வெள்ளி, 20 ஆகஸ்ட், 2010

வெளிச்சத்துக்கு வராத எந்திரன் பாடல்

12:16 AM - By ம.தி.சுதா 18


                   இப்போது அதி பிரபலமாக பேசப்படும் விடயங்களில் ஒன்று எந்திரன் பாடல்கள். ஆனால் எதிர் பார்த்தது போல் அடி மட்ட ரசிகர்களை அவை இன்னும் கவராதது தான் ஆச்சரியமான விடயம். நேற்று ஒரு நண்பனிடம் “ எந்திரன்பாட்டு இறக்கினான் மச்சான் வேணுமா?என்றேன். “இது என்னடா பாட்டு எனக்கென்றால் பிடிக்கலஎன்றான். அவன் சொன்னது எந்தளவுக்கு சரியென்று சொல்லத் தெரியல காரணம் இதே நபர் படம் வந்து மூன்றாவது அல்லது நான்காவது நாள் என்னிடம் வருவான் என்பது நிச்சயம் தெரியும்.
ஏனெனில் சில பாடல்கள் காட்சியுடன் பார்க்கும் போது தான் மவுசு கூடும். உதாரணத்திற்கு சுறா பாடல்களை எடுத்துக் கொள்ளலாம் படம் வந்த்து தான் தாமதம் சில கடைகளில் ஒரு படல் கைப்பேசியில் ஏற்றுவதற்கு 10 ரூபா படி எடுத்தார்கள்.
                    இனி எந்திரனில் நான் கலக்கப் போகும் பாடல்  எனக்கருதும் பாட்டை தருகிறேன் நிச்சயமாக இது தான் முதல் இடம் பெறும். என்ன கொஞ்சம் ஆபாசம் அவ்வளவும் தான் அதற்காக பா.விஜயை கூடாதவரென்றால் வள்ளுவர், கம்பர், கண்ணதாசன், வைரமுத்து சொல்லாததை ஒன்னும் அவர் சொல்லவில்லை என்றே சொல்லுவேன். அத்துடன் எந்திரன் படப் பாடல்களில் உயர் கவித்துவம் மிக்க பாடல் என்றால் இது தான். இதை யாழ்.COM  இணையத்தில் ஒருவர் “தரம்கெட்ட பாடல் வரிகள்.
                                                 
இப்படியும் எழுதி ஈனப் பிழைப்பு நடத்தும் கவிஞர்கள் இருக்கிறார்கள்என்கிறார். (பெயரை நான் குறிப்பிடவில்லை ஏனெனில் இலங்கையில் உள்ள நாமே சொந்தப் பெயரில் துணிந்து அரசியல் எழுதுகையில் அந்த இணையத்தில் உள்ள வெளிநாட்டவர்களே புனை பெயரில் தான் இருக்கிறார்கள்)

வாங்க பாட்டை பார்ப்போம்....
படம்: எந்திரன்
பாடியவர் : ஜாவிட் அலி, சின்மயி
பாடல் வரிகள் : -பா விஜய்
இசை :ஏ ஆர் ரகுமான்

ஆ-ஆஹா ஆஹா
பெ-ஆஹா ஆஹா
    நபுரியானெயா..... நபுரியானெயா..... நபுரியானெயா..... கூனெலுகுகே


கிளிமாஞ்சரோமலை
கனிமாஞ்சரோகன்னக்
குழிமஞ்சரோ
யாரோ யாரோ

ஆஹா ஆஹா

மொகஞ்சதாரோஉன்னில்
நோழஞ்சதரோ பைய
கொழஞ்சதரோ யாரோ யாரோ

ஆஹா ஆஹா …(2 )

பகாட்டுவாசி காட்டுவாசி
பச்சையாக கடிய
முத்தத்தாலே வேக வெச்சு
சிங்கபல்லில் உரைய

ஆஹா ஆஹா

மலைபாம்பு போல வந்து
மான்குட்டிய புடிய
சுக்குமிளகு தட்டி என்ன
சூப்பு வச்சு குடிய
ஆஹா ஆஹா

ஏவாளுக்கு
தங்கச்சியே என்கூடத்தான்
இருக்கா

ஆளுயர ஒலிவ் பழம்
அப்படியே எனக்கா ?

அக்கக்கோஅடி
கின்னிகொழி
அப்பப்போஎன்ன
பின்னிகோடி ..
இப்பப்போமுத்தம்
எண்ணிக்கோடி !

ஏ.. போ .எண்ணிக்கோடி நீ..
ஆஹா ஆஹா

கிளிமாஞ்சரோமலை
கனிமாஞ்சரோ ................
இமரக்கீமா..... இமரக்கீமா..... இமரக்கீமா..... இமரக்கீமா.....

கொடி பச்சையே எலுமிச்சையே
உன்மேல் உன்மேல் உயிர் இச்சையே

அட நூறு கோடி தசைஒவ்வொன்றிலும்
உந்தன் பெயரே இசை !

இனிசக்கரே அடிச்சக்கரே
மனச இரண்டா மடிசுகிறேன்

நான் ஊற வைத்த
கனிஎன்னை மெல்ல
ஆற வைத்து கடி !

