விஞ்ஞான ரீதியில் பார்த்தாலும் இது மிகப் பெரும் உடற்பயிற்சி தான்.
விளக்கம் அடியில் இருக்கிறது.
ஓம் பூர் புவ: ஸுவ:
தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோன: ப்ரசோதயாத்
தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோன: ப்ரசோதயாத்
என்று ஆரம்பிக்கும் இம் மந்திரத்தில் ஏதோ சக்தி இருக்கிறது என்பதை கட்டாயம் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும். இதை முறையாக ஒரு முறை செய்து பார்த்தால் வாழ்வில் வரும் மாற்றங்களை வைத்து நீங்கள் உணரலாம்.
சமைப்பதென்றால் கூட ஒரு முறையிருக்கிறதல்லவா. அப்படித்தான் இதுவும். இதற் கென்றொரு முறையிருக்கிறது.
சமைப்பதென்றால் கூட ஒரு முறையிருக்கிறதல்லவா. அப்படித்தான் இதுவும். இதற் கென்றொரு முறையிருக்கிறது.
இம் மந்திரத்தை விசுவாமித்திர முனிவர் இயற்றியதாகக் கூறப்படும் (ரிக் வேதத்தின் ) மூன்றாவது மண்டலத்தில் (3.62.10 உள்ள ஒரு அருட்பாடல் காயத்திரி மந்திரம் ஆகும். என்று அழைக்கிறார்கள்.
இனி ஓதும் முறையைப் பார்ப்போமா? முதலில் உடல் சுத்தமாக இருக்க வேண்டும். ஒரு தூய இடமொன்றில் நின்றபடியோ அல்லது சப்பாணியிட்டோ அமர்ந்து ஓத வேண்டும்.
தொடங்கும் முன் ஓம்…….ஓம்………ஓம்…… என பிரணவ மந்திரத்தை 3 தரம் சொல்லித் தொடங்க வேண்டும்.
பின் மந்திரத்தை கீழ் சொன்னது போன்று கூற வேண்டும்.
மூச்சை உள்ளெடுத்துக் கொண்டு
ஓம் பூர் புவ: ஸுவ என்ற வரியை சொல்ல வேண்டும்.
பின் மூச்சை தம் கட்டிக் கொண்டு
தத் ஸவிதுர் வரேண்யம் என்ற வரியை சொல்ல வேண்டும்.
பின் மூச்சை வெளிவிட்டபடி
பர்கோ தேவஸ்ய தீமஹி என்ற வரியை சொல்ல வேண்டும்
இறுதியாக சுவாசத்தை நிறுத்தி
தியோ யோன: ப்ரசோதயாத் என்ற வரியை சொல்ல வேண்டும்.
இப்படி 108 தரம் சொல்ல வேண்டும். முடிக்கையிலும் பிரணவ மந்திரம் சொல்லித்தான் முடிக்கணும்.
நான் இம் மந்திரத்தால் பலதை அடைந்திருக்கிறேன். குறிப்பாக சொன்னால் பல தடவை உயிர் தப்பியிருக்கிறேன்.
இதன் விஞ்ஞான காரணம் பார்த்தால் முக்கியம் மூச்சு பயிற்சி தான் இங்கு நான் தென்கச்சி கோ. சுவாமிநாதன் ஐயா சொன்னதை சொல்கிறேன். “நாம் எவ்வளவுக்கெவ்வளவு குறைவாக சுவாசிக்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு அதிக காலம் அதிகமாக உயிர் வாழலாம். உதாரணமாக ஆமைகள் நிமிடத்திற்கு 4 தரம் சுவாசிப்பதால் தான் 500 ஆண்டுகள் வாழ்கிறது” என்கிறார். இதையும் விஞ்ஞானம் தான் சொல்லியிருக்கிறது.
செம்மலர் என்ற வலைத்தளத்தில் தியாகு என்பவர் இம் மந்திரம் பார்ப்பன்களின் ஏமாற்று என்கிறார். என்னவோ தெரியல அவர் நாத்திகராக இருக்கலாம் ஆனால் உடலுக்கு உப்பு கூடாதென்று எல்லோரும் சொல்கிறார்கள். ஆனால் எந்த சுகதேகியாவது கேட்கிறோமா. கண்ணதாசன் போல் கண்கெட்டபிறகு சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டாம்.
33 கருத்துகள்:
பகிர்வுக்கு நன்றி.வாழ்த்துக்கள்
வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சரவணன்.
