இந்த ஒரு வாரத்தில் எனக்கு புதுப் புது நட்புகளையும் அருமையான புரிந்துணர்வுகளையும் ஏற்படுத்திக் கொடுத்த தமிழ்மணத்திற்கு நன்றி சொல்லி என் வாரத்தை திருப்தியாக பூர்த்தி செய்து கொண்டு என் அடுத்த கட்டத்திற்கு நகர்கின்றேன்.
சக பதிவர்களிடம் சில கேள்விகளை கேட்டுவிட்டே மூடிவெடுக்கலாம் என இருக்கிறேன்.
உண்மையில் ஏதோ ஒரு ஏமாற்றத்தில் இருந்த எனக்கு நேற்று திரு ஐடியாமணியின் பதிவு உண்மையிலேயே சிரிக்கவே வைத்தது. அதற்கு காரணமென்னவென்றால் அதன் தலைப்பும் அங்கு என்னோடு நெருங்கிப் பழகியவர்கள் இட்ட கருத்தும் தான்.
அங்கே ஊடகங்களுக்குள் வருவதென்றால் மனோதிடம் வேண்டுமாம் எதையும் தாங்கப் பழகணுமாம். சொந்தக்காரன் செத்திருந்தால் கூட கலங்கக் கூடாதாம்.
ஊடகத்துறைக்கே இந்தளவு என்றால் எனக்கு எந்தளவு கற்பிக்கப்பட்டிருக்கும்.
எனக்கு ஊடகக் கற்கை தெரியாது அதன் வாடையே எப்படியெனத் தெரியாது ஆனால் அதைக் கற்றவர் எழுதாததை என்னால் எழுத முடியும்.
அந்த ஊடகதர்மத்தையே பல தடவை எதிர்க்கிறேன் காரணம் சில நாட்களுக்கு முன்னர் கூட குற்றப்புணர்வு மேற்கொள்ளப்பட்ட பெண்ணின் படத்தை ஒரு ஊடகம் பிரசுரிக்கிறது அப்போ அந்த ஊடகதர்மம் எங்கே போய்விட்டது.
1.கஸ்டப்பட்டு உழைக்கும் நாங்கள் எமது காசில் படம் பார்க்கிறோம் அதற்கேன் வேலை வெட்டி இல்லாதவன் போல் எவன் எவனோ எல்லாம் காத்துறன்?
அதற்கு ஒருவர் கொடுத்த பதில் அவருக்கு அது தான் வேலை போலும்
இந்த இடத்திலேயே நான் நிறுத்தியிருக்கணும் ஏனென்றால் நானும் உங்களைப் போல காசு கொடுத்துப் படம் பார்க்கும் ஒருவன் தான் ஆனால் நான் யாரையாவது படம் பார்க்க வேண்டாம் என்று சொன்னேனா. அந்த வசனத்தை தூக்கிப் பிடித்து பிரபலப்படுத்த வேண்டாம் என்றேன்.
இவ்வளவு நாளும் என் கொள்கைகளை ஆதரித்து ஒட்டி உறவாடிய அவரே இவருக்கு இது தான் வேலை எனும் போது மற்றவன் “உங்க பார் ஒண்டா இருந்தவனே அப்படிச் சொல்லிட்டான் அப்ப உண்மை தானே” எனக் கேட்கிறான்
என்ன காரணத்துக்காக புலம்பெயர் தேசத்திலிருந்து போருக்காதரவாக குரல் கொடுப்போரை நான் எதிர்க்கையில் என்னை அடக்க முயல்கிறீர்கள்?
ஒவ்வொருத்தரும் தனித் தனி மலையில் இருக்கிறீர்கள். ஆனால் நான் ஆற்றுமுகத்தில் இருக்கிறேன் எனக்குள் வரும் அத்தனை நதி நீரையும் ஸ்பரிசித்தே உணர்கிறேன் அதனால் அதை தரும் அத்தனை மலைகளையும் நேசிக்கிறேன். ஆனால் அந் நீரைத் தடுக்கும் அணைகளை எதிர்க்கிறேன். இதை ஏன் உங்களால் புரிய முடியாமல் இருக்கிறது
2. ஒருவர் கேட்கிறார் ஏன்பலவீனமான பக்கத்தையே தாக்குகிறீர்களாம் பலமான பக்கத்தை தாக்கலாமே?
