சனி, 8 ஜனவரி, 2011

என் ஈழக் கனவிற்கு விளக்கம் தாருங்கள்..

                         என்ன நானும் பி.பி மாதிரி (பிலோசபி பிரபாகரனை நான் அழைக்கும் செல்லப் பெயர்) எழுத ஆரம்பித்து விட்டேனா என யோசிக்காதிங்க. எனக்கு கனவுகள் மீது ஒரளவு நம்பிக்கை உண்டு. ஆனால் எல்லாவற்றையும் சொன்னால் பைத்தியக்காரன் ஆக்கி விடுவார்களோ என்று பயம்.
         எனக்கு வரும் கனவுகளுக்கான தீர்வுகளை நானே கண்டு விடுவதால் பலதை சொல்வதே இல்லை ஆனால் நேற்று கண்ட கனவு என்னை குழப்பத்தில் ஆழ்த்தியது.
       கனவு கண்ட நேரம் அதிகாலை 3-5 ற்குள் இருக்கலாம்.வழமையாக வாரத்திற்கு ஒரு தடவையேனும் போர் சம்பந்தமான கனவுகள் என்னை ஆக்கிரமிப்பதுண்டு பெரும்பாலும் ஷெல் விச்சினுள் தப்புவது போன்றும், களம் ஒன்றின் ஊடு கடப்பது போன்றும் வரும். திடுக்கிட்டு எழும்பும் தருணங்களில் இரு கைகளையும் காதில் பொற்றியபடி முழங்கை நெஞ்சினுள் புகுத்திய பாதுகாப்பு நிலையில் கிடப்பேன். இது எனக்கு மட்டமல்ல பலருக்கிருக்கும் பிரச்சனை எனது மருமகன் இப்போதும் ஏதாவது பெரிய சத்தம் கேட்டால் உடனே விழுந்து படுப்பான்.

சரி எனது கனவிற்கு வருவோம்
        ஒரு கிபிர் (கபீர் என்றும் அழைப்பர்) மிக தாழ்வாகப் பறந்து இரண்டு குண்டுகளை போடுகிறது ஒன்று தாமதக் குண்டு (delay bomb) அடுத்தது றொக்கேட் வகையைச் செர்ந்ததாய் இருந்தது அது ஒரு வீட்டின் மீJ விழுகிறது நானும் நண்பர்களும் அந்த வீட்டை நோக்கி ஓடுகிறோம் ஓடும் போது ஒரே புகை மண்டலமாக இருக்கிறது ஆனால் அருகே போய் பார்த்தால் ஒரு நினைவுக்கல் போல் ஒன்று இருக்கிறது கேட்ட போது இறந்த மாணவர்களின் நினைவாக வைக்கப்பட்டுள்ளது என்கிறார்கள்
      
             எனக்கு ஒரே குழப்பமாக இருக்கிறது நான் எடுத்த முடிவுகள் சில
ஒன்று - வழமை போல் வருவது போல ஒன்றாக இருக்கலாம்
இரண்டு - அப்படி ஒன்று நிறுவப்படலாம்.
மூன்று - எனக்கு ஓசோவின் கனவு தியறி அடிக்கடி பொருந்தும் பகலில் எதாவது கோபம் அல்லது சந்தோசம் போன்றவற்றை அடக்கினால் இரவு கனவாக வரும்.(கோபம் வருவதில்லை அப்படி வந்தால் அது பெரும்பாலும் விளையாட்டு மைதானமாகத் தான் இருக்கும்) அப்படி அன்றும் இரு வெளிநாட்டு நபர்களுடனான அரட்டையில் அவர்களின் போர் சார்பான கருத்துக்களுக்கெதிராக வாதிட்டேன். அடக்க முடியாத ஒரு உணர்ச்சி என்ன செய்வது இதெல்லம் ஒரு சிலருக்கு ஆங்கிலப் படம் மாதிரித் தானே தேவையானால் விழுந்து கிடப்பவரை தட்டி எழுப்பி மீண்டும் போய் அடித்து விட்டு வா என்று விட்டு அவனின் பலகினம் தீர்க்க என காசு வாங்கி தம் சொகுசுக்காய் பயன்படுத்தவர்.
          சரி அதை கதைத்தால் நான் தேசத் துரோகி என்பார்கள் அது இருக்கட்டும் எனக்கு ஒரு தீர்வு சொல்லுங்கப்பா..
குறிப்பு - இன்னுமொரு போர் வரலாம் என யாரும் சொல்ல வேண்டாம் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். காரணம் குலைக்கும் நாய்கள் தம் குட்டியை கூட கடிக்க அனுப்ப மாட்டாது...

