Featured Articles
All Stories
அரசியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அரசியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 25 நவம்பர், 2012

அவுஸ்திரேலிய கடல் பயணங்களும் தீராத சந்தேகங்களும்


ஈழப் போரின் பின்னான காலப்பகுதியானது இளமை, கல்வி, தொழில் மற்றும் பணம் போன்றவற்றை தொலைத்த இளையவருக்கு ஒரு வெறுமையான சூனியத்தைக் காட்டினாலும் ஓரளவு பொருள் வசதியோ ஆள் உதவியோ கிடைத்தவருக்கு பிரகாசத்தைக் காட்டியது.

அதில் முதல் கட்ட பெரும் எடுப்பாக அமைந்தது கனடாவுக்கான கப்பல் பயணமாகும். அதிலும் போரின் பிடியில் மீண்டு தப்பி போனவர்களை விட போர் சாராத பகுதியில் வாழ்ந்து போன தமிழர்களே அதிகம். அதன் பின்னர் வழமையான ஏஜன்சிகள் மூலம் அப்பப்போ யாராவது சிலர் போய்க் கொண்டிருநதாலும் இவ்வருட ஆரம்பத்தில் நடை அவுஸ்திரேலிய பயணங்கள் தான் பெரும் பரபரப்பை ஏற்படுத்திச் சென்றது. ஆனால் இவை ஒன்றும் முதலாவது பயணமல்ல இதற்கு முன்னரும் பல வருடங்களாக கடலால் போய் அகதி அந்தஸ்து பெற்று வாழ்பவர்கள் உள்ளார்கள்.
ஆனால் அந்த பருவகாலத்திற்குரிய பயணங்களின் ஆரம்பத்தில் போரால் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்த ஒரு சிலரே உருண்டு பிரண்டு பணத்தை திரட்டி பயணிக்க அதனோடு அப்போர்வையை போர்த்திக் கொண்டு எம்மவர் வழமையான பயணத்தை ஆரம்பித்தார்கள்.

3, 4 லட்சங்களுடன் ஆரம்பித்த பயணமானது 15 லட்சங்களையும் கடந்து நிற்கிறது. அதுமட்டுமல்லாமல் பல போலி முகவர்களால் ஏமாற்றப்பட்டு வாயை மூடி வாழ்பவர்களின் தொகையும் மிக மிக அதிகமாகவே மாறிவருகிறது.
அண்மையில் திருகோணமலை சென்ற போது ஒரு நபர் தனது pulser 180 மோட்டார் சைக்கிளை ஒரு லட்சத்தி முப்பதினாயிரத்திற்கு அவசரமாக விற்றுச் சென்றதாக சொன்னார்கள். நான் நினைத்தேன் பழைய சைக்கிள் என்றபடியால் தான் அவ்வளவு விலை போயிருக்கிறது என்று. ஆனால் இரண்டு லட்சத்து அறுபதாயிரத்துக்கு எடுத்து 7 மாதமே ஆனா சைக்கிளை அவ்விலைக்கு விற்று விட்டு ஒருவர் போகிறாரென்றால் அவர் துணிவை என்னவென்று சொல்வது.
இதே போன்று முல்லைத்தீவு போன்ற பகுதிகளிலும் மலிவாக வாகனங்கள் கிடைக்கிறது மட்டுமல்லாமல் மிக மலிவாக மிகத் தரமான போன்களையும் பெறக் கூடியதாக உள்ளது.

இதனிடையே அகதி அந்தஸ்து கோரி பயணிப்பவர்களில் பல சிங்களவர்களும் பயணிப்பது தான் அவுஸ்திரேலியாவின் சட்டங்களில் இவ்வளவு ஓட்டை உள்ளதா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது. ஏனென்றால் திருப்பி அனுப்பப்பட்டவர்களில் அப்படி யாரும் வந்ததாகவே தெரியவில்லை.
ஆனால் சில வாரங்களாக விருப்பின் பேரில் நாடு திரும்புகிறார்கள் என்ற பேரில் பலர் திரும்பி வருகிறார்கள். அப்போது என்னிடம் இருந்த பெரும் கேள்வி என்னவென்றால் இத்தனை லட்சங்களைக் கட்டியதுமல்லாமல் இரண்டு வாரங்களுக்கு மேலாக உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு பயணித்து அங்கே 3 நேரச் சாப்பாட்டுடன் ஒரு மணித்தியால கணனியையும் விட்டு விட்டு ஏன் இவர்கள் விரும்பித் திரும்ப வேண்டும்.

