திங்கள், 21 மார்ச், 2011

பதிவுலகில் சமூகபதிவாளனாக என்னை முத்திரை குத்திய முக்கிய சாதனை

           எந்தவொரு மனிதனும் தனது ஒவ்வொரு முன்னெடுப்புக்களையும் ஒரு பெரிய எதிர் பார்ப்புடன் தான் ஆரம்பிக்கிறான். நான் நல்லது செய்ய வேண்டும் என நினைத்து அரம்பித்த பல விடயங்களில் செருப்படி தான் வாங்கியிருக்கிறேன்.
கரை தேடும் அலை போல்
அடிக்கடி வருகிறேன்
மணல் வீட்டை அழிக்க வருவதாய்
பேதைச் சிறுமி திட்டிக் கலைக்கிறாள்.
நான் திரும்பியும் வருவேன்
என் இலட்சியம்
கரைக்கு மண் கொணர்வது மட்டுமே

     நூறாவது பதிவை எட்டும் எனக்குள் ஒரு நெருடல் இருந்து கொண்டே இருந்தது. இது வரை என் எழுத்தக்களால் நான் எதாவது சாதித்தேனா என என்னை நானெ அடிக்கடி கேட்பதுண்டு. ஆமாங்க ஒரு சில வாரங்களுக்கு முன் நான் இட்ட பதிவு ஒன்று எனக்கு அந்தத் திருப்தியை எற்படுத்தியுள்ளது.
         இதற்கு முன் ஆரம்ப நாட்களில் எனது அசினின் சமூகப்பணியால் பார்வையிழந்த யாழ் வறியவர்கள்...!!! என்ற பதிவின் மூலம் இந்த உலகிட்கு ஒரு செய்தியை முதல் முதல் அந்த வறியவர்களுக்காக பகிர்ந்தேன். ஆனால் கடைசியில் 9 தளங்கள் அதை அசினுக்கெதிரான பிரச்சாரத்திற்காக பயன்படுத்திக் கொண்டதால் அத்தனை பேரது செருப்படியும் என் மேல் தான் விழுந்தது. அத்துடன் என்னொடு போராடிய நண்பர்களான சித்திரா, மிதுன், தனிக்காட்டு ராஜா போன்றோருக்கும் அசினின் அசமந்தப் போக்கால் ஏமாற்றமே மிஞ்சியது.
   
   அதன் பின் இலங்கையின் வலையமைப்புகளின் பித்தலாட்டங்கள் சிலவற்றை அம்பலப்படுத்தினேன் 
           இதன் மூலம் பல நண்பர்கள் பயன் பெற்றார்கள்.
அதன் பின் இட்ட தமிழுக்காக ஒரு தமிழனால் முடிந்த உதவி (இலகு தட்டச்சு உதவி) என்ற பதிவின் மூலமும் பல நண்பர்களை ஆங்கிலத் தட்டச்சிலிருந்து தமிழுக்கு இழுத்து வந்தேன்.

நான் பெற்ற பெரு வெற்றி
      சில வாரங்களுக்கு முன் பதிவுலகத்திலிருந்து பாமரர்களுக்கு உதவ வாருங்கள். என்ற பதிவின் மூலம் வெளி நாட்டுத் தரகர்களின் நுட்பங்களை வெளிப்படுத்தியிருந்தேன். ஆனால் இங்கும் சில நண்பர்கள் என்னை கடிந்து கொண்டார்கள் அருண்டவன் கண்ணக்கு இருண்டதெல்லாம் பேய் என்றார்கள். கடந்த சில நாட்களுக்கு முன் நான் குறிப்பிட்டது போல கனடாவின் அப்பிள் தோட்ட வேலை என இரண்டரை லட்ச ரூபாய் பணம் கட்டி விட்டு கட்டநாயக்கா விமான நிலைய வாசலில் பயண ஆயத்தத்துடன் 50 ஆயிரம் பெறுமாதியான உடைகளடங்கிய பொதிகளுடன் 300 ற்கு மேற்பட்டவர் சென்று ஏமாந்து வந்தார்கள். முக்கியமாக இந்த ஏமாற்று வேலையில் 2 பொலிசாரும் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
     அடுத்ததாக இதே போல யாழ்ப்பாணத்திலும் ஒரு ஏமாற்றுப் பேர்வழி கைது செய்யப்பட்டிருக்கிறார். இன்னும் ஒரு சில நாளில் கனடாவின் விமான நிலைய பணியாளராக செல்லவென ஏமாற்றப்பட்ட 1000 பேர் என ஒரு செய்தி வரக் காத்திருக்கிறது.
      இப்ப சொல்லுங்க என் மனதுக்கு திருப்தியாய் இருக்குமா ? இல்லையா ? எத்தனை பேர் இதைப் பார்த்து பயன் பெற்றிருப்பார்கள். இனி நான் எனது 100 வது பதிவை இடலாமா ? (இது எனது 96 வது பதிவு)

