புதன், 25 ஆகஸ்ட், 2010

இலங்கையில் குறைந்த செலவில் PHONE கதைக்க ஒரு வழி..!!!

6:31 PM - By ம.தி.சுதா 5


இது பலர் அறிந்து சிலர் அறியாத விடயம் பற்றிய ஒரு சிறிய கட்டுரையாகும்.




            இலங்கையில் 5 ற்கு மேற்பட்ட கைப்பெசி வலையமைப்புக்கள் இருந்தாலும் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு லாபகரமான விடயம் இருக்கிறது. ஒரு சில வலையமைப்பாளர்கள் மற்றவர்களின் வருகையால் வயித்தெரிச்சலை வெளியே காட்டிக் கொள்ளாமல் தமது கட்டணங்களையும் சடுதியாகக் குறைத்துள்ளார்கள்.




             
அத்தகவல் கூட பலரைப் போய்ச் சேரவில்லை. சரி இலங்கையில் மிகக் குறைந்த தற்போதைய கைப்பேசிக்கட்டணம் 1.31 சதமாகும். இது வலையமைப்பிற்குள் மட்டும் தான் மற்றைய வலையமைப்புகளுக்கு எடுக்க வேண்டுமானால் குறைந்தத 2.66 சதமாகும். ஆனால் hutch வலையமைப்பு rate cutter  என்ற முறையை அறிமுகப்படுத்தினாலும் கூட்டிக்கழித்தால் எல்லாம் கிட்டத்தட்ட சரி தான். ஆனால் இவர்கள் தம் வலையமைப்பை அறிமுகப்படுத்துவதற்காக யாழ் மாவட்டம் போன்ற நகரங்களில் இந்த rate cutter  வாழ் நாள் முழுதும் இலவசமாக வழங்கப்பட்டிருக்கிறது. இல்லாவிடில் மாதம் மாதம் 58 ரூபா பெறுமதியான அட்டை இடவேண்டும். இதில் வலையமைப்பிற்குள் 65 சதமும் வேறு வலையமைப்பிற்கு 1.95 சதமும் செலவாகும்.




             இப்பொழுது சொல்லுங்க இலங்கையில் எது லாபம். தெரிந்த யாழ் நண்பரிடம் கேட்டு இந்த சிம் அட்டையை வாங்கிப்பாவியுங்கள். ஆனால் முக்கிய விடயம் hutch உடைய சாதாரண சிம் அட்டைகளும் விற்பனையில் இருக்கிறது. 
         தேவையானால் தொடர்பு கொள்ளுங்க சிம் அட்டை இலவசமாகையால் வாங்கியனுப்பிகிறேன் நீங்களே பணமிட்டுப் பாவியுங்கள்.


UPDATE - 25/11/2010

என் சகோதரர்களுக்கு... இதே வலையமைப்பு நட்டத்தில் ஓடுவதாலோ தெரியவில்லை இப்போது மேற்குறிப்பிட்ட நடை முறையிருந்தாலும் மறைமுகமாக பணம் பறிக்க முயல்கிறார்கள் விபரம் அறிய இங்கே
 சொடுக்கவும். அதற்காக பாவிக்க கூடாதென்று சொல்லவில்லை பாவனை முடிய எமது வழமையான விளையாட்டை காட்ட வேண்டியது தானே....

About the Author

நான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director
View all posts by admin →

Share This Post

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

5 கருத்துகள்:

ம.தி.சுதா சொன்னது…

@ riyas...
வருகைக்கு நன்றி சகோதரா..

Jana சொன்னது…

என்ன சுதா பின்னால நாய் துரத்த தொடங்கீட்டுபோல!!!!

ம.தி.சுதா சொன்னது…

ஐயோ அண்ணா நான் யார் கதவிலும் நாசம் செய்யல...

Hutch மலிவு தான் ஆனால் அவங்கட network அவ்வளவு சிறப்பு இல்லை, அவங்கட coverage ம் அவ்வளவு சிறப்பு இல்லை. கொஞ்சம் விலை கூட என்றாலும் dialog தான் நான் பயன்படுத்தியவற்றுள் நல்ல coverage & quality ஆனதாக இருக்கிறது.

ம.தி.சுதா சொன்னது…

@ என்.கே.அஷோக்பரன் said...
வருகைக்கு நன்றி சகோதரா.. நீங்க சொல்வது முற்றிலும் சரி. நான் கட்டுரையில் குறிப்பிட தவறிய ஒரு விடயத்தை சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. சில வேளை சிம் வேலை செய்யாது வாடிக்கையாளர் சேவையில் கேட்டால் “சார் உங்க சிம் ஸ்க்ரச் ஆகீட்டுது என்று நினைக்கிறன். எங்க நெட்வேர்க்கில் தப்பிருக்காது நீங்க வேணும்ணா எங்கட கொழும்பு ப்பிராஞ்சுக்கு கொண்டு வாங்க மாத்தித் தாரம்” என்பார்கள். போய் வார காசுக்கு இங்கு ஒரு கைப்பேசி வாங்கலாம் நண்பா...?

மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்













back to top