ஒன்றில் அவர்கள் அங்கே அகதி அந்தஸ்து மற்றவர்களுக்கு கிடைக்கக் கூடாது என்பதற்காக ஒழுங்கு செய்யப்பட்ட கூலிகளா? அல்லது பணத்துக்காக படகுகளை ஓட்டிச் சென்றவர்களா? இப்படி பல கேள்விகள் இருந்தாலும் அவுஸ்திரேலியாவில் பல ஓட்டைகள் இருக்கின்றது என்பது பயணிக்க காத்திருப்பவருக்கு ஒரு தென்பைக் கொடுக்கின்றதே தவிர அந்த ஓட்டைகள் மூடப்படுமா அல்லது திறந்தே இருக்குமா என்பது எக்கணத்திலும் தீர்மானிக்க முடியாத ஒன்றாரும்.

நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா
10:57 PM - By ம.தி.சுதா 5

ஞாயிறு, 12 பிப்ரவரி, 2012

எனக்கே ஆப்பு வைத்துள்ள இலங்கை அரசின் புதிய சட்டம்

வணக்கம் உறவுகளே
சேமம் எப்படி..
நல்ல இடைவேளை ஒன்றின் பின் இவ் வலைப்பின்னல் ஊடே சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.


இலங்கை அரசானது தனது ஆட்சி முறமையில் பல புதிய சட்டங்களை இயற்றி வருகிறது. கடந்த சில காலத்திற்கு முன்னர் குடிகாரர்களுக்கு எதிராக ஒரு சட்டம் கொண்டுவத்திருந்தாலும் அது நடைமுறைச் சிக்கல் காரணமாக மதில் மேல் பூனை போலவே இருக்கின்றது.

புதன், 19 அக்டோபர், 2011

பாவி உயிர்களுக்காய் ஏங்கும் பச்சோந்தி ப.சிதம்பரத்தின் கோரப் பற்கள்

           அரசியல் என்றாலே பொய் புரட்டில் தேர்ந்தவராகவும் பித்தலாட்டக்காரராக கை தேர்ந்தவராகவும் இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதியாகும். ஆனால் கொலை வெறி பிடித்த காட்டு மிராண்டிகளாக இருக்க வேண்டும் என்பதற்கு எந்தத் தேவையுமில்லை.
10:41 AM - By ம.தி.சுதா 27

வெள்ளி, 12 ஆகஸ்ட், 2011

ஜனாதிபதியையே மதிக்காதா ஜனநாயக நாடு இந்தியா தான்.


பதிவின் நோக்கம்- இது ஒட்டு மொத்த இந்தியரையும் தாக்கி எழுதும் பதிவல்ல. இந்தியாவில் பிறந்தே பலர் மறந்து விட்ட ஒரு கதை பற்றியது.

                 
11:52 PM - By ம.தி.சுதா 37

புதன், 18 மே, 2011

உலகத் தமிழனுக்கு வன்னிமகனின் கெஞ்சல் மடல்..

என் அன்பு உறவுகளே சேமம் எப்படி ?

          இதைப் படிக்க தங்களுக்கு பொறுமை இருக்குமோ தெரியல இருந்தாலும் கெஞ்சிக் கேட்கிறேன் ஒரு 5 நிமிடம் இந்த ஈனத் தமிழனுக்காக செலவழியுங்களேன்.
         இந்த உலகத்தில் நாம் தனிமைப்படுத்தப்பட்டு பலரின் பகடைக்காய்கள் ஆகிவிட்டோம். ஒரு சில புலம் பெயர் தமிழரின் செயலால் எம்மிடம் இருக்கும் கொஞ்ச சுதந்திரமும் பறிக்கப்பட்டு விட்டது. அவர்களால் எம் மீது நிஜமான பாசம் கொண்ட பலரை கூட களங்கப்பட வைத்து விட்டார்கள்.. நான் நடந்ததை பற்றி அதிகம் கதைக்க விரும்பல நடக்கப் போறதைப்பற்றி கதைக்கவே விரும்புகிறேன். இங்கு நான் சொல்வது சிலருக்கு நியாயமாக படலாம் பலருக்கு கோபத்தை கிளறலாம். ஆனால் உங்கள் மனட்சாட்சியை தொட்டு சொல்லுங்கள் நான் சொல்வதில் ஏதாவது நியாயமின்மை இருக்கிறதா ?

