Featured Articles
All Stories
வியாழன், 19 ஜூலை, 2012
ஞாயிறு, 15 ஜூலை, 2012
பெண்பிள்ளைகளை வாயில் போடும் ஆண்பிள்ளைகளின் தாய்கள்
உலக நாகரீகமானது எவ்வளவு முன்னேற்றம் அடைந்து சென்றாலும் சில பெண்களுக்கான சில அடிப்படைக் குணங்கள் மாறாமலே இருக்கிறது. இவை நகரப்பகுதிகளில் குறைவாக இருந்தாலும் கிராமப்புறங்களில் கணவர்மாராலேயே அடக்க முடியாத ஒரு நோயக மாறியிருக்கிறது.
அப்படி என்ன நோய் என்று புரியாமல் விழிக்கிறீர்களா? போட்டி போட்டுக் கொண்டு ஆண் பிள்ளைகளைப் பெறுவது. அவர்கள் வாயசுக்கு வர முன்னரே சீதண விபரத்தை அறிவிப்பது. அதன் பின்னர் அவன் காதலிக்கும் பெட்டை பற்றி ஒரு வதந்தி கிளப்பி அவளை பிரித்து விட்டு மகனை நல்ல விலைக்கு விற்றுவிட்டு ஊரில் உள்ள பெண்பிள்ளைகள் பற்றி கதை கட்டுவது இது தான் அவர்களுக்கு இருக்கும் தீர்க்கப்படாத வியாதியாகும்.
இதற்கெல்லாம யாரை குறை சொல்வது என்று தெரியவில்லை.
இப்பதிவுக்கான காரணம் இது தான்.... நான வாழும் சமூகம் ஒன்றில் ஒரு அக்கா ஒருவர் அயலூர்காரர் ஒருவரை காதலித்தார். இதில் அந்த வீட்டில் எவருக்கும் உடன்பாடில்லை அதனால் அடுத்த கட்டம் என்ன எதிர்ப்புத் தானே... ஆனால் இங்கு நடந்தது சற்று வித்தியாசமானது. அந்த அக்காவுக்கு எல்லோரும் ஆலோசனை கூறியும் கேட்பதாயில்லை. ஆனால் வீட்டார் திருமணத்திற்கு சம்மதிக்கவும் இல்லை.
அதீத எதிர்ப்பு காட்டினால் வெளியேறி குடும்ப மானம் போய் விடும் என்பதற்காக ஒரே ஒரு விதி போட்டார்கள். நீ போனால் எமக்கும் உனக்கும் எந்த சம்பந்தமுமில்லை. அந்தளவுமே நடந்தது. அவர் காதலித்த ஆடவர் , ஆலயத்தில் திருமண ஒழுங்கை எல்லாம் செய்து விட்டு அதிகாலையே வாகனத்தில் வீட்டுக்கு வந்தார். அந்த அக்காவின் தாயாரே ஏற்றி அனுப்பி வைத்தார். காலையே திருமணம் முடிந்துவிட்டது. அத்துடன் அவரும் தனது புகுந்த வீடு போய்விட்டார்.
உறவுகளே உங்களிடம் ஒரு கேள்வி?
இதை ஓரு பெண் வீட்டை விட்டு ஓடிவிட்டார் என்றா வாய்க்கு வந்தபடி கூறுவது. குடும்ப கௌரவத்திற்காகத் தான் குடும்பத்தார் கடைசி நிமிடம் வரை மிக மிக நாகரீகமாக நடந்து கொண்டார்கள். அதே சமூகத்தை சேர்ந்த நீங்கள் எலும்பில்லாத நாக்கால் இப்படியா கதைப்பது.
அதிலும் ஒருவர் என் காது பட கூறினார். இப்படி ஒரு நிலமையில் நான் தாயாக இருந்தால் மருந்து குடித்து செத்திருப்பேனாம். தாயே காலம் இன்னும் உருண்டு முடியவில்லை உன் மகனும் மாற்றான் சமூகத்தில் மணம் முடிக்கும் போது உயிருடன் தானே இருந்து பார்க்கப் போகிறாய்
தாய்க்குலமே தயவு செய்து உலகத்தில் உள்ள ஒவ்வொரு பெண்ணையும் உங்கள் குழந்தை போல நோக்குங்கள். சிலவேளை அவர்கள் தப்பிழைத்திருந்தாலும் மறைத்துத் தான் கதைக்க வேண்டும் ஏனென்றால் இது ஒரு சந்ததியின் எதிர்காலத்தை மாற்றும் விடயமாகும்.
