வெள்ளி, 28 ஜூன், 2013

என் 200 வது பதிவும் குறும்பட விபரங்களும் (THULAIKKO PORIYAL TRAILER)

வணக்கம் உறவுகளே
சேமம் எப்படி?

முற்குறிப்பு- இக்குறும்படமானது எனக்குள் இருந்த குறும்படக் கனவுக்கு தீனி போடுவதற்காக உருவாக்கப்படுவதே தவிர இது எனது தொழில் முறை ரீதியான முயற்சியல்ல என்பதை கூற விரும்புகின்றேன். இதற்குப் பிறகும் எனது படைப்புக்கள் வருமா என்பது என் தொழில் தான் தீர்மானிக்கும்.


எப்போதுமே முதல் முயற்சிகள எல்லோருக்கும் வெற்றியளிப்பதில்லை ஆனால் அம் முயற்சி மீதிருக்கும் தீவிரம் அதை கைவிடாமல் வைத்திருந்தால் என்றோ ஒரு நாள் ஆரம்பத்தில் இருந்த அதே உற்சாகத்துடன் அவ் இலக்கை அடைய உதவும் அந்த வகையில் எனக்குள் இருந்த ஆர்வத்திற்கு எனது மைத்துனர் ரஜிகரன் கொடுத்த உதவி தான் இப்படைப்பு.

படைப்பு பற்றிய ஒரு சிறு விபரம்
ஒரு சமூகத்தில் வாழும் ஒவ்வொருவருக்குள்ளும் சில விடயங்கள் நெருடிக் கொண்டிருக்கும் சிலர் அதை வெளிக்காட்டிக் கொள்வார்கள் பலர் தமக்குள் அமுக்கி வைத்துக் கொள்வார்கள் அந்தவகையில் வழமையாக எழுத்துக்களால் விதைத்துக் கொள்ளும் நான் இம்முறை சில காட்சிகளால் நகைச்சுவையுடன் விபரித்துள்ளது தான் “துலைக்கோ போறியள்“ என்ற இக்குறும்படமாகும்.
இத்தலைப்பானது எமது பிரதேசங்களில் மிகவும் அருகிப் போய்க் கொண்டிருக்கும் ஒரு பேச்சு மொழியாகும். ஒருவர் போய்க் கொண்டிருக்கும் போது “எங்கே போகிறீர்கள்“ என்பது ஒரு அபசகுணமாககக் கருதப்படுவதால் இப்படி அழைத்து வினாவுவார்கள். 

உடுப்பிட்டி நாவலடி, நெல்லியடி, நவிண்டில், வதிரி போன்ற 5 களங்களில் உருவாக்கப்பட்ட 8 காட்சிகளுடன் இக்குறும்படம் உருவாக்கம் பெற்றுள்ளது.
படம் தொடர்பான பணிகள் முடிவடைந்துள்ள போதும் வரும் மாதம் அளவில் தான் வெளியிட உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இதற்கு மனம் சற்றும் கூட சலிக்காமல் கமராவுடன் ஒத்துழைத்த செல்லா அண்ணா கணணியுடன் போராடிய செல்வம் அண்ணா நேர காலம் பாராமல் ஓடி வந்து ஒத்துழைத்த ஜெயதீபன், செல்வம் அண்ணா, ஏரம்பு ஐயா, ஆசிரியை சுதேசினி போன்றோர் என்றும் என் நன்றிக்குரியவர்கள்.
என்ன படைப்பு எப்படியானது என்று கூட அறியாமல் ”மதிசுதாவா செய்தவன் அப்படியென்றால் சரி” என்று சம்மதம் சொல்லி இசையமைத்து தந்த அற்புதன் அண்ணா.
பலவகையான தொடர்புகளுக்கு உதவிய வேல் முருகன்.
அதுமட்டுமல்லாமல் நேர காலம் பாராமல் என்ன வடிவத்தில் கேட்டாலும் மாற்றி மாற்றி வடிவமைத்துத் தந்த பதிவர் மதுரன் மற்றும் ஆலோசனைகள் தந்த அண்ணர் மௌனரூபன் ஆகியோருடன் சகல விதத்திலும் ஒத்துழைப்புத் தந்த செல்லா வீடியோ அலுவலகப் பணியாளர்கள் அனைவருக்கும் ஆரம்பத்திலேயே நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.


என் 200 வது பதிவு பற்றியது

வன்னியில் இருந்து மீளும் போதே (நலன்புரி முகாமில் இருக்கும் போது) வலைத்தளம் ஒன்று அமைத்து எழுத வேண்டும் என்ற ஒரு லட்சியத்தோடு பொழுது போக்காக எழுத ஆரம்பித்த இத்தளத்தில் நான் பெற்ற வெகுமதிகள் நான் எதிர் பார்க்காதவையே. அதன் பின்னர் அடைந்த வேலைப்பழுக்கள் எனது பதிவிடுதலுக்கான நேரத்தைப் பிடுங்கிக் கொண்டாலும் 3 வருடத்தில் 200 வது பதிவைத் தொடுகிறேன்.
ஆனால் இத்தனைக்குள்ளும் 467,000 என்ற பார்வைகளின் எண்ணிக்கையானது ஒரு பதிவுக்கான சரசரி பார்வைகள் 2300 என்பதைக் கொடுத்துள்ளது அந்த வகையில் எனக்கு கிடைத்த அங்கீகாரமாகவே இதை எண்ணிக் கொள்கிறேன்.
ஆரம்ப காலத்தில் இருந்து என் பதிவுலக வளர்ச்சிக்கு உதவியவர்களில் ஒருவரான ஜனா அண்ணா தனது பதிவில் குறிப்பிட்டவை இந்த தொடுப்பில் உள்ளது.

