செவ்வாய், 11 பிப்ரவரி, 2014

நான் கண்ட காதல் கன்னியின் நாதியற்ற கோலம்

7:38 PM - By ம.தி.சுதா 3

வணக்கம் உறவுகளே
சேமம் எப்படி?
முற்குறிப்பு- இப்பதிவானது ஒரு உண்மை சம்பவ பகிர்வாகும். பெண்ணியவாதிகள் யாரும் படிக்க வேண்டாம்.

   
2010 ம் ஆண்டு காலப்பகுதி. மல்லாவி மத்திய கல்லூரியில் காற்சட்டைப் பொடியளாக விளையாட்டுத் தான் எதிர்கால இலக்குப் போல வாழ்ந்த நேரமது. வம்பு தும்பிலிருந்து அனைத்திலும் என்னுடன் இணைந்திருந்த பெயர் சிறீகஜனுடையது (அவன் இப்போது தேறி பொலிசில் ஒரு நல்ல இடத்தில் வேலை செய்கிறான்) அப்போது அந்தச் சந்திப்பு நடந்தது.
இருவருக்கும் நேர காலம் இல்லாமல் தண்ணீர் விடாய்க்கும். ஒரு முறை தண்ணீர் அருந்த போய் காவல் நின்ற போது தண்ணி குடிக்கும் கிணற்றடியில் நின்ற ஒரு உயர்தர அக்கா சக உயர்தர அக்காவுக்கு ஒரு கொப்பியை திறந்து காட்டி சொல்லிக் கொண்டிருந்தார்.
“இதுக்குள் 16 கடிதம் இருக்கடி இந்தளவும் தந்தது எவ்வளவு லுக்கான பொடியள் தெரியுமா”
“நீ பொய் சொல்லுறாய் போடி”
“சத்தியமாடி”
சொல்லி முடிச்சிட்டு திரும்பி பார்த்தால் நாங்கள் நிற்கிறோம். அக்கா எங்களை கணக்கிலேயே எடுக்கவில்லை. ஆனால் அடுத்த நாளே அவா சின்ன பொடியள் என்று நினைச்ச இந்த வப்புகளது பலனை அடைய வெளிக்கிட்டார்.

அக்காவுக்கு நாங்கள் வச்ச பட்டப் பெயர் “பதினாறு”
காணும் நேரம் எல்லாம் “அக்கா 17 வந்திட்டுதா” இது தான் எம் கேள்வி. அக்காவும் சிரித்தபடி முகத்தை திருப்பிக் கொண்டு போய் விடுவார்.
சில நேரங்களில் பெட்டையள் கூட்டமாக வரும் போது நாம் பேசாமல் நின்றாலும் எம்மை பார்த்து சின்ன புன்னகை எறிவார்.

ஆனால் இப்ப தான் புரியுது அவர் அதை தனது சாதனையாக நினைத்திருக்கிறார் என்றும். அவர் எம் வாயை தனது தூபமாகப் பயன்படுத்தியிருக்கிறார்.
     உண்மையில் அந்தப் 16 ல் எத்தனை உண்மையானதோ என சந்தேகமாயிருக்கிறது. அதே போல அதில் எத்தனை அக்காவே பல்லைக் காட்டி மறுட்டி விட்டு சாதனைப்பட்டியலை வளர்த்துக் கொண்டதோ தெரியவில்லை. ஆனால் அவரை சென்ற வருட இறுதியில் எதேச்சையாகக் காண்டேன்.
ஆள் அடையாளமே தெரியவில்லை பழைய அழகில் 10 வீதம் கூட இப்ப இல்லை. 3 பிள்ளைகள் என்று சொன்னார். கணவர் இஞ்சினியர், டாக்குத்தர், வெளிநாட்டுக்காரன் என்றெல்லாம் நினைத்திடாதிங்கோ.. கடை ஒன்றில் வேலை செய்கிறாராம். கருகிப் போய் கிடந்த அவர் உதடு அவரது மீத வரலாறு சொல்லியது.
அதற்கு மேல் அவரை பார்க்க அந்தரமாக இருந்தது நான் நைசாக நழுவி விட்டேன்.
நிச்சயம் அவர் தன் பழைய வாழ்க்கையை நினைத்து வருந்துகிறார் என்பது அவர் பார்வை சொல்லியது. எனக்கும் அவரை பார்க்க பரிதாபமாகவே இருந்தது. மற்றவரின் திட்டல் பலிக்குமோ என்ற கேள்வி அப்போதும் என் மனதில் சந்தேகமாகவே எழுந்து விழுந்தது.

நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா

About the Author

நான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director
View all posts by admin →

Share This Post

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

3 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
ம.தி.சுதா சொன்னது…

@விவரணன் நீலவண்ணன்
சரியாகச் சொன்னீர்கள் கருத்துக்கு மிக்க நன்றி உறவே

Unknown சொன்னது…

வணக்கம்,சிம்மக் குரலோனே!நலமா?///சிலருக்கு 'அந்த' வயதில் இப்படியான நினைவுகள்/ஆசைகள் ஏற்படுவது சகஜமே!"நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும்" என்பார்கள்.அது தான் இது.கடவுளை நொந்து கொள்வோம்,வேறு வழி?அவருக்குத் தான் எதையும் "தாங்கும்" இதயம்,ஹ!ஹ!!ஹா!!!

மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்













back to top