குறிப்பு - தலைப்பானது கிராம மொழி வழக்குக்கு அமைவாக அமைக்கப்பட்டுள்ளது.
படங்கள் - நன்றி கூகுல்
குறிப்பு - தலைப்பானது கிராம மொழி வழக்குக்கு அமைவாக அமைக்கப்பட்டுள்ளது.
படங்கள் - நன்றி கூகுல்
செவ்வாய், 10 ஜூலை, 2012
ஞாயிறு, 1 ஜூலை, 2012
ஏழை மாணவன் ஒருவனை கரை ஏற்ற வாருங்கள்
வணக்கம் உறவுகளே சேமம் எப்படி?
சரியாக ஒரு மாத இடைவெளியின் பின்னர் ஒரு அவசர உதவிக்காக என் தளம் மீண்டிருக்கிறேன். (தற்காலிகமாக)
காரணம் என்னவென்றால் என் கண்ணில் பட்ட ஒரு மாணவனுக்காகத் தான் இங்கு வந்திருக்கிறேன். இங்கு அவனது பெயரை நான் பகிரவில்லை. ஆனால் ஊரையும் பாடசாலையையும் தருகின்றேன். யாராவது உதவ விரும்பினால் அவர்களுக்கு நேரடி தொடர்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படும்.
இம் மாணவன் யாழ் உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரியில் சாதாரண தரம் படித்துக் கொண்டிருக்கிறான். இவன் வல்வெட்டித் துறையிலுள்ள தீருவில் பகுதியை சார்ந்த மாணவன்.
இவனது சாதனை என்னவென்றால் இந்த பாடசாலைக்குள் நுழைந்த குறிப்பிட்ட சில நாளிலேயே அனைத்து மாணவர்களையும் முந்தி முழுப்பாடத்திலும் முதன்மைப் பெறுபேறைப் பெற்றிருக்கிறான். ஆனால் இவனது குடும்பப் பின்னணி சற்று மனதை நெருடுவது ஆகும்.
இறுதிப் போரில் போரிற்கு அழைத்துச் செல்லப்பட்ட அண்ணனின் முகவரி தெரியாது. தந்தை ராணுவ பகுதிக்குள் வரும் போது மறுமணம் செய்து இக் குடும்பத்தை கைவிட்டு விட்டார். தாயும் ஒரு தங்கையும் தம்பியுமே எஞ்சி நிற்பவர்கள். ஆனால் இப்படி சாதனை புரியும் இம் மாணவன் இடியப்பம், தோசை போன்றன விற்றுத் தான் பாடசாலையே வருகிறான். இது தான் இவர்களது நாளாந்த வருமானமும் கூட.
பழைய காலங்களில் இவை சாத்தியப்பட்டிருக்கலாம். ஆனால் இன்றைய நாளில் ஒரு சாதாரண தர மாணவனின் முழுமையான கற்கை நெறிக்கே மாதம் 2000 ரூபாய் தேவைப்படும். நிச்சயம் எதிர்காலத்தில் நல்லதொரு நிலைக்கு வரக் கூடியவன் என இவனது விஞ்ஞான பாட ஆசிரியரே தெரிவிக்கின்றார்.
யாராவது இவனை பொறுப்பேற்று கற்பிக்க விரும்புபவர்கள் முன்வாருங்கள். தங்களால் இயலாவிடினும் பரவாயில்லை இத்தகவலை மற்றவருக்கு சேர்ப்பதன் மூலம் இவனுக்கு உதவுங்கள்
நன்றிச் செதுக்கலுடன்
ம.தி.சுதா
குறிப்பு - இது என் மீள் வருகையல்ல இன்னும் சில நாளில் ஓய்வின் பின்னர் மீண்டும் ஒரு புதிய மனிதனாக சந்திக்கிறேன். பழைய ம.தி.சுதா நிச்சயம் மீண்டும் வரமாட்டான். அன்பு உறவுகளின் வேண்டுகைக்கமைவாக மீண்டும் ஆரம்ப கால ம.தி.சுதாவாகவே மாறிக் கொள்கிறேன்.
வியாழன், 31 மே, 2012
ஞாயிறு, 27 மே, 2012
வியாழன், 24 மே, 2012
படித்த சமூகத்தை ஏமாற்றும் சிலரின் பொட்டுக்கேட்டு அம்பலங்கள்
வணக்கம் உறவுகளே சேமம் எப்படி?