பலவீனமானவரை வைத்து வியாபாரம் செய்பவனும் பலவீனமானவனா?
3. இங்குள்ளவரை (புலம்பெயர்ந்தவரை) தாக்கி தாக்கி கதைக்கிறீர்களே. இலங்கை அரசாங்கத்தையும் தாக்கி எழுதலாமே?
சரி சில ஒப்பந்தம் செய்வோமா? நான் இங்குள்ளவரை பற்றி எழுதுகிறேன் நீங்கள் உங்குள்ளவரைப்பற்றி எழுதி ஏமாறுபவரை விழிப்புணர்வு அடையவையுங்களேன் அல்லது நீங்கள் இங்கு வந்திருந்து இங்குள்ளவரைப் பற்றி எழுதுங்கள் நான் உங்கு வந்திருந்து உங்குள்ளவரைப் பற்றி எழுதுகிறேன்.
4. ஊரில் இருப்பவர்கள் ஏன் யார் ஈழம் பற்றிக் கதைத்தாலும் மூர்க்கமாகத் தாக்குகிறார்கள்?
எதை வைத்து இக் கேள்வி எழுப்பப்பட்டதோ எனக்குத் தெரியாது. ஆனால் ஒவ்வொரு தமிழனும் சீமான் ஐயாவை எந்தளவு மதிக்கிறோம் அதற்காக அவர் “அண்ணைக்கு இவர் படங்கள் பிடிக்காது“ என்று சம்பந்தமே இல்லாமல் சம்மந்தமே இல்லாத காலத்தில் சொல்லும் போது அவ்வசனத்தை ஆதரிக்க முடியுமா? அதை எதிர்த்தால் ஈழம் என்ற சொல்லை எதிர்ப்பது போலவா?
5.புலம்பெயர் மக்கள் சிலர் (இப்போதும் மறந்து கூட எல்லோரையும் உள்ளடக்கவில்லை) போர் போர் போர் எனக் கத்துகிறார்களே அவர்கள் எப்படியான பொருளில் கத்தணும் என்கிறீர்கள்?
இந்தக் கேள்வியை பாதிக்கப்பட் நீங்களே கேட்கலாமா? இங்கு வாழ வழியின்றி தொழில் துறை இன்றி நாம்படும்பாடு தாங்கள் அறியாததா? ஒரு நிறுவனத்தில் போய் வேலை கேட்டேன் (முகாமால் வந்த புதிதில்) வந்தவர்கள் அனைவரையும் தேர்வில் முந்தினாலும் நான் வன்னி என்று தெரிந்ததும் “தம்பி எமது நிறுவனத்துக்கு ஏதாவது பிரச்சனை வரும் கொஞ்கச் காலம் போக விட்டு வா” என்கிறான். அப்படியானால் நாங்கள் என்ன இரவில் போராடி விட்டு பகலில் பிச்சையா எடுப்பது.
6. தாமரையை தாக்கி எழுதுவதால் உணர்வோடு செயற்படும் அவர்களை தாழ்த்துவதாகுமே?
நான் அவர் சொன்னதை எல்லாம் எதிர்க்கவில்லையே இதை எப்படித் தங்களுக்குப் புரிய வைப்பது.
எது எப்படியோ கருத்துக்கள் பெரிதுபடுத்தக் கூடாது என்று எல்லோரும் சொல்கிறீர்கள்.
எனக்கும் எதிர்ப்பதிவோ உள் குத்துப் பதிவோ புதிதல்ல.
ஆனால்ஒருவரின் பதிவிலேயே சொல்லியிருந்தேன். முன்னால் வீட்டுக்காரன் அடிப்பதை விட சொந்த வீட்டுக்காரன் அடித்தால் அதிகமாய் நோகுமாம்.
என்னோடு நெருங்கியது மட்டுமல்லாமல் ஓரளவு அறிந்ததாலோ தெரியவில்லை ஒருவர் எல்லோரிடமும் தர்க்கப்பட்டு எனக்காக தன்னிடம் இருக்கும் நன் மதிப்பையும் கெடுத்துக் கொள்ளுகிறார். அதை தொடர விடுவதும் எனக்கு சரியெனப்படவில்லை.
