என் விரல்கள் மூன்று வாரகால இடைவெளியின் பின் பதிவொன்றுக்காய் நீள்கிறது அதற்கு காரணமானவன் எனது மருமகன் சிவசங்கர் தான் காரணம் நேற்று (07.02.2011)அவனுடைய பிறந்தநாளாகும். இது வரை நான் இப்படி ஒரு வாழ்த்துப் பதிவு போட்டதே இல்லை இருந்தாலும் அக்காவுக்காக போட்டே ஆகணும் காரணம் நான் கல்வியிலோ அல்லது சமூகத்திலோ இவ்வளவு வளர்ந்ததற்கு பெரும்பான்மையான காரணம் அவர் தான் ஆனால் அவர் பிள்ளைக்கு என்னால் அந்தளவு செய்ய முடியவில்லை இருந்தாலும் அவனுள் இருக்கும் அந்த ஓர்மத்தை எப்போதும் குறைய விடாமல் பார்ப்பதற்கு இந்தப் பதிவு ஒரு பத்து ஆண்டுகள் கழித்து அவனுக்கு உதவலாம் அது நான் எனது அக்காவிற்கு கொடுக்கும் குரு தட்சனையாகவும் இருக்குமல்லவா ?
அவனை பற்றி சொல்ல வெளிக்கிட்டால் பல பதிவு தேவைப்படும். இருந்தாலும் அவர் பலரை பிரமிக்க வைத்த ஒரு விடயத்தை இறுதியில் பகிர்கிறேன். சொல்லுக் கேட்கும் பழக்கம் தாராளமாகவே இருக்கும் காரணம் ஒன்றரை வயதிலேயே காது கொடுத்து கேட்காத அளவுக்கு தூஷணம் பேசுவான் (அக்காவிடம் படிக்க வரும் மாணவர்களின் கற்பித்தலால்) ஆனால் அப்போதே அது கூடாதென சொன்னவுடன் உடனேயே நிறுத்தி விட்டான்.
அவனுக்கு வாகனங்கள் மேல் எப்போதும் ஒரு தனிப்பிரியம் அது எனக்குப் பிடிப்பதில்லை ஆனால் கண்டிப்பதில்லை காரணம் உளவியல் ரீதியில் அது தப்பு தானாக மாறிக் கொள்ளட்டும்.
அவனுடைய ஓர்மம் பற்றி இப்போதே சொல்ல வேண்டும் என்றெனல்லவா கேளுங்கள் அவன் போன வருடம் ஆண்டு ஒன்றில் கல்விகற்றான். இங்கு பள்ளிக் காலம் மூன்று தவணைகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும். முதல் தவணை முடிந்தவுடன் போய் என்னை வகுப்பறை தலைவன் ஆக்குங்கள் எனக் கேட்டிருக்கிறான். அவன் வன்னியால் வந்த புதிது பெரிதாக அறிமுகம் இல்லாததால் அவனை ஏதோ சாக்கு சொல்லி ஆசிரியர் கடத்தி விட்டார். அக்காவும் ஒரு ஆசிரியர் என்ற படியால் இவரிடம் வந்து கேட்டிருக்கிறான் இவரும் தான் தலையிடக் கூடாது என்பதற்காக சாக்குப் போக்கு சொல்லி விட்டார்.
இரண்டாம் தவணை முடிந்தவுடனும் போய் கேட்டிருக்கிறான் அதற்கு ஆசிரியர் நீ முதலாம் பிள்ளையாய் வா பார்ப்போம் என்றிருக்கிறார். இறுதித் தவணை பரீட்சை முடிந்தவுடன் தான் அவன் இதற்கு எந்தளவு ஆசைப்பட்டான் என தெரிந்தது அவனது சராசரி 98.2 எல்லோரும் மூக்கின் மேல் விரல் வைத்தார்கள் காரணம் இரண்டாம் இடம் வந்தவனுக்கு 92 சராசரி கிடைத்திருந்தது. அதுமட்டுமல்ல 6 பாடங்களில் இவன் தான் முதன்மைப் புள்ளியையும் பெற்றிருக்கிறான். அவனது தேர்ச்சி அறிக்கையின் படம் மேலே உள்ளது..