About the Author

நான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director
View all posts by admin →

Share This Post

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

47 கருத்துகள்:

தர்ஷன் சொன்னது…

//குலைக்கும் நாய்கள் தம் குட்டியை கூட கடிக்க அனுப்ப மாட்டாது...//

சவுக்கடி போன்ற வார்த்தைகள் ஆனால் உங்களை துரோகி எனத் தூற்றி இந்நேரத்திற்கு பின்னூட்டங்கள் வந்திருக்க வேண்டுமே

ம.தி.சுதா சொன்னது…

நன்றி தர்சன் உங்களுக்குத் தான் சுடு சோறு...

ARV Loshan சொன்னது…

ம்ம்.. (பெருமூச்சு)
சத்தமாக சத்தியத்தை சொன்னால் நீங்களும் துரோகி..

ம.தி.சுதா சொன்னது…

ஹ..ஹ..ஹ... நன்றி லோசண்ணா உண்மைகள் கசப்பானவையாமே...

Jana சொன்னது…

ஆ...கனவின் பலன் என்ன வென்றுதானே சுதா கேட்டீங்க?
ம்ம்ம்...உங்களுக்கு சீக்கிரமாக கல்யாணம் நடக்கப்போகுது.

ம.தி.சுதா சொன்னது…

ஜனா அண்ணா ஏன் இந்த நான் புளொக் எழுதவதை நிப்பட்ட இப்படி ஒரு சதியா இதில் பார்க்க நீங்க எனத புளொக்கை ஹக் பண்ணியிருக்கலாம்... ஹ.ஹ..ஹ.

டிலீப் சொன்னது…

நண்பா நீ போர் பற்றிய (வெளிநாட்டு நபர்களுடனான அரட்டையில் அவர்களின் போர் சார்பான கருத்துக்களுக்கெதிராக வாதிட்டேன்)
சிந்தனையில் தூங்கியிருப்பாய் அதுதான் அவ்வாறான் கனவு.

கனவில் வருவது நடப்பது என்பது ஓர் மூடநம்பிக்கையே.

ம.தி.சுதா சொன்னது…

வருகைக்கு நன்றி டிலீப் ஆரம்பத்தில் நானும் தங்களைப் போல் தான் இருந்தேன் ஆனால் எனக்கு பல நடந்திருக்கிறதே...

கனவு கனவாகவே போகட்டும் நண்பா.

ம.தி.சுதா சொன்னது…

ஆமாம் லட்சுமி அம்மா மிக்க நன்றி..

Subankan சொன்னது…

நீங்கள் பார்த்த, அனுபவித்த, உணர்ந்த ஆழ்மனத்து நினைவுகளே கனவுகளாக.


//குலைக்கும் நாய்கள் தம் குட்டியை கூட கடிக்க அனுப்ப மாட்டாது...//

நிஜம்... சுடும்!

ம.தி.சுதா சொன்னது…

வருகைக்கு நன்றி சுபா ஏதோ பார்த்திருப்போம்...

Unknown சொன்னது…

///அப்படி அன்றும் இரு வெளிநாட்டு நபர்களுடனான அரட்டையில் அவர்களின் போர் சார்பான கருத்துக்களுக்கெதிராக வாதிட்டேன்///
போருக்கு சார்பாகக் கதைக்கிற உரிமை உங்களுக்கு உண்டு சுதா.. அதே போல் எதிராகவும். போருக்கு சார்பாகக் கதைக்கிற உரிமை நான் உட்பட்ட வெளிநாடுவாழ் ஈழத் தமிழர்களுக்கு அறவே இல்லை என்பதை வெட்கத்தைவிட்டுச் சொல்லிக்கொள்கிறேன்.