“யான் பெற்ற இன்பம்
பெறுக இவ்வையகம்
யான் பெற்ற துன்பம்
அற்ப புழு கூட பெறக் கூடாது“


About the Author

நான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director
View all posts by admin →

Share This Post

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

63 கருத்துகள்:

vada

பெயரில்லா சொன்னது…

உங்கள் சமூகம் சார்ந்த அக்கறைக்கு தலை வணங்குகிறேன். நூறாவது பதிவுக்கு முன் கூட்டிய வாழ்த்துக்கள் இந்த சிறியேனது..

yes sutha.... most of your posts made well out put.

உணவு உலகம் சொன்னது…

சமூக சிந்தனை மிகுந்த உங்களின் பதிவுகள் உங்களுக்கு இந்த அந்தஸ்த்தை தந்துள்ளது. ஒவ்வொரு பதிவருக்கும் இருக்க வேண்டிய சமூக அக்கறை உங்களில் குடிகொண்டுள்ளது. வாழ்த்துக்கள்.

i am waiting for your 100 th post, sutha..

நிரூபன் சொன்னது…

வணக்கம் சுதா, ஒரு மனிதனின் வாழ்க்கையில் தடைக்கற்களும் இருக்கும், படிக்கற்களும் இருக்கும். அந்த வகையில் தான் உங்களுடைய வாழ்வில் பல தடைக்கற்கள் இருந்தும், எமது சமூகத்திற்கான படிக்கற்களாக, விழிப்புணர்வு வேண்டி, மிகுந்த கவனமெடுத்துப் பதிவிடும் உங்களின் பதிவுகளும் சமூகம் சார் பதிவுகளாகவே காணப்படுகின்றன என்பதில் ஐயமில்லை.

இன்னும் நிறையப் பதிவுகளை நீங்கள் வழங்க வேண்டும் என வாழ்த்துகிறோம்.

ஆகுலன் சொன்னது…

மேலும் மேலும் உங்களது சேவை வளரட்டும்..............

Unknown சொன்னது…

வாழ்த்த வயது இல்லை நண்பா
அறிய பல காரியங்கள்
செய்து இருக்கின்றாய்
இன்னும் பல சாதனைகள் புரிய
வாழ்த்துக்கிறேன்
தொடரட்டும்

எங்கே அந்த பணமுடிப்பு கொண்டுவாருங்கள்
இவருக்கு சமுக ஆர்வலர் என்ற பட்டத்தை வழங்குகிறேன் ....

Unknown சொன்னது…

சமுக ஆர்வலர்
மதி சுதா
வாழ்க ...
சமுக ஆர்வலர்
மதி சுதா
வாழ்க
சமுக ஆர்வலர்
மதி சுதா
வாழ்க .....

Unknown சொன்னது…

நூறாவது பதிவுக்கு
எனது முன் வாழ்த்துக்கள்

Unknown சொன்னது…

நண்பா உனக்கு தெரிந்தவற்றை உலகுக்கு தெரியப்படுத்து அதுவே சிறந்த சமூகத்தொண்டு...........தூற்றுவாரை எண்ணி கவலைப்படுவாயின் உன்னால் நினைத்தை செய்ய முடியாமல் துவண்டு போகக்கூடும்........எதிர் பார்க்கப்படும் 100வது பதிவுக்கு முன் வாழ்த்துக்கள்....

ரேவா சொன்னது…

போற்றுவார் போற்றட்டும் புழுதி வாரித்
தூற்றுவார் தூற்றட்டும் தொடர்ந்து சொல்வேன்
ஏற்றதொரு கருத்தை எனதுள்ளம் என்றால்
எடுத்துரைப்பேன் எவர்வரினும் நில்லேன், அஞ்சேன்..

நான்
நிரந்தரம் ஆனவன் அழிவதில்லை - எந்த
நிலையிலும் எனக்கு மரணம் இல்லை ... கண்ணதாசனின் இந்த வரிகளையே உங்களுக்கு மறுமொழியாய் இடுகின்றேன் சகோ... உங்கள் நூறாவது பதிவை ஆவலோடு எதிர்பார்க்கின்றோம்..

Pranavam Ravikumar சொன்னது…

அருமை!

ஆர்வத்திற்கும், பணிக்கும் பாராட்டுக்கள்.