இந்தவாரப் பதிவர் - திரு -மதி.சுதா

 நன்றிச் செதுக்கலுடன் 

அன்புச் சகோதரன் 

ம.தி.சுதா


About the Author

நான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director
View all posts by admin →

Share This Post

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

18 கருத்துகள்:

Admin சொன்னது…

மகிழ்ச்சி.. குறும்படம் சிறப்பாக அமைய வாழ்த்துகள்..

மிக்க சந்தோசம்...

200ஆம் பதிவு - மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...

(இணைப்பில் பெயர் மாற்ற வேண்டும் என்று நினைக்கிறேன்)

திரு. ஜனா அவர்களுக்கும் நன்றி... வாழ்த்துக்கள்...

Jana சொன்னது…

Vaazhukkal mathisutha...
ORU ODAI NATHYAANA VARALADRINAI ''MATHIYOODAI'' YAIKKU VANTHAVARKAL PURINTHIRUPPAARKAL.
Atheypola intha nathy melum pala kilaiparappi veveru thuraikalil PIRAVAAKAM eduppathaium paarkka avaa.
MEENDUM VAAZHUKALUM NANRIKALUM.

200வது பதிவிற்கும் குறும்படத்திற்கும் வாழ்த்துக்கள்!

G.M Balasubramaniam சொன்னது…


அன்பின் மதிசுதா, வாழ்த்துக்கள். எண்ணங்களை வரிவடிவிலோ. ஒலி வடிவிலோ, ஒளிவடிவிலோ பகிரலாம். நிங்கள் இம்மூன்று முறையிலும் முயல்கிறீர்கள். துலைக்கப் போறீயள் முதலில் ப்ய்ரியவில்லை. முதலில் ஆங்கிலத்தில் இருந்ததைப் படிக்கவே சிரமமாயிருந்தது. குறும்படம் வெளிவந்தபின் யூ ட்யூபில் ஏற்றுவீர்கள் இல்லையா.?200-வது பதிவுக்கு வாழ்த்துக்கள். வாசிப்பவர்களின் எண்ணிக்கை மகிழ்ச்சியளிக்கிறது. best of luck.!

G.M Balasubramaniam சொன்னது…


சில எழுத்துப் பிழைகள் என் பின்னூட்டத்தில். முதலில் கவனிக்கத் தவறி விட்டேன்.

வாழ்த்துக்கள் மதி

மகிழ்ச்சி..

குறும்படம் சிறப்பாக அமைய வாழ்த்துகள்..

பால கணேஷ் சொன்னது…

200 பதிவக்கு முதலில் மகிழ்வான என் மனம் நிறைந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். குறும்படம் அனைவரின் மனதையும் வெல்லவும் வாழ்த்துக்கள். நீங்கள் அதைப் பற்றிச் சொல்லியிருப்பத்பை படிக்கையில் காணுகிற ஆவல் மேலோங்குகிறது!

Manimaran சொன்னது…

நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்

Unknown சொன்னது…


நலமா சுதா!
200 -வது பதிவிற்கு வாழ்த்து!

ஜோதிஜி சொன்னது…

வாழ்த்துக்கள்

பெயரில்லா சொன்னது…

இருநூறாவது பதிவுக்கும் குறும்படத்துக்கும் என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் சகோ

காட்டான் சொன்னது…

குறும்படம் சிறப்பாக அமைய வாழ்த்துகள் தம்பி.

பி.அமல்ராஜ் சொன்னது…

நானும் நீண்ட நாட்கள் எதிர்பார்த்திருந்தேன் உங்கள் குறும்பட விரபரங்களை காண்பதற்கு. டீசர் அழகாக இருக்கிறது. உங்கள் இந்த முயற்சி வெற்றிபெற வாழ்த்துவதோடு முழுமையாக இந்த படைப்பை காண ஆவலாய் உள்ளேன். வாழ்த்துக்கள் பாஸ்.

Harini Resh சொன்னது…

குறும்படம் சிறப்பாக அமைய வாழ்த்துகள் தம்பி..
Best of luck
Harini

Ranjani Narayanan சொன்னது…

200 வது பதிவிற்கும், குறும்படத்திற்கும் பாராட்டுக்கள்.

மேலும் மேலும் சாதனை புரிய மனமார்ந்த வாழ்த்துகள்!

Unknown சொன்னது…

வணக்கம்,ம.தி.சுதா!நலமா?////மன்னிக்கவும்,பார்க்கக் கிட்டவில்லை.இருநூறாவது பதிவு கண்டமைக்கு வாழ்த்துக்கள்.

மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்













back to top