ஞாயிறு, 27 மே, 2012

வன்னி மாணவரின் உளவியல் நிலை பாகம் -1 (ஒலிவடிவம்)

AM 11:47 - By ம.தி.சுதா 11

வணக்கம் உறவுகளே சேமம் எப்படி?

இன்றைய பதிவில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நான் சந்தித்த வன்னி மாணவன் ஒருவனைப்பற்றி எழுதுகிறேன். அவனது தனிப்பட்ட விடயமாகையால் அவனது பெயரையோ, படத்தையோ, பாடசாலையையோ குறிப்பிடவில்லை. ஆனால் இறுதியில் அவனுடனான ஒலிவடிவத்தை இணைத்துள்ளேன்.

உளவியலில் ஒரு விடயம் இருக்கிறது. எமக்கு ஏற்பட்ட தாக்கமானது உடனே வெளிக்காட்டப்படாவிடினும் பல ஆண்டுகளின் பின்னரும் அவரை மன நோயாளியாக்கலாம். இதற்கு வயதெல்லை என்பதே இல்லை.
இந்தத் தாக்கத்திற்குத் தான் போரால் பாதிக்பட்ட பல மாணவர்கள் ஆளாகியிருக்கிறார்கள். இந்த வகையை மருத்துவர்களும் உளவியலாளர்களும் PTSD (post trumetic stress disorder) என அழைப்பார்கள்.
நான் சந்தித்த மாணவன் தற்போது 7 ம் தரம் கற்கிறான். இவனுக்கு போர்க்காலத்தில் ஏற்பட்ட பாதிப்பு என்னவென்றால் இவன் கண் முன்னாலேயே தாயார் ஷெல் வீச்சால் இறந்திருக்கிறார், தங்கைக்கு ஒரு கண் தெரியாது, இவனுக்கும் ஒரு சன்னம் உடலில் இருக்கிறது. தந்தையார் மறுமணம் செய்து கொண்டாலும் எந்தக் குறையுமில்லாமலே இவர்களைப் பராமரித்து வருகிறார்.
நான் சந்திக்கச் சென்ற வேளை இவனது தங்கையை கண் சத்திரசிகிச்சைக்கான கிளினிக் ஒன்றுக்குக் காட்டுவதற்கு கொழும்புக்கு அழைத்துச் சென்றிருந்தார்.
இவனுக்கு தற்போது உள்ள பிரச்சனை ஒரு வித பயம் மற்றும் கூச்ச சுபாவமாகும் பெண்களைக் கண்டால் ஒதுங்கி நடக்கிறான். இவனது பாலியல் மாற்றம் காரணமாக இருக்கலாம் என பலர் கருதலாம் ஆனால் அவன் மனநிலை அதனுடன் சம்பந்தப்பட்டதாக இல்லை.
ஆனால் போர் முடிந்து இதுவரை காலமும் அவனில் இப்படியான மாற்றம் இல்லையென்றே அயலவரும் கூறுகிறார்கள்.
இது வெளித் தெரிந்த ஒருவர் தான் ஆனால் பலர் இப்படி இருக்கலாம். இதில் இன்னும் கவனிக்க வேண்டிய விடயம் என்னவென்றால் இவனது பராமரிப்பாளர்கள் இவனுக்கு பேய் பிடித்திருப்பதாகவும் அதை விரட்ட ஆலயம் கொண்டு செல்ல வெளிக்கிட்டார்கள். அதனால் தான் நானும் எனது சகோதரியும் நேரடியாகத் தலையிட வேண்டி வந்தது.

இது சம்பந்தமாக உளவளத்துணையில் ஈடுபட்டிருக்கும் அமைப்புக்கள் சற்றுக் கவனம் எடுக்க வேண்டும். என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். நான் கற்றிருந்த அனர்த்த முகாமைத்துவம் மற்றும் உளவியல் கற்கை நெறியைக் கொண்டு முடிந்தவரை உதவி செய்து வருகிறேன். இதற்கு முனைப்புக்காட்டுபவர்களுடன் இணைந்து செயற்படத் தயாராகவே இருக்கிறேன்.


நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா


எனது கடந்த சில பதிவுகளை இந்த newjaffna தளமானது தொடர்ந்து திருடி வருகிறது. ஆனால் 4tamilmedia போன்ற தளங்கள் எனது பதிவை அனுமதி பெற்று 4 நாட்களின் பின்னர் தளத் தொடுப்புடன் பிரசுரிக்கிறார்கள். அதை நான் மிகவும் நாகாரீகமான செயலாகவே கருதுகிறேன். பிரான்சில் வசித்து வரும் newjaffna தள ஓணர் சந்திரதேவன் பிரசாத் அவர்களே நீங்கள் ஊடகமாகச் செயற்படாவிட்டாலும் மற்றவன் வியர்வைக்கு மதிப்புக் கொடுங்கள். மற்றவன் வியர்வையில் தங்களுக்கு அட்சென்ஸ் மூலம் கிடைக்கும் அற்ப காசை பெற்றுக் கொண்டு தரம் தாழ்ந்து கொள்ளாதீர்கள்.

About the Author

நான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director
View all posts by admin →

Share This Post

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

11 கருத்துகள்:

MARI The Great சொன்னது…

பதிவுகளை அனுமதியின்று திருடுவோர் பதிவை எழுதியவரின் உழைப்பை கொஞ்சமாவது நினைத்து பார்க்க வேண்டும்.., பார்ப்பார்களா சகோ ..? :(

Yoga.S. சொன்னது…

வணக்கம்,சுதா!உங்கள் அரிய பணி தொடர வாழ்த்துக்கள்.அந்த மனிதன்?!ஆட்டைக் கடித்து,மாட்டைக் கடித்து இப்போது உங்களையும் கடிக்க ஆரம்பித்து விட்டாரா?த்தூ!!!!!!!!!!!!!!!!!

தனிமரம் சொன்னது…

பணியைத் தொடருங்கள் சகோ! திருட்டு என்னத்தைச் சொல்ல!ம்ம்ம்

பெயரில்லா சொன்னது…

ஈழத்து இலக்கியம்: ஈழத்தை மையப்படுத்தி வெளிவந்த இலக்கியம் சார்ந்த படைப்புக்கள் உண்மைச் சம்பவங்கள் இப்பகுதியில் திரட்டப்படவுள்ளது. எனவே நீங்கள் படைத்த அல்லது சுவைத்த அவ்வாறான பதிவுகளை கூகிள்சிறியில் இணைக்கும்படி தயவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

Athisaya சொன்னது…

நல்லதொரு பணி அண்ணா..ஒருவனின் உடல் நோயை தீர்பதிலும் மிக உன்னதமானது அவரின் மனதை சாந்திப்படுத்தி சுகப்படுத்துவது...!தொடருங்கள் அண்ணா..!

Athisaya சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
K சொன்னது…

அந்த மாணவன் போல எத்தனை மாணவர்கள்?? எவ்வளவு கொடுமைகள்? நினைத்தால் துன்பம் சுதா

நல்லதொரு முயற்சி.இந்த முயற்சியில் வெற்றி பெற்று தங்கள் பணி தொடர என் வாழ்த்துக்கள்.

Gobinath சொன்னது…

எங்கள் பணி அற்புதமானது. இதே போல வீட்டுக்கு வீடு பிள்ளைகள் இருந்துகொண்டிருக்கிறார்கள்.

newjaffnaக்கு என்னத்தை சொல்லுறது.
உங்கட http://www.mathisutha.com/2011/10/tamilcnn.html

இந்தப்பதிவையும் போடட்டுமே.

உங்கள் பணி தொடரட்டும்.
நமது எண்ணங்களை எழுத்தாக்குகிறோம்... அதையும் திருடுபவர்களை என்ன சொல்வது...

MR.H.M.Rifkhan சொன்னது…

நான் ஒரு உளவியல் மாணவன் சுதா எனக்கு பிரச்சனை விலகுகிறது எனவே நான் உதவுஹிறேன்

மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்













back to top