சில நாட்களுக்கு முன்னர் ஈழத்தமிழனை பணத்தால் ஏமாற்றிய புத்திசாலிகளின் பட்டியல் என்ற பதிவை இட்டிருந்தேன். அப்பதிவானது இன்று இடப்படும் மிக முக்கியமான இப்பதிவுக்கு முன்னோடியாகும். அதே போல தடுப்பிலிருந்து வந்த 2 வன்னி குடியவர்களும் இதனால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் பற்றி விளக்கத்தின் பின்னர் குறிப்பிடுகிறேன்.
வாருங்கள் உறவகளே...
போட்டித் தன்மை மிகுந்த இந்த உலகில் பணத்தேவையானது ஒவ்வொரு மனிதனுக்கும் அளவு கணகக்கற்று எல்லையின்றி நீண்டு செல்கிறது. அந்த நிலையில் தான் இன்று நான் குறிப்பிடும் இந்த ஏமாற்றுப் பேர்வழிகள் பணக்கார சமூகத்தை பெரிய தூண்டில் ஒன்று இட்டு வளைத்துப் போடுகிறார்கள்.
பிரமிட் சிஸ்டம் என்ற ஒரு முதலீட்டு முறையை அனைவரும் கேள்விப்பட்டிருப்பீர்கள். இம்முறையானது ஒரு சட்ட விரோதமான செயற்பாடாகும். இதை நான் சொல்லவில்லை மத்திய வங்கியானது மாதத்திற்கு 2 தடவை இதை தெரிவித்துக் கொண்டு தான் இருக்கிறது. ஆனால் இதன் மூலம் சில வாய்ப் பேச்சு விற்பனர்கள் தமது சாமர்த்தியத்தால் பலரை வளைத்துப் போட்டிருக்கிறார்கள்.
இலங்கையில் global life style என்ற நிறுவனம் தான் பலரை ஏமாற்றி தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. ஆனால் இதன் தலைவர் இருப்பது இலங்கையிலல்ல. மலேசியாவில் இருந்து கொண்டு பலரை தனது வலைக்குள் விழ வைத்திருக்கிறார். ஆனால் அந்தத் திட்டத்தில் இணைந்து தொழிற்படும் பலருக்கு அவர் யாரென்றோ இருக்கும் இடம் எதுவென்றோ தெரியாது.
சரி அவர்கள் திட்டம் என்ன என பார்ப்போம் வாருங்கள்.
நீங்கள் அறுபதாயிரம் ரூபாய் செலுத்தி ஒருவருடன் இணைய வேண்டும் (நீங்கள் இணையத் தேவையில்லை உங்களை அவர்களே வலை போட்டுப்பிடித்து அடிக்குடலில் கைவைத்து இழுத்துப் போய் புடுங்கி விடுவார்கள்.) அதற்கு அவர்கள் solar ஒன்று தருவார்கள் அதன் அதிக பட்ச சந்தைப் பெறுமதி 40 ஆயிரம் ரூபாயாக இருக்கும். (ஆனால் உண்மைப் பெறுமதி 30 ஆயிரம் தான்) இது கூட அவர்கள் செய்யும் சட்ட விரோத நடவடிக்கைக்கு ஏதுவாக தாம் வியாபாரம் செய்வதாகக் காட்டவே தருகிறார்கள்.
அதன் பின்னர் நீங்கள் இருவரை இணைத்தல் வேண்டும். அவர்களில் ஒருவர் கட்டும் 60 ஆயிரம் ரூபாயில் இவர்களுக்கு கிடைக்கும்இலாபத்தில் (30 ஆயிரத்தில்) ஒரு பகுதி உங்கள் கணக்கிற்கு வரும். அதன் பின் நீங்கள் இணைத்த இருவரும் இணைந்து 4 பேரை இணைக்க வேண்டும். இப்படியே சங்கிலியாக நீண்டு செல்கையில் உச்சத்தில் இருக்கும் முதலாளி பெரும் பண முதளையாகி விடுவார்.
நீங்களும் ஏமாந்த 30 அயிரத்தைப் பெறுவதற்காக மாடாய் உழைத்து ஆட்களை சேர்க்க வேண்டியிருக்கும்.