வியாழன், 31 மார்ச், 2011

ஈழத் தமிழனுக்கு கருணாநிதியில் பிடித்த ஒரே சம்பவம்.

            உலக அரங்கில் நகரும் அரசியல் நகர்வுகளில் அடுத்ததாக சூடு பிடிக்க இருப்பது தமிழக தேர்தல் களமாகும்.
                 அண்மையில் ஒரு இந்திய நண்பர் என்னிடம் அளவளாவும் போது ஒரு கேள்வியைத் தொடுத்திருந்தார் அதாவது தமிழகத்தில் எனக்கு வாக்குரிமையிருந்தால் கலைஞருக்கா அல்லது செல்விக்கா வாக்களிப்பீர்கள் என்று கேட்டார். நான் பதில் சொல்லவில்லை அதையே என் நண்பர் சிலரிடம் கேட்டேன். அத்தனை பேரிடமிருந்தும் நாகரிகமான பதில் கிடைக்கவில்லை. நான் கூட அதற்கு விதிவிலக்கல்ல.

திங்கள், 20 டிசம்பர், 2010

யாழ்ப்பாணத்தில் உருவாகும் திரைப்படமும் அதன் பின்னணியும்.

                            எம்மவர்களின் திறமையை மீண்டும் நிருபிக்க ஒரு சந்தர்ப்பமாக நேற்று இது அமைந்தது. aaa movies international ஏற்பாட்டில் எடுக்கப்பட இருக்கும் பனைமரக்காடு என்ற குறும்படத்திற்கான பட பூசை வெங்கடேஸ்வர வரதராயப் பெருமாள் கோயிலில் இடம் பெற்றது.
      

வெள்ளி, 10 டிசம்பர், 2010

சீமானின் விடுதலையின் பின்னணி ரகசியம்

       இன்றைய செய்திகள் அனைத்தும் அவர் விடுதலை பற்றியே பேசிக் கொண்டிருக்கின்றன. நானும் அரசியல் பத்தி எழுதி நீண்ட நாள் ஆகிவிட்டது. உண்மையில் அரசியலிலோ அது சார்ந்த கட்டுரையளிலோ எனக்கு அவ்வளவு ஈடுபாடு இல்லை. சிலவேளை அவற்றை நுனிப் புல் மேய்ந்து வருவதும் உண்டு சிலவேளை என் தந்தையார் பெற்றுக் கொண்ட பாடங்கள் எனக்கு         அதை வேப்பம் கொட்டை போல் மாற்றியிருக்கலாம்.
              சரி விசயத்திற்கு செல்வோம். கடந்த 10-2-2010 அன்று தமிழக மீனவருக்கு ஆதரவாக நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றில் சில வீர வாசனங்கள் பேசிய குற்றத்தால் சீமான் அவர்கள் கைது செய்யப்பட்டிருந்தார். அவரை நேற்று நீதிமன்று திடீரென விடுதலை செய்தது.
11:00 AM - By ம.தி.சுதா 43

வியாழன், 25 நவம்பர், 2010

இந்தியாவிலும் தமிழர் சிறுபான்மையினரா..??

                என்ன கேள்வியைப் பார்க்க குழப்பமாயிருக்கிறதா..?? என்ன செய்வது கேட்க வைத்துவிட்டார்களே காரணம் இன்று இடம் பெற்ற மீனவர்களின் பேச்சு வார்த்தையாகும்.
              இன்று இந்தியா மற்றும் இலங்கை மீனவர்களிடையே மீன்பிடி சம்பந்தமான பேச்சு வார்த்தை ஒன்று இடம் பெற்றது இதில் இந்திய மீனவர் சார்பாக தேவதாசும் இலங்கை மீனவர் சார்பாக தவரட்ணமும் கலந்து கொண்டார்கள். இதில் தேவதாசால் வாரத்தில் 2 நாட்களாவது சுதந்திரமாக மீன்பிடிக்க அனுமதி கேட்கப்பட்டது அனால் தவரட்ணம் இதற்கு சம்மதிக்கவில்லை. அவர் சொன்ன காரணம் இந்திய மீனவர்கள் இழுவைப் படகுகளால் மீன் பிடித்து கடல் வளத்தை சீர் குலைக்கின்றனர் என்பதாகும். அனால் 1974 ல் ஏற்படத்தப்பட்ட ஒரு ஒப்பந்தத்தில் இரு சாராரும் சேர்ந்து மீன் பிடிக்கலாம் என்ற ஒரு பரஸ்பர ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
11:37 PM - By ம.தி.சுதா 66

வியாழன், 23 செப்டம்பர், 2010

அசினின் சமூகப்பணியால் பார்வையிழந்த யாழ் வறியவர்கள்...!!!

