Featured Articles
All Stories
my short film லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
my short film லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 19 மே, 2017

இறுதிப் போர் வலியைச் சொல்லி சர்வதேச விருதுகள் வென்ற என் குறும்படம்

வணக்கம் உறவுகளே


எம் வலிகளின் ஒரு பகுதியையேனும் வெளி உலகுக்கு காட்ட வேண்டும், எமக்கு இன்னும் ஒரு போர் வேண்டாம் என்ற எண்ணத்துடனும் என்னிடம் இருந்த வளம், அறிவு என்பவற்றை வைத்துக் கொண்டு 2013 இல் இக் குறும்படத்தை உருவாக்கியிருந்தேன்.
இக்குறும்படத்துக்கு என்னோடு துணிந்து நின்று உழைத்தவருக்கும் தடைபட்டுக்கிடந்த படைப்பை பூரணப்படுத்த உதவி செய்து..... இத்தனை சர்வதேச விழாவில் விருதுகளை பெற்றுத் தந்ததுமல்லாமல் எம் பிரச்சனை ஒன்றை அவர்கள் காணச் சந்தர்ப்பம் கொடுத்த என் அன்பு உறவு எல்லோருக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.
miraa creation present
cast - erampu, mathisutha, janakan
music - sutharsan
editing - steepan sansigan
vfx - mathuran raveendran
camera - lokakanthan
assist - sujitha
production manager - sayan
poster - omar
photoghraphy - kugaruban
story, screen play, directed by MaThiSUTHA
contact - 0094750409201





என் பதிவுகளுடன் இணைந்திருக்க கீழே உள்ள பேஸ்புக் லைக் பொத்தானைச் சொடுக்கிச் செல்லவும்.
7:30 PM - By ம.தி.சுதா 3

செவ்வாய், 27 டிசம்பர், 2016

என்னுடைய முழு நீளத் திரைப்படத்தின் முன்னோட்டம் உங்கள் பார்வைக்கு

வணக்கம் உறவுகளே...

தொழில்நுட்ப வளங்களை முழுமையாக அடையாத என் மண்ணில் இருந்து தயாரிப்பாளரும் கிடைக்காத நிலையில் என்னிடம் இருந்த வளம் சினிமா அறிவு என்பவற்றை வைத்து “உம்மாண்டி“ என்ற இந்த முழு நீளத் திரைப்படத்தை முடித்து அதன் முன்னோட்டத்தை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.
இதை கிளிக் செய்து உங்கள் பேஸ்புக்கிலும் பகிர்ந்து மற்றைய நண்பர்களையும் சென்றடைய உதவுங்கள்.

நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
மதிசுதா


8:44 PM - By ம.தி.சுதா 2

சனி, 6 டிசம்பர், 2014

வன்னி மீண்ட பெண்களின் களங்கம் கலைக்க நாம் படைத்த ஒரு படைப்பு - “கொண்டோடி குறும்படம்”

வணக்கம் உறவுகளே
சேமம் எப்படி?


 நாம் வெளியிட்டிருந்த புதிய படைப்பு ஒன்றுடன் உங்களைச் சந்திக்கிறேன்.
முழு நீளத் திரைப்படத்துக்கு தயாராகும் நாம் எமது செயற்பாட்டு வேகத்தை அதிகரிப்பதற்காக இக் குறுகிய காலப் படப்பிடிப்பு ஒன்றை கையில் எடுத்துக் கொண்டோம். ”கொண்டோடி” என்று தலைப்பிடப்பட்ட இக் குறும்படத்துக்கான படப்பிடிப்பு மற்றும் பின்கள வேலைகளை 12 மணித்தியாலத்திற்குள் முடித்து வெளியிட்டிருந்தோம்.

இக்குறும்படத்தை RTK friends media தயாரித்திருந்தது. எம் மீது அவர்கள் வைத்த நம்பிக்கையை நாம் கூறியது போல காப்பாற்றியிருந்தது எமக்கு மிகப் பெரிய சந்தோசமான விடயமாகும்.

