எந்தக் காலத்திலும் திரைப்படங்களுக்கான மவுசு குறைந்ததே இல்லை. அதிலும் முன்னணி நாயகர்கள் என்றால் சொல்லவும் வேண்டுமா?
சென்ற வருடம் பெரும் எதிர்பார்ப்புகளோடு வெளியாகி பெரு வெற்றி பெற்ற திரைப்படம் ரஜனி, சங்கர், ரகுமான் கூட்டணயில் உருவான எந்திரனாகும். அதன் வெற்றியின் பிரதான காரணம் பல்துறைப்பட்ட ரசிகர்களையும் ஒரே நேரத்தில் திருப்திப்படுத்தியமையேயாகும்.
உதாரணத்திற்கு ரஜனி தனது ரசிகரை திருப்திப்படுத்த ரகுமான் இசையாலும், ஐஸ்வர்யராய் ஜொள்ளாலும், சங்கர் அறிவியலாளர்,பிரமிப்பாளர் என எல்லோரையும் திருப்திப்படுத்தினார்கள்.
அப்படத்தில் என்னை மிகவும் திருப்திப்படுத்திய இடம் அறிவியல் தான் உதாரணத்திற்கு சொல்லப் போனால் பிரசவம் பார்ப்பதும், அதிர்வைக் கொண்டே அந்தப் பாடல் பெட்டியை தகர்ப்பதுமாகும்.
அதெல்லாவற்றையும் விட எந்திரனின் வசூல் வியக்க வைத்தது வாருங்கள் அதை தருகிறேன் (தகவலை பில்மிக்ஸ் ல் பெற்றுக் கொண்டேன்)
முதல் 10 வாரத்தில் அதிகார பூர்வமான வசூல் – 375 கோடி
வெளிநாட்டில் 75 கோடிக்கு மேல் வசூலித்த ஒரே இந்தியப்படம்
திரையிட்ட நாடுகள் – 33
மொத்த திரையரங்கம் – 3000
இந்தியாவில் திரையிடப்பட்டது – 2000
ஆந்திரத்தில் 700 திரையரங்கு
சரி தலைப்பிற்கு வருவோமா? எந்திரன் திரைப்படமானது 01.10.2010 அன்றே வெளியிடப்பட்டது. எல்லோருக்கும் ஒரு பிரமாண்டப்படத்திற்கு முதல் விமர்சனம் எழுத வேண்டுமென்ற தீராத ஆசையிருக்கும். அதிலும் அந்தச் சந்தர்ப்பத்தை முதலில் பெறுபவர்கள் பதிவர்களே.
உலகளாவிய ரீதியில் எந்திரனுக்கு முதல் முதல் விமர்சனம் எழுதியது யார்? இந்தக் கேள்விக்கு பதில் என்ன தெரியுமா. யாழ்ப்பாணப்பதிவர்களே என்று சொன்னால் நம்பக் கஸ்டமாகவே இருக்கும்.
ஆனால் இதை நம்புங்களேன். இங்கு 30.09.2010 அன்றே யாழ்ப்பாணத்தின் ராஜா திரையரங்கில் திரையிடப்பட்டுவிட்டது. இதற்கான முதல் விமர்சனத்தை எழுதியவர்
குறைந்த வயதில் பதிவுலகத்திற்குள் நுழைந்து மிக ஜனரஞ்சகமான பதிவுகளைத் தந்த கூல் போய் என செல்லமாக அழைக்கப்படும் கிருத்திகன். பதிவுக்கான தொடுப்பிற்கு தலைப்பைச் சொடுக்குங்கள்.
எந்திரன் ஏமாற்றவில்லை... விமர்சனம்
இரண்டாவதாக எழுதியவர் ரஜனியின் மிகத் தீவிர ரசிகரும் மிகவும் வியக்கத்தக்க தேடல்கள் கொண்ட பதிவுகளை தந்தவருமான எப்பூடி ஜீவதர்சன் என்பவராகும். இவர் ஒரு இலங்கைப் பதிவரென்பது இதுவரை பலருக்குத் தெரியாது. பதிவர்களில் அவர் நேரில் சந்தித்ததும் அவரை நேரில் சந்தித்ததும் நான் மட்டும் தான் எனக் கூறியிருந்தார். (அவர் உறவுக்காரரான பதிவரைத் தவிர) அவர் எழுதிக் கொண்டிருந்த இந்தவார இருவர் பதிவுக்கு எப்போதும் பெரு எதிர் பார்ப்பிருந்து கொண்டே இருந்தது.
அதெல்லாம் சரி இன்னும் ஒருவர் எழுதினேன் என அவரே சொல்லிக் கொள்கிறார். ஆனால் பதிவுலகத்தில் நீ எங்கே விமர்சனம் எழுதினாய் என நீங்கள் அவரைப் பர்த்துக் கேட்கலாம். ஆனால் அவர் தலைப்பிலேயே இது விமர்சனமல்ல என்று பச்சையாச் சென்னதால் தப்பி விட்டார். யாரப்பா அந்த மனுசன் என்று கேட்கத் தோணுதா அது அடியேன் தானுங்கோ. அதற்கான தொடுப்பு இதோ.
