இப்ப சொல்லுங்க என் மனதுக்கு திருப்தியாய் இருக்குமா ? இல்லையா ? //

அடி வாங்கினாலும் அயராது செய்யும் சேவை மகத்தானதே..

இதைப்பற்றிதான் இன்றைய என் பதிவும்..

http://punnagaithesam.blogspot.com/2011/03/karthik-llk.html


மனம் தளராமல் - பதிவுலக ஊக்க கட்டுரை

Unknown சொன்னது…

வாழ்த்துக்கள் சுதா! தொடருங்கள்! :-)

நூறாவது பதிவுக்கு
எனது அன்பார்ந்த முன் வாழ்த்துக்கள்.

இன்னும் சாதிக்கவேண்டும் எழுதுலகில்மட்டுமல்ல அனைத்திலும்.

ஆச்சி ஸ்ரீதர் சொன்னது…

வாழ்த்துகள்.

பெயரில்லா சொன்னது…

தங்களின் பதிவுகளை தொடர்ந்து படித்து வருகிறேன் ... நிச்சயம் ஒருவித மாற்று சிந்தனையும், ஒவ்வொரு பிரச்சனைக்கும் வேற்றுக் கோணத்தில் அணுகி - உள்புகும் ஆற்றக் உங்களுக்கு உள்ளது. மேலும் மெருகேற்றி எழுதவும், சொந்த வாழ்வில் எல்லா வெற்றியும், சுகங்களும் கிடைக்க இறைவனை பிரார்த்திக்கிறேன் சகோ.

தாங்கள் மேலும் மேலும் பல நல்ல படைப்புகளை வெளியிட்டு புகழின் உச்சிக்கே செல்ல என் அன்பான வாழ்த்துக்கள்.

100 வது பதிவுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்

வாழ்த்துக்கள்... தொடருங்கள்!

Mohamed Faaique சொன்னது…

வாழ்த்துக்கள்...

http://faaique.blogspot.com/2011/03/blog-post_20.html

Harini Resh சொன்னது…

இன்னும் நிறையப் பதிவுகளை நீங்கள் வழங்க வேண்டும் என வாழ்த்துகிறோம்

Amudhavan சொன்னது…

மிக நல்ல உயர்ந்த எண்ணங்களுடன் பதிவெழுதிக்கொண்டும் செயற்பட்டுக்கொண்டும் இருக்கும் உங்களுக்கு எல்லாருடைய நல்வாழ்த்துக்களும் உண்டு.

நர்மதன் சொன்னது…
தனிமரம் சொன்னது…

உங்களின் பதிவுகளை தொடர்ந்து அவதானிக்கிறேன் அழகான எழுத்து நடையில் சமூகத்திற்கு வேண்டிய விசயங்களை மிக மெண்மையாக அனுகிறீங்கள் நல்லதே செய்யுங்கள் நன்மைபிறக்கும் என்னற்ற பதிவு தொடருங்கள் வாழ்த்துக்கள் நண்பனே.

பெயரில்லா சொன்னது…

உங்கள் சமூக அக்கறையில் அரசியல் சாயம் பூச இடம் கொடுக்காதீர்கள்
http://biz-manju.blogspot.com/

உங்கள் பதிவுகளால் பயன்பெற்றோரின்
பாராட்டுக்களும் பிரார்த்தனைகளும்
உங்கள் உயர்விற்கு நிச்சயம் உறுதுணை!

உங்களின் சேவைகள் தொடர வாழ்த்துக்கள்!

Admin சொன்னது…

நன்றி சுதா உங்கள் சமூகப்பணி மேலும் தொடர வாழ்த்துக்கள்
உங்கள் பேட்டியை காண ஆவலுடன் எதிர்பார்த்துள்ளேன்

இன்று நான் :
ஒவ்வொரு போல்டருக்குமான நிறத்தை / Icon ஐ மாற்ற

நிலாமதி சொன்னது…

போற்றுவார் போற்றட்டும் புழுதிவாரி தூற்றுவார் தூற்றட்டும். உங்கள்மனச்சாட்சிக்கு சரிஎனபடுவதை செய்யுங்கள் இக்காலத்தில் நன்மை செய்பவருக்கு அவப்பெயர் தான்வருகிறது ஆனாலும் உங்கள்புண்ணியம் கணகேடுக்க்படும் .அதற்கு எங்கிருந்தோ ஒரு சன்மானம் காத்திருக்கும் உங்கள் சந்ததிக்கு அதுபோய சேரும். நூறாவதுபதிவுக்கு முன் கூட்டி வாழ்த்துக்கள். .

