நான் சங்காவின் துடுப்பாட்டத்திற்கு அடிமை. ஆனால் அவரது தலைமைத்துவத்திற்கு எதிரானவன். காரணம் அவரது முடிவுகளில் எனக்கு எள்ளளவு உடன்பாடும் இல்லை.
உதாரணம் இன்று சுரேஷ் ரைனா, மிதுன் ஆகியோரை இவ்வளவு ஓட்டம் எடுக்க வைத்தது முடிவுதான்.
விளக்கமாகப் பார்ப்போமா?
சுரேஷ் ரைனா ஆடுகளம் வரும் போது ஒரு பகுதியில் சிறப்பாக பந்து வீசிக் கொண்டிருந்தவர் மலிங்கா ஆகும். சங்கா என்ன எண்ணினாரோ தெரியல ஒரு சில பந்துப்பரிமாற்றங்களை வீசியிருந்த மலிங்காவை நிறுத்திவிட்டு மென்டிசைக் கொண்டுவந்தார்.
சரியென்று சுரேஷ் ரைனா ஒவ்வொரு நான்கு அடிக்கும் போதும் பல்லைக்கடித்துக்கொண்டு இருந்தேன் சரியென்று ஒருவாறு அவரும் மென்டிஷ் பந்தில் ஆட்டமிழக்க மறுபக்கம் மலிங்காவும் தன் பங்குக்கு டோனியை தூக்கினார். அப்பாடா தலையிடி முடிந்தது இனி மிகுதியையும் மலிங்கா அள்ளுவார் என்றிருந்த போது மீண்டும் புதிதாய் வந்த துடுப்பாட்ட வீரருக்கு இருபக்கமும் சுழல் பந்தைக் கொண்டுவந்தார். ஒருமுறை திட்டிவிட்டு வெளியே போய்வந்து பார்த்தால் மிதுன் 40 ற்கு மேல் அடித்திருந்தார்.
சங்கா செய்தது சரியாக இருக்கும் அது யாருக்கென்றால் சுழலுக்கு நிலை எடுக்கமுடியாத மற்றும் வேகத்தை இலகுவாகக் கையாளக்கூடிய அணிகளிடம் இப்படித்தான் செய்யணும். உலகிலேயே சுழலுக்கு எதிர்கொள்ளும் சிறப்புப் பெற்ற அணியென்றால் அது இந்தியாதான். முதல் போட்டியிலேயே இறுதி வீரரான சர்மாவைப்பார்த்தால் தெரிந்திருக்கும்.
என்னைப் பொறுத்தவரை ராசியற்ற தலைவரான சங்கா தானாக விலகி துடுப்பட்டத்தில் கவனமெடுப்பது இலங்கை கிரிக்கெட்டுக்கு ஆரோக்கியமானதே.
குறிப்பு – இன்று மலிங்க 100 விக்கேட்டையும் மென்டிஷ் 50 விக் கேட்டையும் எடுத்தார்கள். முக்கிய விடயம் 2ம் இனிங்சில் 78 பந்துப்பரிமாற்றங்கள் தான் சராசரியாகத் துடுப்பெடுத்தாடலாம்.
7 கருத்துகள்:
மீண்டும் மகேலாவின் தலைமைக்காக காத்திருக்கிறேன்
ஆமாம் ஜீவா அவர் இவரை விட சிறந்த முடிவுகளம எடுப்பார் வருகைக்கு மிக்க நன்றி
கட்டாயம் சகோதரி. வருகைக்கு நன்றி
அடா கிரிக்கேட்டும் தெரியுது
கிரிக்கேட் post best.....congrats
vampan said...
////அடா கிரிக்கேட்டும் தெரியுது///
என்ன சகொதரம் இப்படிக் கேட்டால்.. அதவும் என்னிடம்.
rk guru said...
ஃஃஃஃகிரிக்கேட் post best.....congratsஃஃஃ
நன்றி சகொதரா...
கருத்துரையிடுக