இன்னொன்றையும் சொல்லவேண்டும். எங்கள் குடும்பநண்பர் ஒருவர் வன்னி அழிவுக்காலத்தில் மக்கள் இராணுவக்கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வருவது தவறென்றும், சாவது அவர்களின் கடமை (இதே சொற்களை உபயோகித்தார்) சொன்னார். அந்தக் கடமையை நீங்களும் உங்கள் குடும்பமும், நானும் ஏன் செய்யவில்லை என்றபோது பேசாமல் இருந்தார். அவருக்கு இன்னும் சுடத்தக்கதாக ஏதாவது சொல்ல அன்றைக்குச் சொற்களிருக்கவில்லை. இன்றைக்கிருக்கின்றன.. “குலைக்கும் நாய்கள் தம் குட்டியை கூட கடிக்க அனுப்ப மாட்டாது”

FARHAN சொன்னது…

உங்களிற்கு விருது கொடுத்துள்ளேன் பெற்றுக்கொள்ளவும்
http://qaruppan.blogspot.com/2010/12/2010.html

ம.தி.சுதா சொன்னது…

நன்றி கிருத்தி... தங்களின் கருத்து ஆழமானது தான் தமிழனுக்கென்று சில அடிப்படை குணம் இருக்கிறது அவை அத்தனையும் நீங்கள் சொன்னவரிடம் இருக்கிறது. நாட்டுக்காக அது செய்தோம் இது செய்வோம் என்றும் தமக்கு 40 வயது என்றும் சொல்வார்கள் ஆனால் அவர்கள் சொல்லிக் கொண்டு குளிர் காய்ந்தது ஒரு 16 வயதுக்காரனின் குருதியில் என்று தெரியுமோ தெரியாது...

நிரூஜா சொன்னது…

கிடைக்குங்கிறீங்க?

ம.தி.சுதா சொன்னது…

நன்றி சகோதரம் இதோ வருகிறேன்...

ம.தி.சுதா சொன்னது…

ஏன் நிரூஜா இப்படி ஒரு கேள்வி... ஹ..ஹ..ஹ..

ஷஹன்ஷா சொன்னது…

அண்ணா தங்களின் இக்கனவு பலிக்காது......பலிக்க கூடாது....

ஆயதங்களால் நிலைத்து நிற்கும் தீர்வுகள் (sustainable solutions) ஒருபோதும் ஏற்படப்போவதில்லை. இது பற்றி நிறையப் பேசியாயிற்று.

என்னுடைய நாடு இலங்கை இருக்கும் போதிலே எனக்கு எதற்கு தனிநாடு? எந்த ஒருவனுக்கும் எனது தேசத்தில் எனக்கிருக்கும் உரிமையை மறுக்க அதிகாரமில்லை. எந்த அரசாங்கம் மறுத்தாலும் நாங்கள் ஒத்துழைக்கமாட்டோம். இலங்கை எங்களுடைய தேசமும்கூட எங்களை இலங்கையர்கள் இல்லை என்று சொல்லவோ, எங்களை விலக்கி வைக்கவோ எவனுக்கும் உரிமையில்லை அப்படிச் யாரும் செய்தால் அதற்கெதிராகப் ஜனநாயக ரீதியில் போராடுவோம், ஒத்துழைப்பு நல்க மறுப்போம்.

எவருடையதேனும் உணர்வுகளை நான் புண்படுத்தினால் - மன்னிக்கவும் ஆனால் யுத்தங்களும், ஆயுதங்களும், வன்முறைகளும் எதனையும் சாதிக்கப்போவதில்லை என நான் உறுதியாக நம்புகிறேன். I believe in the noble path Martin Luther King Jr followed based on Gandhian non-violence principles.

இனி ஒரு யுத்தம் எதற்கு? இன்னும் அழிவுகளைத் தாங்கக்கூடிய சக்தி எமது மக்களிடம் இல்லை.

இதற்கு வால்பிடிக்காத, தலையாட்டாத - நியாயமான ஜனநாயக வழிகளில்தான் நாம் தீர்வுகாணமுடியும்!

ஷஹன்ஷா சொன்னது…

அதே கருத்துதான் என் கருத்தும் என்.கே.அஷோக்பரன்

உங்களைத் துரோகி என்பர்களைக் கணக்கெடுக்காதீர்கள். உங்கள் மனச்சாட்சிக்கு நீங்கள் நியாயமாக நடந்தால் போதும், மற்றவனது வாய்ச்சவடாலுக்கேற்ப வாலாட்டத்தேவையில்லை.