Rathnavel Natarajan சொன்னது…

உங்களது மனதுக்கு சரியென படுகிறதை செய்யுங்கள்.
உலகம் பின்பு உங்களை புரியும்.
வாழ்த்துக்கள்.

அன்பு நண்பன் சொன்னது…

sakothara unmaithan,,, epadejana advertisment ku atho oru vakaigil kadupadutha paper neruvanankal mujatcheka vandum...

100-வது பதிவுக்கு அட்வான்ஸ் வாழ்த்
துக்கள். உங்கள் மனதில் தைரியமும்
உடலில் வலுவும் உள்ளவரை சாதித்
துகொண்டே இருங்கள்.

ஷஹன்ஷா சொன்னது…

சமூக சிந்தனை உள்ளவர்களை ஒரு நாளும் சமூகம் சரியாக பயன்படுத்தியதில்லை..அதற்காக அமைதியாக இருக்க முடியுமா....



100 வது பதிவிற்கு என் முற்கூட்டிய வாழ்த்துகள்..வரவேற்கின்றேன்

மிக நல்ல யாத்திரையின் முடிவில் கூட ஒரு அயர்ச்சி வரும் .
அப்படித்தான் உங்களுக்கும்
எந்த நல்லதையும் கெட்டதையும் யாரும் எவருக்கும் செய்யமுடியாது
எல்லாமே நமக்கு நாமே பண்ணிகொள்வதுதான்
அயராதிர்கள்.
என்றென்றும் அன்புடன் ,
சுகி ...

செல்வா சொன்னது…

ஐ .. கண்டிப்பா நூறாவது பதிவுபோடலாம் .. அதே மாதிரி நான் அப்புறமா வந்து கேள்வி கேக்குறேன் ..

டிலீப் சொன்னது…

100-வது பதிவுக்காக காத்திருக்கிறேன் நண்பா.அட்வான்ஸ் வாழ்த்துக்கள்

எஸ்.கே சொன்னது…

வாழ்த்துக்கள்! தங்கள் பணி மென்மேலும் சிறக்கட்டும்!

R.SUBAS சொன்னது…

சுதா அநேகமாக தாங்களடய வலைபபூ பார்பதில் நான் அதிகம் நாட்டம் கொண்டவன் பேசுபவர்கள்,தட்டிகளிப்பவர்கள் இல்லாவிட்டால் உலகம் சூழலுவது நின்று விடும் ஏன் எனின் உலகம் சூழலுவதற்கும் இவர்களுடைய பணி முன்நிற்கின்றது.
நண்பா மனதை தளர விடாதே
என்றும் என் வார்த்தை உனக்கே.
அன்பின் சுபாஸ்

மு.லிங்கம் சொன்னது…

நீங்க வாய் திறந்தால் என்ன அல்லது உங்க கை கிறுக்க ஆரம்பித்தால் என்ன ஒரே அதிரடியாகத்தான் இருக்கும்.
அதை மேலோட்டமாக பார்த்தால் அதாவது தலைப்பை பார்த்தால் முரண்டு பிடிப்பவன் போல் இருக்கும் ஆனால் உள்ளே செல்ல செல்லத் தான் அதன் சுவையே உணரக்கூடியதாக இருக்கும்.
பாராட்டுக்கள் சுதா!

Ram சொன்னது…

இதுவரை உங்களது படைப்புகளை கண்டு பெருமைபட்டிருக்கிறேன்.. நல்ல சமூக விழிப்புணர்வு கொண்டவரான நீங்கள், உங்களுக்காக உங்கள் கருத்தை பகிர உருவாக்கப்பட்ட ஓர் இடத்தில் அவர் அப்படி எதிர்த்தார், இவர் இப்படி எதிர்த்தார் என சொல்வது வருத்தமளிக்கிறது.. 100வது பதிவு போடலாமா என கேட்டதே வருத்தமளிக்கிறது.. ஒருவேளை உங்கள் பழைய பதிவினை ஒரு நினைவூட்டம் ஓட்ட இப்படி செய்தீரா.?? அப்படிதான் இருக்கும்.. சரி சரி.. தாராளமா 100ம் போடுங்க 1000மும் போடுங்க..

வலையுலக சிறுவனின் வாழ்த்துக்கள் .......
http://buildappu.blogspot.com/2011/03/3.html

Mahan.Thamesh சொன்னது…

உங்களின் சமூகத்துக்கான எழுத்து பணி தொடரட்டும்.
100 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.

