Featured Articles
All Stories

செவ்வாய், 1 மே, 2012

பதிவர்களின் இஸ்லாமிய வெறுப்புக்கு காரணம் என்ன?-ஒரு சமகால அலசல்

முற்குறிப்பு - இப்பதிவானது மதவெறி பிடித்தலையும் சில இஸ்லாமிய வெறியர்களுக்காகவே எழுதப்படுகிறது. இதை வைத்துக் கொண்டு நான் ஒரு மதவாதி என யாரும் நினைத்துக் கொண்டால் நான் பொறுப்பல்ல நானும் ஒரு மதவாதி தான். எனது மதமானது மதங்களை அழிக்கும் மதமாகும்.

உலகப்படைப்பானது யாரால் இடம்பெற்றது என பல்வேறு கருத்துக்களால் மனிதர்களானவர்கள் மூளைச் சலவை செய்யப்பட்டு திக்கித் திணறிக் கொண்டிருக்கிறார்கள். இயற்கையின் சக்கரத்தில் காலநிலை மாறலில் ஏற்படும் புவிமாற்றமே பல மதவாதிகளுக்கு மதப் பிரச்சாரத்திற்கு தூண்டு கோலாக அமைந்து விடுகிறது. இப்பதிவானது சில இஸ்லாமியபதிவர்களின் மிலெச்சத்தனமான மதவாதத் தாக்குதலாலேயே இடப்படுகிறது.
இதற்கு அவர்கள் ஒரு கேள்வியை எழுப்பலாம். மற்ற மதத்தைப் பற்றி கதைக்க எவனுக்கும் தகுதி இல்லையா? எனலாம். மதம் என்பது அவரவர் தனிப்பட்ட சுதந்திரம் அதை யார் மேலும் திணிக்க முடியாது. தனது பிட்டத்தை ஒழுங்காக கழுவும் ஒருவனால் மட்டுமே மற்றவர் பிட்டமணம் பற்றி கதைக்க முடியும்.
இந்த கால ஓட்டத்திற்கான முதல் தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டது சகோதரி ஆமினா முகமட்டிடம் இருந்து தான்.
ஆதாரம்-
அதன் பின்னர் அவருக்கு பதில் அழிக்கையில் பலர் தெரிவித்திருந்தோம் இப்படி நீங்கள் கூறியது தப்பில்லை ஆனால் அது எப்போது உண்மையென்றால் நீங்கள் உங்கள் மத ஓட்டை பற்றியும் கூறியிருந்தால் இது சரி. உங்களுகு இதற்கே குமட்டல் வந்தால் நபியின் 10 திருமண வரலாறையும் கேட்டவனுக்கு குடல் முழுக்க அல்லவா வெளியே வரணும்.
எப்படி இருக்கிறது பாருங்கள் இவர்களது மதப்பிரச்சாரம். இப்படி இடுவார்கள் அப்புறம் யாராவது தட்டிக் கேட்கப் போய் மோட்டுக் கேள்வி கேட்டால். ஒரு இறை தூதர் வருவார் வந்து கேட்பார் “உங்களுடன் சகோதரியாக பழகியவரிடம் இப்படியா நடப்பது” என்பார். சகோதரியாக பழகியவர் என்பதற்காக எல்லாத்தையும் வழி மொழிய வேண்டிய அவசியம் இல்லையே.