ஏதோ கொள்கைளால் வேறுபட்டு விட்டோம். அதனால் ஒரே வீட்டில் இருக்க முடியாதென்றே நினைக்கிறேன். ஒருமைப்படும் போது வாருங்கள் ஒன்றாய்ப்பயணிப்போம்.
சந்தர்ப்பம் கிடைத்தால் செவ்வாய்க் கிழமை 9 மணிக்கு பிரசுரமாகப் போகும் நான் ஏன் போரை வெறுக்கிறேன் என்ற என் தன்னிலை விளக்கப்பதிவையும் அங்கே தந்துள்ள ஆதாரப்படங்களையும் படியுங்கள். முடிந்தால் திரட்டியிலும் இணைத்துவிடுங்கள்.
இப்பதிவுக்கான கருத்துப் பெட்டியை மூடுவோமா என நினைத்தாலும் எழுதுவது தான் என்னுரிமை அதற்கான கருத்துரிமை உங்களது அதற்காகவே திறந்து விட்டுள்ளேன்.
நன்றிச் செதுக்கலுடன்
23 கருத்துகள்:
மாப்ள பாதிக்கப்பட்ட உமக்கு தான் அதன் வலி தெரியும்..எனவே நான் உம்பக்கமே!
உம்ம அலைபேசி நெம்பர் அனுப்பும் நான் பேசுறன்! vbvvvmv@gmail.com
வந்தேன் ஐயா
ஆதங்கம் தெரிகிறது..'நான் ஏன் போரை வெறுக்கிறேன்'என்ற தன்னிலை விளக்கத்தை எதிர்பார்க்கிறேன் தோழர்..
உங்க நியாயமான ஆதங்கம் நறாகவே புரிகிரது ம. தி.
வணக்கம்,மதி.சுதா!எதுவும் சொல்லத் தோன்றவில்லை.நான் உலகில் போர் எங்கு நடந்தாலும் எதிர்ப்பவன் என்ற செய்தியை மட்டும் பகிர்ந்து கொள்கிறேன்!
சுதாண்ணா.... நிறைய சொல்லணும் போல இருக்கு..... நீங்கள் உங்களுக்கு சரி என்று படுவதை சொல்லுகிறீர்கள்... நாங்கள் எங்களுக்கு படுவதை சரி என்று சொல்லுகிறோம்..... இப்போ மறுபடியும் நீங்கள் உங்கள் நியாத்தை சொல்லுகிறீர்கள்... இனி நாங்களும் எங்கள் நியாத்தை சொல்ல தொடங்கினால்..... இது தொடரும்...... இதோடு விட்டுவிடலாம்.... என் கருத்துக்கள் எங்கை ஏனும் உங்கள் மனதை புண் படுத்தி இருந்தால் மன்னித்துகொள்ளுங்கள்... ஆனால் ஒன்று உங்கள் அந்த பதிவை நான் எதிர்க்கிறேன் அது உங்களை அல்ல..... எங்கையும் உங்களை தனிப்பட்ட முறையில் யாரும் தாக்கவும் இல்லை... நட்பு வேறு.... கருத்துக்கள் வேறு.................. உங்கள் பதிவை எதிர்த்தாலும் உங்களையும் உங்கள் நிலையையும் உங்கள் உணர்வுகளையும் புரிந்துகொண்டோம்..... எங்களையும் நீங்கள் புரிந்து கொண்டு இருந்திருந்தால் நன்றாக இருந்து இருக்கும் :(
நட்சததிர பதிவுகளுக்கு வாழ்த்துக்கள்.
துஷ்யந்தன் said...