யாழில் இதில் ஏமாந்திருப்பவர்களின் பட்டியலில் பல வைத்தியர்கள், எஞ்சினியர்கள், ஆசிரியர்களும் இருக்கிறார்கள். (அவர்களது மரியாதை கருதி அவர்கள் வெயரை நான் குறிப்பிடவில்லை) அதிலும் யாழ் உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரியில் 12 ஆசிரியர்கள் இதில் ஏமாந்திருக்கிறார்கள். அப்பாடசாலையில் இந் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த 2 ஆசிரியர்கள் வலயப்பணிப்பாளரால் அழைக்கப்பட்டு எச்சரிக்கப்பட்டிருந்தார்கள். ஆனால் அவர்களோ சமூகத்தினுள் இந் நடவடிக்கையை ஈடுபடுத்தி வருகிறார்கள். இவர்களிடம் ஏமாந்த ஆசிரியர் ஒருவர் என்னிடம் நேரடியாகவே இதுபற்றி கவலைப்பட்டுக் கொண்டார்.
இவர்கள் தமது ஏமாற்று நடவடிக்கைக்கு பாவிக்கும் பசப்பு வார்த்தைகள் பல இருக்கிறது.
இவர்களுக்கான பணத்தை நீங்கள் commercial bank வங்கியில் தான் இட வேண்டும். அவர்கள் தான் உங்களுக்கான காசோலையை அனுப்புவார்கள். உங்களுக்கு இந்த ஏமாற்றாளர்கள் கூறுவது என்னவென்றால் “எங்களை இன்னும் நம்பவில்லையா? பாருங்கள் நம்பிக்கையான வங்கி தானே உங்கள் கணக்கை கையாள்கிறது“ என்பார்கள்.
அந்த வங்கியும் தமது சில லாபங்களுக்காக இந்த சட்டவிரோத நடவடிக்கைக்கு உடன் போகிறது.
அதே போல வைத்தியர்கள் போன்ற பெரியவர்களிடம் அவர்களது வாகனத்திற்கான மாதக் கட்டணம் போன்றன வங்கி மூலம் நீங்களே செலுத்தலாம் என கூறிக் கொள்வார்கள். இப்படி பல பசப்பு வார்த்தைகளைக் கூறி பெரிய பண வருவாய்க்காரர்களை வீழ்த்தி விடுவார்கள்.
இதில் நகைப்புக்குரிய விடயம் என்னவென்றால் ஒப்பட்டுரீதியில் கூலித் தொழில் செய்யும் எவருமே இவர்கள் வலையில் விழுவது குறைவு. காரணம் என்ன என சிந்திக்கிறீர்களா? ஒரு உண்மையான கூலித் தொழிலாளி பணத்துக்காக தன் வியர்வையை மட்டுமே நம்பியிருப்பான். மற்றவரின் பணத்திற்கு ஆசைப்படமாட்டான். இது ஒருவகை சோம்பேறிகளாலும் ஏமாற்றுக்காரர்களாலும் நடாத்தப்படும் ஒரு வியர்வை சிந்தாத பண உழைப்பாகும்.
இந்த ஏமாற்று நடவடிக்கையானது தற்போது வன்னிக்குள்ளும் சிலரால் திணிக்கப்பட்டதன் விளைவாக பலர் விபரம் தெரியாமல் ஏமார ஆரம்பித்துள்ளார்கள். ஏமாந்தவர்களில் இரு நண்பர்கள் மிகவும் இதனால் அமனம் உடைந்து விட்டதாகக் கூறினார்கள். அவர்களின் இந்த மன உளைச்சலே எனது இந்தளவு தேடலுக்குக் காரணமாக அமைந்து விட்டது.
மத்திய வங்கி அறிக்கையின் படி பாதிக்கப்பட்ட ஒருவர் வழக்குத் தொடுத்தால் இவர்களை கைது செய்ய முடியும் ஆனால் அதற்கான வக்கிலுக்கு எங்கே போவது. யாராவது இதன் மேல் நட்டம் கொண்டிருந்தால் கை கோருங்கள். சட்ட ரீதியாக ஒன்று சேர்ந்து எதிர்ப்போம்.
அதே போல ஆசிரியர்களும் இது பற்றி மாணவர்களுக்கு விழிப்புணர்வு வழங்க வேண்டும். ஒவ்வொரு வலயப் பணிப்பாளர்களும் இது பற்றி சுற்று நிருபம் ஒன்றை அதிபர்களுக்கு வழங்க வேண்டும்.