Aashiq Ahamed சகோ ப்ளீஸ், உங்கள் வாதத்தில் சிறிதும் லாஜிக் இல்லை. உங்களுக்கு சற்றே ஓய்வு தேவை என்று நினைக்கின்றேன். எங்கள் மார்க்கத்தில் நடக்கும் மூட நம்பிக்கைகளை எதிர்த்து போராடி தான் இது வரை வந்துள்ளோம் என்று கூறுகின்றேன்.
இதை எத்தனை பேரால் நம்ப முடிகிறது. நீங்கள் ஏதாவது கேட்டால் கருணாநிதி பதில் சொல்வது போல 10 சம்மந்தமே இல்லாத லிங்கை கொண்டு வந்து கொடுப்பார்கள்.
திரு சுவனப்பிரியன் அவர்கள் நித்தியானந்தவை இந்து மதத்தோடு திரிபுபடுத்தி எழுதியிருந்தார். அதன் தாக்கத்தை மதுரன் தெளிவாக விபரித்திருந்தான் தொடுப்பு கடைசியில் தருகிறேன். ஒற்றை ரஞ்சிதாவை தொட்டது தான் இந்தளவு பிரச்சனை என்றால். நபி அவர்கள் 10 பேரை தொட்டதற்கு உங்கள் மதம் என்ன செய்ய வேண்டும்.
1.25 ஆவது வயதில் 40 வயது கதியா எனும் பணக்கார விதவையை திருமணம் செய்தார்.
2.கத்யாவின் மரணத்திற்கு பின்பு 50 வயதான சௌதா பிந்த் சமா எனும் மற்றுமொருமொரு விதவையை முகமது திருமணம் செய்தார்.
3.அபு பக்கரின் மகள் அயிஷாவை முகமது நபி திருமணம் செய்தான். அப்பொழுது அயிஷாவினுடைய வயது 6.
4.ஹவ்சா பிந்த் உமர் அடுத்து இவர் மணந்த பெண்ணாவர்.. முகமது இவளை திருமணம் செய்யும் பொழுது இவளுக்கு வயது 20, முகமதுக்கு 56.
5.சைனாப் பிந்த் குசைமா. இவளுடைய கணவன் கொலை செய்யப்பட்டதற்கு பின்பு, முகமதுவை திருமணம் செய்து 8 மாதத்திற்கு பின்பு இவள் இறந்தாள்.
6.போரில் உம் சலாமா ஹிந்த் பிந்த் அபி உமயா எனும் பெண்ணுடைய கணவன் இறந்ததும் இவளும் முகமதை திருமணம் செய்து கொண்டாள். திருமணம் செய்யும் சமயம் இவளுடைய வயது 29.
7.20 வயது யுவேரியா பிந்த் ஹரித்வையும் முகமது நபி திருமணம் திருமணம் செய்தார். அப்பொழுது முகமது நபிக்கு 58 வயது. இவளுடைய தந்தையை முகமது தாக்கி, இவளை சிறைப்பிடித்து திருமணம் செய்தார்.
8.உம் ஹபிபா ரம்லா 35 வயதாக இருக்கையில் 60 வயதான முகமது இவளை திருமணம் செய்து கொண்டான். இவள் அபு சுயிபானுடைய மகள். இவன் முகமதுடைய பெரிய எதிரி.
9.சபியா பிந்த் ஹீயாய் வயது 17 ஆக இருக்கையில் 60 வயதான முகமது இவளை திருமணம் செய்து கொண்டார். இவளுடைய கணவன் முகமதினுடைய ஆட்களினாலே கொல்லப்பட்டான். முகமதுவின் மரணத்திற்கு பின்பு இவள் விதவைவாயாகவே வாழ்ந்து தன்னுடைய 60 ஆவது வயதில் இறந்தாள்.
10.மைமுனா பிந்த் அல் ஹரித் - முகமது மணமுடித்த பத்தாவது பெண். இவர்பற்றிய மேலதிக விபரங்களை அறியமுடியவில்லை..
      
இதை விடவா நித்தியானந்தா மோசமாக செய்து விட்டார் (நான் நித்தியானந்தாவுக்கு வக்காளத்து வாங்குவதாக யாரும் நினைக்க வேண்டாம இது ஒரு உதாரண ஒப்பீடு மட்டுமே.) பணத்துக்காக இத்தனை விதவைகளை மணம் முடித்தவரையா மற்ற மானிடர் பின்பற்ற வேண்டும்.

ஆதனால்,ஹிந்துக்கள், இனியும் கல்கி அவதாரத்துக்காக காத்திராமல், ஆயிரத்து நானூறு வருடங்களுக்கு முன்பு, இவ்வுலகில் உதித்து, இறைத்தூதை எத்தி வைத்து, வாழ்வின் இறுதிவரை இறைபணியாற்றிய இறைவனின் கடைசி தூதரை ஏற்று இஸ்லாத்தைத் தழுவ வேண்டும்.

எவ்வளவு ஒரு மடத்தனமான பிரச்சாரம் பாருங்கள். அத்துடன் கல்கி தான் இந்துக்களின் முழு முதற்கடவுள் என்பது தான் இவர்களது நம்பிக்கை வேறு. இவரிடம் நான் கேட்டுக் கொள்கிறேன். நான் உங்கள் மதத்திற்கு வரத் தயார் ஆனால் எனக்கும் 10 கலியாணம் செய்து தருவீர்களா?

இவர்களிடம் வாதிடப் போனால் என்ன நடக்கும் தெரியுமா. யாராவது ஒரு பெண் வந்தால் சரி இப்படியான வாதத்தைத் தான் திசை திருப்புவார்கள்.

Siraj Mohamed என்ன சுஜிதா. நீங்கள் சொல்வது போல் வைத்துக்கொள்வோம்.
உங்கள் தங்கையை ஒருவன் கற்பழித்து கொலை செய்துவிட்டான் என்று வைப்போம். மன்னிப்பின் மாணிக்கமல்லவா நீங்கள்.... மன்னிப்பீரோ....... இல்லை கற்பிழப்புக்கு நீதிமன்றம் மூலமாக பணம் பெறுவீரோ...