சுதாண்ணா.... நிறைய சொல்லணும் போல இருக்கு..... நீங்கள் உங்களுக்கு சரி என்று படுவதை சொல்லுகிறீர்கள்... நாங்கள் எங்களுக்கு படுவதை சரி என்று சொல்லுகிறோம்..... இப்போ மறுபடியும் நீங்கள் உங்கள் நியாத்தை சொல்லுகிறீர்கள்... இனி நாங்களும் எங்கள் நியாத்தை சொல்ல தொடங்கினால்..... இது தொடரும்...... இதோடு விட்டுவிடலாம்.... என் கருத்துக்கள் எங்கை ஏனும் உங்கள் மனதை புண் படுத்தி இருந்தால் மன்னித்துகொள்ளுங்கள்... ஆனால் ஒன்று உங்கள் அந்த பதிவை நான் எதிர்க்கிறேன் அது உங்களை அல்ல..... எங்கையும் உங்களை தனிப்பட்ட முறையில் யாரும் தாக்கவும் இல்லை... நட்பு வேறு.... கருத்துக்கள் வேறு.................. உங்கள் பதிவை எதிர்த்தாலும் உங்களையும் உங்கள் நிலையையும் உங்கள் உணர்வுகளையும் புரிந்துகொண்டோம்..... எங்களையும் நீங்கள் புரிந்து கொண்டு இருந்திருந்தால் நன்றாக இருந்து இருக்கும் :(//
மச்சி துஸி...வேணாம்....
நான் விளக்கம் கொடுத்த பதிவினையே திசை திருப்பி விட்டு மறுபடியும் விட்ட இடத்திலிருந்து தொடர நினைப்பது சரியில்லை! ஆகவே காலம் நேரம் வருகையில் நிச்சயம் புரிந்து கொள்வீங்க என்று நினைக்கிறேன்!
வணக்கம் மச்சி!
நல்லதோர் பதிவு! யதார்த்தம் நிறைந்த ஆதங்கத்தினைச் சொல்லியிருக்கிறாய்.
சில தெளிவுபடுத்தல்களை மாத்திரம் சொல்கிறேன்!
வீரபுரம் முகாம், கதிர்காமர் முகாம், ஆனந்தகுமாரசாமி முகாம், இராமநாதன் முகாம் என பல முகாம்களில் மக்கள் புலிகள் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்த காலப் பகுதியினை வைத்துத் தான் அவர்களை தரம் பிரித்து ஒவ்வோர் முகாமிற்கும் அனுப்பி வைத்தார்கள்.
இங்கே யாரிடம் வெளி நாட்டு வசதி வாய்ப்பும், பணமும் உள்ளதோ அவர் குறைந்தளவு தண்டணைகளுடன் வெளியேறக் கூடிய வாய்ப்பும் இருந்தது.
ஆனால் அதே வேளை அங்கே போரால் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்கள், பண வசதியற்றோர் பற்றி எந்த உணர்வாளர்களாவது சிந்தித்தார்களா?
முகாமிலிருந்து வெளியேறியோரில்
60 வீதமானோர் தொழில் வாய்ப்பின்றி அவலமுறுகின்றார்கள்.
15 வீதமானோர் மன நோய் மருத்துவ மனைகளில்.
10 வீதமானோரை இன்னமும் காணவில்லை! அல்லது கொலை செய்து விட்டார்கள்.
ஏனைய 5 வீதமானோர் பிற தேசங்களுக்குப் போய் விட்டார்கள்.
துஸி! உணர்வாளர்களை உயரத்தில் வைக்க நினைக்கும் நீங்கள் அந்த உணர்வாளர்கள் தாயக மக்களை மையமாக வைத்து கருத்துச் சொல்லிப் பாடல் எழுதுவதால் ஐந்து சதப் பிரயோசனம் இருக்கா?
போங்கைய்யா! நல்லா வருது!
சுதா பல்வேறு பட்ட மனக் குழப்பங்களின் மத்தியிலும் நட்சத்திர வாரத்தினை சிறப்பாகச் செய்திருந்தாய்.
வாழ்த்துக்கள்!
ஒண்ணுமே புரியல எனக்கு... இருந்தும் கருத்துக்களை மட்டும் ரசித்தேன். எல்லாரும் சந்தோசமாக இருக்க எனது வாழ்த்துக்கள்.
