வணக்கம் உறவுகளே
சேமம் எப்படி..
நல்ல இடைவேளை ஒன்றின் பின் இவ் வலைப்பின்னல் ஊடே சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.
இலங்கை அரசானது தனது ஆட்சி முறமையில் பல புதிய சட்டங்களை இயற்றி வருகிறது. கடந்த சில காலத்திற்கு முன்னர் குடிகாரர்களுக்கு எதிராக ஒரு சட்டம் கொண்டுவத்திருந்தாலும் அது நடைமுறைச் சிக்கல் காரணமாக மதில் மேல் பூனை போலவே இருக்கின்றது.
அச் செய்தியைப்படிப்பதற்கு -இலங்கை அரசின் குடிமக்களுக்கு எதிரான புதிய சட்டம்
இம்முறை கொண்டு வந்திருக்கும் புதிய சட்டம் என்னவென்றால் இனிமேல் தேநீர்ச்சாலைகளில் தேநீருடன் சீனி கலந்து கொடுக்கக் கூடாது என்பதாகும். ஆனால் அவர்களுக்குத் தேவையான சீனியை தனியாகக் கொடுக்கலாம் அதை அவர்கள் தமது தேவைக்கு ஏற்றாற் போல அளவாக போட்டுக் குடிக்கலாம்.
இதில் பல ஆண்களுக்கு வெட்கக்கேடான விடயமும் ஒன்று இருக்கிறது. அதாவது ஒரு தேநீருக்கு எந்தளவு சீனி என்று தெரியாமலே பலர் இருக்கிறார்கள். இல் அரசாங்கத்திற்கு என்ன வரப்போகிறது என நினைக்கிறிர்களா? பல கோடி ரூபாய் இதனால் இலாபமாகப் பெறப்படும் காரணம் இதனால் சலரோக நோயாளரைக் கட்டுப்படுத்தலாம் அதனால் அந்நோய்க்கு வழங்கப்படும் மாத்திரைகள் வெகுவாகக் குறைக்கப்படும்.
இங்கு சலரொகத்திற்குMetformin மற்றும்Second-generation agents ஆனாgliclazide போன்றன அதிகமாக பாவிக்கப்படுகிறது. அதிலேMetformin மாத்திரை ஒன்று 2 ரூபாயிலிருந்து 2.50 வரை செல்கிறது. சலரோக நோயாளரைக் கட்டுப்படுத்துவதன் மூலம் அரசாங்கமானது தனக்கான மாத்திரைச் செலவைக் குறைத்துக் கொள்ளப் போகிறது.
அது மட்டுமல்லாமல் இந்நோயானது பாதிக்கப்பட்டவருக்கும் அவரைச் சார்ந்திருப்பவருக்கும் பல பாதிப்புக்களை ஏற்படுத்துகிறது. மிக முக்கியமாக ஒருவரின் பார்வை இழப்பு வரை கூட கொண்டு சென்று விடக்கூடியது மட்டுமல்லாமல் காலில் ஏற்படும் சிறு சிராய்ப்புக்கூட காலை அகற்றும் நிலைவரை கொண்டு சென்று விடுகிறது.
இப்படி ஒரு நிலை ஏற்பட்டால் அவருக்கான வைத்தியச் செலவே பல லட்சம் ஒதுக்க வேண்டியேற்படும்.
இதனால் உனக்கென்ன பாதிப்பு எனக் கேட்கிறிர்களா? நான் ஒரு அதி தீவிர தேநீர்ப்பிரியன் என்பது என்னுடன் பழகும் பலருக்குத் தெரியும். அதற்காகவே இட்ட சில பதிவுகளும் இருக்கிறது
உண்மையில் நுரை பொங்கும் வரை இரு பாத்திரங்களையும் மாறி மாறி உயரத்தில் இருந்து தேநீரை ஊற்றி ஆத்திக் குடிப்பதில் ஒரு வித தனிச் சுவையே இருக்கிறது. என்னுடைய தேநீர் தனிச் சுவையுடன் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் சீனியை போட்டுக் கலக்கிக் குடிப்பதில் எந்தவித சுவையும் இருப்பதில்லை.
ஏதோ சட்டம் அமூலுக்கு வரும் வரை எனக்குப் பிரச்சனை இல்லை. ஆனால் வந்தால் நான் தேநீர் போடும் இடத்தினுள் புகுந்து எனக்கான தேநீரைப் போட்டுக் கொண்டு வந்தால் தடுக்கும் உரிமை கடைக்காரருக்குக் கூட இல்லை
நன்றிச் செதுக்கலுடன்
ம.தி.சுதா
25 கருத்துகள்:
ஒரு தேனீர் குடிக்க இவ்வளவு தடைகளை கடந்து வரனுமா?
நல்ல சட்டம்தான் போல.. என்றாலும் நீங்க சொன்னதை போல ஆத்தி குடிப்பதில் இருக்கும் சுவையே தனி.!!
வணக்கம் மதி, நானும்கூட உங்களைப்போல தேனீர் பிரியன் தான் உணவு இல்லாமல்கூட இருப்பன் தேனீர் இல்லாமல் முடியாது. நோயை கட்டுப்படுத்துவது நோயாளிகளுக்கும் நன்மை தருவதால் எங்க கொலவெறியை அடக்கிக்கொள்வோம்.