குறும்படத்துக்கான கதை, திரைக்கதை, இயக்கத்தை நான் பார்த்துக் கொள்ள ஒளிப்பதிவை முதுரனும் சன்சிகனும் செய்தார்கள்.
என்னோடு உதவி இயக்கத்தை ஜனகன் செய்து கொள்ள கதைக்கான உணர்வை
கவிதாயினி, சுஜிதா, சோபி ஆகியோர் செதுக்கி கொடுத்திருந்தார்கள்.

படத்தொகுப்பை மதுரனும் ஒலியமைப்பை சன்சிகனும் மிக வேகமாக செய்து கொடுத்தார்கள்.

எம் பரிட்சார்த்தமாக செய்த இப்படைப்பை தற்போது பகிர்ந்திருந்தாலும் செப்பனிடப்பட்ட படைப்போடு மீண்டும் சந்திக்கலாம்.

தங்களது மேலான கருத்துக்களுக்காக இக்குறும்படம் பகிரப்படுகிறது

நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
மதிசுதா


11:48 AM - By ம.தி.சுதா 0

சனி, 30 ஆகஸ்ட், 2014

முன்னாள் போராளிகளுக்காக எமது புதிய குறும்படம்

வணக்கம் உறவுகளே சேமம் எப்படி?



எமது ஆய்வம் குழுமத்தின் மூன்றவது படைப்பாகவும் என்னுடைய இயக்கத்தில் வெளியாகும் ஐந்தாவது குறும்படமாகவும் (மிச்சக்காசு, தொடரி துலைக்கோ போறியள்  , ரொக்கட் ராஜா  ஐ தொடர்ந்து) வெளியாகிறது ”தழும்பு” குறும்படம்.
இக்குறும்படம் ஒரு முன்னாள் போராளியின் இந்நாள் வாழ்க்கைப் போராட்டத்தை சித்தரித்துள்ளது.. பல விடயங்களை வசனமாகவோ கதையாகவோ உட்புகுத்த முடியாமையால் காட்சிகளாகவே புகுத்தியுள்ளோம்.
நானே இக் குறும்படத்துக்கான திரைக்கதையை அமைத்து இயக்கி நடித்துள்ளேன். நெற்கொழுதாசனுடைய சிறுகதை ஒன்றின் மூலத்தை அடிப்படையாக வைத்து இந்த திரைக்கதையை குறும்படத்துக்கு ஏற்றாற் போல மாற்றப்பட்டிருந்தது.
படத்துக்கான ஒளிப்பதிவை பாலமுரளியும், படத்தொகுப்பை மதுரனும், இசையை தர்சனனும் வழங்கியிருக்கிறார்கள்.
படத்துக்கான ஒலியமைப்பை சன்சிகள் மேற்கொள்ள சீனா உதயகுமார், தினேஸ் ஏகாம்பரம், லக்ஸ்மன், குமணன், தீபன் ஆகியோர் நடித்துள்ளார்கள்.
குறும்படத்துக்கான முக்கிய உதவிகளை மாதவனும், துவாரகனும் வழங்கியிருக்கிறார்கள்.

இதே குழு தான் அடுத்த கட்டமாக ”உம்மாண்டி” என்ற முழு நீளத் திரைப்படத்துக்கான நகர்வுகளிகன் முக்கிய கட்டங்களை கடந்துள்ளது. முற்று முழுதாக ஈழத்தை மையப்படுத்தியதும் ஆனால் முற் போக்குத்தனமான ஈழத்தில் இதுவரை யாரும் தொடாத ஒரு பக்கத்தை தொடக் கூடியதுமான திரைக்கதையுடன் களம் இறங்கும் இக் குழுவுக்கு உதவ விரும்புபவர்கள் உதவலாம்.

கனடாவில் ஸ்டார் 67 என்ற வெற்றிப் படம் ஒன்றைக் கொடுத்த இயக்குனர் கதி செல்வக்குமாரின் இணைத் தயாரிப்புடன் பயணத்தை ஆரம்பித்திருக்கும் இக்குழுவிற்கு படைப்பை பூரணப்படுத்தவதற்கு தங்களால் இயன்ற சிறு தொகையையாவது கடனாக பகிரலாம். நிச்சயம் அத்தொகை தாங்கள் குறிப்பிடும் சட்ட ஒழுங்குகளுடன் பெறப்பட்டு திருப்பியளிக்கப்படும் என்பதை இயக்குனராக  உறுதிப்படுத்துகிறார்.