அவனை வாழ்த்த ஒரு நாள் பிந்திவிட்டாலும் அவனுக்கு என்றும் இறைவன் ஆசிகள் இருக்கட்டும்.
குறிப்பு - ஏதோ ஒரு மாதிரி மீண்டும் நுழைந்தாச்சு.. ஆனால் ஒரு சின்ன வருத்தம் சிறிது காலத்திற்கு வாரம் ஒரு பதிவுகளுக்கு மேல் போட முடியாத சூழ்நிலை இரண்டு தரம் தான் உறவுகளின் தளங்களுக்கு கருத்திட முடியும்... தயவுசெய்து சூழ்நிலையை புரிந்து எம் உறவை தொடருவீர்கள் என நினைக்கிறேன்.
53 கருத்துகள்:
போடு முத வெட்டை
>>>>ஏதோ ஒரு மாதிரி மீண்டும் நுழைந்தாச்சு.. ஆனால் ஒரு சின்ன வருத்தம் சிறிது காலத்திற்கு வாரம் ஒரு பதிவுகளுக்கு மேல் போட முடியாத சூழ்நிலை இரண்டு தரம் தான் உறவுகளின் தளங்களுக்கு கருத்திட முடியும்... தயவுசெய்து சூழ்நிலையை புரிந்து எம் உறவை தொடருவீர்கள் என நினைக்கிறேன்.
சுதா .. ஒண்ணும் கவலைப்படாதீங்க..எத்தனை பதிவு போடறோம்கறது முக்கியம் இல்ல.. கீப் இன் டச்... அவ்வளவுதான்..
சிங்கமாகவே வளர்ந்து சிறக்க
சிஙகக் குட்டிக்கு என் மனமார்ந்த
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
வாங்க நண்பா! :)
குட்டிப் பையனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்...
தேர்ச்சி அட்டையைப் பார்க்கும்போது அவன் மன உறுதியும் கடின உழைப்பும் வியப்பூட்டுகிறது!
ரொம்ப நல்லா வருவான் பாருங்க...
பதிவுலகமும்.. இந்த நட்புகளும் என்றும் உடன் இருக்கும் சகோதரா.... கூல்! :)
ஹஹஹா யாருமே எதிர்பார்க்காத பதிவு மதி...
//சிறிது காலத்திற்கு வாரம் ஒரு பதிவுகளுக்கு மேல் போட முடியாத சூழ்நிலை இரண்டு தரம் தான் உறவுகளின் தளங்களுக்கு கருத்திட முடியும்... தயவுசெய்து சூழ்நிலையை புரிந்து எம் உறவை தொடருவீர்கள் என நினைக்கிறேன்//
Don't worry! KIT!! :-)
ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன மகனை சான்றோன் என கேட்ட தாய் ...................
வாழ்த்துக்கள் குட்டி பையனுக்கும் .....................................
தயவுசெய்து சூழ்நிலையை புரிந்து எம் உறவை தொடருவீர்கள் என நினைக்கிறேன்.////
கண்டிப்பாக எங்கள் ஆதரவு என்றும் உண்டு!
வாழ்த்துக்கள் மருகனுக்கு.. தொடருங்கள் பதிவை.
மீண்டும் சொல்கிறேன்
"பதிவுலகம் என்பது வாழ்க்கை அல்ல வாழ்க்கையின் ஒரு நிலையில் பதிவுலகத்துக்குள்ளும் இருக்க முடிகிறது"
சிறந்த எதிர்காலத்தை காண்கின்றேன்....வாழ்த்துகள்..
அண்ணா மீள்வருகை மகிழ்ச்சி...தொடரட்டும் பணி...