 இவர்களது மதவாதத்திற்காக Faris Bin Gafoor  என்ற மத ஒப்பீட்டியல் மாணவன் என்று ஒருவரை களமிறக்கினார்கள். அவர்
Director(student) at National Film Corporation of Sri Lanka இருப்பதுடன் ICBT Campus ல் கல்வி கற்று வருகிறாராம். அவரது கருத்தின்படி எங்களை அது படித்திய இது படித்தியா எனக் கேள்வி கேட்டார். நான் கேட்டேன் குர் ஆனில் அன்பைப் போதிக்கும் ஒரு வசனம் தாருங்கள் என்றேன். ஏதோ இலக்கத்தைத் தருகிறார். போதாத குறைக்கு தான் இருக்கு, யசூர் போன்ற நான்மறைகளைக் கற்ற ஒருவனாம். அதிலிருந்து இஸ்லாம் தான் சிறந்ததாம். எவ்வளவு மற்றவனை மடையானாக்குகிறார்கள். நான் மறையை முனிவர்களைத் தவிர யாருமே கற்றதாக புராணங்கள் சொல்லவில்லை.
போதாத குறைக்கு சிராஜ் ஒரு முறை தன் பதிவில் குறிப்பிட்டிருந்தார். ஈழம் ஈழம் எனக் கத்துவோர் யாராவது ஒரு ஈழ விதவைப் பெண்ணுக்கு வாழ்வளிப்பீர்களா என்கிறார். (படங்கள் அதிகமாகையால் அந்த ஸ்கிரீன் சொட்டை தரவில்லை தேவைப்பட்டால் தருகிறேன்). நிச்சயமாக ஆனால் அதற்கு முன் உங்களிடம் ஒரு கேள்வி. நீங்கள் சட்டப்படி 5 மணம் செய்யலாம் அதனால் 4 எய்ட்ஸ் பெண்ணுக்கு வாழ்வளியுங்கள் நாங்களும் தங்கள் கேள்விப்படியே நடக்கிறோம். காரணம் உங்கள் நபி பணத்துக்காகத் தானே இத்தனை விதவைகளை மணம் முடித்திருக்கிறார்.

தனியே வாதங்களில் மட்டும் ஈடுபட்டு வந்த நான் இடும் முதாலாவது எதிர்ப்புப் பதிவு இது தான். உங்களால் மற்றவர் மதம் எப்படிச் சாடப்படுகிறதோ அதே போல் உங்கள் மதமும் எம்மால் சாடப்படும். நீங்கள் விட்ட தவறு என்னவெனில் ஒரு இந்து வெறியனுடனோ அல்லது கிறிஸ்தவ வெறியனுடனோ மோதியிருக்கலாம் ஏனெனில் அவன் தனது மதம் தவிர்ந்த  ஏனைய எதையும் படிக்கமாட்டான். ஆனால் மதத்தை எதிர்க்கும் வெறியர்களோடு மோதினால் இது தான் கதி. அது முடிவல்ல ஆரம்பம்..

நன்றிச் செதுக்கலுடன்
மத எதிர்ப்பு வெறியன்
ம.தி.சுதா

பதிவுலகத்தில் இவர்கள் நடத்தும் கூட்டாட்சிக்கான ஆதாரம் இதோ தமிழ்மணத்தில் உலாவும் போலி ஐடிகள் ; அம்பலமான குட்டு

விரைவில் - கனடா தேசத்தில் அல்லா செய்த கொடுரப் படுகொலை (ஒரு கிரைம் உண்மைச் சம்பவம்)
10:46 PM - By ம.தி.சுதா 40