போற்றுவோர் போற்றட்டும் தூற்றுவோர் தூற்றட்டும் சூரியன் வெளிச்சம்'தான்.
ஸோ நீங்க தொடருங்க மக்கா உங்கள் பணியை திறம்பட எனது வாழ்த்துகள்...

ஹேமா சொன்னது…

மனம் நிறந்த வாழ்த்துகள் சுதா.ஊரில் இந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்துகொண்டு படிப்பையும் கவனிச்சுக்கொண்டு ஒரு புளொக்கர் எழுதுறதெண்டால்.....தொடர்ந்தும் எழுதுங்கள் சுதா !

சுதர்ஷன் சொன்னது…

இவனுங்களை விடுங்க பாஸ் ..சும்மா இருந்து குறை சொல்ல தான் இவனுங்க சரி ..பாமர்கள் குறை சொல்ல மாட்டார்கள் ..ரைகுறையா படிச்சது தன குறை சொல்லிக்கொண்டு தூற்றும் .நீங்க தொடர்ந்து எழுதுங்க சுதா ...நாங்க இருக்கோம்ல துணையா :-)

Chitra சொன்னது…

சமூக அக்கறையுடன் எழுதப்படும் பயனுள்ள பதிவுகளைத் தருவதற்கு, பாராட்டுக்கள்!

உங்கள் சமூகம் சார்ந்த அக்கறைக்கு தலை வணங்குகிறேன்.

Muruganandan M.K. சொன்னது…

சமூக அக்கறையற்ற படைப்புகளால் பயன் இல்லை என்பதில் உறுதியுள்ளவன் நான். உங்கள் சமூக அக்கறையை பதிவுகளில் கண்டு மகிழ்கிறேன். பயனுள்ள 100 அல்ல பல 1000 பதிவுகளுடன் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

arasan சொன்னது…

இன்னும் சிறந்து உயர்ந்த நிலைக்கு செல்ல வாழ்த்துக்கள் சகோ ...

தங்கள் எல்லாப் பணியும் சிறக்க வாழ்த்துக்கள்...

FakeNews.lk சொன்னது…

வாழ்த்துக்கள் சகோதரி... இவ்வளவு பதிவர்கள் இலங்கையில் இருக்கிறார்கள் என்பதைக்காண மிக்க மகிழ்சியளிக்கிறது. கடந்த சில வருடங்களாக நானே எழுதி நான் மட்டுமே வாசித்த எனது பதிவையும் தூசுதட்டி, புதுப்பொழிவுடன் புத்துயிர் பெறச்செய்கிறேன். உங்கள் அணைவரினதும் ஆதரவு எனக்கும் இருக்கும் என எதிர்பார்க்கிறேன்.
http://www.4tamil.blogspot.com/
http://fortamil.tk

தீபிகா சொன்னது…

எழுதுங்க எழுதுங்க எழுதிகிட்டே இருங்க

Unknown சொன்னது…

கண்டிப்பாக தொடருங்கள், 100 வது பதிவுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள் :-)

Unknown சொன்னது…

மதி சுதா....
சமூகப் பதிவாளனாக எனக்கு அடையாளம் காட்டியது அசினின் பதிவு தான்...
வாழ்க தொடர்க உங்கள் சமூகப் பணி!!!
உங்கள பத்தி எதோ போட்டிருக்கானுங்க வந்து பாருங்க கடை ப்பக்கம் !!

ஆயிஷா அபுல். சொன்னது…

வாழ்த்துக்கள் சுதா. தொடருங்கள்!

வாழ்த்துக்கள் மதி.சுதா..
100 வது பதிவை எதிநோக்கும்...

மாணவன் சொன்னது…

வாழ்த்துக்கள்! தங்கள் பணி மென்மேலும் சிறக்கட்டும்!

anuthinan சொன்னது…

வெளிப்படையாக பேசி கொள்ளும் எங்கள்ளுக்குள் எதற்கு மதி அண்ணா மின்அஞ்சல் கேள்வி-பதில்!!! நேரடியாகவே பேசி கொள்ளுவோம்!!!!

Unknown சொன்னது…

வாழ்த்துக்கள்.

Unknown சொன்னது…

மீண்டும் சொல்கிறேன் என் பார்வைக்கு நீங்கள் ஒரு துணிச்சலான சமுக விழிப்புணர்வு எழுத்தாளன்
தொடருங்கள் உங்கள் எழுத்தை உங்கள் பாதையில்
என் வாழ்த்துக்கள் எப்பொழுதும் உங்களுக்கு உண்டு.

மோகன்ஜி சொன்னது…

வாழ்த்துக்கள் சகோதரா! தொடரட்டும் உங்கள் பணி

மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்













back to top