முதலில் அருமையான விளக்கத்துக்கும் பின்னர் பகிர்ந்ததற்குமாய் நன்றிகள்.
வருகைக்கு மிக்க நன்றி குமார்.
ஒரு முக்கியமான விடயம் என்னவென்றால் இந்த மந்திரத்தை விஸ்வாமித்திரர் இயற்றியதுதான். விஸ்வாமித்திரர் பார்ப்பன் அல்ல. அவர் ஒரு சத்திரியன். மன்னாக இருந்தே ரிஷியாகியவர்.
மந்திரங்கள் உச்சரிக்கும்போது உடல் சீராகின்றது என்று யோகிகளும், மந்திரம்கூட ஒருவித உளவியல்தான் என்று சில உளவியலாளர்களும் சொல்லிவருகின்றார்கள்.
எது எப்படியோ காலையில் அந்த மந்திரத்தை கேட்டால் மனதுக்கு ஒரு தெம்பு வந்துவிடுவது உண்மைதான்.
கண்ணதாசன் கூட இந்த மந்திரம் பற்றி குறிப்பிட்டுள்ளார். நல்லவிடயங்களை பதிவிட்டு வருகின்றீர்கள் சகோதரா தொடருங்கள்.
Nalla post Sudha
just one question. If we just do the breathing exercise and not recite the mantram. will we be geting the same benifits?
i am a new visitor here and I really like your choice of subjects and writing/
goodluck
Mani subramanyam
நல்ல பதிவு. இன்னொன்று இந்த மாதிரியான தமிழ் மறைகளும் நிறைய.
ஓம் என்கிற (தமிழ்) வார்த்தையில் இருக்கும் மருத்துவம் குறித்து பெரிய ஆராய்ச்சியே உண்டு. ஓம் என்று சொல்வது மிகப்பெரிய மூச்சு பயிற்சியாம்.
ஆடி பெருக்கில் எல்லா தமிழ் மறைகளையும் நதியிலும் நெருப்பிலும் போட்டு விட்டோம்.
PLEASE CLICK THE LINK AND READ AND PASS IT TO YOUR FRIENDS.
மதம்மாற்றம் செய்ய தில்லுமுல்லு மொள்ளமாரித்தனம்.
..............
நல்ல பதிவு. அர்த்தத்தோடும் எழுதினால் பலரும் புரிந்து கொண்டு ஏற்றுக் கொள்வார்கள்.
சபாஷ் நாத்திகவாதிகளுக்கு ஒரு நெத்தியடி இது, இது யாரால் என்று இயற்றப்பட்டது என்பது கேள்வியல்ல பயன் கிடைக்கிறாதா இல்லையா என்பதே மூக்கியம்
புதுகை ஜி வீ ஆர்
NALLA PATHIVU.ELLORUM PAYAN ADAIVOM!!
காயத்ரி மந்திரம் என்பதை விட, எத்துனை முறை கேட்டாளும் அலுக்காத பாடல் என்ற விதத்தில் கேட்டு உற்சாகம் அடையலாம்.
வருகைக்கு நன்றி சுவேதா. கருத்துக்கும் மிக்க நன்றி
நன்றி ஜனா அண்ணா, கற்றது கையளவு பார்த்தீர்களா? எனக்கு தெரிந்ததை எழுதினேன். ஆனால் பல விசயம் அறிந்து கொண்டேன்.
நன்றி மணி தங்களைப் போன்றவர் பாராட்டுக்கள் தான் எமை வளர்க்கும்
உண்மை தான் கார்த்திக் மொழியையாவது காப்பாற்றுவோம் வருகைக்கு நன்றி
நன்றி ராஜ் நல்ல ஒரு பதிவை அடையாளம் காட்டியுள்ளீர்கள் வருகைக்கு நன்றி
ஆம் விருட்சம் சகோதரா வருகைக்கு நன்றி
வருகைக்கு நன்றி வரதராஜன் சகோதரரே மற்றும் lcnathan, warrant மிக்க நன்றி
எந்த காயத்ரி ? எட்டாம் வகுப்புல ஏழுமலையை சைட் அடிச்சவளா ?
