Featured Articles
All Stories
help to vanni people லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
help to vanni people லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 18 மே, 2013

உணர்வு பெற்ற இந்நாளில் உறுதி கொள்ள சில வரிகள்

உறவுகள் தொலைத்தோம்
உணர்வுகள் வளர்த்தோம்
ஆண்டாண்டு தோறும்
அடிமை அடிமை இல்லையென
உரக்க ஊர்முழக்கி
வீரப்பட்டம் பெறுகிறோம்.

இதுவரை எது செய்தோம்
உணர்வினில் தவம் செய்தோம்
இனிவரை எது செய்வோம்
சிதைவழிந்த அஸ்திவாரம் செதுக்கி
சுவர்களை சீரக்கி முகடெழுப்பிய பின்
கொடிக் கம்பங்களை நடுவோம்

மீள முடியாதவர்
வரலாறு தந்து போய் விட்டார்
மீண்டவர் வரலாறு சொல்ல வாழ்கின்றார்
அடுத்த தலை முறை
எதற்காக வாழப் போகிறது

மடியில் கனமிருந்தவர்
கடல் தூர பறந்து விட்டார்
காலிற்கு செருப்பற்றவன்
பற்றை கடக்க வழியின்றி அழுகிறான்

ஒரு முறை நினைப்போம்
உறவினை வளர்ப்போம்
உணர்வுகள் சிரஞ்சீவியாகும்

நன்றிச் செதுக்கலுடன்
ம.தி.சுதா

இன்றைய நாள் ஒவ்வொரு உணர்வுள்ள தமிழன் வாழ்விலும் உருக்குலைந்த நாளாகும். மரணத்தைக் கடந்தவரோ மரணத்தை தேடி அடைய முடியாமல் வாழ்கின்றார். அவரையும் ஒருகணம் எம் உணர்வால் அரவணைப்போமா?

இன்றை இந் நாளில் சகோதரன் மதீசனின் இசை மற்றும் வரி உருவாக்கத்தில் உருவான இப்பாடல் நல்ல ஒரு உதாரணமான பாடலாகும். அதிலும் இந்த இடம் என்னை ஒரு தடவை நிற்க வைத்து விட்டது

ஃஃஃஃகடவுளுக்கு பணம் இறைக்கும் கொடையாளரே இவனுக்கும் உதவுங்கள் அருளாகுமேஃஃஃஃ


7:59 PM - By ம.தி.சுதா 4

ஞாயிறு, 1 ஜூலை, 2012

ஏழை மாணவன் ஒருவனை கரை ஏற்ற வாருங்கள்

வணக்கம் உறவுகளே சேமம் எப்படி?
சரியாக ஒரு மாத இடைவெளியின் பின்னர் ஒரு அவசர உதவிக்காக என் தளம் மீண்டிருக்கிறேன். (தற்காலிகமாக)
காரணம் என்னவென்றால் என் கண்ணில் பட்ட ஒரு மாணவனுக்காகத் தான் இங்கு வந்திருக்கிறேன். இங்கு அவனது பெயரை நான் பகிரவில்லை. ஆனால் ஊரையும் பாடசாலையையும் தருகின்றேன். யாராவது உதவ விரும்பினால் அவர்களுக்கு நேரடி தொடர்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படும்.

இம் மாணவன் யாழ் உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரியில் சாதாரண தரம் படித்துக் கொண்டிருக்கிறான். இவன் வல்வெட்டித் துறையிலுள்ள தீருவில் பகுதியை சார்ந்த மாணவன்.
இவனது சாதனை என்னவென்றால் இந்த பாடசாலைக்குள் நுழைந்த குறிப்பிட்ட சில நாளிலேயே அனைத்து மாணவர்களையும் முந்தி முழுப்பாடத்திலும் முதன்மைப் பெறுபேறைப் பெற்றிருக்கிறான். ஆனால் இவனது குடும்பப் பின்னணி சற்று மனதை நெருடுவது ஆகும்.

இறுதிப் போரில் போரிற்கு அழைத்துச் செல்லப்பட்ட அண்ணனின் முகவரி தெரியாது. தந்தை ராணுவ பகுதிக்குள் வரும் போது மறுமணம் செய்து இக் குடும்பத்தை கைவிட்டு விட்டார். தாயும் ஒரு தங்கையும் தம்பியுமே எஞ்சி நிற்பவர்கள். ஆனால் இப்படி சாதனை புரியும் இம் மாணவன் இடியப்பம், தோசை போன்றன விற்றுத் தான் பாடசாலையே வருகிறான். இது தான் இவர்களது நாளாந்த வருமானமும் கூட.

பழைய காலங்களில் இவை சாத்தியப்பட்டிருக்கலாம். ஆனால் இன்றைய நாளில் ஒரு சாதாரண தர மாணவனின் முழுமையான கற்கை நெறிக்கே மாதம் 2000 ரூபாய்  தேவைப்படும். நிச்சயம் எதிர்காலத்தில் நல்லதொரு நிலைக்கு வரக் கூடியவன் என இவனது விஞ்ஞான பாட ஆசிரியரே தெரிவிக்கின்றார்.