வெள்ளி, 27 ஏப்ரல், 2012

தி.மு.க தொண்டர்களுக்கும் அபி அப்பாவுக்கும் ஒரு ஈழத்தமிழனின் சீற்ற மடல்

தமிழ் நாட்டில் பிறந்த ஒரு தமிழனாக தங்களை மதிக்கும் சுதா எழுதிக் கொள்வது...
நாம் இழி நிலையில் இருப்பதாக நீங்கள் கருதினாலும் தன்மானத்தை தாங்கியிருப்பதால் நாம் நலமே.. உங்கள் நலம் பற்றித் தான் பல தமிழரின் வாய்கள் முணு முணுத்துக் கொண்டிருக்கிறது.
தாங்கள் ஒரு பதிவு போட்டீர்கள் அது உங்கள் உரிமை எழுதுங்கள் அதற்காக உங்கள் தலைவனுக்கு பிட்டம் கழுவச் சொல்லி ஈழத் தமிழனைக் கேட்பது எவ்வகையில் நியாயம். உங்கள் தலைவனை திட்டுவதற்கு ஈழத் தமிழனிடம் தூசணம் முடிந்து விட்டதால் அதை தேடிக் கொண்டிருக்கிறான் என்பது தங்களுக்குத் தெரியுமா?
எத்தனை நாளைக்குத் தான் எங்கள் பெயரை வைத்து தமிழக மக்களின் உணர்வைத் தூண்டி குளிர்காயப் போகிறார் உங்கள் மாசற்ற மறத் தமிழன்...
கொட்டும் மழையில் எத்தனையோ தமிழக உறவுகள் நனையும் போது ஏசி காரில் உங்கள் தலைவன் வலம் வந்தது எமக்குத் தெரியாது என நினைக்க வேண்டாம்.
முதல் உங்கள் கட்சியை மேயுங்கள் அதன் பின் இழிநிலையில் இருக்கிறான் என நீங்கள் கருதும் ஈழத்திழனை மேய்க்கலாம். நாளையே உங்கள் தலைவன் மண்டையைப் போட்டால் ஸ்டாலினும், தயாநிதியும் குஸ்தி போடப் போகிறார்கள் அதைப் பற்றி சிந்தியுங்கள்.
உங்கள் தலைவன் ஒரு குழு அமைத்து போராடப் போகிறார். வெளிநாடுகளில் உள்ள ஈழத் தமிழரே ஆதரவு தாருங்கள் எனப் போட்டிருந்தீர்கள். அது என்ன போராட்டம் என சொல்லுங்களேன் தமிழகத்தில் வாக்குப் பெறுதல் போராட்டமா?
உங்கள் தி.மு.க ஆட்சியில் ஒரு முறை மண்டபம் முகாமல் நடந்த சம்பவத்தைக் கேளுங்கள். முகாமிற்கு வரிசை வரிசையாய் கார்கள் வந்து நின்றதாம். அதில் முன்னுக்கு வந்த காரின் கண்ணாடி 2 இஞ்சி கீழ் இறங்கியதாம். பின்னேரம் கலைஞர் ரிவியில் தலைப்புச் செய்தியாம் கனிமொழி அவர்கள் ஈழ அகதிகளை அவர்கள் முகாமிற்குச் சென்று பார்வையிட்டார். இது தான்யா உங்கள் உணர்வு இதற்குத் தான் ஈழத் தமிழனா? போய் ஓட்டைச் சிரட்யைில் விழுந்து சாகலாமே?
சூசை அவர்கள் சீமானுக்கும், வைகோவுக்கும் அழைப்பெடுத்த நேரம் கலைஞருக்கு எடுத்திருந்தால் தப்பியிருக்கலாம் என்றிருந்தீர்கள், உங்கள் தலைவன் என்ன குருடனா? அல்லது செகிடனா? ஏனென்றால் ஈழத்திழன் செத்தது அவருக்குத் தெரியாதா?
சீமானையோ அல்லது வைகோவையோ அவருக்கு ஒப்பிட வேண்டாம் என்கிறீர்கள். அவர்களது உணர்வில் எத்தனை பங்கு உங்கள் தலைவருக்கு இருக்கிறது.
முதல்ல உங்கட பிட்டத்தைக் கழுவுங்கள் அதன் பின் மற்றவன் மலம் மணக்கிறது என்று மூக்கைப் பொத்திக் கொள்ளுங்குள்..
இது உங்களுக்கு மட்டுமல்ல ஈழத்தமிழனில் குளிர் காய நினைக்கும் அனைத்து அரசியல்வாதிகளுக்கும் தொண்டர்களுக்கும் தான்.

சீற்றக் கிறுக்கலுடன்
ம.தி.சுதா

இது தான் சீற்றத்தை ஏற்படுத்திய அவரது பதிவு

ஏற்கனவே அவர் மீது உழிழப்பட்ட எழுத்துக்களை காண


விரைவில் இந்து மதத்தின் தற்போதைய நிலையை உலகுரைக்கும் “அர்த்தம் தொலைக்கும் இந்து மதம்” என்ற தொடர் ஒன்றுடன் சந்திக்கிறேன். இது தான் எனது பதிவுலக வாழ்க்கயைில் நான் எழுதும் முதலாவது தொடராகும். என் மீது உமிழ நினைப்பவர்கள் இப்பொழுதே உழிர் நீரை சேமிக்க ஆரம்பியுங்கள்.

புதன், 18 ஏப்ரல், 2012

நடிகைகளின் சம்பளப்பட்டியல் வெளியீடும் மயங்க வைக்கும் தொகைகளும்

இந்த வாரம் வெளியாகியிருந்த நடிகைகளின் சம்பளப்பட்டியல் பலரை வாய்பிளக்க வைத்துள்ளது. அந்தளவுக்கு அதிசயிக்க வைத்துள்ள அத்தொகையானது எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

தென் திரையுலகைப் பொறுத்தவரையில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளாக விஜயின் நண்பனில் இடுப்பால் உலுப்பிய இலியானாவும், பிரபுதேவாவின் காதல் லீலையில் சிக்கி பல ஊடகங்களின் தலைப்புச் செய்தியை குத்தகைக்கு எடுத்து வைத்திருந்த நயன்தாராவும் பிடித்துள்ளார்கள். இவர்களது சம்பளத் தொகை எவ்வளவு தெரியுமா? வெறும் 1.5 கோடி ரூபாய் தான்.

அனுஸ்கா மற்றும் கஜால் அகர்வால் இருவரது சம்பளமும் ஒரு கோடியைக் கடந்துள்ளது.

ஆனால் திரிசாவின் சம்பளத் தொகையானது வழமை போல 1.2 கோடியிலேயே இருக்கிறது.

தமன்னாவின் தொகையும் கோடியை அண்மித்திருப்பாதாகத் தெரிவிக்கப்பட்டாலும் அமலா பாலின் சம்பளத் தொகையும் மிக வேகமாக எகிறி வருவதாகக் கூறப்படுகறது.
கன்னட சினமாவைப் பொறுத்த வரை திவ்யா ஸ்பான்டானா 40 லட்சத்தையும் பிரியாமணி 30 லட்சத்தையும் பெறுகிறார்கள்.

