கேட்பதற்கே ஒரு கிளர்ச்சி ஊட்டும் சொல். மனதில் ஏதே பல அலைகளை நாசுக்காக இட்டுச் செல்லும். அந்த அழுத்தத்தாலோ தெரியவில்லை சில தமிழருக்கு இதை பயன்படுத்த பிடிக்கவில்லை.
என்றால் தனித்துவமானது என்று பொருள் படும் என்று சிலர் கூறுகிறார்கள். என்னைப் பொறுத்த வரை உலகில் தமிழரைத் தவிர வேறு யாராவது ‘தமிழ்‘ என்று சரியாக உச்சரித்தால் நிச்சயம் அவருக்கு ஒரு விசேட உச்சரிப்பாளர் என்ற பட்டம் கொடுக்கலாம். ஏன் என்று நினைக்கிறீர்களா ‘தமிழ்‘ என்ற சொல்லில் வரும் ழகரம் தான் காரணம். நாவின் நுனியை மேல் அண்ணத்தில் ஒரு அழுத்து அழுத்தித் தான் சொல்லலாம். இந்த ழ உச்சரிப்பு உலகிலேயே 3 மொழிகளில் தான் காணப்படுகிறது. தமிழ், மலையாளம், மண்டரின் இன மொழிகள் என்பன தான் அவையாகும்.
இங்கு மலையாளம் தமிழின் பிள்ளை போன்றது. இருந்தும் மலையா பிரபல பாடகர் நம்ம யேசுதாஸிற் ல,ள,ழ என்பவற்றை வேறுபிரிக்க சிரமப்படுவார். ”பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா” பாடலின் போது வைரமுத்துவுடன் சிறு கருத்து வேறுபட்டுக்கு உள்ளானார்.
மண்டரின் இன மொழிகள் வரும் ழ ஆனது தமிழில் வருவது போல் ழகர உச்சரிப்பு இல்லை. மற்ற எந்த மொழியிலும் இல்லை. எடுத்துக்காட்டாக ஆங்கிலத்தில் ழ விற்கு zha என்று தான் பாவிக்கிறோம்.
என்னைப் பொறுத்த வரை தமிழின் அழிவிற்கு முதல் காரணம் sms தான் என்பதை ஆணித்தரமாகக் கூறுவேன்.
தமிழின் சிறப்பு-
”உலகில் தமிழே பண்பட்ட மொழி. தனக்கென எல்லாம் வாய்ந்த இலக்கிய செல்வங்கள் பெற்ற மொழி”
”ஈற்றல் மிக்கதாகவும். சொல்ல வந்த பல விடயத்தை சில சொற்களில் தெளிவாக சொல்ல வல்லதுமான மொழி தமிழ் போல் வேறில்லை. ”
”உலக அறிவை உணர்த்தம் சிறப்பில் திருக்குறளுக்கு இணையாக உலக இலக்கியத்தில் வேறில்லை. ”
”தமிழில் உள்ள அகத்துறை இலக்கியங்கள் போல் உலகில் வேறெந்த மொழியிலுமில்லை. ”
சமணரின் கருத்துரைக்கும்……………… சிலப்பதிகாரம். சீவக சிந்தாமணி பௌத்த கருத்துரைக்கும்……………… மணிமேகலை
சைவ கருத்துரைக்கும்……………… கந்தபுராணம். பெரியபுராணம்
வைஸ்ணவ கருத்துரைக்கும்……………… கம்பராமாயணம்
கிறிஸ்தவ கருத்துரைக்கும்……………… தெம்பவாணி
இஸ்லாமிய கருத்துரைக்கும்……………… சீறாப்பராணம்
ஆகிய பேரிலக்கியங்கள் தமிழ் மொழியிலேயே எழுதப்பட்டிருக்கின்றன.
திங்களோடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் மண்ணோடும் உடுக்களோடும். மங்குல் கடல் இவற்றொடும் பிறந்த தமிழ் -பாவேந்தர் பாரதிதாசன்-
இன்னும் இந்தக் கட்டுரை வளரும்.-------…………-----
நான் ஒரு பண்டிதனில்லை. தமிழில் உள்ள தீவிர பற்றின் தேடல் தான் இது. தவறுகளை சுட்டிக்காட்ட எல்லோருக்கும் உரிமையுண்டு. இந்த ழ பிரச்சனை முக நூலில் பெரும் சர்ச்சையை கிளப்பியது. தவறாமல் கருத்திட்டுப் போங்கள்.