அட..மதி ..எதுக்கு இதெல்லாம் கவலைபட்டுடு..நீங்க எப்போ வந்தாலும் சப்போர்ட் பண்ணுவோம்..உங்க மருமகன் மதிப்பெண்கள் பார்த்தேன்..இந்த வயசில் என்ன ஒரு வைராக்கியம்...அது மட்டுமில்லை மதிப்பெண் பட்டியலில் இருக்கும்பாட வகையறாக்களும் ரொம்பவே கவர்ந்தது..இலங்கை பள்ளிகள் நல்ல கல்வி தரமோ மதி??
நிச்சயமாக இது ஒரு சிறந்த பிறந்த நாள் பரிசுதான். எங்களது பிறந்த நாள் வாழ்த்தையும் தெரிவித்து விடுங்கள். உங்கள் மருமகன், மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்!
உங்க அக்காவுக்கும் அவங்க மகனுக்கும் மறக்க முடியாத நல்ல பரிசு கொடுத்திருக்கிரீர்கள்.என்றும் அவர்களின் நினைவில் இருந்துகொண்டே இருக்கும்.குட்டிபையன்
வெரி ஸ்மார்ட். வாழ்த்துக்கள்.
அடடா அருமை அருமை.
அருமை வாழ்த்துக்கள்
பாசவலை அன்புவலை.......
அருமையாக சொன்னீர்கள்....
தங்கள் மருமகன் நீடூழி வாழ வாழ்த்துக்கள்
manam niraintha vaalthukal
vetha.Elangathilakam.
Denmark.
வாழ்த்துக்கள் மருகனுக்கு..
எப்பவேனும்னாலும் வாங்க நண்பா நீங்க வந்தா மட்டும் போதும்
வாழ்த்துக்கள் குட்டி மருமகனுக்கு
தயவுசெய்து சூழ்நிலையை புரிந்து எம் உறவை தொடருவீர்கள் என நினைக்கிறேன்.////
கண்டிப்பாக எங்கள் ஆதரவு என்றும் உண்டு!
அடடா தலைப்பே ஒரு வித்தியாசம் நான் எதிர்பார்க்கவே இல்லை உள்ளுக்குள்ளை இப்படியானதொரு ஆச்சரியமும் மகிழ்ச்சியும் இருக்கு மென்று.
அதுவும் எனது நெருங்கிய சொந்தம் அதிரடியாக, பிடிவாதத்துடன் சாதிச்சிருக்கிறது, வாழ்த்த வார்த்தைகளில்லை என்றாலும், பிள்ளையின் எதிர்காலதிற்காக பிரார்த்திக்க நிறையவே மனமிருக்கின்றது.
உங்களது இந்த ஆக்கம் ஒருகணம் திகைக்க வைத்துவிட்டது.
பாராட்டுக்கள் சுதா.
வணக்கம் சகோதரம், எப்படி நலமா? முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் என்பதற்கு உங்களின் மருமகனும் ஓர் எடுத்துக்காட்டு. அவனை இன்னும் ஊக்கப்படுத்தினால் சாதனைகள் பல புரிவான் என்பது என் கருத்து. வளரும் பயிரை முளையிலே தெரியும் என்பதற்கு உங்களின் மருமகனும் ஓர் எடுத்துக்காட்டு.
பதிவு முக்கியமில்லை... மனசு போதும்.
சிங்கத்துக்கு வாழ்த்துக்கள்.
தங்கள் மருமகனுக்கு மனமார்ந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தங்கள் மருமகன் வாழ்க்கையில் மேலும் சாதிக்க வாழ்த்துக்கள்....பிறந்தநாள் வாழ்த்துக்களும் கூட...
thanks பிறந்தநாள் வாழ்த்துகள்
நல் வாழ்த்துக்கள்
வரவேற்கிறேன், ம.தி.சுதா!