“விழிப்போடிருந்து ஒரு வளமான எதிர்காலத்தை பிரகாசமாக்குவோம்”
நன்றிச் செதுக்கலுடன்
ம.தி.சுதா
இந்த ஆக்கதை பகிர்வதன் மூலம் தங்களுக்குத் தெரிந்த பெரியவர்களிடம் சேர்ப்பிக்க உதவுங்கள்.
குறிப்பு - இந்த மாதத்துடன் நான் இணைய உலகுக்கு வேளியெ செல்ல இருக்கிறேன். மீண்டும் ஒரு சில மாதத்தில் இணைந்து கொள்கிறேன். காரணம் இறுதிப் பதிவில்.
மேலே சொன்ன எதுவும் விளங்காதவர்கள் இந்தக் குறும்படம் பார்த்தால் அதன் அவஸ்தை புரியும்
குறிப்பு - இந்த மாதத்துடன் நான் இணைய உலகுக்கு வேளியெ செல்ல இருக்கிறேன். மீண்டும் ஒரு சில மாதத்தில் இணைந்து கொள்கிறேன். காரணம் இறுதிப் பதிவில்.
மேலே சொன்ன எதுவும் விளங்காதவர்கள் இந்தக் குறும்படம் பார்த்தால் அதன் அவஸ்தை புரியும்
சனி, 19 மே, 2012
வன்னி வரலாற்றை மாற்ற முயற்சிக்கும் புலம்பெயர் இணையத்தளங்கள்
இந்தப் பதிவானது விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக இருந்து தற்போது அந்த இயக்கத்தின் போராளிகளின் அர்ப்பணிப்பை பொய்யென உரைக்க முயலும் தளமொன்றிற்காக அதன் உண்மை ஆதாரத்தை வழங்குவதற்காக எழுதப்படுகிறது.
இந்த படங்களை பெறுவதற்காக எனது நண்பர் ஜீவன் அவர்கள் தனது உந்துருளியையே தந்திருந்தார். நேற்று முழுதும் சாவகச்சேரிப் பகுதியில் அலைந்து பெற முடியாமல் போனதை இன்று பருத்தித்துறை பகுதியில் பாடசாலையில் சமையல் வேலை செய்பவர் ஒருவரின் வீட்டில் இருந்து பெறமுடிந்தது.
அவர்கள் வழங்கிய செய்தியென்னவென்றால் அமெரிக்காவினால் வழங்கப்பட்ட செறிவூட்டப்பட்ட விட்டமின்களை புலிகள் பயன்படுத்தினார்கள் என்ற தொனிப்பொருளில் அவர்கள் இணையத்தளத்துக்கு கிடைத்த செய்தியாகப் பகிர்ந்திருந்தார்கள். அப்படியானால் நான் கேட்கிறேன் என்னிடமும் அந்த கலன்கள் இருக்கிறது. அப்படியானால் எனக்கும் அமெரிக்காவிற்கும் தொடர்பிருக்கிறதா?
புலிகள் பயன்படுத்தினார்கள் என்றால் அது பற்றி சிந்திப்பதே இல்லையா? இது பற்றி வைத்தியசாலை ஒன்றினுள் வேலை செய்தவரிடம் கேட்டிருந்தாலே முழுத்தகவலும் கிடைத்திருக்குமே.
5 நாளுக்கு மேல் சாப்பிடாமல் களத்திலிருந்து காயப்பட்டவளும் இருக்கிறார்கள். ஒரு நாள் வயிற்றோட்டத்திற்கே 3 சேலைன் ஏற்றியவர்கள் இருக்கையில் எத்தனையோ நாள் ஒழுங்கான நீர் இன்றி இறந்தவர்கள் இருக்கிறார்கள். காயத்தால் குருதி வெளியேறியிருக்கும் அதை ஈடு செய்வதற்கு முன்னர் அவர்களது உடல் நிலையை பழைய நிலைக்கு கொண்டு வருவதற்கு முன்னரே உயிர் பிரிந்து விடும். இவை ஒரு சிலது மட்டுமே இப்படி பல நூறு கதைகள் இருக்கையில். ஒரு அர்ப்பணிப்பாளர்களைப் பற்றி எதுவும் சிந்திக்காமல் எழுதுவது என்பது மிகவும் அபத்தமானது.
