Featured Articles
All Stories
rocket raja short film லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
rocket raja short film லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 17 ஏப்ரல், 2012

இலங்கைப் பதிவரின் முதல் குறும்பட வெளியீடும் தமிழ் இணைய உலகில் வித்தியாசமான வெளியீடும்

                           
அனைத்து உறவுகளுக்கும் வணக்கம்.
சற்றே பிந்திய பதிவு தான் ஆனால் அந்தக் கணங்களின் சந்தோசம் கழியாத இவ்வேளையில் அதை பகிர்வதில் சந்தோசமே.
உண்மையில் இது ஒரு குறும்படம் என்ற வரையறைக்குள் பலரால் உள்ளடக்க முடியாமல் இருக்கலாம். ஆனால் எதோ இப்படியும் செய்து பார்க்கலாம் என்ற ஒரு எண்ணமே இத்தனைக்கும் காரணமாகும். ஏதேச்சையாக மதுரனும் நானும் ஒரு புகைப்படத்துறை சார்ந்த கடையில் சந்திக்கும் போது எடுக்கப்பட்ட திடீர் முடிவால் கடை முதலாளியான குகரூபனின் கைப்பேசியில் கையில் இருந்த ஒரு கதையை வைத்து எந்த வித முன்னாயத்தமும் இன்றி ஒரு மணித்தியாலத்தில் எடுத்த முடித்த ஒரு விளையாட்டுத்தனமான படைப்புத் தான் இந்த ராக்கெட் ராஜாவாகும்.
உண்மையில் ஒரு மணித்தியாலத்தில் எடுத்து முடிக்கப்பட்டது என்று சொல்லப்பட்டாலும் இதை எடிட் பண்ண மதுரன் செலவிட்ட நேரம் பல மணித்தியாலங்களாகும். ஏனெனில் அந்தக் கடையுடன் என் வேலை முடிந்து விட்டது. ஆனால் அதற்கான இசைக் கோர்ப்பிலிருந்து அனைத்து வேலைகளையும் அவன் தான் செய்தான்.
அதே போல படத்தை ஒளிப்பதிவு செய்த MULTI VERSION GRAPHIC குகரூபனை கைப்பேசி படாதபாடு படுத்திவிட்டது.
அத்துடன் ஜங்கிள் தனுசனும் காட்சி அமைப்பில் பெரிதும் உதவியாக இருந்தார்.
யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட பல நல்ல நல்ல குறும்படங்கள் குழு ஒற்றுமையின்மையால் தடைப்பட்டுப் போனாலும் ஏதாவுது ஒன்றைச் செய்தாக வேண்டும் என்ற கட்டாயத்தாலேயே இதைச் செய்து முடித்துள்ளோம்.

வெளியீடு
இது வரை தமிழ் இணையத்தில் இடம்பெறாத ஒரு முயற்சியாக இருக்கட்டுமே என்ற எண்ணத்தில் நாற்றுக் குழுமத்தில் வெளியிடத் தீர்மானித்தோம். ஆனால் எதிர் பார்த்ததை விட நண்பர்களின் ஆதரவு மிகவும் உற்சாகத்தை அளித்தது. வேலை நாளாக இருந்தாலும் இந்த விழாவுக்காக நேரம் ஒதுக்கி அரும்பாடு பட்ட அம்பலத்தார் ஐயா, கலை விழி, ஐடியாமணி, நிருபன், காட்டான், இம்ரான், வருண், கந்தசாமி போன்றோருக்கு பல நூறு நன்றிகள் சொல்லக் கடைமைப்பட்டிருக்கிறேன்.
நிகழ்ச்சியை கலைவிழி தொகுத்து வழங்கியதுடன் அறிமுக உரையையும் வழங்கியிருந்தார்.
ஜனா அண்ணா அவர்கள் மங்கள விளக்கை ஏற்றி தமிழ்மொழி வாழ்த்தையும் வழங்கிச்சிறப்பித்திருந்தார்.
அதன் பின்னர் திரு பொன்னர் அம்பலத்தார் ஐயா அவர்கள் வரவேற்புரையை வழங்கியதுடன் குறும்படத்தையும் வெளியிட்டு வைத்தார்.
படத்தின் மேல் சொடுக்கிப் பெரிதாக்கலாம்.
அதன் பின்னரான விமர்சனத்தை வருண் வழங்கியிருந்தார்.


அதன் பின்னர் இறுதி நிகழ்வாக இம்ரான் அவர்கள் நன்றியுரையை வழங்கியதுடன் மிகவும் குறுகிய நேரத்திலேயே சிறப்பாக நிகழ்வு நிறைவுக்கு வந்தது.

அதன் பின்னர் வருகையாளர்களின் விமர்சனமும் பதியப் பெற்றது. நிகழ்வில் கலந்து கொண்டோரை உபசரிப்பதில் சிரத்தை எடுத்துக் கொண்ட சகோதரி சித்தாராவிற்கும் இந்த இடத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
விமர்சனங்களை நான் விரும்பியது போல நேரடியகவே நிறைகளையும் குறைகளையும் தெரிவித்த துஸ்யந்தன், கந்தசாமி, மருதமூரான், ஹலிவுட் ரசிகன், ஜனா அண்ணா, நிருபன், ஐடியா மணி, காட்டாண்ணா, அமல்ராஜ், அறிவிப்பாளர் முகுந்தண்ணா, ஜீ , கிருத்திகன், முகுந்தன், சுஜா அக்கா மற்றும் எவரையேனும் தவற விடப்பட்டிருந்தாலும் அனைவருக்கும் இந்த இடத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

அதே போல அடுத்த படமாக உள்ளூர்த் திருட்டுக்களை மையப்படுத்தி அருமையான ஒரு கதைக்களத்துடனும் விளம்பரத் துறையிலும் நாடகத்துறையிலும் தேர்ச்சி பெற்ற ஹரிகரனின் இயக்கத்தில் எடுக்கும் திட்டம் இருக்கிறது. சரியான பண வசதியும் குழுவும் அமைந்ததும் ஒரு சிறப்பான குறும்படமாக உருவாக்கவுள்ளொம். இதற்கான வேலைகள் மிக விரைவில் ஆரம்பிக்கப்படும் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.

நன்றிச் செதுக்கலுடன்
ம.தி.சுதா


இதோ அக்குறும்படம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்













back to top