புலம்பெயர் தேசத்தில் வாழும் என் உறவினர் ஒருவரின் மேடை நிகழ்ச்சி ஒன்றுக்காக என்னால் புனையப்பட்ட வரிகளுக்கு அவரே குரல் வடிவம் கொடுத்துள்ளார். அதன் வடிவம் கீழே இணைக்கப்பட்டுள்ளது. அக்காணொளியில் அவர் பிறந்த மண்ணே பின்னணியாக்கப்பட்டுள்ளது. ஆனால் அதில் காட்டப்பட்டுள்ள அரசமரம் இன்று எம்மோடு இல்லை.
ஒரு முறை
ஒரு முறை
என் மண் போக வேண்டும்
விடுமுறை
தான் ஒன்று தாறீரோ
நான் தின்று வழ்ந்த மண்ணது
எனைத் தின்னும்
பாக்கியம் இழந்திடுமோ
எட்ட நின்று ஊர் பார்த்தால்
பச்சை கொடியசைக்கும் ஆலமரம்
காலாற ஒரு கல்
கவ்வுகின்ற தென்றல்
முப்பொழுது போனாலும்
முகம் சுழிக்கா திண்ணை அது
ஒரு முறை
என் மண் போக வேண்டும்
விடுமுறை
தான் ஒன்று தாறீரோ
திட்டம் போட்டு அறுந்த விழுதால்
பிட்டம் தெறித்து விட
சொட்ட சொட்ட அழுதது
மறக்கவில்லை
அங்கே
அற்ப காலம் தங்கினாலும்
என்னை
சிற்பம் போல் செதுக்கிய
கற்பகத் தான் காலடி தான் என் சொர்க்கம்
ஒரு முறை
என் மண் போக வேண்டும்
விடுமுறை
தான் ஒன்று தாறீரோ
நடு வளையில் ஏணை கட்டி
என்னை
சீரங்கம் சீராட்டிய மாளிகை
ஊரில் ஓரம் போய் இருப்பதாய் அறிந்தேன்
நெஞ்சு பதறுதம்மா
பிஞ்சுத் தோடம்பழத்தை
அஞ்சாமல் பிடுங்கியதும்
புழு தின்ற இலந்தையை கூட
புழுகி புழுகி சுவைத்ததும்
இதே கைகள் தானே
அந்த மண்ணில்
ஒரு பிடி அள்ளத் தவறின்
அறுத்தெறிவேன் என் கரங்களை
ஆண்டவனே
ஒற்றை வரம் தாரும்
ஒரு முறை என் மண் அள்ள
மறுப்பின்றி அனுமதி தாரும்
உன் கால் தொழுது
காலனிடம் கொடுத்திடுவேன்
என்னுயிரை
ஒரு முறை
என் மண் போக வேண்டும்
விடுமுறை
தான் ஒன்று தாறீரோ
குறிப்பு - நண்பர்கள் யாராவது இப்பதிவை திரட்டியில் இணைத்து விடுங்கள்.
விடுமுறை
தான் ஒன்று தாறீரோ
நான் தின்று வழ்ந்த மண்ணது
எனைத் தின்னும்
பாக்கியம் இழந்திடுமோ
எட்ட நின்று ஊர் பார்த்தால்
பச்சை கொடியசைக்கும் ஆலமரம்
காலாற ஒரு கல்
கவ்வுகின்ற தென்றல்
முப்பொழுது போனாலும்
முகம் சுழிக்கா திண்ணை அது
ஒரு முறை
என் மண் போக வேண்டும்
விடுமுறை
தான் ஒன்று தாறீரோ
திட்டம் போட்டு அறுந்த விழுதால்
பிட்டம் தெறித்து விட
சொட்ட சொட்ட அழுதது
மறக்கவில்லை
அங்கே
அற்ப காலம் தங்கினாலும்
என்னை
சிற்பம் போல் செதுக்கிய
கற்பகத் தான் காலடி தான் என் சொர்க்கம்
ஒரு முறை
என் மண் போக வேண்டும்
விடுமுறை
தான் ஒன்று தாறீரோ
நடு வளையில் ஏணை கட்டி
என்னை
சீரங்கம் சீராட்டிய மாளிகை
ஊரில் ஓரம் போய் இருப்பதாய் அறிந்தேன்
நெஞ்சு பதறுதம்மா
பிஞ்சுத் தோடம்பழத்தை
அஞ்சாமல் பிடுங்கியதும்
புழு தின்ற இலந்தையை கூட
புழுகி புழுகி சுவைத்ததும்
இதே கைகள் தானே
அந்த மண்ணில்
ஒரு பிடி அள்ளத் தவறின்
அறுத்தெறிவேன் என் கரங்களை
ஆண்டவனே
ஒற்றை வரம் தாரும்
ஒரு முறை என் மண் அள்ள
மறுப்பின்றி அனுமதி தாரும்
உன் கால் தொழுது
காலனிடம் கொடுத்திடுவேன்
என்னுயிரை
ஒரு முறை
என் மண் போக வேண்டும்
விடுமுறை
தான் ஒன்று தாறீரோ
குறிப்பு - நண்பர்கள் யாராவது இப்பதிவை திரட்டியில் இணைத்து விடுங்கள்.
ஈழத்து மொழி, கலை, கலாச்சாரம், பண்பாட்டு விழுமியங்களின் இன்றைய நிலையினைக் கருத்திற் கொண்டு; எம் அடுத்த சந்ததியிடமும், உலகெங்கும் பரந்து வாழும் எம் தமிழ் உறவுகளிடமும் இவ் விடயங்களை அழிவுறாது கொண்டு செல்லும் நோக்கிலும் ஆவணப்படுத்தும் நோக்கிலும் ஈழ வயல் எனும் வலைப் பதிவினைப் பதிவர்கள் இணைந்து உருவாக்கியிருக்கிறார்கள்.ஈழவயலில் வெளியாகும் பதிவுகளை நூலுருப்படுத்தும் முயற்சியிலும் பதிவர்கள் ஈடுபடுகின்றார்கள். இந்த ஈழ வயல் வலைப் பதிவினை நீங்களும் தரிசித்து உங்கள் ஆதரவினையும் இவ் வலைப் பதிவிற்கு வழங்கலாம் அல்லவா?















