Featured Articles
All Stories

வெள்ளி, 27 ஏப்ரல், 2012

தி.மு.க தொண்டர்களுக்கும் அபி அப்பாவுக்கும் ஒரு ஈழத்தமிழனின் சீற்ற மடல்

தமிழ் நாட்டில் பிறந்த ஒரு தமிழனாக தங்களை மதிக்கும் சுதா எழுதிக் கொள்வது...
நாம் இழி நிலையில் இருப்பதாக நீங்கள் கருதினாலும் தன்மானத்தை தாங்கியிருப்பதால் நாம் நலமே.. உங்கள் நலம் பற்றித் தான் பல தமிழரின் வாய்கள் முணு முணுத்துக் கொண்டிருக்கிறது.
தாங்கள் ஒரு பதிவு போட்டீர்கள் அது உங்கள் உரிமை எழுதுங்கள் அதற்காக உங்கள் தலைவனுக்கு பிட்டம் கழுவச் சொல்லி ஈழத் தமிழனைக் கேட்பது எவ்வகையில் நியாயம். உங்கள் தலைவனை திட்டுவதற்கு ஈழத் தமிழனிடம் தூசணம் முடிந்து விட்டதால் அதை தேடிக் கொண்டிருக்கிறான் என்பது தங்களுக்குத் தெரியுமா?
எத்தனை நாளைக்குத் தான் எங்கள் பெயரை வைத்து தமிழக மக்களின் உணர்வைத் தூண்டி குளிர்காயப் போகிறார் உங்கள் மாசற்ற மறத் தமிழன்...
கொட்டும் மழையில் எத்தனையோ தமிழக உறவுகள் நனையும் போது ஏசி காரில் உங்கள் தலைவன் வலம் வந்தது எமக்குத் தெரியாது என நினைக்க வேண்டாம்.
முதல் உங்கள் கட்சியை மேயுங்கள் அதன் பின் இழிநிலையில் இருக்கிறான் என நீங்கள் கருதும் ஈழத்திழனை மேய்க்கலாம். நாளையே உங்கள் தலைவன் மண்டையைப் போட்டால் ஸ்டாலினும், தயாநிதியும் குஸ்தி போடப் போகிறார்கள் அதைப் பற்றி சிந்தியுங்கள்.
உங்கள் தலைவன் ஒரு குழு அமைத்து போராடப் போகிறார். வெளிநாடுகளில் உள்ள ஈழத் தமிழரே ஆதரவு தாருங்கள் எனப் போட்டிருந்தீர்கள். அது என்ன போராட்டம் என சொல்லுங்களேன் தமிழகத்தில் வாக்குப் பெறுதல் போராட்டமா?
உங்கள் தி.மு.க ஆட்சியில் ஒரு முறை மண்டபம் முகாமல் நடந்த சம்பவத்தைக் கேளுங்கள். முகாமிற்கு வரிசை வரிசையாய் கார்கள் வந்து நின்றதாம். அதில் முன்னுக்கு வந்த காரின் கண்ணாடி 2 இஞ்சி கீழ் இறங்கியதாம். பின்னேரம் கலைஞர் ரிவியில் தலைப்புச் செய்தியாம் கனிமொழி அவர்கள் ஈழ அகதிகளை அவர்கள் முகாமிற்குச் சென்று பார்வையிட்டார். இது தான்யா உங்கள் உணர்வு இதற்குத் தான் ஈழத் தமிழனா? போய் ஓட்டைச் சிரட்யைில் விழுந்து சாகலாமே?
சூசை அவர்கள் சீமானுக்கும், வைகோவுக்கும் அழைப்பெடுத்த நேரம் கலைஞருக்கு எடுத்திருந்தால் தப்பியிருக்கலாம் என்றிருந்தீர்கள், உங்கள் தலைவன் என்ன குருடனா? அல்லது செகிடனா? ஏனென்றால் ஈழத்திழன் செத்தது அவருக்குத் தெரியாதா?
சீமானையோ அல்லது வைகோவையோ அவருக்கு ஒப்பிட வேண்டாம் என்கிறீர்கள். அவர்களது உணர்வில் எத்தனை பங்கு உங்கள் தலைவருக்கு இருக்கிறது.
முதல்ல உங்கட பிட்டத்தைக் கழுவுங்கள் அதன் பின் மற்றவன் மலம் மணக்கிறது என்று மூக்கைப் பொத்திக் கொள்ளுங்குள்..
இது உங்களுக்கு மட்டுமல்ல ஈழத்தமிழனில் குளிர் காய நினைக்கும் அனைத்து அரசியல்வாதிகளுக்கும் தொண்டர்களுக்கும் தான்.

சீற்றக் கிறுக்கலுடன்
ம.தி.சுதா

இது தான் சீற்றத்தை ஏற்படுத்திய அவரது பதிவு

ஏற்கனவே அவர் மீது உழிழப்பட்ட எழுத்துக்களை காண


விரைவில் இந்து மதத்தின் தற்போதைய நிலையை உலகுரைக்கும் “அர்த்தம் தொலைக்கும் இந்து மதம்” என்ற தொடர் ஒன்றுடன் சந்திக்கிறேன். இது தான் எனது பதிவுலக வாழ்க்கயைில் நான் எழுதும் முதலாவது தொடராகும். என் மீது உமிழ நினைப்பவர்கள் இப்பொழுதே உழிர் நீரை சேமிக்க ஆரம்பியுங்கள்.

