இன்று தாய்மொழி தினமாக கொண்டாடுகிறார்கள் இந்த இனிய நன்நாளிலே என்னால் முடிந்த ஒரு சிறு முயற்சியை செய்கிறேன் பலர் என்னுடன் அரட்டையில் வரும் போது அடிக்கடி கேட்கும் ஒரு உதவி எப்படி தமிழ் அடிக்கிறீர்கள் என்று நானும் ஆரம்பத்தில் தங்களைப் போல் தான் தமிழுக்காய் அலைந்த்துண்டு அனால் இப்போது என் எச் எம் ரைட்டர் பாவிப்பதால் எந்த வித சிக்கலுமில்லாமல் விரல் நுனியில் தட்டச்சிடுகிறேன்.
அதை நிறுவுவதெப்படி என பார்ப்பதற்கு முன்னர் அதன் உருவாக்கத்தை அறிய வேண்டுமல்லவா ?
என் எச் எம் ரைட்டர் (NHM writter)
சென்னையில் உள்ள நியூ ஹொரைசேன் மீடியா நிறுவனத்தினால் கே.எஸ்.நாகராஜனை பிரதான நிரலாக்கராகக் கொண்டு உருவாக்கப்பட்ட தமிழ் உட்பட அசாமிய_மொழி, வங்காளம், குஜராத்தி, இந்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, பஞ்சாபி, தெலுங்கு ஆகிய இந்திய மொழிகளை உள்ளீடு செய்ய உருவாக்கப்பட்ட மென்பொருள் ஆகும். இது 2009-2010 ற்கான தமிழ் நாட்டின் கணியன் பூங்குன்றனார் விருதை பெற்றது இதன் சிறப்பம்சமாகும். இவற்றுக் கெல்லாம் காரணம் இதன் இலகு தன்மை தான் இந்த மென் பொருள் மிக மிகச் சிறியது. அத்துடன் வின்டோஸ் 7 ல் கூட இலகுவாக நிறுவமுடியும். அத்துடன் இது பெரும்பாலான இணைய உலாவிகளுக்கும் பயன்படுத்தக் கூடியதாக இருக்கிறது. அதுமட்டுமல்ல கணணியில் கூட எல்லா வடிவக் கோப்புகளிலும் தட்டச்சிடலாம்.
சில வேளைகளில் தங்களுக்கு இதை நிறுவுவதில் ஏதாவது சிக்கல்கள் வந்தால் (மென் பொருளால் அல்ல தங்களின் கணணி பிரச்சனையால்) கவலையை விடுங்க ஒரு வேர்ட் பாட் (word pad) ஐ திறந்து சாதாரண பாமினி எழுத்தில் தட்டச்சிட்டு விட்டு அதை அப்படியே copy பண்ணி விட்டு online conveter என்பதன் மேல் சொடுக்கி போனால் அங்கே என் எச் எம் ரைட்டர் online coveter இருக்கிறது அதில் paste பண்ணிவிட்டு மறுபக்கப் பெட்டியில் இருக்கும் யுனிகோட் என்பதை தெரிந்தெடுத்து விட்டு convert என்பதை சொடுக்கினால் சரி தங்களது யுனிகோட் எழுத்துரு வந்துவிடும். இது யாருக்கு உதவுமென்றால் வழமையாக திரையை பார்க்காமல் என் எச் எம் ரைட்டரில் தட்டச்சிடுவோர் தவறுதலாக ஆங்கிலத்தில் தட்டச்சிட்டு விடுவோம் எவ்வளவு கடுப்பாயிருக்கும் அப்போ இந்த வழி கட்டாயம் உதவும்.