ஆனால் Mollywood ஐ பொறுத்தவரை காவ்யா மாதவன் 17 லட்சத்தையும், மம்மதா மோகன் தாஸ் 15 லட்சத்தையும் பெறுகிறார்கள்.

இந்திய சினிமாவைப் பொறுத்த வரையில் பிரியங்கா சோப்ராவே அதிகமான தொகையைப் பெறுகிறார். இவரது சம்பளத் தொகை எவ்வளவு தெரயுமா 9 கோடி ரூபாய்களாகும்.

Kareena Kapoor (Rs. 6 Crore)
Katrina Kaif (Rs. 3 Crore),
Deepika Padukone (Rs. 2.5 Crore)
Vidya Balan (Rs. 1.5 Crore)

என்ன தொகைகள் மலைக்க வைக்கிறதா? என்ன செய்வது இன்று பலரது கனவுகள் தொலைந்ததற்கு நானே காரணமாக விட்டேன் மன்னிக்கவும்.

நன்றிச் செதுக்கலுடன்
ம.தி.சுதா

செவ்வாய், 17 ஏப்ரல், 2012

இலங்கைப் பதிவரின் முதல் குறும்பட வெளியீடும் தமிழ் இணைய உலகில் வித்தியாசமான வெளியீடும்

                           
அனைத்து உறவுகளுக்கும் வணக்கம்.
சற்றே பிந்திய பதிவு தான் ஆனால் அந்தக் கணங்களின் சந்தோசம் கழியாத இவ்வேளையில் அதை பகிர்வதில் சந்தோசமே.
உண்மையில் இது ஒரு குறும்படம் என்ற வரையறைக்குள் பலரால் உள்ளடக்க முடியாமல் இருக்கலாம். ஆனால் எதோ இப்படியும் செய்து பார்க்கலாம் என்ற ஒரு எண்ணமே இத்தனைக்கும் காரணமாகும். ஏதேச்சையாக மதுரனும் நானும் ஒரு புகைப்படத்துறை சார்ந்த கடையில் சந்திக்கும் போது எடுக்கப்பட்ட திடீர் முடிவால் கடை முதலாளியான குகரூபனின் கைப்பேசியில் கையில் இருந்த ஒரு கதையை வைத்து எந்த வித முன்னாயத்தமும் இன்றி ஒரு மணித்தியாலத்தில் எடுத்த முடித்த ஒரு விளையாட்டுத்தனமான படைப்புத் தான் இந்த ராக்கெட் ராஜாவாகும்.
உண்மையில் ஒரு மணித்தியாலத்தில் எடுத்து முடிக்கப்பட்டது என்று சொல்லப்பட்டாலும் இதை எடிட் பண்ண மதுரன் செலவிட்ட நேரம் பல மணித்தியாலங்களாகும். ஏனெனில் அந்தக் கடையுடன் என் வேலை முடிந்து விட்டது. ஆனால் அதற்கான இசைக் கோர்ப்பிலிருந்து அனைத்து வேலைகளையும் அவன் தான் செய்தான்.
அதே போல படத்தை ஒளிப்பதிவு செய்த MULTI VERSION GRAPHIC குகரூபனை கைப்பேசி படாதபாடு படுத்திவிட்டது.
அத்துடன் ஜங்கிள் தனுசனும் காட்சி அமைப்பில் பெரிதும் உதவியாக இருந்தார்.
யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட பல நல்ல நல்ல குறும்படங்கள் குழு ஒற்றுமையின்மையால் தடைப்பட்டுப் போனாலும் ஏதாவுது ஒன்றைச் செய்தாக வேண்டும் என்ற கட்டாயத்தாலேயே இதைச் செய்து முடித்துள்ளோம்.

வெளியீடு
இது வரை தமிழ் இணையத்தில் இடம்பெறாத ஒரு முயற்சியாக இருக்கட்டுமே என்ற எண்ணத்தில் நாற்றுக் குழுமத்தில் வெளியிடத் தீர்மானித்தோம். ஆனால் எதிர் பார்த்ததை விட நண்பர்களின் ஆதரவு மிகவும் உற்சாகத்தை அளித்தது. வேலை நாளாக இருந்தாலும் இந்த விழாவுக்காக நேரம் ஒதுக்கி அரும்பாடு பட்ட அம்பலத்தார் ஐயா, கலை விழி, ஐடியாமணி, நிருபன், காட்டான், இம்ரான், வருண், கந்தசாமி போன்றோருக்கு பல நூறு நன்றிகள் சொல்லக் கடைமைப்பட்டிருக்கிறேன்.
நிகழ்ச்சியை கலைவிழி தொகுத்து வழங்கியதுடன் அறிமுக உரையையும் வழங்கியிருந்தார்.
ஜனா அண்ணா அவர்கள் மங்கள விளக்கை ஏற்றி தமிழ்மொழி வாழ்த்தையும் வழங்கிச்சிறப்பித்திருந்தார்.
அதன் பின்னர் திரு பொன்னர் அம்பலத்தார் ஐயா அவர்கள் வரவேற்புரையை வழங்கியதுடன் குறும்படத்தையும் வெளியிட்டு வைத்தார்.
படத்தின் மேல் சொடுக்கிப் பெரிதாக்கலாம்.
அதன் பின்னரான விமர்சனத்தை வருண் வழங்கியிருந்தார்.