வேர்வரை நுழையும்
வெய்யிலும் நான்நீ
இலைதிரை ஏன் இட்டாய் ?

உதட்டையும் உதட்டையும்
பூட்டி கொண்டுஒரு
யுகம் முடித்து திற அன்பாய் !
அக்கக்கோஅடி
கின்னிகொழி.............

சுனைவாசியே சுகவசியே
தோல்கருவி எனைவசியே

ஏ .. தோல்குத்தா பலாறேக்கைகட்டி
கால்கொண்டாடும் நிலா

ஆ ..மரதேகம் நான் மரங்கொத்தி நீ
வனதேசம் நான் அதில்வாசம் நீ

ஏ .. நூறு கிராம்தான் இடைஉனக்கு இனி
யாரு நான்தான் உடை !

ஐந்தடி வளர்ந்த ஆட்டுசெடிஎன்னை
மேய்ந்துவிடு மொத்தம்

பச்சை பசும்புல் நீயானால்
புலி புல் தின்னுமே என்ன குற்றம் ?

அக்கக்கோ நான் கின்னிக் கோழி

அப்பப்போ என்னை பின்னிக்கோ நீ

இப்பப்போ முத்தம் எண்ணிக்கோ நீ

ஏ ...போ எண்ணிக்கோ நீ..

             ஆபாசம் என்ற வட்டத்தை விட்டு வெளியே பார்த்தால் கவித்துவத்தின் அழம் புரியும்.
வேர்வரை நுழையும்
வெய்யிலும் நான்நீ
இலைதிரை ஏன் இட்டாய் ?
              எப்படி ஒரு உவமை.... எந்திரன் மற்றைய பாடல்களிலும் இருந்தாலும் இதன் ஆழம் இருப்பதாக நான் கருதவில்லை.
 
தோல்கருவி எனைவசியே
                           
இதைப்பாத்திங்களா இதுவரை வீணை, புல்லங்குழல் என மென் கருவிகளைத்தான் ஒப்பிட்டார்கள் அனால் இங்கே ஒரு கடும் கருவி இதிலிருந்து என்ன தெரிகிறது அந்தளவுக்க முரட்டுப் பெண்ணுக்கு தான் இப்பாடல் எழுதப்பட்டிருக்கிறது.
(அப்ப ஐஸ் உங்களுக்கு ரோபோ தான் சரி என நினைக்கிறேன்)
சரி.. சரி படம் வரட்டும் பார்ப்போம் எந்தப் பாடல் வெல்லுதுண்ணு. ஆனால் ஒன்றை சொல்ல மறந்திட்டேன். ஒரு கர்ப்பத்தில் பல பிள்ளை பெற்றவளிடம் எந்தப்பிள்ளை வடிவு என்றால் என்ன சொல்வாளோ அதே நிலமை தான் எனக்கும் என்பதை மறக்க வேண்டாம்.

About the Author

நான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director
View all posts by admin →

Share This Post

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

18 கருத்துகள்:

Lingeswaran சொன்னது…

Indha maadhiriyaana paadalai elutharavangalukku manasaatchi ena ondru irukkirathaa?? Sandhegam thaan...!
Kaasukkaaga enna vendumaanaalum eluthalaamaa??

ம.தி.சுதா சொன்னது…

@ Lingeswaran
வருகைக்கு மிக்க நன்றி.

அன்பு நண்பன் சொன்னது…

இந்த பாடலில் கவிஞர் பா.விஜய் ஒரு விடயத்தை நிரூபததள்ளார் அதாவது" வைரமுத்து" ஆல் மட்டும் உலக அழகியை ரசித்து கவி வடிக்க முடியும் என்ற கருத்தை மாற்றி தன்னாலும் முடியும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்,,,, கவிஞர் வாலி, வைரமுத்துவை விடவா இப்போதய கவிஞர்க் ஆபாச வரிகள் எழத முடியும்?????

ம.தி.சுதா சொன்னது…

@ dinu
வாழ்த்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி சகோதரா.

Riyas சொன்னது…

நல்ல பதிவு.. பாடல் விமர்னமும் அருமை

ம.தி.சுதா சொன்னது…

@ Riyas said..
வாழ்த்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி சகோதரா. தங்களின் ஊக்கம் தான் எமை வளர்க்கும்.

ARV Loshan சொன்னது…

நல்லா ரசித்துள்ளீர்கள் எனப் புரிகிறது..
விரசம் இருந்தாலும் சிலேடை சுவையைத் தருகிறார்..
கிளிமாஞ்சாரோ.. கனி மாஞ்சாறோ.. கன்னக் குழு மாஞ்சாறோ..

சிந்தனையைத் தூண்டிய வரிகள்.

சில எழுத்துப் பிழைகள் உறுத்துகின்றன.பார்த்துக் கொள்ளவும்.
LOSHAN
www.arvloshan.com

Kiruthigan சொன்னது…

அருமையான விமர்சன்ம் சகோதரா..