இந்த படங்களை பாருங்கள் புரியும். அப்படத்தில் உள்ளது USA aid என்ற திட்டத்தின் மூலம் ஐநாவானால் பாடசாலை மாணவருக்கான உணவுத்திட்டத்திற்கு வழங்கப்பட்ட தேங்காய் எண்ணெய்க் கலன்களாகும். இது வன்னியில் மட்டுமல்ல யாழின் பட்டி தொட்டியெங்கும் இருந்த ஒன்று. ஆனால் இரும்பு வியாபாரிகளின் வருகையால் அருகி விட்ட நிலையில் தான் அதன் படம் எடுப்பதற்காக நேற்றும் இன்றும் நான் அலைய வேண்டிய தேவை வந்து விட்டது.
செய்திக் கணக்குக்காக இணையத் தளங்களால் வெளியிடப்படும் செய்திகளால் காலப் போக்கில் வரலாறுகள் மாற்றப்படலாம். இதே செய்தி இன்னும் சில நாளில் அமெரிக்க வழங்கிய செறிவூட்டிய விட்டமின்களில் நஞ்சு கலந்திருந்தார்கள் எனவும் செய்தி வரலாம்.
இதை அத்தளத்துக்கு எடுத்துரைக்க பல முறை மினு்னஞ்சலில் தொடர்பு கொண்டும் எந்தவித பதிலும் கிடைக்கவில்லை அதனால் தயவு செய்து இந்தச் செய்தி எத்தனை பேரிடம் போய்ச் சேர்ந்து தவறான எடுகோள் எடுக்கப்பட்டதோ தெரியவில்லை அதனால் இந்தச் செய்தி தவறானது என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள். யார் வேண்டுமானாலும் இந்தத் பதிவையோ அல்லது இதில் கூறப்பட்டுள்ள செய்தியையோ எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா
வியாழன், 17 மே, 2012
எழுத்தாளர் ஜெயமோகனுக்கு இந்திய ராணுவம் பற்றி ஈழத்திலிருந்து ஒரு ஆதார மடல்
வணக்கம் ஐயா சேமம் எப்படி?
ஈழத்திலிருந்து ஒரு அடிமுட்டாளிடமிருந்து இப்படி ஒரு மடலை நீங்கள் காண வேண்டிய பாக்கியம் பெற்றது தங்களது தூரதிஸ்டம் என்று தான் சொல்ல வேண்டும்.
ஏனென்றால் பலருக்கு எமது உணர்வுகள் வியாபாரப் பொருளாகிப் போனதால் புல் பூண்டு கூட அறச்சீற்றத்துடன் தான் இங்கிருக்கிறது.
இந்திய ராணுவத்தின் இலங்கை வருகையின் போது எனக்கு 2 வயது தான் ஆனால் அவர்கள் தந்த தாக்கமோ எத்தனை வருடங்களானாலும் எம் மனதை விட்டு அகலாது.
இந்திய ராணுவ வெளியேற்றத்திற்காக போராடியவர்களில் எனது தந்தையும் ஒருவராவார். தியாகி திலீபன் அண்ணா உண்ணாவிரதம் இருந்த காலப்பகுதியில்வல்வெட்டித்துறை சந்தியில் 5 நாட்கள் இருந்த நால்வரில் அவரும் ஒருவர். இது பற்றி பழநெடுமாறன் ஐயா இங்கு வந்தது பற்றி எழுதிய புத்தகத்தில் பெயருடன் குறிப்பிட்டுள்ளார். அப்போது இந்தியருடே வெளியிட்ட சஞ்சிகையில் அவர் மடியில் இருக்கும் சிறுவன் தான் நான்.
என் தந்தை அடிக்கடி சொல்வார். எம் மீது இந்தளவு கோரம் செய்த சிங்கள ராணுவத்தை விட இந்திய ராணுவத்தின் மேல் தான் எனக்கு கோபம் அதிகம். ஏனென்றால் சிங்கள ராணுவத்திற்கும் எமக்கும் பகைமைக்கான காரணம் இருக்கிறது. ஆனால் இந்திய ராணுவம் அப்படியில்லையே. அதே வல்வெட்டித் துறை சந்தியில் 48 அப்பாவி பொது மக்களை கட்டடம் ஒன்றினுள் வைத்து குண்டு வைத்து கொன்றார்கள். உங்களுக்கு மடல் போட்ட அந்த ராணுவவீரரிடம் இதற்கு காரணம் கேட்டு சொல்ல முடியுமா?
கற்பழிப்பு என்றால் என்னவென்று தெரியாதது போல கேட்கும் அவர்களால் வரலாற்றை ஒரு போதும் மறைக்க முடியாது. ஏனென்றால் மட்டக்களப்பில் நடந்த சம்பவம் ஒன்றை கேளுங்கள். இது ஒரு படத்திலும் காட்டப்பட்டிருந்தது.