அதன் பின்னர் இறுதி நிகழ்வாக இம்ரான் அவர்கள் நன்றியுரையை வழங்கியதுடன் மிகவும் குறுகிய நேரத்திலேயே சிறப்பாக நிகழ்வு நிறைவுக்கு வந்தது.

அதன் பின்னர் வருகையாளர்களின் விமர்சனமும் பதியப் பெற்றது. நிகழ்வில் கலந்து கொண்டோரை உபசரிப்பதில் சிரத்தை எடுத்துக் கொண்ட சகோதரி சித்தாராவிற்கும் இந்த இடத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
விமர்சனங்களை நான் விரும்பியது போல நேரடியகவே நிறைகளையும் குறைகளையும் தெரிவித்த துஸ்யந்தன், கந்தசாமி, மருதமூரான், ஹலிவுட் ரசிகன், ஜனா அண்ணா, நிருபன், ஐடியா மணி, காட்டாண்ணா, அமல்ராஜ், அறிவிப்பாளர் முகுந்தண்ணா, ஜீ , கிருத்திகன், முகுந்தன், சுஜா அக்கா மற்றும் எவரையேனும் தவற விடப்பட்டிருந்தாலும் அனைவருக்கும் இந்த இடத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

அதே போல அடுத்த படமாக உள்ளூர்த் திருட்டுக்களை மையப்படுத்தி அருமையான ஒரு கதைக்களத்துடனும் விளம்பரத் துறையிலும் நாடகத்துறையிலும் தேர்ச்சி பெற்ற ஹரிகரனின் இயக்கத்தில் எடுக்கும் திட்டம் இருக்கிறது. சரியான பண வசதியும் குழுவும் அமைந்ததும் ஒரு சிறப்பான குறும்படமாக உருவாக்கவுள்ளொம். இதற்கான வேலைகள் மிக விரைவில் ஆரம்பிக்கப்படும் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.

நன்றிச் செதுக்கலுடன்
ம.தி.சுதா


இதோ அக்குறும்படம்

வியாழன், 5 ஏப்ரல், 2012

ஒரு குருதட்சனையும் பதிவர்களின் குறும்படமும் (birthday whishes)


காலச்சக்கரமானது மனிதனை தன்பாட்டுக்கு ஆட்டு வித்துக் கொண்டிருக்கிறது. இதனிடையில் ஒருவனுக்கு நேரம் கிடைப்பதென்பது கல்லில் நாருரிக்கும் செயல் தான். அதற்கு நானும் விதி விலக்கல்ல.
11:14 PM - By ம.தி.சுதா 14

புதன், 28 மார்ச், 2012

என் பின்னால் நின்று எனை வளர்த்த பெண்ணுக்காக ஒரு பதிவு

முற்குறிப்பு - இதை படித்து முடித்தவரிடம் ஒரு அன்பான வேண்டு கோள் படித்து முடித்ததும் 3 தரம் துப்பி (உமிழ்ந்து) விடுங்கள்
         ஒவ்வொரு மனிதனின் வளர்ச்சிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருந்திருப்பாள் என்று சொல்வார்கள். இந்தக் கருத்தானது என் வாழ்க்கையில் 100 வீதம் நானே உணர்ந்து கொண்ட உண்மையாகும்.
12:35 AM - By ம.தி.சுதா 38