![]() |
| பாமினி தட்டச்சுப் பலகை |
![]() |
| alt+2 கொடுத்து பெறும் உச்சரிப்பு தட்டச்சுப் பலகை |
![]() |
| தமிழ் 99 தட்டச்சுப் பலகை |
அத்துடன் பலருக்கு பாமினி எழுத்துருவில் தட்டச்சிடுவது பலருக்கு பழக்கமிருக்காது என்பதால் google translater பாவிப்பீர்கள் அதற்கும் இங்கே தீர்வு இருக்கிறது alt+2 க் கொடுத்தால் phoneti code வரும் இதில் வைத்து ammaa என அடித்தால் அம்மா என தோன்றும் இது உச்சரிப்பியல் சார்ந்த்தால் நீங்கள் sms அடிப்பது போல அடித்தாலே தமிழ் கண் முன் தோன்றும் (இது தமிழுக்கு உகந்ததல்ல என யாரும் திட்ட வேண்டாம் எனக்கு ஆங்கிலத்தில் தட்டச்சிடும் ஒருவரை தமிழுக்கு மாற்றுவதே எண்ணமாகும்)
உறவுகளே வருத்தத்திற்குரிய செய்தி ஒன்று ஒரு இரவு முழுதும் இருந்து இன்றைய நாளுக்காய் ஒரு பதிவை எழுதி விட்டு படங்களுக்காய் மீள என் எச் எம் ரைட்டரை தரவிறக்கி நிறுவி நிறுவலை படமாக்கி விட்டு பார்தால் (2008 ல்) ஏற்கனவே ஒருவர் இதைப்பற்றி எழுதியிருக்கிறார் (நன்றி FIZAL) என் சொந்த முயற்சியில் எழுதினாலும் நான் திருடனாக பட்டம் பெற விரும்பல அதனால் அந்த தொடுப்பையே அடியில் தருகிறேன். ஆனால்
மேலே பதியப்பட்டுள்ள தகவலுக்கு நான் தான் உரிமையாளி என்பதை மார் தட்டிச் சொல்லிக் கொள்கிறேன். இதற்கு முன்னர் எழுதிய fizal இப்போ எழுதுவது இல்லை போல தெரிகிறது அதனால் சந்தேகங்கள் இருப்பின் கேளுங்கள் தெரிந்ததை சொல்கிறேன்.
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா
என் எச் எம் ரைட்டரை தரவிறக்க இந்தப் பெயரை சொடுக்கங்கள் Click here to download NHM Writer அதன் பின் இறக்கிய கோப்பை திறவுங்கள் படத்தில் உள்ளது போல வரும்.
இதில் I accept the agreement என்று தேர்வு செய்து பின்னர் Next என்ற பட்டனை கிளிக் செய்யவும்
next ஐ கொடுத்தால் இது போல படம் வரும்
அடுத்து மொழியை தெரிவு செய்யுங்கள்.
next ஐ கொடுத்தால் இது போல படம் வரும்.
next ஐ கொடுத்தால் மென் பொருள் நிறுவப்படும்
அதன் பின் task bar ல் மணி போன்ற உருவம் வரும் அதைச் சொடுக்கி உங்களுக்குத் தேவையான எழுத்துருவை பெறலாம். இவ்வளவும் தான் விடயம்
பொறுங்க பொறுங்க தொடுப்பை சொடுக்க முதல் வாக்கையும் கருத்தையும் சொல்லிட்டு சொடுக்குங்க..
இதில் I accept the agreement என்று தேர்வு செய்து பின்னர் Next என்ற பட்டனை கிளிக் செய்யவும்
next ஐ கொடுத்தால் இது போல படம் வரும்
அடுத்து மொழியை தெரிவு செய்யுங்கள்.
next ஐ கொடுத்தால் இது போல படம் வரும்.
next ஐ கொடுத்தால் மென் பொருள் நிறுவப்படும்
அதன் பின் task bar ல் மணி போன்ற உருவம் வரும் அதைச் சொடுக்கி உங்களுக்குத் தேவையான எழுத்துருவை பெறலாம். இவ்வளவும் தான் விடயம்
பொறுங்க பொறுங்க தொடுப்பை சொடுக்க முதல் வாக்கையும் கருத்தையும் சொல்லிட்டு சொடுக்குங்க..
(இந்த தெளிவான படங்களை தந்ததவிய fizal ற்கு நன்றி)





