29 கருத்துகள்:
சிறப்பான பதிவு, வாழ்த்துக்கள்
நேரம் கிடைக்கும்போது இதையும் கொஞ்சம் பாருங்கள்.
http://eppoodi.blogspot.com/2010/02/blog-post_15.html
பார்த்தேன்...பார்த்தேன்...பார்த்தேன்... சுடச்சுட ரசித்தேன். சகோதரா நன்றிகள்
நல்ல பதிவு! ஒரு மொழிபெயர்ப்பாளராக தங்களுக்கு நன்றி கூறுகிறேன்!
நண்பா நீங்கள் தமிழ்மீது வைத்துள்ள பற்று உங்கள் தேடல் மூலம் என்னால் உணர முடிகிறது, உங்கள் முயற்சி தொடர வாழத்துக்கள் நண்பா....
""என்றும் உங்கள் அன்பு நண்பன் RA.DINUSHAN""
தவிர வேறு யாராவது ‘தமிழ்‘ என்று சரியாக உச்சரித்தால் நிச்சயம் அவருக்கு ஒரு விசேட உச்சரிப்பாளர் என்ற பட்டம் கொடுக்கலாம்
பின்னி பிடல் எடுதிடிங்க நண்பரே வாழ்த்துக்கள் தொடருவும்
என்ன எஸ்.கே இப்புடி சொல்லுறிங்க இதெல்லாம் தேடல் தான் . வாழ்த்துக்கு நன்றி.
வாழ்த்துக்கு நன்றி. நான் ஒரு தமிழன் அவ்வளவு தான் . இயன்றவரை தமிழை வாழ வைப்போம்.
வாழ்த்துக்கு நன்றி அண்ணா உளக்கிடக்கையில் இருப்பது தானே சந்திக்கு வரும்.
நல்ல பதிவு..
:-)
நன்றி கிருத்தி
'Zha' endra ezhuthu Kujaraathi mozhiyilum ulladhu..
தகவலுக்கு நன்றி சகோதரா. இப்படி சிங்களத்திலும் இருந்தாலும் உச்சரிப்பு வேறுபடுகிறது. இதன் மேலதிக தகவல் தந்துதவ முடியுமா?
'Zha' endra tamil ezhuthu matra anaithu mozhi Zha ezhuthukkalaiyum vida oru thani sirappu vaaindhadhu....Adhu oru aanmeega ragasiyamaagum ! nam munnorgalin arivu nutpamum adhuthaan.
Andha vishayathai oru siru article-aaga ezhuthugiren..Siridhu vilakkinaalthaan puriyum.
நன்றி நல்ல தகவலை பகிர்ந்திருக்கிறிர்கள். ஆய்வாளர்கள் பல மொழிகளில் ழ இருந்தாலும் இந்த மூன்றிலும் தான் சிறப்பான பிரயோகம் இருக்கிறது என்கிறார்கள்.
@ linges
கட்டாயம் காத்திருக்கிறேன். விரைவில் எழுதுங்கள்.
Kindly go through my recent article about linguistics at my blog..
நன்றி லிங்கேஸ் இவ்வளவு வேகமாக எழுதுவீர்கள் என நான் எதிர் பார்க்கல வாழ்க உங்க மொழிப்பற்று. தமிழ் ஆர்வலர்கள் கீழே உள்ள முகவரி செல்லவும்
http://lingeswaran-ise.blogspot.com/2010/08/blog-post_19.html
அருமை.. நல்லதொரு ஆய்வு..
தொடருங்கள். வாழ்த்துக்கள்.
@ LOSHAN said...
ஆம் அண்ணா தங்களின் ஊக்கம் தான் எமை வளர்த்தெடுக்கும்.
Kindly visit my Blog for my recent article about Tamil 'Zha'..
தனித்தமிழைப் பேசுவோம்! தாய்த்தமிழைக் காப்போம்!!
வாழ்க தமிழ்!
வாழ்க தமிழ் மக்கள்!
வாழ்க தமிழ் நிலங்கள்! (தமிழகம், ஈழம்)
@ மிதுன்
வருகைக்கு மிக்க நன்றி...
சிறப்பான பதிவு, வாழ்த்துக்கள்.
@ சே.குமார் said...
மிக்க நன்றி...
நல்ல விடயம் பற்றி ஒரு அருமையான ஆய்வு.....சூப்பர்...
நல்ல பதிவு.. உங்கள் ஆர்வத்திற்கும் தமிழ் பால் உள்ள ஈர்பிர்க்கும் நம் அன்னை தமிழன்னை என்றென்றும் உங்களை "வாழ" வைப்பாள்.......
அடியேன்
மன்னிக்கவும் நான் படித்ததையும் இங்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.
தம்+மிழ் உருவான மொழியே,
"தமிழ்" மொழி.
தம் என்பது உடல்,மனம்,உயிர்.
யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதானது எங்கும் காணேன்....
கருத்துரையிடுக