18 கருத்துகள்:

புதன், 18 ஏப்ரல், 2012

நடிகைகளின் சம்பளப்பட்டியல் வெளியீடும் மயங்க வைக்கும் தொகைகளும்

இந்த வாரம் வெளியாகியிருந்த நடிகைகளின் சம்பளப்பட்டியல் பலரை வாய்பிளக்க வைத்துள்ளது. அந்தளவுக்கு அதிசயிக்க வைத்துள்ள அத்தொகையானது எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

தென் திரையுலகைப் பொறுத்தவரையில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளாக விஜயின் நண்பனில் இடுப்பால் உலுப்பிய இலியானாவும், பிரபுதேவாவின் காதல் லீலையில் சிக்கி பல ஊடகங்களின் தலைப்புச் செய்தியை குத்தகைக்கு எடுத்து வைத்திருந்த நயன்தாராவும் பிடித்துள்ளார்கள். இவர்களது சம்பளத் தொகை எவ்வளவு தெரியுமா? வெறும் 1.5 கோடி ரூபாய் தான்.

அனுஸ்கா மற்றும் கஜால் அகர்வால் இருவரது சம்பளமும் ஒரு கோடியைக் கடந்துள்ளது.

ஆனால் திரிசாவின் சம்பளத் தொகையானது வழமை போல 1.2 கோடியிலேயே இருக்கிறது.

தமன்னாவின் தொகையும் கோடியை அண்மித்திருப்பாதாகத் தெரிவிக்கப்பட்டாலும் அமலா பாலின் சம்பளத் தொகையும் மிக வேகமாக எகிறி வருவதாகக் கூறப்படுகறது.
கன்னட சினமாவைப் பொறுத்த வரை திவ்யா ஸ்பான்டானா 40 லட்சத்தையும் பிரியாமணி 30 லட்சத்தையும் பெறுகிறார்கள்.

ஆனால் Mollywood ஐ பொறுத்தவரை காவ்யா மாதவன் 17 லட்சத்தையும், மம்மதா மோகன் தாஸ் 15 லட்சத்தையும் பெறுகிறார்கள்.

இந்திய சினிமாவைப் பொறுத்த வரையில் பிரியங்கா சோப்ராவே அதிகமான தொகையைப் பெறுகிறார். இவரது சம்பளத் தொகை எவ்வளவு தெரயுமா 9 கோடி ரூபாய்களாகும்.

Kareena Kapoor (Rs. 6 Crore)
Katrina Kaif (Rs. 3 Crore),
Deepika Padukone (Rs. 2.5 Crore)
Vidya Balan (Rs. 1.5 Crore)

என்ன தொகைகள் மலைக்க வைக்கிறதா? என்ன செய்வது இன்று பலரது கனவுகள் தொலைந்ததற்கு நானே காரணமாக விட்டேன் மன்னிக்கவும்.

நன்றிச் செதுக்கலுடன்
ம.தி.சுதா

11 கருத்துகள்:

செவ்வாய், 17 ஏப்ரல், 2012

இலங்கைப் பதிவரின் முதல் குறும்பட வெளியீடும் தமிழ் இணைய உலகில் வித்தியாசமான வெளியீடும்

                           
அனைத்து உறவுகளுக்கும் வணக்கம்.
சற்றே பிந்திய பதிவு தான் ஆனால் அந்தக் கணங்களின் சந்தோசம் கழியாத இவ்வேளையில் அதை பகிர்வதில் சந்தோசமே.
உண்மையில் இது ஒரு குறும்படம் என்ற வரையறைக்குள் பலரால் உள்ளடக்க முடியாமல் இருக்கலாம். ஆனால் எதோ இப்படியும் செய்து பார்க்கலாம் என்ற ஒரு எண்ணமே இத்தனைக்கும் காரணமாகும். ஏதேச்சையாக மதுரனும் நானும் ஒரு புகைப்படத்துறை சார்ந்த கடையில் சந்திக்கும் போது எடுக்கப்பட்ட திடீர் முடிவால் கடை முதலாளியான குகரூபனின் கைப்பேசியில் கையில் இருந்த ஒரு கதையை வைத்து எந்த வித முன்னாயத்தமும் இன்றி ஒரு மணித்தியாலத்தில் எடுத்த முடித்த ஒரு விளையாட்டுத்தனமான படைப்புத் தான் இந்த ராக்கெட் ராஜாவாகும்.
உண்மையில் ஒரு மணித்தியாலத்தில் எடுத்து முடிக்கப்பட்டது என்று சொல்லப்பட்டாலும் இதை எடிட் பண்ண மதுரன் செலவிட்ட நேரம் பல மணித்தியாலங்களாகும். ஏனெனில் அந்தக் கடையுடன் என் வேலை முடிந்து விட்டது. ஆனால் அதற்கான இசைக் கோர்ப்பிலிருந்து அனைத்து வேலைகளையும் அவன் தான் செய்தான்.
அதே போல படத்தை ஒளிப்பதிவு செய்த MULTI VERSION GRAPHIC குகரூபனை கைப்பேசி படாதபாடு படுத்திவிட்டது.
அத்துடன் ஜங்கிள் தனுசனும் காட்சி அமைப்பில் பெரிதும் உதவியாக இருந்தார்.
யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட பல நல்ல நல்ல குறும்படங்கள் குழு ஒற்றுமையின்மையால் தடைப்பட்டுப் போனாலும் ஏதாவுது ஒன்றைச் செய்தாக வேண்டும் என்ற கட்டாயத்தாலேயே இதைச் செய்து முடித்துள்ளோம்.