எனக்கு இச்சட்டம் மிகவும் பிடித்துள்ளது சுதா! இது வெஸ்டேர்ன் ஸ்டைல் தானே!
எல்லோரும் கடைப்பிடியுங்கள்! மாற்றத்தை உணர்வீர்கள்!
ஏதோ சட்டம் அமூலுக்கு வரும் வரை எனக்குப் பிரச்சனை இல்லை. ஆனால் வந்தால் நான் தேநீர் போடும் இடத்தினுள் புகுந்து எனக்கான தேநீரைப் போட்டுக் கொண்டு வந்தால் தடுக்கும் உரிமை கடைக்காரருக்குக் கூட இல்லை :://////
குசும்பு கூடிப் போய்ச்சு! அவ்வ்வ்வ்வ்வ்வ்!
வணக்கம் உறவுகளே
சேமம் எப்படி../
வணக்கமுங்கோ!
நீங்க நல்லாயிருக்கீங்களா?
நாம ஏதோ இருக்கிறம் மச்சி!
உண்மையிலே நல்ல விடயம் மச்சி!
வெளிநாடுகளில் இம் மாதிரித் தான் எல்லோருக்கும் தேநீருடன் சீனியினை வழங்குவார்கள்!
இதனால் நீரிழிவு நோயாளர்களின் எண்ணிக்கை குறையும் என்பது நிஜம்!
மச்சி வெறுந் தேத்தா குடி! சீனி போட்டு குடிக்காதே!
நல்லது தானே ஒருவர் எவ்வளவு சீனி தனக்கு தேவையோ அதை பாவிப்பது . இங்குள்ள முறையும் இதே தான் .
மதி எனக்கென்னவோ இதில உள்வீட்டு மேட்டர் இருக்கிற மாதிரி தெரியுது.. ஒருவேளை அந்த சீனி சின்ன பைக்கட்டா தயாரிக்கிற ஏதாச்சும் கம்பனி ஓப்பின் பண்ணியிருப்பாங்க போல
//நான் தேநீர் போடும் இடத்தினுள் புகுந்து எனக்கான தேநீரைப் போட்டுக் கொண்டு வந்தால் தடுக்கும் உரிமை கடைக்காரருக்குக் கூட இல்லை//
ஆமால்ல.அண்ணா உன்னை யார் தடுக்கிறது?
சின்னச் சின்னதாய் நினைவுகள்.
//பல ஆண்களுக்கு வெட்கக்கேடான விடயமும் ஒன்று இருக்கிறது. அதாவது ஒரு தேநீருக்கு எந்தளவு சீனி என்று தெரியாமலே பலர் இருக்கிறார்கள்.//
ஹ ஹ ஹ ஹா.இனிமேலாச்சும் பழகிக்கட்டுமே விடேன்...
உன் ஒருத்தனுக்கு ஆப்பு என்றாலும் ரொம்ப பேருக்கு நன்மைதானேடா?அதுக்காக எல்லாம் நாங்க உனக்கு சீனி போடாம தேநீர் தரமாட்டம். கவலை வேண்டாம் அண்ணா.
எனக்கே ஆப்பு.....// உங்களுக்கு எதிரிகள் அங்கும் இருக்கிறார்கள் போல.
சீனி போட்டுக் குடிப்பதில் என்ன பிரச்சினை இருக்கப் போவுது ஆண்களுக்கு என்று விளங்கவில்லை. அதையாவது செய்தா என்னவாம்????
சிலர் சோம்பல் பட்டுக் கொண்டே சீனி போடாமல் போனால் கடைக்கு எவ்வளவு லாபம் என்று தெரியுமா????!!!!
நான் ஏற்கனவே கொழும்பில் பல இடங்களில் மொக்கைப்பட்டுவிட்டேன். நானும் ஆண்தானே! எனக்கும் தெரியாது.....!
நம்ம ஊருக்கு வாங்க.... தேவையான அளவு சீனி கிடைக்கும்.....
மருத்துவத்துறையுடன் தொடர்பு பட்டதாக நல்ல விளக்கம் கொடுத்துள்ளீர்கள்
Mm nadathunka
Mm nadathunka
ஓரே குழப்பமாக உள்ளதே?
அடப்பாவிகளா, எது எதுக்கு சட்டம் கொண்டு வாறது எண்டு ஒரு விவஸ்தையே இல்லாம போச்சே... எப்பிடி எல்லாம் ஜோசிக்கிரான்கப்பா... இதுகளில மட்டும்.
good...
:)))))))))))))
இப்படிக்கூட ஒரு சட்டமா? ...ம்...
Nalla thittam thaan. aatharvu thaarungal.
வித்தியாசமான சட்டம்தான் தோழர்..
உண்மையில் நுரை பொங்கும் வரை இரு பாத்திரங்களையும் மாறி மாறி உயரத்தில் இருந்து தேநீரை ஊற்றி ஆத்திக் குடிப்பதில் ஒரு வித தனிச் சுவையே இருக்கிறது.//
100 க்கு 100 உன்மைதான் தம்பி அதன் சுவை ஒரு வித்தியாசம்தான்.
கருத்துரையிடுக