தொடர்பிற்கு -
mathisutha56@gmail.com
0094773481379

நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா
10:09 PM - By ம.தி.சுதா 4

செவ்வாய், 8 ஏப்ரல், 2014

இலங்கை குறும்படத்துறையில் மொபைல் புரட்சியோடு எம் படைப்பு

வணக்கம் உறவுகளே
சேமம் எப்படி?
முற்குறிப்பு - இது ஒரு சுயபுராண ஆக்கமாகும்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் “மிச்சக்காசு“ என்ற குறும்படத்தை வெளியிட்டிருந்தோம் இக்குறும்படம் sumsung s3 மொபைலில் படமாக்கப்பட்டு sumsung galaxy tab ல் இசை அமைக்கப்பட்டும் இருந்தது.
இப்படைப்பில் மதுரன், துவா, மதீசன், சங்கர், சுதேசினி, சுஜிதா போன்றோர் உழைத்திருந்தார்கள்.
பல்வேறு பட்ட நாடுகளில் இருந்தும் பல்வேறுபட்ட துறைசார்ந்தவர்களிடம் இருந்தும் இப்படைப்புக்கு பாராட்டுக் கிடைத்தது ஒரு எதிர் பார்க்காத வெற்றி ஒன்றாகும்.
அதிலும் தென்னிந்திய இயக்குனர் ஒருவரின் பாராட்டுக்கிடைத்தது மிகப் பெரும் சந்தோசமாக இருந்தது.
குறிப்பாக உள் நாட்டிலேயே ஒரு சில ஊடகங்கள் தவிர மற்றைய எதுவும் கவனிக்கத் தவறிய படைப்பு ஒன்றை இந்திய ஊடகங்கள் கவனத்தில் எடுத்தது வியப்பை அளித்தது.
உ+ம் - சில நட்களுக்கு முன்னர் THE HINDU பத்திரிகையில் விமர்சனம் ஒன்று வெளியாகியிருந்தது.
அத்துடன் சிறந்த திரைக்கதைக்கான விருது ஒன்றையும் இக்குறும்படம் பெற்றுக் கொடுத்திருந்தது.
அதை விட எமக்கு பெருமை அளித்த விடயங்களில் ஒன்று MRTC ன் ஆவணப்பட செயலமர்விற்கு வந்திரந்த ஜேர்மனிய இயக்குனர் அலெக்சாண்டர் ரைடல் இப்படைப்பைப் பார்த்து வியந்து அளித்த கருத்துக்கள் தான். இப்படைப்பின் தரத்தை தனது நண்பர்களுக்கு காட்ட என அப்படைப்பை தன்னொடு எடுத்துச் சென்றதும் மிக முக்கிய சம்பவமாகும்.
அவர் கருத்தக்கள் இவ் ஒலித் தொடுப்பில் இருக்கிறது

 

இக்குறும்படத்துக்கு வெளிப்படையான கருத்துக்களைத் தந்ததோடில்லாமல் பகிர்ந்து எமக்கு ஆக்கமும் ஊக்கமும் தந்த அனைத்து உறவுகளுக்கும் நன்றிகள்.

மிச்சக்காசு குறும்படத்தைக் காண


இப்படைப்பை வழங்கிய அதே குழுவினர் “ஆய்வம்“ என்ற பெயருடன் இன்று இரவு 7 மணிக்கு “தொடரி“ என்றதொரு வித்தியாசமான படைப்புடன் உங்களை சந்திக்கிறார்கள். இக்குறும்படத்தில் 10 சோடி கால்களும் ஒரு சொடி கைகளும் மட்டுமே நடித்திருந்தமை குறிப்பிடத் தக்க விடயமாகும்.


நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா

மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்













back to top