வெளியீடு
இது வரை தமிழ் இணையத்தில் இடம்பெறாத ஒரு முயற்சியாக இருக்கட்டுமே என்ற எண்ணத்தில் நாற்றுக் குழுமத்தில் வெளியிடத் தீர்மானித்தோம். ஆனால் எதிர் பார்த்ததை விட நண்பர்களின் ஆதரவு மிகவும் உற்சாகத்தை அளித்தது. வேலை நாளாக இருந்தாலும் இந்த விழாவுக்காக நேரம் ஒதுக்கி அரும்பாடு பட்ட அம்பலத்தார் ஐயா, கலை விழி, ஐடியாமணி, நிருபன், காட்டான், இம்ரான், வருண், கந்தசாமி போன்றோருக்கு பல நூறு நன்றிகள் சொல்லக் கடைமைப்பட்டிருக்கிறேன்.
நிகழ்ச்சியை கலைவிழி தொகுத்து வழங்கியதுடன் அறிமுக உரையையும் வழங்கியிருந்தார்.
ஜனா அண்ணா அவர்கள் மங்கள விளக்கை ஏற்றி தமிழ்மொழி வாழ்த்தையும் வழங்கிச்சிறப்பித்திருந்தார்.
அதன் பின்னர் திரு பொன்னர் அம்பலத்தார் ஐயா அவர்கள் வரவேற்புரையை வழங்கியதுடன் குறும்படத்தையும் வெளியிட்டு வைத்தார்.
படத்தின் மேல் சொடுக்கிப் பெரிதாக்கலாம்.
அதன் பின்னரான விமர்சனத்தை வருண் வழங்கியிருந்தார்.


அதன் பின்னர் இறுதி நிகழ்வாக இம்ரான் அவர்கள் நன்றியுரையை வழங்கியதுடன் மிகவும் குறுகிய நேரத்திலேயே சிறப்பாக நிகழ்வு நிறைவுக்கு வந்தது.

அதன் பின்னர் வருகையாளர்களின் விமர்சனமும் பதியப் பெற்றது. நிகழ்வில் கலந்து கொண்டோரை உபசரிப்பதில் சிரத்தை எடுத்துக் கொண்ட சகோதரி சித்தாராவிற்கும் இந்த இடத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
விமர்சனங்களை நான் விரும்பியது போல நேரடியகவே நிறைகளையும் குறைகளையும் தெரிவித்த துஸ்யந்தன், கந்தசாமி, மருதமூரான், ஹலிவுட் ரசிகன், ஜனா அண்ணா, நிருபன், ஐடியா மணி, காட்டாண்ணா, அமல்ராஜ், அறிவிப்பாளர் முகுந்தண்ணா, ஜீ , கிருத்திகன், முகுந்தன், சுஜா அக்கா மற்றும் எவரையேனும் தவற விடப்பட்டிருந்தாலும் அனைவருக்கும் இந்த இடத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

அதே போல அடுத்த படமாக உள்ளூர்த் திருட்டுக்களை மையப்படுத்தி அருமையான ஒரு கதைக்களத்துடனும் விளம்பரத் துறையிலும் நாடகத்துறையிலும் தேர்ச்சி பெற்ற ஹரிகரனின் இயக்கத்தில் எடுக்கும் திட்டம் இருக்கிறது. சரியான பண வசதியும் குழுவும் அமைந்ததும் ஒரு சிறப்பான குறும்படமாக உருவாக்கவுள்ளொம். இதற்கான வேலைகள் மிக விரைவில் ஆரம்பிக்கப்படும் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.

நன்றிச் செதுக்கலுடன்
ம.தி.சுதா


இதோ அக்குறும்படம்

25 கருத்துகள்:

வியாழன், 5 ஏப்ரல், 2012

ஒரு குருதட்சனையும் பதிவர்களின் குறும்படமும் (birthday whishes)


காலச்சக்கரமானது மனிதனை தன்பாட்டுக்கு ஆட்டு வித்துக் கொண்டிருக்கிறது. இதனிடையில் ஒருவனுக்கு நேரம் கிடைப்பதென்பது கல்லில் நாருரிக்கும் செயல் தான். அதற்கு நானும் விதி விலக்கல்ல.
PM 11:14 - By ம.தி.சுதா 14

14 கருத்துகள்:

மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்













back to top