Meena சொன்னது…

கனவை நன்றாக ஞாபகம் வைத்து எழுதி இருகிறீர்கள். பாராட்டுக்கள்
சின்ன வயசில எங்க அப்பா போர் நடந்த இடத்துக்கு வேலை விஷயமா சென்று வந்தார்
அதனால் எனக்கும் எப்பொழுதாவது கனவு வரும் குண்டு வீச்சிலிருந்து ஒளிந்து மறைவது மாதிரி.

Unknown சொன்னது…

என்னைபொருத்தவரை உங்கள் கனவு உங்க அடிமன குழப்பமே!

உண்மையில் இலங்கையில் என்ன பிரச்னை, எங்க பிரச்சனை என்று இந்திய தமிழருக்கு முழுதும் தெரியாது......அதுதான் உண்மையான பிரச்சினை....

இதில் தவறு இருப்பின் மன்னிக்கவும் மற்றும் தமிழனின் மரபு பிரச்னை எளிதில் உணர்ச்சிவசப்படுதல் இதுவே மிகப்பெரிய பிரச்னைகளுக்கு காரணம்.

Paul சொன்னது…

இக்கனவு நிஜம் காணாது.. கவலைப் படவேண்டாம்..!!

Unknown சொன்னது…

யுத்தம் பற்றி சொல்ல (ஆதரவோ, எதிரோ) அதன் முழு வீச்சும், பரிமாணமும் தெரிந்த உங்களுக்கு மட்டுமே உரிமை உண்டு! தொலை தூர ஊளைச்சத்தங்களை விட்டுத்தள்ளுங்கள்!
//பலருக்கிருக்கும் பிரச்சனை எனது மருமகன் இப்போதும் ஏதாவது பெரிய சத்தம் கேட்டால் உடனே விழுந்து படுப்பான்//
உண்மை!
உங்கள் ஆழ்மனதின் வலி மிகுந்த நினைவுகளே கனவாக!

Unknown சொன்னது…

ஒவ்வொரு ஆணும் திருமணத்தின்போது மனதளவில் இறந்து விடுகிறான் - யாரோ!
அந்தக் கல்லறை, உங்களுக்கு திருமணம் நடக்க இருப்பதன் ஒரு குறியீடாக இருக்கலாம்!

அந்தவகையில் அனுபவமிக்க ஜனா அண்ணாவின் கூற்று ஆராயப்பட வேண்டிய ஒன்று!
சூதானமா நடந்துக்குங்க சுதா!!! :-)

காக்டைல் சொன்னது…

அங்கு நடக்கும் செய்திகளை அடிக்கடி எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்
எதன் சார்பும் இல்லாமல்..
நான் புதுசு உங்கள் ஆதரவை எதிர்பார்க்கிறேன்
http://jokespic.blogspot.com/2011/01/blog-post.html

THOPPITHOPPI சொன்னது…

எனக்கு தெரியும் நண்பரே ஒரு சாமானியனின் கணுவு இப்படித்தான் வந்து போகும் என்று. இங்கே இருப்பவர்கள் சிங்களனை எதிரியாகவும் தமிழன் வீரனாகவும் கனவுக்கண்டுக்கொண்டு எப்போதும் போர் பற்றியே பெருமையாக பேசுகிறார்கள். அதன் விளைவு என்ன?.

என்னுடைய வேண்டுதல் எல்லாம் அங்கே இருப்பவர்கள் வீரர்களாக வாழ வேண்டும் என்பதல்ல. எங்களைப்போல் அவர்களும் உணவு, உடை, கேளிக்கை என்று சந்தோஷமாக இருக்கவேண்டும் என்பதுதான், ஏன் என்றால் இங்கே இருப்பவர்கள் அவர்களை விட வீரர்கள் இல்லை.

anuthinan சொன்னது…

// குலைக்கும் நாய்கள் தம் குட்டியை கூட கடிக்க அனுப்ப மாட்டாது//

:))))

இளங்கோ சொன்னது…

நாம் கனவுகளில் தானே வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

Unknown சொன்னது…

போரின் வலி வெறும் சாதாரண வலியல்ல அதை உணந்தவனுக்குத்தான் அதன் வலி புரியும் உங்களைப்போல் எத்தனையோ உள்ளங்கள் தினம் தினம் பயங்கரமான கனவு கண்டு நின்மதியைற்ற மன நிலைமையோடு வாழ்கின்றார்கள் இந்த மண்ணில்.