“ஒரு ஏழைப் பெண் வீட்டு முற்றத்தில் இருந்து தோசை சுட்டுக் கொண்டிருந்தார். அழும் குழந்தையை ஆற்றுவதற்காக அருகே கிடத்தியிருந்தார். அப்போது இந்திய ராணுவக் காடையர் வந்திருக்கிறார்கள். அவர்களது தப்பான கதையைக் கேட்டு அப் பெண் வீட்டினுள் ஓடிப் போய் கதவை சாத்திவிட்டாள். அப்போது அந்த பிள்ளையை தூக்கி தோசைக்கல்லில் போட்டு விட்டு அந்தப் பெண்ணையும் வன்முறை செய்து விட்டு போய்விட்டார்கள். அப்பெண் அதே வீட்டினுள் தூக்கிட்டு மரணத்தை தேடிக் கொண்டாள். அந்தக் காலத்தில் பல பெண்கள் அகப்பையை எறிந்து விட்டு சுடு குழல் தூக்க காரணமாக அமைந்த சம்பவங்களில் இதுவும் ஒன்றாகும்.”
இதை இந்த ராணுவ வீரர்களால் மறைக்க முடியுமா?
இது மட்டுமல்ல அவர்களின் சபலப் புத்திக்கு இன்னும் சொல்கிறேன் கேளுங்கள். திருவெம்பாவை மற்றும் விரத காலங்களில் பெண்கள் அதிகாலையே குளிப்பதற்கு கிணற்றடி போவர்கள். அப்படியான காலத்தில் றோந்து என்னும் சாக்கில் வந்து இரவே இவர்கள் கிடந்து விடுவார்கள். ஆனால் இவர்களிடம் பாதகமான ஒரு விடயம் என்னவென்றால் இவர்களில் ஒருவித நெய் மொச்சை அடிக்குமாம் அதை வைத்து பெண்கள் அறிந்து விடுவார்கள். அதன் பின்னர் என்ன அன்று விரதம் அதோ கதி தான்.
அதே போல இன்னுமொரு கருத்திருக்கிறது. ராணுவத்தில் ஒதுக்குப்புறமான சென்ரிகளில் (அரங்குகளில்) நிற்பவர்கள் உள்ளாடை அணிவதில்லையாம். பெண்களைக் கண்டால் ஜீன்சை கழட்டி விட்டு ஏதோ செய்வார்களாம். இதையெல்லாம் உங்களுக்குக் கடிதம் எழுதிய ராணுவ வீரர்களால் மறுக்க முடியுமா?
இது மட்டுமல்ல இதே காட்டுமிராண்டிகள் தான் யாழ் வைத்தியசாலையில் 50 ற்கு மேற்பட்ட வைத்தியர், தாதியர், ஊழியர் என பலரை சுட்டுக் கொன்று குவித்தார்கள். அதெல்லாம் வரலாறில்லையா? அதை இவர்களால் மறுக்க முடியுமா? இவர்களை வரவேற்க தமிழ் நாட்டுக்காரன் போகவில்லை என்று கேட்கும் போது நான் உச்சி குளிர்ந்து சந்தோசப்பட்டேன்.
உதாரணத்திற்கு இந்திராகாந்தி செத்த போது யாழ்ப்பாணமெங்கும் 3 நாள் கடையடைப்புச் செய்து வாழை மரம் நாட்டி ஒட்டு மொத்த தமிழனும் துக்கதினம் அனுஸ்டித்தான். ஆனால் அதே தாயின் மகன் இறந்த போது கற்கண்டு, ரொபி கொடுத்து கொண்டாடினார்கள். இதை ஏன் சொல்கிறேன் என்றால் இங்கு புலிகளின் பிரச்சாரமோ அல்லது ஊடகங்களின் பிரச்சாரமோ அவர்களை மாற்றவில்லை. ராஜீவின் மேல் இருந்த அந்தளவு வெறுப்பும் தான் காரணம்.
