின் படி மாதம் 100 நிமிடம் இலவசம் அதற்கு 100 ரூபாயும் அரச வரிகளும் உள்ளடங்கும் (கிட்டத்தட்ட இது தான் முற்கொடுப்பனவு இணைப்புக்கும் செலவாகும்)
ஆனால் அவர்கள் முதல் 6 மாதத்திற்கும் அந்த 100 ரூபாய்க்கு 200 நிமிடத்தை வாரித் தருகிறார்கள். இருந்தாலும் பிற்கொடுப்பனவில் உள்ள சிக்கல் யாரும் சரியாக அவ்வளவு நேரத்தையும் பாவிப்பதில்லை அதே போல பெரும்பாலானவர்கள் தரப்படும் நேரத்தைக் கடந்ததும் தெரியாமல் பாவிப்பவர்கள். இதனால் வலையமைப்புக்கு மறை முக இலாபமே ஏற்படுகின்றது.
அதே போல பல மாதாந்த அடிப்படையிலான கட்டணச் சலுகைகள் முற்கொடுப்பனவுக்கும் பிற்கொடுப்பனவுக்கும் வேறுபட்டது. உதாரணத்திற்கு எமக்கு அழைப்பவர் பாடல் கேட்பதற்கான முற்கொடுப்பனவு மாதக் கட்டணம் 39 ரூபாய் ஆனால் அதே பிளஸ்டரில் என்றால் 107 ரூபாய் ஆகும் இது கூடத் தெரியாமல் தான் இன்றும் பலர் பாவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அதை விட இந்த நெட்வேர்க்காரர்களிடம் பெரிய சிக்கல் ஒன்றிருக்கிறது. முற்கொடுப்பனவு இணைப்பென்றால் அடையாள அட்டை இலக்கத்தை அடிப்படையாக வைத்தெடுத்தாலும் தேவையில்லை எனில் தூக்கி எறிந்து விட்டுப் போகலாம். ஆனால் பிற்கொடுப்பனவு இணைப்பானது உங்கள் அடையாள அட்டை இலக்கத்தை அடிப்படையாகக் கொண்டதால் நீங்கள் இடையில் கை விட்டாலும் எத்தனை வருடம் கடந்த பின்னரும் அதே அடையாள அட்டையுடன் இன்னொரு இணைப்புக்கு போய் நின்றால் காசை பிடுங் வைத்து விடும்.
உதாரணத்துக்கு இலங்கையில் சரியான வாடிக்கையாளர் சேவை செய்யாமல் இயங்கி கை மாறிய வலையமைப்பில் ஒன்றாக சண்ரெல் விளங்குகின்றது. அதன் குழறுபடிகளால் அப்படியே அதைக் கைவிட்ட பலர் இருக்கிறார்கள். ஆனால் அதை வாங்கிய நெட் வேர் டயலொக் என்பதால் ஏற்கனவே டயலொக்கில் அதே அடையாள அட்டை இலக்கத்துடன் இருப்பவர்களுக்கு 5 ஆயிரம் 6 ஆயிரம் என பற்றுச் சீட்டுக்கள் அனுப்பப்படுவதுடன் பணம் கட்டுமாறு அறிவுறுத்தவுமபடுகிறார்கள்.
இன்று யோசிக்காமல் அந்த 200 நிமிடத்துக்காக வாங்கும் நீங்கள் நாளை தேவையில்லை என தூக்கி எறிந்து விட்டுப் போனாலும் உங்கள் அடையாள அட்டை இலக்கம் உங்களை துரத்திக் கொண்டே இருக்கும். இது உங்களுக்குத் தேவையா?
ஏதோ என் மனதில் பட்டதை சொல்கிறேன் சிந்தித்து தங்கள் தேவைக்கு ஏற்றதாக வாங்கிப் பயன்படுத்துங்கள் அவர்களின் வற்புறுத்தலுக்காக வாங்கி விட்டு முகட்டைப்பார்த்து முழிக்காதீர்கள்.
நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா
பழைய பதிவுகள்
5 கருத்துகள்:
ஐ..ரொம்ப நாளைக்கப்புறம் சுடுசோறு எனக்காக?!!!
பயன்மிக்க பதிவு அண்ணா.கடந்த 5 வருடமாக பிற்கொடுப்பனவு கட்டண முறையை பாவித்து வருகிறேன்.இதுவரை இக்கட்டண முறைமை பற்றி முழுமையாக அறிந்திருக்கவில்லை அண்ணா.இது பற்றிய மேலதிக விளக்கங்களுக்கு தங்களை தனிமடலில் சந்திக்கிறேன்
வணக்கம்,ம.தி.சுதா!நலமா?///நல்ல விடயம்,மாட்டிய பின் முழிக்காமல்...................!///இப்ப,சுடு சோறோ குடுக்குறியள்?
நல்லதொரு பகிர்வு...
வாழ்த்துக்கள்...
ஆமா அண்ணா, இப்படி என் நண்பர்கள் பலரும் வாங்கி ஏமாற்றமைடைந்திருக்கிறார்கள்.
விற்பனை பிரதிநிதிகள் சொல்லி விற்பனை செய்யும் பாதி விடயங்கள் பொய்யானவை. அவர்கள் தமது இலக்கை பூர்த்தி செய்வதற்காக இல்லாத சலுகைகளை எல்லாம் அள்ளிக்கட்டிவிட்டு சிம்கார்ட்டை தந்துவிடுகிரார்கள். நல்லதோர் பதிவு :)
கருத்துரையிடுக