யாராவது இவனை பொறுப்பேற்று கற்பிக்க விரும்புபவர்கள் முன்வாருங்கள். தங்களால் இயலாவிடினும் பரவாயில்லை இத்தகவலை மற்றவருக்கு சேர்ப்பதன் மூலம் இவனுக்கு உதவுங்கள்

நன்றிச் செதுக்கலுடன்
ம.தி.சுதா

குறிப்பு - இது என் மீள் வருகையல்ல இன்னும் சில நாளில் ஓய்வின் பின்னர் மீண்டும் ஒரு புதிய மனிதனாக சந்திக்கிறேன். பழைய ம.தி.சுதா நிச்சயம் மீண்டும் வரமாட்டான். அன்பு உறவுகளின் வேண்டுகைக்கமைவாக மீண்டும் ஆரம்ப கால ம.தி.சுதாவாகவே மாறிக் கொள்கிறேன்.

செவ்வாய், 9 ஆகஸ்ட், 2011

மனித நேயம் கொண்ட தமிழருக்காக (அரவணைப்போம்- 1)



 நீங்கள் தான் இவருக்கு உதவி செய்ய வேண்டுமென்பதில்லை. என்னைப் போல இந்தத் தகவலை பகிர்ந்தாலே போதும் உலகின் எங்கோ ஒரு மூலையில் இருக்கும் ஒருவராவது உதவக்கூடும்.
இணையத்தில் எத்தனை மணித்தியாலங்களைச் செலவழிக்கிறோம் சில நிமிடங்களை இதற்கும் செலவழியுங்களேன். ஒவ்வொருத்தரும் 10 பேருக்காவது பகிர்ந்தாலே போதும். நீங்கள் நிறுவனத்தில் வேலை செய்பவரானால் மாதத்தில் ஒரு வேளை தேநீரை இவர்களுக்குக் கொடுத்தாலே போதும் உறவுகளே...
இந்தத் திட்டத்தில் இதுவரை 5 பேர் பயன்பெற்றிருப்பது மிகவும் சந்தோசமான சேய்தியாகும்.

ஞாயிறு, 3 ஜூலை, 2011

மனித நேயம் கொண்ட தமிழரே எம் பாவம் தீர்ப்போம் வாருங்கள்

வணக்கம் உறவுகளே சேமம் எப்படி ?
                    மனிதனாகப் பிறந்த ஒவ்வொருத்தனும் ஏதோ ஒரு பாவமாவது அறிந்தோ அறியாமலோ செய்திருப்போம். நாம் வாழும் காலம் மிக மிக சொற்பமானதே அந்தக் குறுகிய காலத்தில் எம்மால் முடிந்த சிறு உதவியாவது செய்தால் ஒரு மனத் திருப்தியிருக்குமல்லவா
                        இது ஒரு சுயலாபமற்ற திட்டம் சம்பந்தமானது . நாம்

புதன், 18 மே, 2011

உலகத் தமிழனுக்கு வன்னிமகனின் கெஞ்சல் மடல்..

என் அன்பு உறவுகளே சேமம் எப்படி ?

          இதைப் படிக்க தங்களுக்கு பொறுமை இருக்குமோ தெரியல இருந்தாலும் கெஞ்சிக் கேட்கிறேன் ஒரு 5 நிமிடம் இந்த ஈனத் தமிழனுக்காக செலவழியுங்களேன்.
         இந்த உலகத்தில் நாம் தனிமைப்படுத்தப்பட்டு பலரின் பகடைக்காய்கள் ஆகிவிட்டோம். ஒரு சில புலம் பெயர் தமிழரின் செயலால் எம்மிடம் இருக்கும் கொஞ்ச சுதந்திரமும் பறிக்கப்பட்டு விட்டது. அவர்களால் எம் மீது நிஜமான பாசம் கொண்ட பலரை கூட களங்கப்பட வைத்து விட்டார்கள்.. நான் நடந்ததை பற்றி அதிகம் கதைக்க விரும்பல நடக்கப் போறதைப்பற்றி கதைக்கவே விரும்புகிறேன். இங்கு நான் சொல்வது சிலருக்கு நியாயமாக படலாம் பலருக்கு கோபத்தை கிளறலாம். ஆனால் உங்கள் மனட்சாட்சியை தொட்டு சொல்லுங்கள் நான் சொல்வதில் ஏதாவது நியாயமின்மை இருக்கிறதா ?

வியாழன், 2 டிசம்பர், 2010

வன்னிப்போர்க் களத்தில் பொருட்களின் விலைப்பட்டியல்

          இந்த ஆக்கத்தை முன் அனுமதியின்றிப் பயன்படுத்துவோர் திருடர்களாகவே கருதப்படுவர்.
           இவை ஒரு அதிசயமான விடயமாகும். அதனால் நீங்கள் நம்ப மாட்டீர்கள் எனத் தெரியும் அதற்கு நான் என்ன செய்யலாம். உண்மைகள் என்பது மூடி மறைக்கப்பட்டாலும் ஒரு நாள் வெளிவருவது தானே.
இங்கு நான் குறிப்பிடுவது வன்னியின் போர் உச்சக்கட்டத்தில் இருந்த நேரம் பொருட்கள் இருந்தாலும் வாங்கவோ விற்கவோ முடியாத நிலையில் இருந்த சராசரி விலைப் பட்டியலாகும். இந்த அட்டவணையில் தற்போதுள்ள விலையையும் அங்கே இருந்த விலையும் போடப்பட்டுள்ளது.
12:09 PM - By ம.தி.சுதா 93

மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்













back to top