புதன், 7 மார்ச், 2012

விதவைகளின் விழி விதைகளை உலகறிய வைக்கும் ஒரு ஈழப் படைப்பு

    நாளைய தினம் மார்ச் 8ம் திகதியாகும். உலகப் படைப்பின் முக்கிய ஜீவன்களான பெண் குலத்தை போற்றும் ஒரு சர்வதேச தினமாகும். இத்தினத்தில் ஈழத்துக் கவிஞரான நெடுந்தீவு முகிலனின் “வெள்ளைப் பூக்கள்” படைப்பு அரங்கேறுகின்றது.
  ஈழக் குறும்படங்கள் பல ஆரம்பிக்கப்பட்டாலும் அதில் பங்கேற்கும் கலைஞர்களின் ஆணவம், அகங்காரம் என பற்பல தனிப்பட்ட திமிர்களால் பல படங்கள் முடங்கிப் போன நிலமையில் நெடுந்தீவு முகிலனின் முயற்சியும் அவரது குழுவின் ஒற்றுமையும் ஒரு சிறந்த படைப்பொன்றை வெளிக் கொணர இருக்கிறது.
   விதவைப் பெண்களின் வாழ்வைச் சித்தரிக்கப் போகும் இப்படத்தில் பதிவரான கிருத்திகன் கதாநாயகனாகவும், இந்து கதாநாயகியாகவும் நடித்துள்ளார்கள். இக் குறும்படானது மகளிர் தினமான நாளை 8 ம் திகதி காலை 10.35 மணிக்கு யாழ் மணிக்கூட்டு வீதியில் அமைந்துள்ள ஞானம்ஸ் ஹோட்டலில் வெளியிடப்படவுள்ளது.
அழைப்பிதழ்
      இதில் பல பிரபலங்கள் கலந்து சிறப்பிக்க உள்ளார்கள்.
இத்திரைப்படத்தில் இன்னுமொரு சிறப்பு அம்சம் என்னவென்றால் என் மிகப் பெரும் அபிமானத்திற்குரிய இசையமைப்பாளர் இசைப்பிரியன் அவர்கள் மீண்டும் தன் இசையாலும் குரலாலும் என்னைக் கட்டிப் போட்டு விட்டார். அத்துடன் படத்தை இயக்கும் முகிலனும் தனது வழமையான பாணியில் சில சில்லறை வரிகளாலேயே சேவிகளுக்கு தேனூற்றிச் சிதைத்து விட்டிருக்கிறார்.
  பலத்த எதிர்பார்ப்புடனும் பலரது ஏகோபித்த ஆதரவுடனும் வர இருக்கும் வெள்ளைப்பூக்களை ஸ்பரிசிக்க நானும் செல்கிறேன்..

திங்கள், 20 பிப்ரவரி, 2012

உயிர்களோடு விளையாடும் யாழின் உணவுத் தரமும் தரக்கட்டுப்பாடும் (காணொளி இணைப்பு)

வணக்கம் உறவுகளே சேமம் எப்படி?
பதிவிற்குள் செல்ல முன் ஒரு சில விநாடிகள்...
இப்பதிவில் வரும் சம்பவங்கள் பாத்திரங்கள் அனைத்தும் நியமானதே. எனது சொந்த அனுபவத்தை வைத்து எழுதப்பட்டுள்ள இப்பதிவிற்கு முன் இது சார்ந்த நிறுவன முகாமையாளரை தொடர்பு கொண்டு அவரது நியாயப்பாட்டை கேட்ட பின்னரே மக்கள் நலன் கருதி இக் கேள்விகளைத் தொடுத்துள்ளேன்.
இந்தக் குளிர் களி நிறுவன முகாமையாளர் எனது உறவினர்களில் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

உணவுகள் என்பது பல்வேறு முறைகளில் தயாரிக்கப்பட்டாலும் அவற்றுக்கான காலவதித் திகதி என்பன பல விடயஙகளில் தங்கியிருக்கும். அதிலும் உலர் உணவுகளின் காலவதி அளவே மிகவும் அதிகமானதாக இருக்கும். ஆனால் ஈரம் சார்ந்த உணவுகளுக்கு குறிப்பிட்ட சில எல்லைகளுடனேயே கால அளவு வழங்கப்படும்.
இங்கு நான் சம்பவத்தை விபரித்த பின்னர் சர்ச்சைகுரிய சில விடயங்களுக்குள் தங்களை அழைத்துச் செல்கிறேன். நேற்று காலை எமது ஊர் கடையில் ஒரு ஐஸ் சொக் (குளிர்களி) வாங்கினேன். அதை உடைக்கும் போதே உமிழ் நீர் போல இழுபட்டு வந்ததுடன் கரைந்து விட்டது. அத்துடன் சுவையோ மிகவும் தரங்கெட்டுப் போய் இருந்தது. நேற்றையா தினம் வடமராட்சிக்கான மின்சாரத் தடை நாள் என்பதால் குளிர்சாதனப் பெட்டியின் இயக்கமின்மையால் ஏற்பட்டிருக்கலாம் என்று அப்படியே விட்டு விட்டு அதன் உறையைப் பார்த்தேன். அதில் உற்பத்தித் திகதி 13.11.2011 என்றும் காலவதித் திகதி 19.04.2013 என்றும் இடப்பட்டிருந்தது. ஒரு சாதாரண பிஸ்கட்டுக்கே 9 மாதங்கள் தான் கால எல்லை வழங்கப்படும் நிலையில் இது கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்கள் வழங்கப்பட்டிருக்கிறதே இது எப்படிச் சாத்தியம் என்பதற்காக இன்றும் ஒன்றை வாங்கியதுடன் அதன் நிலமையை காணொளி மூலம் தங்களுடன் பகிர்ந்திருககிறேன்.


(இங்கே திகதியை உற்று நோக்கினால் இன்னும் ஒரு விடயம் உங்களை உறுத்தும். காரணம் ஏதோ ஒரு மட்டம் தட்டிய நாட்கணக்கில் தான் கால அளவு வழங்கப்படும் ஆனால் இங்கே உற்பத்திக்கும் காலவதிக்கும் இடையேயான நாட்கணக்கைப் பாருங்கள்)

என் கேள்விகள்...

