வணக்கம் உறவுகளே
சேமம் எப்படி?
நீண்ட நாட்களின் பின்னர் தொழில் நுட்பப் பதிவு ஒன்றுடன் சந்திக்கின்றேன்.
நேற்று முழுவதும் என்னால் இணைத்தில் தமிழில் தட்டச்சிட முடியாத குழப்பம் ஏற்பட்டது.
இணையத்தில் தமிழில் தட்டச்சிட இலகுவான மென்பொருளாக நாம் பயன்படுத்துவது nhm writter ஆகும். இதில் இணையத்தில் தட்டச்சு செய்து விட்டு ஒத்தி ஒட்டும் (copy paste) விளையாட்டெல்லாம் செய்யத் தேவையில்லை எங்கு தட்டச்சிடவேண்டுமோ அங்கேயே தட்டச்சிடலாம். இதுபற்றியும் இதை நிறுவுவது பற்றியும் 2 1/2 வருடங்களுக்கு முதல் எழுதியிருந்தேன் அதை படிக்க இங்கே செல்லுங்கள்.
தமிழுக்காக ஒரு தமிழனால் முடிந்த உதவி (இலகு தட்டச்சு உதவி)
இப்போது தோன்றியுள்ள பிரச்சனை என்னவென்றால் avg anti virus பாவிப்பவர்களுக்கு அதன் புதிய தரவேற்றம் ஆனது சிக்கலைக் கொடுத்துள்ளது. nhm writter ல் உள்ள கோப்பு ஒன்றை trojen virus என அடையாளம் காட்டி அதை இயங்க விடாமல் தடுக்கிறது.
ஆனால் அதற்கும் தீர்வு இருக்கிறதா என குழம்பிப் போய் பார்த்தால் அவர்கள் தளத்தில் புதிய தரவேற்றத்தின் மூலம் எமது பிரச்சனைக்கு தீர்வு தந்திருக்கிறார்கள். ஆகவே கீழே உள்ள தொடுப்பில் உள்ள உரலுக்கு சென்று தரவிறக்கி அதை நிறுவிப் பயன்படுத்துங்கள்.
http://software.nhm.in/products/writer
மீண்டும் உங்கள் விரல்கள் தமிழோடு மொழி பேசட்டும்
நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா












.jpg)
.jpg)
.jpg)
.jpg)





