உடல் காயம் மாறினாலும் உள்ளக் காயம் மாறது இதெல்லாம் குளிரூட்டப்பட்ட அறைகளில் வாழும் வாய்ச்சொல் வீரர்களுக்கு புரியாது.

கவி அழகன் சொன்னது…

நான் நித்திரை

Unknown சொன்னது…

சகோதரம் தங்கள் தளத்தின் புதிய பதிவுகள் எனது தளத்தில் புதிப்பிக்கப்படுவதில்லை, என்ன காரணம்?? அன்மையில் உங்கள் தளத்தில் ஏதாவது மாற்றம் செய்தீர்களா?? நான் உங்கள் தளத்தை நீக்கிவிட்டு மீண்டும் இணைப்புக் கொடுத்துப் பார்த்தேன் மற்றம் தெரியவில்லை .

பதில் தரவும்
நன்றி

ஹேமா சொன்னது…

சுதா...சில கனவுகள் நிச்சயம் பலிக்கும்.காலதாமதம் அவ்வளவேதான்.தொடரட்டும் கனவு இன்னும் அழுத்தமாக !

இந்த விஷயத்தில் கருத்துக்கூற எனக்கு மனமில்லை சுதா! உண்மை எங்கோ இருக்க உலகம் எதையோ சொல்லிக்கொண்டு இருக்கிறது! அதி உச்ச தகவல் தொழில்நுட்ப நாடுகளில் வாழ்பவர்களுக்கு மட்டும்தான் உண்மைகள் தெரிவதில்லை!!

//அப்படி அன்றும் இரு வெளிநாட்டு நபர்களுடனான அரட்டையில் அவர்களின் போர் சார்பான கருத்துக்களுக்கெதிராக வாதிட்டேன்.//
அதைப்பற்றியே சிந்தித்துக்கொண்டிருப்பதால் வந்திருக்கும்...
மீண்டும் ஒரு போர் வரக்கூடாது என்று இறைவனை வேண்டிக்கொள்கிறேன்...

Adriean சொன்னது…

வெறும் கனவு தான் கவலையை விடுங்கள்.
"குலைக்கும் நாய்கள் தம் குட்டியை கூட கடிக்க அனுப்ப மாட்டாது" வெளிநாடுவாழ் இலங்கை தமிழர் பெரும்பான்மையோர் பற்றிய மிக சரியான கணிப்பு.
விக்கி உலகம் சொன்னது மிகவும் சரியானது.

vanathy சொன்னது…

கனவு - விளக்கம் தெரியவில்லை. எப்போதும் அந்த சூழ்நிலையில் வாழ்ந்த எஃபெக்ட் தான்.

எஸ்.கே சொன்னது…

மிக்க நன்றி நண்பரே எங்களிடம் தங்கள் கனவை பகிர்ந்து கொண்டதற்கு. என்னால் இயன்றவரை தங்கள் கனவிற்கு விளக்கமளிக்கிறேன்!

ஒரு கிபிர் (கபீர் என்றும் அழைப்பர்) மிக தாழ்வாகப் பறந்து இரண்டு குண்டுகளை போடுகிறது ஒன்று தாமதக் குண்டு (delay bomb) அடுத்தது றொக்கேட் வகையைச் செர்ந்ததாய் இருந்தது அது ஒரு வீட்டின் மீJ விழுகிறது நானும் நண்பர்களும் அந்த வீட்டை நோக்கி ஓடுகிறோம் ஓடும் போது ஒரே புகை மண்டலமாக இருக்கிறது ஆனால் அருகே போய் பார்த்தால் ஒரு நினைவுக்கல் போல் ஒன்று இருக்கிறது கேட்ட போது இறந்த மாணவர்களின் நினைவாக வைக்கப்பட்டுள்ளது என்கிறார்கள்

தங்கள் கனவில் வருகின்ற முக்கிய குறியீடுகள் 1. குண்டு போடும் விமானம். 2. ஒரு நினைவுக் கல்

கனவில் வெறும் விமானங்கள் வருவது உங்கள் வாழ்வில் ஏதோ மாற்றம் தேவைப்படுகிறது(அல்லது சமீபத்தில் அந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது) என்பதை குறிக்கின்றது.