வாழ்த்துகிறேன், சிவசங்கர்!!
உங்கள் மருமகன் எங்கள் உள்ளம கவர்ந்து விட்டான்
உங்கள் மருமகன் சிவசங்கருக்கு வாழ்த்துக்கள்.
நன்றியும் கூட. மூன்று வாரகால இடைவெளியின் பின் பதிவொன்றுக்காய் உங்கள் விரல்களை நீள வைத்ததற்காக.
வளரும் பயிர் முளையில் தெரியும் என்பதை காட்டுகிறது மருமகனின் செயல் தொடர்ந்து எழுதுங்கள்
பையன்....கலக்கிருக்கானப்பா......வெரி குட் பாய்...
உங்க சிங்க குட்டி மருமகனுக்கு வாழ்த்துக்கள் மூன்று வார கால இடைவெளியின் பின் காண்பதில் . மகிழ்ச்சி .........காத்திருந்துபடிபோம் தயங்காமல் வாருங்கள். மருமகன் சிவசங்கரின் விடாமுயற்சி அவனை உயர்ந்த இடத்தில் வைக்கும். வாழ்த்துக்க.ல் ..
உங்கள் மருமகனுக்கு எனது வாழ்த்துக்கள்...
சுதா அக்கா சார்பாக மருமகனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறிவிடுங்கள்...
சிங்கக்குட்டிக்கு வாழ்த்துக்கள்
சிங்கக்குட்டிக்கு வாழ்த்துக்கள்..................
உங்கள் மருமகனின் விடாமுயற்சியும் , தன்னம்பிக்கையும் அசர வைக்கிறது. சிங்கக்குட்டிக்கு வாழ்த்துகள்.
பதிவுகள் வர தாமதம் என்றாலும் படிக்க நாங்க தவறாம வந்திடுவோம்...
தங்கள் மருமகனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தங்களின் மருமகனுக்கும் தங்களுக்கும் வாழ்த்துக்கள்
வாழ்த்துகள் சிங்கக்குட்டிக்கு இன்னும் பலசாதனை அடைந்திட இறைவன் துணை
மகிழ்ச்சி இப்படியான ஒரு பதிவுடன் உறவுகளையும் மகிழ்விக்கும் தங்களின் பயணமும் சிறக்கட்டும்
தங்களின் மருமகனுக்கும் தங்களுக்கும் வாழ்த்துக்கள்
"நீயே எனக்கு என்றும் நிகரானவன்" என்று அந்த சிங்கக்குட்டியும், மாமா சுதாவும் பாடுவதுபோல ஒரு கற்பனை பண்ணி பார்த்தேன்.
வாழ்த்துக்கள்.
super post
//ஒன்றரை வயதிலேயே காது கொடுத்து கேட்காத அளவுக்கு தூஷணம் பேசுவான்// பதிவுலகு உண்மையை சொல்ல எதையும் எழுதலாம், உங்க அக்க பிள்ளையை எழுதிறது ஒன்னும் குறையில்லையே...அருமை நண்பரே....
http://vellisaram.blogspot.com/2011/01/blog-post_30.html
என்னையும் பின் தொடருங்கள்...
சிங்கமாகவே வளர்ந்து சிறக்க
சிஙகக் குட்டிக்கு என் மனமார்ந்த
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் :))
குட்டிப் பையனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்...
நீங்கள் வந்ததே போதும் நண்பா.... சிங்கக் குட்டிக்கு என் வாழ்த்துக்களையும் சொல்லிடுங்களேன்.....!
நினைத்ததை முடிப்பவன்!!
MEE TOO SAME,....
NANUM EPPDITHAN PADIPENAKKUM...
நானும் எப்படித்தான் படிபெனாக்கும்
ஒன்லி முதல் ரேங்க்
வாழ்த்துக்கள் அண்ணாச்சி
முயற்சி திருவினையாக்கும். வாழ்த்துக்கள்
கருத்துரையிடுக