ம.தி.சுதா சொன்னது…

@ LOSHAN said...
வந்தாரப்பா வந்தாரப்பா வந்து வலையினில் வீழ்ந்தாரப்பா. அண்ணா வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிகள். பிழைகளைத் திருத்தி கொள்கிறேன்.

ம.தி.சுதா சொன்னது…

@ Cool Boy கிருத்திகன். said... வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிகள் சகோதரம்.

இந்தப்பாடலின் வரிகளைக் கேட்கவிடாமல் இசைப்புயல் வாத்தியங்களினால் நிரப்பிவிட்டார்.

ம.தி.சுதா சொன்னது…

வந்தியத்தேவன் said...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரா...

நண்பரே,
'எந்திரன்' இந்தியனின் கற்பனைக்கு அடங்காதவன்.
காட்சி/வார்த்தை ஜாலங்கள் சாதாரண சராசரி இந்தியனை மயக்காது.
(நீங்கள் உட்பட்ட) 'சன்'ஜால்ராக்கள்
ஏமாந்து போகப்போகிறார்கள்!

ம.தி.சுதா சொன்னது…

@ sekar said...
///...நண்பரே,
'எந்திரன்' இந்தியனின் கற்பனைக்கு அடங்காதவன்.
காட்சி/வார்த்தை ஜாலங்கள் சாதாரண சராசரி இந்தியனை மயக்காது.
(நீங்கள் உட்பட்ட) 'சன்'ஜால்ராக்கள்
ஏமாந்து போகப்போகிறார்கள்!...///
சகோதரரே நீங்கள் முடிவாக என்ன சொல்ல வருகிறீர்கள் என்றாவது சொல்லாமே... எனக்கு சண் ஜால்ரா என்ற பட்டம் தருவதற்கு என்னில் நிங்கள் கண்டுள்ள ஆதாரத்தை சொல்லவும்... முதலில் கீழுள்ள தொடுப்பிற்கு போய் வடிவாக வாசித்த விட்டு வரவும்... கருத்த தெரிவிக்கலாம் என்பதற்காக எல்லாவற்றையும் சொல்ல முடியாது ஞாபகம் வைத்தக் கொள்ளுங்கள்... (இதை நான் சாந்தமாக இருந்து கொண்டு தான் எழுதுகிறேன்... காரணம் இருந்தால் கட்டாயம் மீள வரவும்...)
http://mathisutha.blogspot.com/2010/08/blog-post_17.html

Jiyath சொன்னது…

உங்களது பதிவிற்கு மிக்க நன்றி. தொடர்ந்து அணைவருக்கும் பகிருங்கள். நீங்கள் எந்திரனிலுள்ள Irumbile Oru Ithyam என்ற பாடலை எழுத்துருவாக எனது ஈ-மெயில்:- jiyathahamed க்கு அனுப்புக.
மிக்க நன்றி...

சாமக்கோடங்கி சொன்னது…

பா விஜயும் எழுத்தில் பூந்து விளையாடி இருக்கிறார்.."மலைப் பாம்பைப் போல வந்து மான்குட்டியப் புடியா.. சுக்கு மிளகு தட்டி என்ன சூப்பு வெச்சு குடியா.." ராகத்திர்கேற்றவாறு அருமையான வரிகள்.. வைரமுத்து, வாலியின் வரிசையில் சேர்கிறார் பா விஜய்..

ஆனால் எழுத்தை வெட்டி வெட்டி வரும் இசை, கொஞ்சம் வித்தியாசமாக இளைய தலை முரியாயினருக்குத் தென்பட்டாலும், எத்தனை பேருக்கு இந்த வரி புரிந்தது என்பது தான் கேள்வி..

இசை போய்ச் சேரும் அதே நேரத்தில், பாடல் வரிகளும் போய்ச் சரிந்தால் தானே கவிஞருக்கும் பெருமை..

"பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பு" என்றொரு பாடல்.. ரஹ்மான் இசை அமைத்ததில் எனக்கு மிகவும் பிடித்த பாடல், பாடும் நிலா பாலுவின் தேன் குரலில் இனிக்கும் பாடல்.. வைரமுத்து எழுதியது என்று நினைக்கிறேன்.. அதில் மிளிரும் ரஹ்மானின் இசையும், வரிகளுக்கு வழிவிட்டு அடங்கி வாசிக்கும் வாத்தியங்களின் அழகும், கொஞ்சும் குரலும்.. கண்ணை மூடி ரசித்தால் பேரானந்தம்.. அதைப் போல இசையை அமைக்க ரகுமான் விரும்பினாலும்.. இங்கே யாரும் அவரை விடுவதில்லை என்றே தோன்றுகிறது..

ம.தி.சுதா சொன்னது…

@ Welcome To Pottuvil
வருகைக்கு மிக்க நன்றி சகோதரா.. கிடைத்ததா..???

ம.தி.சுதா சொன்னது…

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...
வருகைக்கு மிக்க நன்றி சகோதரா..
இது பாடல் வெளிவந்த சில நாளில் எழுதியது பிரபலமானதால் சந்தொசமே...

மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்













back to top