வணக்கம் உறவுகளே
சேமம் எப்படி?
நேரடியாக தலைப்பிற்குள்ளேயே
நுழைவோமா ?
இன்று இணைய உலகில்
வருமான நோக்கத்துடனும், பிரபலமடைய வேண்டும் என்ற நோக்கத்துடனும் உருவாக்கப்படும் இணையத்தளங்களிலிருந்து
போலி முகநூல் கணக்கு வரை பெரும்பாலானவை யாழ்ப்பாணத்தை மையப்படுத்தியே ஆரம்பிக்கப்படுகின்றன
என்பது அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படக் கூடிய உண்மையாகும். இது பற்றி நண்பர் ஒருவர்
அண்மையில் விபரமாகவே ஒரு பதிவு போட்டிருந்தார்.
இப்படி மையப்படுத்தி
ஆரம்பிக்கப்பட்டதில் ஒரே ஒரு இணையத்தளம் தான் பலராலும் மிக மிக கேவலமாக நோக்கப்படுவது
இணைய உலகமே அறிந்த உண்மையாகும்.
அண்மையில் இத்தளத்தில்,
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கழகம் ஒன்றின் நடன நிகழ்வில் இடம்பெற்ற காட்சி ஒன்றை காணொளியாகப்
பிரசுரித்ததுமில்லாமல் யாழின் காலாச்சாரச் சீரழிவாக விபரணப்படுத்தியும் இருந்தார்கள்.
இப்படியான செய்திகள் பற்றி அந்த new Jaffna தள நிர்வாகியான சந்திரதேவன் பிரசாத்திடம்
முன்னரும் கதைத்த போது அவர் சொன்னது தன் நண்பர்கள் தான் இப்படியான செய்திகளைப் போட்டார்கள்
என்கிறார்.
யார் அவர்கள் என
விசாரித்துக் கொண்டு போனால் பலர் பல்கலைக்கழகத்துடன் தொடர்புடையவர்கள் என்பது தான்
மிக மிக கசப்பாக இருந்தது. தாம் குடித்து விட்டு அடிக்கும் கும்மாளங்களை இது வரை எந்தவொரு
பல்கலைக்கழக மாணவனாவது வெளியே சொல்லியிருப்பானா? என்ற கேள்விக்கு நான் இணையத் தேடலில்
பதில் தேடிக் கொண்டிருக்கிறேன்.
அவரை பற்றிய பேச்சு
ஒரு புறம் இருக்கட்டும் அந்த காணோளி பற்றிய விடயத்திற்குள் வருவோம்.
அதில் ஜீன்ஸ்-
ரீ சேர்ட் அணிந்த ஒரு ஆடவனும் ஒரு பெண்ணும் மேற்கத்தைய நடனத்தை ஆடுகிறார்கள். நடனம்
கூட ஆபாச அசைவுகளைக் கொண்டிருக்கவில்லை. சரி உடலை பார்த்தோமானால் அப்பெண்ணின் இடுப்பில்
ஒரு நூல் கூட வெளியே தெரியவில்லை.
இதில் எங்கே ஆபாசம்
இருக்கிறது, சரி கலாச்சாரம் சீரழிகிறது என்ற ஒரு வாதத்தை முன்வைக்கிறார்கள். சரி அதை
ஏற்றுக் கொள்ள வேண்டுமானால் குற்றச்சாட்டை வைக்கும் ஒவ்வொருவரும் உங்கள் ஜட்டிகளை கழைந்து
எறிந்து விட்டு கோவணத்துடன் வந்து நின்று சொல்லுங்கள் அதன் பின்னர் தான் உங்களுக்கு
கலாச்சாரம் பற்றிக் கதைக்க தகுதியிருக்கிறது என்று ஏற்றுக் கொள்வேன்.
இதை ஆபாசமென்றால்
1980 ம் ஆண்டு காலப்பகுதிவரை யாழ்ப்பாணத்து ஆலயங்களில் சின்னமேளம் என்று ஒரு நடனக்
குழுவை பிடிப்பார்கள். அதில் சில நடனக் குழுக்கள் மூடிப் போர்த்துக் கொண்டு ஆடினாலும்
சில் குழுக்களில் இடை தெரியும் படியான உடையலங்காரத்துடனே தான் ஆடுவார்கள்.
அவர்களின் இடுப்பில்
காசு செருகிய இளம் பையன்கள் இப்போதும் பல் விழுந்த கிழவராக எம் சமூகத்தில் வாழ்ந்து
கொண்டு தான் இருக்கிறார்கள். அப்போது எங்கே போய் விட்டது உங்கள் கலாச்சாரமெல்லாம்.
இந்த காணொளியை
ஒரு பல்கலைக்கழகத்தில் உயர் பதவி வகிக்கும் ஒருவரும் தன் முகநூலில் பகிர்ந்து அத்தளம்
செய்தது சரி போலவே சுட்டிக் காட்டியிருந்தார். முதலில் எம்மவர்கள் எதைக் கலாச்சாரம்
எதை நாகரீகம் என வரையறுக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.
பொதுவாகவே எம்
சமூகத்தில் ஒரு கோட்பாடு இருக்கிறது. தாம் ஏதாவது மேற்கத்தைய உலகத்திற்கு மாறிக் கொண்டால்
அது நாகரீகம் என்ற முத்திரையை குத்தி விட்டது மற்றையதெல்லாவற்றையும் தப்பான நோக்கத்துடனே
நோக்குவார்கள்.
முதலில் படித்த
சமூகமே இவற்றுக்குத் துணை போவது தான் வருந்தத்தக்க விடயம்.
தேச, மொழிப் பற்றாளர்களிடம்
ஒரே ஒரு கேள்வி….. எம் ஈழத்தின் மானத்தை உலகுக்கு விற்கும் இத் தளத்தை புறக்கணிக்க
எத்தனை பேர் தயாராக இருக்கிறீர்கள்…. எப்போது இந்த விடுப்புகளுக்காக ஒட்டி நின்று பார்ப்பதும்,
அநியாய வதந்திகளுக்கு அதை பரப்ப உதவியாக நின்று துணை போவதையும் தமிழன் கை விடுகிறானோ
அன்று தான் எம் இனம் உருப்படும்….
இதையாவது ஒவ்வொரு
தமிழனும் உணர்ந்து கொள்ளுங்கள்..
குறிப்பு – இனி
நான் குறிப்பிடுவதை விளம்பரமாக நீங்கள் குறிப்பிட்டாலும் எனக்கு கவலையில்லை ஆனால் இச்
செய்தியை பகிர்வதன் மூலமும் எம் இழக்கப்பட்ட மானத்தை கொஞ்சமாவது மீள நிருபித்துக் கொள்ளலாம்.
நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா
