ஹா ஹா... நிரூ நான் ஒண்ணுமே சொல்லப்போறது இல்ல... இந்த பதிவுக்கு நான் கருத்து இட்டு இருக்கக்கூடாது.. இட்டுவிட்டேன்... இப்போ நீங்கள் கேள்வி கேக்கிறீர்கள்.. என்னால் பதில் சொல்ல முடியும்.. சொல்வேன். ஆனால் அதற்க்கு நீங்கள் பதில் சொல்ல, அப்புறம் யாராவது உங்களுக்கு உள் குத்து பதிவு போட...
அப்புறம் முடிஞ்ச பிரச்சனை துஷியால் திரும்பவும் ஆரம்பிச்சுட்டுது என்பீங்க..!! சாரி பாஸ்.. நான் எதையும் பார்க்கவும் இல்லை படிக்கவும் இல்லை.. அவரவர் நியாயம் அவரவருக்கு.. பாய்
உங்கள் பதிவு வாரம் தொடர்ந்து பல விடயங்களையும் சில புரிதல்களையும் எனக்கும் தந்து விடைபெற்றுச் செல்கின்றது . செவ்வாய் பதிவில் சந்திப்போம் சகோதரா! !
நட்சத்திர வாரத்தில் ஜொலித்த மதிசுதா நீங்கள் உங்கள் வாழ்வில் என்றும் நட்சத்திரமாக ஜொலிக்க எனது வாழ்த்துக்கள். உங்கள் கருத்துக்கள் உண்மையாக நியாமாக இருக்கும் பட்சத்தில் அதை எந்த நேரத்திலும் துணிவுடனும் சொல்லுங்கள். வாழ்த்துகள்!!!!!!
நட்சத்திர பதிவுக்கு வாழ்த்துக்கள்!
கல்லறைக் காதல்!-சிறுகதை-01
போரை வெறுப்பது நன்று. வாழ்த்துக்கள்.
அண்ணே முதலில் நட்சத்திர வாரத்துக்கு வாழ்த்துக்கள்
உங்கள் மனநிலையை என்னால் நன்கு புரிந்து கொள்ளமுடிகின்றது.சில மாதங்களுக்கு முன்பு நானும் பல இடங்களில் போர்,ஈழம் போன்ற கருத்துக்களால் முட்டி மோதி இப்ப அதை பற்றி பேசுவதை நிறுத்திக்கொண்டேன்.
உண்மைகள் என்றும் மாறப்போவது இல்லை..என்று நினைத்து இது பற்றி நான் இப்ப பேசுவது இல்லை.
எனவே மனதை ரிலாக்ஸ்சாக விடுங்கள் பாஸ் எல்லாம் கடந்து போகும்
மதி சுதா... எனக்கு அடியும் புரியேல்லை நுனியும் புரியவில்லை... ஆனா என்னமோ எங்கினயோ நடந்திருக்கு என்பது மட்டும் புரிகிறது...
என்னைப்பொறுத்து... ஒருவரின் பதிவு பிடிக்கவில்லையாயின், பேசாமல் போய்விட்டு பிடித்ததுக்கு மட்டும் வரலாமே... அதைவிட்டு விட்டு... அதில் முட்டையில் முடி பிடுங்குவதுபோல... ஏன் ஒருவரின் பதிவை அவமதித்து எதிர்க்க வேண்டும் என்றுதான் நினைப்பதுண்டு...
எதுக்கும் கவலைப்படக்கூடாது மதிசுதா... நாம் நல்லதென நினைத்துத்தானே எழுதுகிறோம்.. அதுக்குமேல் “இதுவும் கடந்து போகும்” என நினைத்து அமைதியாகிடுங்க..
பனையால விழுந்தவனை மாடேறி மிதித்த கதைதான் இப்போ நடந்துகொண்டிருக்கு நம்மவர்க்கு...
இதுவும் கடந்து போகும் சகோ! இந்தவாரத்தில் நான் சிலவிடயங்களில் தெளிவு பெற்றேன் உங்கள் மூலம் வாழ்த்துக்கள்!
கள நிலமைகளை உணர்ந்த, உணர்த்தும் உங்கள் பதிவுக்குப் பாராட்டு
ரொம்ப அருமை மதி சுதா
வினோதமான செய்திகளுக்கு www.suncnn.blogspot.com
கருத்துரையிடுக