குண்டு வெடித்தல் என்பது ஒரு எதிர்பாராத நிகழ்வை குறிக்கின்றது. மேலும் மரண பயத்தையும் இது சொல்கிறது. இப்படிப்பட்ட அழிவுக் கனவுகள் நம் கோபம், வெறுப்பு போன்ற உணர்வுகளின் வடிகாலாகவும் ஏற்படலாம் என உளவியல் நிபுணர்கள் சொல்கிறார்கள்.

ஆனால் இந்த கனவில் யாரும் உயிரிழப்பதை போலவோ அல்லது காயம்படுவது போலவோ ஏற்படவில்லை. எனவே இது ஒரு சூழல் மோசமாவதற்குள் தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது.

நினைவுக்கல் பொதுவாக மகிழ்ச்சியான தருணங்களை, புனித நினைவுகளை சுட்டிக் காட்டுகிறது. மேலும் மிகுந்த மதிப்பு மரியாதை கொண்ட விசயங்களையும் குறிக்கின்றது.

தங்கள் கனவு தங்கள்/தங்களுக்கு நெருக்கமானவர்களின் கல்வியில் ஏதோ பெரிய மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்பதையே பெருமளவு சுட்டிக் காட்டுகிறது. கல்வியில் மகிழ்ச்சியான தருணங்களை நினைவுபடுத்துகிறது. அப்படி இப்போது இல்லை. கஷ்டப்படும் நிலை இப்போது உள்ளது. அதில் ஒரு மாற்றத்தை உங்கள் மனம் விரும்புகிறது.


அன்புடன்
எஸ்.கே

மாணவன் சொன்னது…

நண்பர் எஸ்கே முடிந்தளவுக்கு உங்கள் கனவைப் பற்றிய விளக்கங்களுக்கு பதில் அளித்துவிட்டார் என்றே நினைக்கிறேன் நண்பா

உங்களின் கனவு பகிர்வுக்கு நன்றி நண்பரே

Chitra சொன்னது…

வேதனையான நிலைகள். ..... ம்ம்ம்ம்......

Kandumany Veluppillai Rudra சொன்னது…

நல்லதே நடக்கும்,நல்லதையே நினையுங்கள்.

rajvel சொன்னது…

நல்லதே நடக்கும்

பெயரில்லா சொன்னது…

http://nekalvukal.blogspot.com/2011/01/blog-post.html

தமிழனுக்கென்று சில அடிப்படை குணம் இருக்கிறது அவை அத்தனையும் நீங்கள் சொன்னவரிடம் இருக்கிறது. நாட்டுக்காக அது செய்தோம் இது செய்வோம் என்றும் தமக்கு 40 வயது என்றும் சொல்வார்கள் ஆனால் அவர்கள் சொல்லிக் கொண்டு குளிர் காய்ந்தது ஒரு 16 வயதுக்காரனின் குருதியில் என்று தெரியுமோ தெரியாது.

பெயரில்லா சொன்னது…

போரின் வடுக்கள் இன்னும் நெஞ்சத்தில் இருந்து அகழாத வரை .. பெரும் தீக்கினா வந்தே இருக்கும் .............

போர் என்பது எதற்கும் முடிவு சொல்லாது .. போர் சமாதானத்தைக் கொண்டு வராது......... !!!

போராட்டம் என்பது திணிக்கப்படக் கூடாது.. அது மக்களிடம் இருந்து மக்களுக்காக மக்களால் ஏற்படுத்தப்படுவதே ஒரு போராட்டம்...

இரண்டு கருத்திலும் நான் உறுதியாக இருக்கின்றேன். நெஞ்சில் பட்டத்தை ஈழத்தில் இருந்து பதிவு செய்யவே தனித் துணிச்சல் வேண்டும் சகோ.

நிச்சயம் உங்கள் மனதில் போரின் வடுக்கள் விரைவில் மாறும். போர் குறித்தான சிந்தனைகளில் இருந்து சற்றே இலக்கியம், கலைகளில் மனதை ஆற்றுவதால் ஆறுதல் கிட்டலாம் என்பது எனது சிந்தை.

மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்













back to top