இதற்கான உரிமையாளரிடம் தொடர்பு கொண்ட போது இப்படியான கால அளவில் தான் தாங்கள் உற்பத்தி செய்வதாகவும் இதற்கு கடை உரிமையாளரின் குளிர் சாதனப் பெட்டியே காரணம் என்றும் குறிப்பிட்டார்.
இந்த விடையின் மூலம் எனது கேள்வி சுகாதார உத்தியோகத்தர்களிடம் திருப்பப்படுகிறது.
எந்தெத்தக் காரணங்களை வைத்துக் கொண்டு இப்படி ஒரு அனுமதியை அவருக்கு அளித்திருப்பீர்கள். அதன் உள்ளீட்டுப் பொருட்கள் பரிசோதிக்கப்பட்டிருக்கிறதா?
குளிர்சாதனப் பெட்டியில் இருக்கையில் பக்டீரியா தாக்கம் இன்மையால் பழுதாக சந்தர்ப்பங்கள் குறைவு என நீங்கள் காரணம் பயின்றாலும் ஒரு சாதாரண பொருளுக்கான வாழ்தகவு என்று ஒன்றிருக்கிறது. அதற்கு பயன்படும் பால்மாவுக்கோ அல்லது கொக்கோவுக்கோ ஒன்றரை வருடங்கள் பழுதாகாமல் இருப்பதற்கான வாழ்தகவு இருக்குமா?
எல்லோருக்கும் பொதுவான பொதுக் கேள்வி ஒன்று ஈழப் போராட்டம் உச்சம் பெற்றதன் பிற்பாடு யாழ்குடா நாட்டின் எப்பகுதிக்கும் தொடர்ச்சியான மின்சாரம் வழங்கப்பட்டதில்லை (நகரப்பகுதி உள்ளடக்கவில்லை) இன்றும் கூட பல பிரதேசங்களுக்கு ஒன்று விட்ட ஒரு நாள் தான் மின்சாரம் வழங்கப்படுகிறது. இப்படியிருக்கையில் குளிர்சாதனத்தை மட்டுமே நம்பியிருக்கும் ஒரு உணவுப் பொருக்கு இந்தளவு பெரும் காலப்பகுதியை அளிக்கலாமா?
சில மாதங்களுக்கு முன்னர் தென்பகுதியில் ஒரு சாதாரண உணவு நஞ்சாக்கலால் (food poisoning) பல மாணவர்கள் உயிர் போகும் தறுவாய்குத் தள்ளப்பட்டதை பலர் அறிவீர்கள். சிறுவர்களை இலக்கு வைத்து தயாரிக்கப்படும் இப்படியான உணவுப் பொருட்களில் கூடிய கவனம் செலுத்த வேண்டியது ஒவ்வொருவரதும் கடமையாகும்.

நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
(விழிப்புணர்வுக்காக எழுதப்பட்டுள்ள இவ்விடயம் பலரை சென்றடைய வேண்டும் என விரும்பினால் தங்கள் சமூக வலைத் தளங்களிலும் பகிர்ந்து கொள்ளலாம்)
(இப்பதிவை சம்பந்தப்பட்டவர்களின் பார்வைக்கு கொண்டுவருவதற்காக இதை பயன்படுத்த விரும்புவோருக்கு எனது பெயர் அடிக் கோடிடலுடன் பயன்படுத்த முழு அனுமதியிளிக்கிறேன்.)
10:55 AM - By ம.தி.சுதா 16

ஞாயிறு, 12 பிப்ரவரி, 2012

எனக்கே ஆப்பு வைத்துள்ள இலங்கை அரசின் புதிய சட்டம்

வணக்கம் உறவுகளே
சேமம் எப்படி..
நல்ல இடைவேளை ஒன்றின் பின் இவ் வலைப்பின்னல் ஊடே சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.


இலங்கை அரசானது தனது ஆட்சி முறமையில் பல புதிய சட்டங்களை இயற்றி வருகிறது. கடந்த சில காலத்திற்கு முன்னர் குடிகாரர்களுக்கு எதிராக ஒரு சட்டம் கொண்டுவத்திருந்தாலும் அது நடைமுறைச் சிக்கல் காரணமாக மதில் மேல் பூனை போலவே இருக்கின்றது.

வெள்ளி, 3 பிப்ரவரி, 2012

கல்வி ஆர்வலரை அடிமைப்படுத்தும் இலங்கைத் தளம்



         இணைய உலகென்பது எமக்குத் தேவையான அனைத்தையும் வாசல் வந்து கதவைத் தட்டித் தந்துவிட்டுச் செல்லும் அளவுக்கு பெரும் வளர்ச்சியடைந்தள்ளதுடன் அனைத்து மக்களிடமும் சென்றடைந்துள்ளது.
இணையத் தேடல்களில் ஆங்கிலம் சார்ந்த தேடல்களை தேடல் பொறியில் தட்டியதும் கண் முன் முழு விளக்கத்துடனும் விரிந்திருக்கும். ஆனால்

மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்













back to top