வருகைக்கு நன்றி ரவி. ஆருக்கப்பா தெரியும். ஆனால் உந்தக் காயத்திரிக்கான மந்திரம் i love you மட்டும் என்று தெரியும்
ஒண்ணும் சொல்லப்படாது சாமி கோவிச்சுக்கும்
அன்புடன் நண்பருக்கு வணக்கம் . இந்த காயத்ரி மந்த்ரம்:: மந்த்ரங்களில் தலைமை ஆனது .ஆறு வயது முதல் இந்த மந்த்ரங்களை மனனம் செய செய நமது வலது பக்க மூளை ..ஞாபக சக்தி அதிகரிக்கும் ..சற்று வயதானாலும் இதை ஜெபம் செயலாம்... என்ன?? அசைவ உணவு தவிற்க வேண்டும். ?? இன்னும் நிறைய விஷயங்கள் உள்ளன முளுக்க முளுக விஞ்ஞான பூர்வமான விஷயங்கள்தான் அதிலே நமது முன்னோர்கள் ஆன்மீகத்தை வைத்துள்ளார்கள்.. thanks
@ hamarahana வருகைக்கும் தகவல் தந்ததற்கும் மிக்க நன்றி ஐயா.
மிகவும் பயனுள்ள மந்திரம். பதிவு அருமையாக உள்ளது
by
Priya @ http://tipstoslim.blogspot.com/
சுதா அக்கா இது உண்மை!
///நான் இம் மந்திரத்தால் பலதை அடைந்திருக்கிறேன். குறிப்பாக சொன்னால் பல தடவை உயிர் தப்பியிருக்கிறேன்.///
இந்த இந்த காயத்ரி மந்த்ரம் சொன்னதிற்கு அப்புறம் எனக்கு சர்க்கரை வியாதி அப்புறம் ரத்த அழுத்தம் இவை எல்லாம் போய்விட்டது. பல தடவை நானும் உயிர் தப்பியிருக்கிறேன். நன்றி சுதா அக்கா மிகவும் பயனுள்ள மந்திரம்.
///தென்கச்சி கோ. சுவாமிநாதன் ஐயா சொன்னதை சொல்கிறேன்.நாம் எவ்வளவுக்கெவ்வளவு குறைவாக சுவாசிக்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு அதிக காலம் அதிகமாக உயிர் வாழலாம். உதாரணமாக ஆமைகள் நிமிடத்திற்கு 4 தரம் சுவாசிப்பதால் தான் 500 ஆண்டுகள் வாழ்கிறது” என்கிறார். இதையும் விஞ்ஞானம் தான் சொல்லியிருக்கிறது.///
இதுவும் உண்மை! நானும் எப்பொழுதும் நிமிடத்திற்கு 4 தரம் சுவாசிப்பதால் தான் 250 ஆண்டுகள் வாழ்ந்து விட்டேன். இனிமேல் இன்னும் ஒரு 250 ஆண்டுகள் வாழ முடியும். இந்த மகத்தான் கண்டுபிடிப்பை சொன்ன தென்கச்சி கோ. சுவாமிநாதன் ஐயா அவர்களுக்கு எனது வணக்கம்.
ஒரே குறை. அவரும் ஆமை மாதிரி மூச்சு விட்டு இருந்தால் இந்நேரம் உயிரோட இருந்தது இருப்பார்.
@ பிரியா said...
வருகைக்கு மிக்க நன்றிகள்.
@ ஆட்டையாம்பட்டி அம்பி said...
வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி... ஒரு தேடல் உள்ள அறிவாளியை நாம் இழந்து விட்டோம் சகோதரா..
.தகவலை பகின்றமைக்கு நன்றி, நண்பரே !
.காயத்ரி மந்திரம், mp3 வடிவில் உங்களிடம் உள்ளதா நண்பா ?
சிகப்பு மனிதன் said...
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோதரம் நீங்கள் கேட்ட தரவிறக்கச் சுட்டி இங்கே இருக்கிறது..
இதை ஒரு ஆண் குரல் தான் வடித்திருக்கிறது.....
http://www.yoga-mind-control.com/gayatri-mantra-download.html
http://www.esnips.com/doc/bbab8df2-de3b-4de4-85ce-c52cf1713fb9
.சுட்டியில் இருந்து, தரவிறக்கி விட்டேன் !
.நன்றி, தோழரே !
நன்றி சகோதரா பயன்படுத்திப் பாருங்கள்...
ஓம் எண்ட ஒரு வார்த்தையே தமிழோட பெருமையைச் சொல்லிடும். காயத்ரி மந்திரம் சொல்ல முடியலை எண்டாலும் கேட்டாலே ஒரு Energy கிடைக்கும்.
கருத்துரையிடுக