மனித மனத்தில் பொதுவாக ஒரு குணம் இருக்கிறது. ஒன்றில் எதிர்பார்ப்ப கூடக் கூட அதில் உள்ள தரத்தையும் அதிகமாக கற்பனை செய்து அதிகமாக எதிர்பார்ப்போம்.
கடைசியில் அந்த விடயத்தை அடையும் போது “அட கழுதை இது தான” என்போம். உண்மையில் அந்த விசயம் தரமானதாகத்தான் இருக்கும் அனால் அதை இவனால் ஏற்றுக் கொள்ள முடியாமல் இருக்கும்.இது தான் சில பெண் பார்க்கும் இடத்தில் நடந்து மாப்பிள்ளை தலை தெறிக்க ஓடிய கதையும் கேள்விப்பட்டிரப்பீர்கள்.
இப்படி பல படங்கள் நல்ல விடயம் இருந்தும் பலத்த அடிவாங்கியது தெரியும். இளைஞருக்காக சங்கர் எடுத்த போய்ஸ் படமே பெரும் உதாரணம். அதில் இளைஞருக்க பல நல்ல விடயம் சொல்லியிருந்தார் ஆனால் அது தோற்க முக்கிய காரணம் அதிக எதிர்பார்ப்பு தான் காரணம்.
இதே நிலையை தான் சண் குழுமம் எந்திரனுக்கு ஏற்படுத்தப் போகிறது. ஒரு படத்திற்கு இவ்வளவு பில்டப் கொடுத்தால் எதிர்பார்ப்புத்தான் கூடும். (மன்னிக்கணும் சண் தன் வியாபாரத்துக்கத்தான் இம்புட்டும் செய்யுது என்பது நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரியணும்ணு இல்ல) சுயாதாவின் கதையை பிடிக்காதவர் யாருமே இருக்க முடியாது அந்தளவுக்கு மனிதர் பலர் மனதினுள் புகுந்தவர். கடைசியில் அவர் கதையையும் நாசமாக்கப் போகிறார்கள்.
அத்துடன் ரஜனி ஐயா இதுவரை தான் இருந்த வட்டத்திற்கு வெளியே வந்து தன் அபிமான இயக்குனர்களைக் கைவிட்டு தமிழ் சினிமாவில் பெரிய மாற்றம் கொண்டுவருவதற்காகத்தான் சங்கருடன் கைகோர்த்து இக்கதையை தேர்ந்தெடுத்திருக்கிறார்.
எல்லாவற்றிலும் முக்கியமாக ஒருவிடயம் ஒரு சாதரண முதலீட்டுப்படம் பெறப்போகும் வருமானத்தை விட இப்போதே சண் பல மடங்கு அதிகமாக வருமானம் வெற்று விட்டது. குறிப்பாக இசைத்தட்டு வெளியீடு. இப்படி இன்னும் எத்தனை வருமான வழி இருக்கோ தெரியல.
சண் விளம்பரம் ஒன்றை பாருங்களேன் “ வரும் ஞாயிறு உங்கள் சண் ரீவியில் எந்திரனின் புதிய பரிமாணம் ஒளிப்பதிவாளர் கமரா துடைப்பது.... இசைத்தட்டை பையில் போடுவது.... எடுபிடிகள் கூல்ரிங்ஸ் தயாரிப்பது..... ஆடிக்காற்றில் நடிகருக்கு குடை பிடிப்பது போன்ற விசேட காட்சிகள் காணத்தவறாதீர்கள்...... விளம்பர அனுசரணை ........” என ஒரு ஒரு கோடி லாபம் தரக் கூடிய விளம்பரங்கள்.... காத்திருங்கள்.
(ரஜனி சார் அதுக்குள்ள படத்தை வெளியிடச் சொல்லி சங்கருக்கு சொல்லுங்களேன்)
15 கருத்துகள்:
சூரியக்குடும்பம் தங்கள் இழவுவீடுகள், திருமண வீடுகளையே வியாபாரமாக்கி பழக்கப்பட்டவர்கள். எந்திரனை சும்மாவா விடப்போறார்கள்? எந்திரன் பார்க்கும்மட்டும் சண் ரீ.வியின் எந்திரன் பற்றிய எதையும் பார்க்காமல் இருப்பதே யாவருக்கும் நலம். இருந்து பாருங்கள் போகப்போக சங்கரும்ரஜனியும் ஏன்டா இந்த ஓணானை எடுத்து வேட்டிக்குள் விட்டோம் என்று நினைக்காட்டி பாருங்கள்.
@ டிலான்
ஆமாம் டிலான் எனக்கு நம்ம சுஜாதாவை மனக்கெடுத்த போறாங்கன்னு தான் கவலையாயிருக்கு.
நன்றி டிலான்
சன் டி.வி.க்கு சம்பாதிக்க சொல்லித் தரணுமா என்ன...ஈழத்து துன்பங்களை மானாட மயிலாட கூத்துக்கு செட் போட்டால் நிறைய வருமானம் வரும் என்றால் அதையும் செய்யத் தயாராய் இருப்பார்கள்... நாசமா போறவனுக...
அய்யோ மானாட மயிலாட கலைஞர் டிவி இல்ல...சாரிப்பா... ஆனா இது இரண்டு டி.விக்கும் பொருந்தும்தானே...
@ ரகுநாதன்
நன்றி சகோதரா நீங்க எப்படி சொன்னாலும் சரி தான் ஏனென்றால் அவர்களுக்கு ப(பி)ணம் வந்தால் சரி.
சண்டி.வியின் அலப்பறை தாங்கமுடியாத ஒன்றுதான் அதை மாற்றமுடியாது. இருந்தபோதிலும் உலகலாவிய ரீதியில் அந்த டி.வி. பிரபலம் ஆகிவிட்டதையும் ஏற்றுக்கொள்ளத்தான்வேண்டும்.
ஆனால் இங்க நம்ம ஸ்ரீ லங்காவில உள்ள தமிழ் ரி.வி.களின் அலப்பறை அதைவிட கொடுமை சுதா! இந்த கொடுமைகளைவிட சன்.டி.வி. எவ்வளவோ மேல்
@ jana
ஆம் அண்ணா... ட்டட் டிங்டிடிங்... நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பது சண் டிவியின் தமிழ் மாலை........ மாலையை மணந்து பார்த்தால் சாணக நாத்தம் தான்.... எங்கையா தமிழ் இருக்கு.... வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி.
ம்...
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு
@ subankan
ஆம் சகோதரா டிலானின் கருத்தை பார்த்தால் எல்லாம் புரியும்.
பிடிச்சிருச்சு... சளி பிடிச்சிருச்சு... மதியோடையில் நனைந்ததினால்...
@ praba
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி. ஐயோ இது என் வாந்தியுங்க. அதுவும் பிச்சைக்காரன்ர எல்லாம் வரும்.
எந்திரன் சொல்ல முடியல்ல
@ A.சிவசங்கர்
வருகைக்கு நன்றி சகோதரா பார்ப்போம்.
எதிர்பார்ப்பு கூடினால் ஏமாற்றமும் கூடும்..
ம்.. பார்ப்போம்..
@ Cool Boy கிருத்திகன். said...
வாழ்க்கையும் அப்படித்தான் கூகூல்..
கருத்துரையிடுக