அம்மா நீ பெற்ற பிள்ளை
இன்று உனைச் சுமக்க
கருப்பையின்றி நிற்கிறது
நீ ஒலிவோயில் பூசிய
கால்களை தடவிப் பார்க்கிறேன்
இன்று எந்த நாய் தின்று
எஞ்சிய என்பாக
கிடக்கிறதோ தெரியாது.
பற்களில் பாதி
எந்த வயல் வெளியில்
விதைக்கப்பட்டதோ தெரியாது
வெட்டக் கூடதென
ஆசை மாமா சூப்பிவிட்ட
நகங்களெல்லாம்
இன்று எந்த மண்ணுக்கு
உரமாய் போனதோ
அதுவும் தெரியாது
தேன் நனைத்த விரலால்
ஆனா எழுதிய நாவில்
இப்போதும் ஏதோ கரிப்பு இருக்கிறது
நான் மனிதனென்று சொல்வதற்காய்
என்னிடம் எஞ்சியிருப்பது
கடவுள் வைத்த ஆறறிவும்
உடம்பின் எங்கோ ஓர் மூலையில்
கொஞ்ச உயிரும் தான்
அப்பா வைத்த பெரும் பெயரை
அடிக்கடி ஏசிய காரணத்தாலா
நொண்டி என்ற சிறு பெயராய்
சுருக்கி விட்டாய் ஆண்டவனே.
11 கருத்துகள்:
முடங்கிய உணர்வுகளில் - புது
உணர்ச்சிகள் வரமுன்னர்
சிதைந்தது எண்ணங்கள்
உயிர் கலைந்த சாவுகள்
உடலிருக்கு உயிர் இருக்கு
நரம்பிருக்கு எலும்பிருக்கு
உணர்வு தொலைத்த வெறும் கோதுகள்
இரத்தமில்ல உயிர் கோலங்கள்
@ நன்றி யாதவண்ணா
நல்ல கவிதை, உண்மைக்கு உயிர் கொடுத்திருக்கின்றீர்கள்.
நண்பரே இந்த கவிதைக்கு என கண்ணீர் சன்மானம்
நமக்கு வரங்களே சாபங்களானால்..இனி தவங்களைத்தான் யார் செய்வார்????
@ எப்பூடி நண்பா. இது ஒரு உண்மைப் புலம்பலுக்குத்தான் நான் வரி வடிவம் கொடுத்திருக்கிறேன்
@ hamarahana ஐயா தங்களைப் போல் பலரின் வேண்டுதலும் ஆறுதலும் தான் அவர்களை வாழவைத்துக் காண்டிருக்கிறது.
@ jana
அண்ணா அதுதான் வெண்ணெய் திரண்டு வரும் போது பானையை ஒரு சில கோடாரிக் காம்புகள் நொறுக்கி விட்டார்களே
வன்னி மகளின் புலம்பலை கேட்பாரில்லையோ ......!!!!
மனதை விட்டகல மறுக்கும் கவிதை
@ பூங்குழலி
சகோதரி மிக்க நன்றி
அருமை
கருத்துரையிடுக