                      ஓவ்வொரு தமிழனும் கட்டாயம் பார்க்க வேண்டிய செய்தியாகும். முக்கியமாக பதிவர்கள், வாசகர்கள் மற்றும் இணைய உரிமையாளர்கள் ஒத்துழைப்பு நல்குங்கள்.
பாதிக்கப்பட்டவர்
                   இது அசினின் பிள்ளையார் பிடிக்க குரங்கு வந்த கதையாகும். இதில் உள் குற்றம் வெளிக் குற்றம் பார்க்கக் கூடாது தான் அனால் பாதிக்கப்பட்டது ஏழைகளல்லவா. திரையில் ஏழைகளுக்கு உதவத் துடிக்கும் நடிகர்களோ அல்லது அவர்கள் ரசிகர்களோ இதை கவனத்திலெடுங்கள்.
சம்பவம் என்னவென்றால் சில நாட்களிற்கு முன் யாழ் வந்திருந்த அசின் இங்குள்ள 300 வறியவர்களுக்கு விழிவெண்படல அறுவைச்சிகிச்சை இலவசமாக செய்து கொடுத்தார்.
12:34 PM - By ம.தி.சுதா 96

திங்கள், 13 செப்டம்பர், 2010

தமிழ் நாடு ஈழத்திற்கு இதையாவது தருமா..?

                       ஈழத்தமிழர் மீண்டும் ஒரு முறை தமிழக அரசிடம் வேண்டி நிற்க வேண்டிய தருணம் வந்திருக்கிறது. இதையாவது முதல்வர் கண்டு கொள்வாரா.. அல்லது பசப்பு வார்த்தை பேசி நழுவிக் கொள்வாரா தெரியவில்லை.
                         சம்பவம் இது தான் 2008 ம் ஆண்டளவில் நாமக்கல் மாவட்டத்தில் பொலிஸாரால் ஒரு சிலை கைப்பற்றப்பட்டது. இது முருகக் கடவுளின் பஞ்சலோகச் சிலையாகும்.
11:55 PM - By ம.தி.சுதா 16

ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2010

இலங்கை அரசின் குடிமக்களுக்கு எதிரான புதிய சட்டம்......


Hon. Maithripala Sirisena
Minister of Health
          இது இலங்கைக் குடி மக்களுக்காக சுகாதார அமைச்சு கொண்டு வந்திருக்கும் புதிய சட்ட அமுலாக்கலாகும்.
           போதைவஸ்தால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்கள் அதற்கான மருத்தவச் செலவை ஏற்க வேண்டும் என்று இலங்கையின் சுகாதார சேவைகள் அமைச்சர் எனது மூன்று பாலா தெரிவித்துள்ளார். அடடா குழம்பீட்டிங்களா நான் தமிழில் மொழி பெயர்த்த விட்டேன். அவர் பெயர் மைதிரிபாலா. இந்தச் சட்டம் போதை எதிர்ப்பிற்கு சார்பானதென்றால் எல்லோருக்கும் சந்தோசம் தான் ஆனால் இதனால் பாதிக்கப்படப் போவது குடிமக்களல்ல ஏழைக் குடியானவர்களே.
10:12 PM - By ம.தி.சுதா 6

வியாழன், 1 ஜூலை, 2010

GSP+ என்றால் என்ன?

                இது ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இலங்கைக்கும் இடையே இருக்கும் ஒரு வர்த்தக உடன்படிக்கையாகும். இந்த GSP+ ஐ 1971 ல் ஐரோப்பிய ஒன்றியம் அறிமுகப்படுத்தியது.


           இது என்னத்துக்காகவென்றால்.அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள், குறை அபிவிருத்தியை கொண்டிருக்கும் நாடுகள் என்பவற்றின் அபிவிருத்தியை கட்டி எழுப்புவதற்காக வழங்கப்படுவதாகும். இந்தச் சலுகையை 2005 ல் இலங்கை பெற்றுக்கொண்டது. இதனால் இலங்கையின் 7200 வகையான பொருட்களுக்கான வரிவிலக்கை ஐரோப்பிய ஒன்றிய வழங்கியது. இதில் முக்கியமானது தைக்கப்பட்ட ஆடைகளாகும்.
11:00 AM - By ம.தி.சுதா 14

மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்













back to top