நான் அவசரமாக எழுதுவதால் பல ஆதாரங்களை சமர்ப்பிக்க முடியாமல் போய்விட்டது. கற்பழிப்பு சம்பந்தமாக வழங்கப்பட்ட பேட்டிகள் அடங்கிய பத்திரிகைக் கோவைகள் சேகரித்துத் தருவதா இருந்தால் சொல்லுங்கள் தேடி எடுத்துத் தருகிறேன். நீங்கள் ஒரு பக்கச்சார்பற்ற நடுநிலையான எழுத்தாளர் என நிருபிக்க நினைத்தால் கடிதம் வரைந்த அதே நபர்களிடம் இதற்கு விளக்கம் பெற முயற்சியுங்கள். ஏனென்றால் இவை வடுக்கள் என்றும் அழியாதவை.
நன்றியுடன்
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா
மேலும் வரலாறுகளை உரைக்கும் முறிந்த பனை என்ற மின்னூலை படிக்க இங்கே செல்லுங்கள்
இது பற்றி நிகழ்வுகள் கந்தசாமி எழுதியபதிவு காண சொடுக்குங்கள்
இது தொடர்பாக தமிழ் நாற்று நிருபன் கொட்டித் தீர்த்திருக்கும் கோபத்தைக் காண இங்கே செல்லலாம்
மேலும் வரலாறுகளை உரைக்கும் முறிந்த பனை என்ற மின்னூலை படிக்க இங்கே செல்லுங்கள்
இது பற்றி நிகழ்வுகள் கந்தசாமி எழுதியபதிவு காண சொடுக்குங்கள்
இது தொடர்பாக தமிழ் நாற்று நிருபன் கொட்டித் தீர்த்திருக்கும் கோபத்தைக் காண இங்கே செல்லலாம்
திங்கள், 14 மே, 2012
மொத்தப் பக்கக்காட்சிகள்
பின்பற்றுபவர்கள்
About Me
இடக்கு முடக்கு கண்டுபிடிப்பு
- சோற்றிலிருந்து மதுபானம் – வன்னி மக்களின் கண்டுபிடிப்பு.
- சாராயத்தை மிஞ்சும் சாராயம்- வன்னி மக்கள் கண்டுபிடிப்பு
- கறிக்கு உப்புக் கூடினால் செலவற்ற உடனடித் தீர்வு
- வாகனக் கண்ணாடியினுள் நீராவி படிவதை தடுக்கும் ஒரு வழி....!!!
- காசால் போன் சார்ஜ் இடுவது எப்படி...???
- வாழைப்பழத்தால் சோளம் வறுப்பதெப்படி..???
- பாத்திரமின்றி, விறகின்றி சுடச்சுட தேநீர் தயாரிக்கலாம்
- தேயிலை இன்றியும் அருமையான தேநீர் தயாரிக்கலாம்
என் திரைப்பட முன்னோட்டம்
இந்த தளத்தில் நீங்கள் தேட விரும்பும் சொல்லை பதியவும்
-
தென்னிந்தியக் கலைஞர்களின் ஈழவருகையின் சாதகமும் பாதகமும்
-
தோட்டப்பயிரைக் காக்கும் இலகு கருவி (உள்ளூர் கண்டுபிடிப்பு)
-
எமது உம்மாண்டி திரைப்படத்தின் பாடல் காணொளி வடிவமாக..
-
வரவு செலவுப் பதிவுக்கு உதவும் mobile மென்பொருள்
-
டயலொக் வலையமைப்பின் பகல் கொள்ளையும் இலங்கை நுகர்வோர் சட்டங்களும்
-
10 டொலர் ஒன்றால் எம் தேசத்திற்குரிய சினிமாவை உருவாக்க வாருங்கள்
-
cinema master class 1 - ஏன் திரைக்கதையாசிரியர்களை புறக்கணிக்கிறோம் - இயக்குனர் வெற்றிமாறன்
-
இறுதிப் போர் வலியைச் சொல்லி சர்வதேச விருதுகள் வென்ற என் குறும்படம்
-
உங்கள் இல்லத்திரையில் ஈழத்தின் வெந்து தணிந்தது காடு
-
அவளைப் பிரசவித்தேன் - என் பத்திரிகைக் குறுங்கதை
Popular Posts
பலர் அறிய வேண்டிய முக்கிய பதிவுகள்
Blog Archive
-
►
2014
(24)
- ► செப்டம்பர் (4)
-
►
2013
(27)
- ► செப்டம்பர் (1)
-
►
2012
(37)
- ► செப்டம்பர் (4)
-
►
2011
(72)
- ► செப்டம்பர் (5)
!—continous>
Powered by Miraa Creation.




























